Monthly Archives: ஜனவரி 2005

கவிதை

மனக்குடித்தனம்

ஒவ்வொரு மனத்துள்ளும்

பெண் ஆண் குழந்தை கிழடு

எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று

ஒட்டி நெருக்கிக் கொண்டு

ஒண்டுக்குடித்தனம் நடத்தும்.

பெண் வலிது கிழித்தல் கண்டு இரக்கம் தூது விடும்;

ஆண் வலிதுக்கு வலிது வா பார்ப்போம் என்றி எடுந்து கூவும்;

குழவி செய்வதறியாது பெண் மடி உள்ளொதுங்கி

ஆண் பின் மறைந்து அழுதிருக்க,

முதிது பழையன கழியும் என்று பாரம் பரம் மேற் போட்டிருக்கும்.

அகம் தன் அகம் வாழ் குடித்தனத்தார்,

வெளிவரு வலிவு காண வகை செய்ய்த்துணி வடிவுகளின் வலிவு

காண்சமரில்

நேரம் சிறுபிள்ளைக்கைக் களிமண் பொம்மையாய் வடிவுகள் பெற்று,

பிழற்ந்து போர் கொல்ல நண்டு பிளந்து வந்த குழுவன்புதிது வலி

பெற்று இறக்க

உழலும்.

வெளிக்காண் பால் பருவம் உருவம் எல்லாம் பொய்யாக்கி

ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரு முழு உலகே

மற்றதை அடுத்தது நெருக்கி மயக்கி

ஒண்டிக்குடித்தனம் முரண்பட்டுக் கூட்டாய் நடத்தும்.


ம்ம்ம்ம்….

தொலைந்து போகவில்லை

என் மனம் எந்தத்தூரத்து இருப்புகளிலும்

என் சொந்தக் கிராமம் விட்டு

எத்தொலைவிற்கும்.

தூக்கத்திலும்

மனக்கால் தூக்கத் தூக்கப் புதைந்தே கிடக்கிறது,

என் ஊர்ப்புழுதி மணலிலும்

முக வரி விழுந்த மனிதர்களிலும்.

நினைவுப்புதை மணல் விழுந்தவன் நான்,

கயிறு தந்தாலும் எழுந்திட மறுத்துப் புதைந்து மறைந்திருப்பேன்

என் சொந்த உலகத்தே,

முன்னைச் சொந்தங்களோடு

அவர் சுகங்கள், துக்கங்களோடு.

கவலை விடும்.

விமானப்பயணங்கள்

எனக்கு என்றும் அந்நியமானவை,

இங்கு என்னை இன்று சுற்றிக் கிடக்கும்

எத்தனையோ மனிதரைப்போல், மரங்களைப்போல்.

ஆனால்,

பேருந்துப்பயணங்கள்,

என் பெற்ற தாயினைப் போல்,

ஏதோ பற்றிக் கிடந்த சுற்றம்போல்.

ஆதலினால்,

இற்றைக்குப் எடுத்துப் பேச

ஏதும் என் நினைப்பிலில்லை.

அத்தனைதான்;

மிச்சப்படிக்கு,

விமானம் சொர்க்கமென்று

சொக்கிக் கிடக்கும் குற்றம்

ஒன்றும் மனமில்லை.

இத்தனைக்கும் என் ஊரில்,

பேருந்துப்பயணம்

வெறும் தலை நீட்ட முடியாத

கால் தூக்கி நின்றாடும்

மணிநேரக் கஷ்டத்துடன் முடிவதில்லை.

ஆறு மைல் தூரத்துக்கோர் தடவை

ஆறுதலாய் இறங்கி,

ஊண், உடை, உள்ளதெல்லாப்

பையெல்லாம் கையெடுத்து,

உயிரை அடையாள அட்டையிலே

தேக்கி வைத்து,

தலை மறைத்த முகமூடி முன்னாலே

அவன் தலையசைத்தால்,

என் தலைபோகும் என்று

கருமுளைத்த பெண்போல

தளர்ந்து நடைபோட்ட

இராணுவ முகாங்கள்

நான் மறவேன் ஐயா.

என் வெளி ஊணுள் மட்டுமல்ல,

உள்தூங்கு உயிருள்ளும் தேடித்

தமிழனென்ற முகம் கண்ட

நாட்கள் அவை.

ம்ம்ம்ம்….

விமானப் பயணங்களிற்

சொக்கிப்போய்

சொர்க்கம் போய்விட்டேன் நான்.

