Monthly Archives: மார்ச் 2005

Jay Jay & Attahaasam & Pepsi Heroine 

Jay Jay & Attahaasam & Pepsi Heroine Posted by Hello

தினந்தினம்

மகளிர் தினமா?

கல்வியா… செல்வமா… வீரமா… நாங்க இருக்கிறோம்!

தாங்கிப் பிடிக்கும் ஆண்களுக்கு தினந்தினம் ஆடவர் தினம்தானே?

புகைப்படங்கள்: (c) Vikatan.com & Getty Images

Chaaru Baala – Trichy’s Congress Mayor (c) Vikata…

Chaaru Baala – Trichy’s Congress Mayor (c) Vikatan.com Posted by Hello

Vivek Jodi (c) Vikatan.com 

Vivek Jodi (c) Vikatan.com Posted by Hello

Hey Still navel sells – (c) Vikatan.com – Happy M…

Hey Still navel sells – (c) Vikatan.com – Happy Mahalir Thinam Posted by Hello

Paris & Nicky Hilton in France Paris – Happy Women…

Paris & Nicky Hilton in France Paris – Happy Womens Day Posted by Hello

amuthey – Madhumitha & Jai Aakaash (c) Vikatan.co…

amuthey – Madhumitha & Jai Aakaash (c) Vikatan.com Posted by Hello

Amuthey – Madhumitha & Jai aakaash (c) Vikatan.com…

Amuthey – Madhumitha & Jai aakaash (c) Vikatan.com Posted by Hello

பால் பத்து

  1. அண்ணாமலையில் ரஜினி பால்காரராக வந்து பாம்பிடம் ‘பால்’ வாங்குவார். பாம்பு இல்லாமலே குஷ்பூவும் ரஜினியிடம் ‘பால்’ வாங்குவார். அப்பொழுது முதல்தான் ‘பால் வாங்கிட்டேண்டா மச்சி’ என்னும் பிரயோகம் ஆரம்பித்ததா என்று தெரியவில்லை.
  2. ஆண்பால், பெண்பால் என சாதி இரண்டொழிய வேறில்லை என தமிழ்நாட்டில் அன்றே ‘பால்’ வாங்கியிருக்கிறார்கள்.
  3. அமெரிக்காவில் சோயா பால், சாக்லேட் பால், ஸ்ட்ராபெர்ரி பால், ஆட்டுப்பால், மிருகத்தில் இருந்து உண்டாகாத பால், தண்ணீர் கலக்காத பால், ஒரு சதவீதப் பால், இரு சதவீதப் பால், டென்னிஸ் பால், பேஸ்பால், எல்லாம் கிடைக்கிறது.
  4. ‘பாலூட்டி வளர்த்த கிளி’ எல்லாம் பாடல் பெற்ற பறவையாக திரைப்படத்தில் விளங்குகிறது.
  5. பால்ராஜ் என்னும் ஆசிரியர் எனக்குக் கூட புரிகிற மாதிரி ஏழாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்தார். திரவங்கள் மேலிருந்து ஓட்டை வழியாக வழிவதற்கும் உயரம் குறைவான இடத்தில் இருந்து வெளிவருவதற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் தியரம் ஒன்றுக்கு, ‘ஒன்றுக்கிருப்பதை’ உதாரணமாக காட்டியதால், மூச்சா போகும் போதெல்லாம் கூட நினைவில் வந்து செல்பவர்.
  6. காம்ப்ளானை பாலில் கலக்காமலே குடிக்காமலாம். ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடலாம். பூஸ்ட்டை பாலில் கலந்தாலே சிறக்கும். மெமரிவிடா குடிக்காததால் எப்படி குடிக்கவேண்டும் என்பது மறந்துபோச்சு.
  7. சாந்திமுகூர்த்தத்திற்கும் பாலுக்கும் உள்ள பொருத்தம் பாகிஸ்தானுக்கும் மேட்ச் ஃபிக்ஸிங்குக்கும் உள்ளது போன்ற இயைபு.
  8. அர்ஜுனுக்கு பாலபிஷேகம் செய்தால் ‘முதல்வன்’ ஹிட்டாகும். இந்துக் கடவுள்களுக்கு பாலபிஷேகம் செய்தால், செய்தவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அந்தப் பாலை இல்லாதோருக்குக் கிடைத்தால் அவர்களுக்கு அடுத்த வேளை நீராகாரம் கிடைக்கும்.
  9. ஆந்திராவின் விஜயா ஃப்ளேவர்ட் மில்க் எனக்கு இன்றும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாசக்கடைசியில் சென்னைக்கு செல்லும்போது ‘மிரினாயோ’ குடித்துப் பார்க்கவேண்டும்.
  10. அர்ஜுன் அம்மா கொடுத்தால் கூட அமெரிக்கப் பூனைகள் பாலை அதிகம் விரும்பி குடிப்பதில்லை.

    கொசுறு:

  11. முன்பெல்லாம் தினசரி ‘பால்’ வாங்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் வாரயிறுதியில் மட்டும் வாங்கிவைத்துக் கொள்கிறோம்.

புதிய பார்வை

புதிய பார்வையில் வெளியான திருமாவளவனின் உரையாடலில் இருந்து சில பகுதிகள்: Tamiloviam

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள திராவிடக் கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் எந்த நிலையிலும் மேலே வரமுடியாத அளவுக்கு இறுக்கமான சூழ்நிலையே இருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்பட்ட அளவுக்கு மற்ற கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டதில்லை.

பசுவை வதைத்தால் தடுக்கச் சங்கமிருக்கிறது. ஆனால் மனிதனை மிருகத்தை விடக் கேவலமாகக் கொடுமைப் படுத்தினால் அதைக் கேட்க யாரிருக்கிறார்கள்? கவிஞர் இன்குலாப் சொன்ன மாதிரி “பறையனாக வாழ்ந்து பார்த்தால்தான் பார்ப்பனியத்தின் கொடுமையை உணரமுடியும்.”

திராவிடக் கட்சிகள் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு என்பதில் உறுதியாக நின்று தாழ்த்தப்பட்டவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, சாதி ஒழிப்பிலோ, இந்துத்துவ எதிர்ப்பிலோ அவர்கள் எந்த முனைப்பையும் காட்டவில்லை.

திராவிட இயக்க வரலாற்றை எழுதுபவர்கள் யாராவது இரட்டைமலை சீனிவாசனைப் பற்றியோ, அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றியோ, தந்தை சிவராஜ் பற்றியோ, அவர்களின் பங்களிப்புப் பற்றியோ ஏன் எழுதவில்லை? ஏன் மூடி மறைக்கிறார்கள்? அம்பேத்கார் பௌத்த மதத்திற்கு மாறவேண்டும் என்கிற கருத்தியலுக்கு வந்ததற்குக் காரணமே அயோத்திதாசப் பண்டிதர்தான்.

புதிய பார்வை/நவ. 15, 2004