Monthly Archives: ஜனவரி 2005

பெரியார்

நையாண்டிதான் என் பலம் – சத்யராஜ்

Dinamani.com – Kadhir: பெரியார் குடும்பம் ரொம்ப ஆச்சாரமான குடும்பம். சுத்த சைவம். ஆனால், இவர் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடியவர். வீட்டில் சைவ உணவு சமைத்தாலும் இவருக்கு மட்டும் அசைவம் சமைத்திருக்க வேண்டும்.

நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருந்து வருகிறவர். பெரியாருக்குப் புலால் சமைத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டுத்தான் பரிமாறுவார். அப்படி அவர் குளிக்கப் போகும்போது யாருக்கும் தெரியாமல் எலும்புத் துண்டை விரதச் சாப்பாட்டுக்குள் புதைத்து வைத்துவிடுவார் பெரியார். நாகம்மையார் வந்து பார்த்ததும் இது பெரியாரின் குறும்புத்தனம்தான் என்று புரிந்து கொள்வார்.

அதே போல், திருமணம் செய்து கொண்ட பிறகு கோயிலுக்குப் போகிறார் நாகம்மை. சில இளைஞர்களுடன் பெரியார் கோயிலுக்குச் சென்று, “கோயிலுக்கு வந்துருக்கிற அந்தப் பொண்ணு புது பார்ட்டி. போய் கிண்டலடிங்க’ என்று தன்னுடன் வந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டு பெரியார் மறைமுகமாக நின்று கொள்வார். பசங்களும் நாகம்மையைக் கலாய்க்கிறார்கள். நாகம்மைக்கு வெலவெலத்துப் போய் உடம்பு நடுங்கி விடுகிறது. வீடு திரும்பிய நாகம்மையிடம், “நான்தான் அந்த வேலையைச் செய்யச் சொன்னேன்’ என்று விழுந்து விழுந்து சிரித்துக் கூறுவாராம்.

அதே போல், தனது பணிரெண்டு வயதில் ஈரோட்டில் இருக்கும் தன் கடைக்குப் போகும்போது தெருவில் உள்ள ராமநாத அய்யர் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். அப்படிப் போகும்போது தினமும் அய்யரைக் கிண்டலடிப்பது பெரியார் வழக்கம்.

அய்யரோ தலைவிதி மீது தீவிர நம்பிக்கை உடையவர். ஒருமுறை அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், “எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கிறது’ என்று அய்யர் சொல்ல, அந்த நேரத்தில் அய்யர் கடைமுன் உள்ள தட்டியைத் தூக்கி நிறுத்தித் தாங்கியிருக்கும் கொம்பைத் தள்ளிவிட்டுவிடுவார். தட்டி அய்யர் தலையில் விழுந்துவிடும். உடனே அய்யர் பெரியாரைத் துரத்துவார். அப்போ, “எல்லாம் விதிப்படித்தானே நடக்குது. என்னை ஏன் திட்டுறீங்க?’ என்று கூறிவிட்டு ஓடிவிடுவாராம்.

பார்த்திபனின் வாழ்த்து

சிலேட். ஆனால் கறுப்புக்கு பதில் வெள்ளை. நான்குபுற சட்டங்களிலும் மாட்டிற்கு அடிக்கும் லாடம். இந்த வித்தியாச வெள்ளை சிலேட்டில் பார்த்திபனின் கவிதை வரி! சிலேட்டின் இடதுபுறம் கவிதை ஆரம்பமாகிறது.

இது தான்

நிரந்தரமென

இதனுள் எதையும்

நிரப்பாவிட்டால்

பாதியில் முடிந்த கவிதை பிறகு வலது பக்கம் தொடர்கிறது.

எதிர் சுவர் ஓவியம்

ஜன்னலோர குருவி

செல்லநாய்க்குட்டி

முத்தமழலை

சுடிதார் மின்னல்கள்

நிஜநிலா

மழைத்தோரணங்கள்

மீண்டும் இடதுபுறம்,

இப்படி

விரும்பும் பலவும்

இந்த – வெற்றிடத்தை நிரப்பும்!