தூரத்தே எங்கோ,

குண்டொன்று உயிர்துறக்க,

சில துப்பாக்கி கொண்டோர் உயிர் பறக்க,

சொந்தக்கவலைகள் தின்னப் பயணப்பட்ட

சொந்தங்கள் எத்தனை இறக்குண்டு

உயிர் மென்று தின்னப் பட்டிருக்கும்?

என்று நாம் அறிவோம்;

வேறு யார் அறிவார்?

ம்ம்ம்ம்….

இவை மறந்து

விமானப் பயணங்களிற்

சொக்கிப்போய்

சொர்க்கம் போய்விட்டேன் நான்.

எமது பயணங்கள்,

இடத்துக்காகவும்

பேருந்து தள்ளலுக்காகவும்

பிரச்சனைப்பட்டிருத்தல்

தொலைத்துப் பல காலம்.

எமது கவனங்கள்,

எம் கழுத்துகளிலும்

மறந்தும் பயணம் முடியும்வரை

சொந்தமொழியில்

ஒரு சொல் உதிர்க்கப்படக்கூடாதென்பதிலுமே

பயன் ஜனனிக்கக்

குறி வைத்திருப்போம்.

ஏறுகையில்

உள்ளிழுத்த மூச்சு,

இறங்குகையில் மட்டுமே

வெளிவிடப்படமுடியும்

என் நாட்டில்.

ம்ம்ம்ம்….

என்னவாய் அது இருந்தென்ன?

விமானப் பயணங்களிற்

சொக்கிப்போய்

சொர்க்கம் போய்விட்டேன் நான்.

தாலியைப் பெண்கள்

கைப்பையுட் கழற்றி ஒளிப்பதும்

கட்டியவனே பேருந்து ஏறமுன்,

குங்குமம் அழித்துவிடுவதும்

எந்நாட்டில் மட்டுமே

சாத்தியமாகும் இந்நேரத்தும்.

குழந்தைகள் “அம்மா” என்றழைத்தால்,

வில்லங்கம் ஆகிவிடுமென்று

வாய்க்குள் அவை கடிக்க,

விரலை விட்டுக் கிடந்த பெற்றோர்

எத்தனைபேர்!

என் இன்னும் குருடற்ற இரு கண்முன்னே

எத்தனைபேர்!

ம்ம்ம்ம்….

இவை எல்லாம் இங்கெதற்கு?

விமானப் பயணங்களிற்

சொக்கிப்போய்

சொர்க்கம் போய்விட்டேன் நான்.

தீப்பெட்டி, மின்கலம்,

மெழுகுவர்த்தி, மருந்துவகை

பெட்டிக்குள் அகப்பட்டால்,

மீண்டும் பயணம் தொடங்குகையில்,

பயணிகள் தொகை குறைந்திருக்கும்.

பின்னேதோ காலத்தே,

காணாமற்போன மனிதர் பட்டியலில்

கொட்டிக்கிடக்கும் அவர் பெயர்.

இப்படியானவை எம் பயணங்கள்.

இளம் மொட்டை மதகுருக்களுக்கு

இடம் விட்டு எழுந்து நிற்க வேண்டும்,

தளர் கிழங்கள், நிறை கர்ப்பணிகள்.

என் நாட்டு நியாயம் அது.

இராணுவத்திற்கு கைமோதிரங்கள்,

கழுத்துச்சங்கிலிகள், கைவளைக்காப்புகள்

அவர் விரும்பத் தானம் கொடுத்து

உயிர்த்தானம் பெற்று மீள்வதெல்லாம்

காற்றிலே போன கதைகள் இல்லையையா,

கல்லிலே பொறித்துவைத்த கண்ண“ர்த்துளிகள்.

ம்ம்ம்ம்….

இத்தனை ஏன்? விட்டு விட்டும்.

விமானப் பயணங்களிற்

சொக்கிப்போய்

சொர்க்கம் போய்விட்டேன் நான்.

ஒற்றைநாள் உலகம்

சுற்றுப்பயணங்களில்

ஒட்டிப்போவதில்லை

என் மனது;

ஓடிருக்க உள்ளே ஒட்டாமற் கிடக்கும்

புளி

என் உள்ளம்.

அது சுற்றும் எங்கெல்லாம்,

ஆயினும்,

நிற்கும் அதன் முளை இறுகி

என் நாட்டில், அதன் நடப்பில்.

