புக் கிளப்


விகடன்:

சொல்லப்படாத சினிமா :: ப.திருநாவுக்கரசு

‘தமிழில் வர்த்தக சினிமாவைத் தவிர்த்து ஒரு திரைக்கலைஞன் இயங்க முடியுமா?’ என்கிற கேள்விக்கான விடையாக இருக்கிறது இந்த நூல். யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஆவணப்படங்கள் வளர்ந்த வரலாறும் அது பற்றிய தகவல்களுமாக பயனுள்ள தொகுப்பு. 500 இந்திய & தமிழ் ஆவணப்படங்களின் அறிமுகம் கிடைப்பது நல்ல அனுபவம். கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘பாரன்ஹீட் 9/11’ திரைப்படம் முதல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவலம் காட்டும் ‘தீக்கொழுந்து’ வரை ஒரே நூலில் தெரிந்துகொள்ள முடிகிறது. அரிய புகைப்படங்களையும் தேடிச் சேர்த்திருக் கிறார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்படும் ஆவணப்படங்கள், பொதுமக்களின் கவனத்தைப் பெறாமலேயே போய் விடுகிற நேரத்தில், இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தகுந்தவை.

(வெளியீடு: நிழல். விலை ரூ.200/-)

கோபுரக்கலை மரபு :: குடவாயில் பாலசுப்பிரமணியன்

‘தமிழகக் கோயில்கள் என்பவை வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. நாட்டின் பண்பாட்டை, கலை உணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்’ என்கிறது இந்த ஆராய்ச்சி நூல். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் எனப் பல்துறை கலைகள் செழித்து இடம் பெற்றிருக்கும் கோயில்களின் கோபுரங்களை ஆய்வு செய்திருக்கிறார்.

வரலாறு, கல்வெட்டு, கலையறிவு போன்ற பல துறை ஆர்வமில்லாவிட்டால் இந்த மாதிரி நூலை எழுத முடியாது. ‘அண்ணாந்து பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கோயில் கோபுரங்களில் இவ்வளவு விஷயங்களா?’ என்று ஆச்சர்யமூட்டுகிற நூல்.

(வெளியீடு: கோயிற் களஞ்சியம், தஞ்சை-7. விலை. ரூ. 200/-)

2 responses to “புக் கிளப்

  1. சொல்லப்படாத சினிமா பற்றி தான் பேசிக் கொண்டிருந்தேன். நீங்கள் படித்து விட்டீர்களா ? இருந்தால் புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரையை பதியுங்கள்.

  2. இன்னும் இல்லை சார். விகடனில் பார்த்தேன். பதிந்து வைத்துக் கொண்டேன்…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.