நன்றி: cinesouth.com

ஞாபக முடிச்சுகள்

சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005

Pathivukal : பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டியின் முடிவு திகதி மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜனவரி 23, 2005வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பழைய – கொந்தி – புத்தகம் – கொலை

Manikandan's web page‘நல்ல தம்பி’யை சிறு குறிப்பிட்டவர் ஸ்பஷ்டமாக தமிழ் பேசுகிறார். இந்தக் காலத்தில் பழைய படங்களை பேசுபவர்கள் அரிது. அவர்கள் தமிழர்களாக இருப்பது அதனினும் அரிது. அவர்கள் இளைஞியாக இருப்பது அதனினும் அரிது. அவர்கள் சன் டிவியில் வருவது மிக மிக அரிது. அவர்கள் தெள்ளு தமிழில் உரையாடல் எல்லாவற்றையும் விட அரிதுதானே? (படம் : உதவி)

Jax’s Book Shelf-ஐ பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சென்ற வருடத்தில் இவ்வளவு புத்தகங்களைப் படித்து, அவற்றிற்கு குட்டி குட்டி குறிப்பும் கொடுத்திருக்கிறார். ஆங்கில புத்தகம் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் ஒரு நடை போய் வரலாம்.

TAT TVAM ASI (a.k.a) THE ULTIMATE REALITY‘நான் பொறுக்கி இல்ல… பழம்‘ என்று டயலாக் விடாமல் விஷுவல் காட்டியிருக்கிறார். தொடர்ந்து வரும் பொன்மொழியை மணமுடிக்கப் போகும் மேள்-கைண்டுக்கு அர்ப்பணிக்கலாம்.

‘காதல் திருமணத்துக்கும் வீட்டில் பார்த்து மணமுடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

தற்கொலைக்கும் கொலைக்கும் உள்ள வித்தியாசம்தான்…’

Privoxy, Tor: An anonymous Internet communication system என்று இரண்டு புதிய நிரலிகளை இன்றுதான் பார்த்தேன். கொந்தி போடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கும் ‘ப்ரைவாக்ஸி‘ பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. மூகமூடிகளுக்கு (மட்டும்) ‘டோர்‘ உபயோகப்படலாம். இனிமேல்தான் விளையாடிப் பார்க்க வேண்டும்.

BugMeNot.com – Bypass Compulsory Web Registration மிகவும் முக்கியமான அமைப்பு. விகடன் ஆரம்பித்து மியாமி ஹெரால்ட் வரை எங்கு பார்த்தாலும் உன் மின்மடலைச் சொல், செல்லப்பிராணி பெயரை சொல், வயசுக்கு வந்துட்டியா, எத்தனை வீடு இருக்கிறது என்று நொரநாட்டியம் செய்வதை பை-பாஸ் செய்ய வழி கொடுக்கிறார்கள். (மார்க்கம்: TriNetre – The Third Eye)

Sun TV Classic Comperer 

Sun TV Classic Comperer Posted by Hello

யுகபாரதி – தெரு வாசகம்

vikadan weekly:

தோள் வலித்தாலும் தொழிலைச் சுமக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம். மிகச் சாதாரணமென்று இலையில் பதிந்த மழைத்துளியை விலக்கிவிடாத மரம்போல, இலக்கிய வேர்களில் இவர்களைப் பதிவு செய்தல் என் விருப்பம்.

இந்த மாயக் காவடி நம் எல்லோருக்குமானது. ஆளுக்கு ஒரு கை பிடித்தல் அவசியம். அன்புடன் தொடர வேண்டுகிறேன்.

ரோடு ரோலர் டிரைவர்

முன்னும் பின்னுமாக

இவன் கடந்த தூரம்

மிக மிக சொற்பம் அல்லது

கணக்கில் வராதவை

ரோலர் ஓட்டுபவரின்

இதயம் போல

இயங்கவேண்டும்

அரசாங்கம்

முன்னதில் தெளிவும்

பின்னதில் பதிவும்

எல்லா சாலையும்

ரோமை அடையுமா?

தெரியாது

ரோலரை அடைந்தே தீரும்

ஆலையிட்ட கரும்பென

ஆக்கிய உவமையை, இனி

ரோலரிட்ட எறும்பென

கூறுதல் நவீனம்

ரோலர் ஓட்டுபவன்

கடந்த காலத்தின் மனசாட்சி

சேவைகளும் தியாகங்களும்

தெரியாமல் போவதனால்

விரைவு வாகனங்கள்

விபத்துகளின் குறியீடு

எங்கேயும் நிறுத்தலாம்

ரோலரை

எந்த பயமுமில்லாது

நெடுஞ்சாலையெங்கிலும்

கேட்கும்

ரோலர் ஓட்டுபவனின்

நீண்ட நெடிய சங்கீதம்

பிறருக்கான பாதைகளை

போட்டுத்தரவே

பிறப்பெடுத்தவன் போல

என்றாலும்

வந்த பாதையை மறந்துவிடாத

இவனே விரும்பினாலும்

போக முடிவதில்லை வேகமாக

நன்றி: விகடன்.காம்

Manikandan’s web page  

Manikandan’s web page
 Posted by Hello

அனுதாபங்கள்

சிந்துவை அதிகம் திரைப்பட நாயகியாக பார்த்ததில்லை. ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது பார்க்கும் ‘மெட்டி ஒலி’யில் மாமியாருக்கு (சாந்தி வில்லியம்ஸ்) அடுத்த உயிர் சித்திரம் இவர்தான். வளைகுடாவில் கணவன். பெட்டி நிறையப் பணம். தொலைபேசியில் குடித்தனம். கண்களில் வாழ்க்கையின் மேல் அலட்சியம் கலந்த வெறுப்பு. முன்னாள் நட்பை படுக்கைக்கு அழைக்கும் துணிச்சல். உண்மை குட்டுப்படும் தருணங்களில் scared to death பயம்.

பெண் ரசிகர்களிடையே அருவருப்பையும் சீரியல் விமர்சகர்களிடையே ஒரு ‘அட’வையும் என்னிடையே ஆச்சரியத்தையும் உண்டாக்கியவர்.

‘இணைந்த கைகள்’ முதல் படம் என்று வாழ்க்கை குறிப்பிடுகிறார்கள். சுனாமிக்காக தெருவில் உண்டியல் குலுக்கியவர் மயங்கி விழுந்து மறைந்திருக்கிறார். முப்பத்திரண்டு வயது. ஒன்பது வயது மகள். குணச்சித்திரம், வில்லி வேடங்கள், அக்கா/அண்ணி என்று நிறையவே நடித்து வந்தவர்.

ஆழ்ந்த வருத்தங்கள்.

செய்தி: Sindhu

நன்றிகள்

  • சென்னை ஓபனில் தான் ஜெயித்த ஐம்பத்தி ரெண்டாயிரம் அமெரிக்க டாலரையும் சுனாமி நிதிக்கு வழங்கி விட்டார் கார்லோஸ் மாயா (Carlos Moya).
  • பன்னிரண்டரை கி.மீ. தடகளப் போட்டிகளில் 11,800 டாலர் வென்ற ரஃபேல் பாயரி (Raphael Poiree) மொத்த தொகையையும் சுனாமி நிதிக்கு வழங்குகிறார்.
  • சுனாமிக்காக தன்னுடைய டென்னில் மட்டைகளை லெயிட்டன் ஹீவிட் (Lleyton Hewitt) ஏலம் விடுகிறார். முதல் ஏலத்தில் ஐயாயிரம் டாலருக்கு ராக்கெட்டை ஏலம் எடுத்திருக்கிறார்கள். கூடவே அதற்கு சமமாக இன்னொரு ஐயாயிரம் டாலர் போட்டு தன் கொடை கணக்கை ஆரம்பித்திருக்கிறார்.
  • இங்கிலாந்து கால்பந்தாட்டக் குழுவான மான்செஸ்டர் யுனைடெடின் (Manchester United) வீரர்கள் கையெழுத்திட்ட ஆடை முப்பத்தேழாயிரம் டாலர்கள் ஏலத்திற்கு சென்று, கொடை வந்திருக்கிறது.
  • சுனாமிக்காக ஆடப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் பதினைந்து மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது.
  • Kalki On Kathai by Police 

    Kalki On Kathai by Police Posted by Hello