உடல் இயக்க உயிர் பிழைக்க,

பொருளாதார அகதியென்று,

புது நாடு தஞ்சம் புகுந்து

திரிசங்கு நரகத்தே வாழ்ந்தாலும்

இன்னும் காற்சட்டைப்பைத் தூங்கு

சிறு தீப்பெட்டிக்குள் கனத்துக்

கிடக்கிறது என் நாட்டு வ“ட்டுவாயில்

அழுக்குச் சேர்ந்த பூமி மண்.

“நாளை ஜெருசலேமில்,”

அல்லது உலகப்பந்தில் எங்கேனும்

எரிந்த என் உடற்சாம்பலோடாவது

கலந்து கடலுக்குப் போகட்டும்;

என்றேனும்,

உளம் புரிந்த பேரலைகள் எடுத்துச் செல்லும்

உடல் எரிந்த சாம்பல் + அது எழுந்த பூமி மணல்,

ஒரு நாள் என் நாடு.

ம்ம்ம்ம்….

ஆயின், என்ன?

விமானப் பயணங்களளிற்

சொக்கிப்போய்

சொர்க்கம் போய்விட்டேனாம்

ஈழம் குண்டெடுத்து உயிர் சுட்டுத்தின்ற

இன்னொரு அகதிப்புத்திரன்

இவன்.

அன்று கேட்ட கேள்விக்கு விடை : திருமலை

இந்தக் கவிதைகள் எழுதியவரின் அனுமதியின்றிதான் இங்கு இட்டிருக்கிறேன். படைப்பை வைத்தே எந்த வலைப்பதிவர் எழுதியது என்று கண்டுபிடிக்க முடியுமா?

நீங்கள் அத்தனை பேரும்!?

I am 38% evil.



I could go either way. I have sinned quite a bit but I still have a bit of room for error. My life is a tug of war between good and evil.

Are you evil? find out at Hilowitz.com

தப்பே இல்லாததை எல்லாம் கேள்விகளாக கேட்டதாலும் அவற்றுக்கு வாய்மையுடன் பதிலளித்ததாலும் வந்த வினை. நீங்களாவது முற்றும் கனிந்த ‘பழமா’? (மார்க்கம்)

சுண்டக்கா முக்கா பணம்

Kamadenu.com

ரொம்ப நாளாச்சே புத்தகம் புரட்டி என்று காமதேனு.காம் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் நப்பாசைபட்டு சில புத்தகங்களை கூடையில் போட்டும் வைத்தேன்.

  • மிகை நாடும் கலை

  • இதம் தந்த வரிகள்

  • ஆட்சியில் இந்துத்துவம்

  • காலச்சுவடு கதைகள் 1994-2000

  • அடங்க மறு

  • உண்மை சார்ந்த உரையாடல்

  • இவை என் உரைகள்

    மொத்தம் 758 ரூபாய்தான். ஜரூராக செக்-அவுட் செய்யும்போதுதான் சுமகூலி (தபால் செலவு) 760 ரூபாய் காட்டியது. அடுத்த முறை இந்தியா செல்லும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நிர்க்கதியாய் கூடையை விட்டுவிட்டேன்.

    காமதேனு.காம் அருமையாக இருக்கிறது. தமிழினி, யுனைட்டடு ரைட்டர்ஸ், காலச்சுவடு என்று பதிப்பாளர்களைக் கொண்டு மேயலாம். எழுத்தாளர்களைக் கொண்டும் தேடலாம்.

    இணையத்தளத்தில் பதிவு செய்தவர்கள் புத்தகங்களைக் குறித்து இரண்டு வரி எழுத வசதி செய்யலாம். அமேஸான் போல் விஷ் லிஸ்ட் என்று இன்ன பிறவும் செய்யலாம். ஆனால், ஷிப்பிங் & ஹாண்ட்லிங்கை இன்னும் குறைக்க ஏதாவது வழி இருக்கிறதா!

  • What are you doing with your life?

    நன்றி : ulagatamil.com Ilakiyam Kavithai

    சந்தோஷமாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? — ஜே. ஜே. கிருஷ்ணமூர்த்தி

    தமிழில்: ஆனந்த் செல்லையா

    நீங்கள் சூரியன் மறைவதை, ஒரு அழகான மரத்தை, அகன்று, வளைந்துசெல்கிற நதியை, அழகான முகத்தைப் பார்க்கிறீர்கள். அவற்றையெல்லாம் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை உங்களுக்குத் தருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது? அந்த முகம், அந்த நதி, அந்த மேகம், அந்த மலை ஒரு ஞாபகமாக மாறும்போது, மேலும் மேலும் சந்தோஷத்தின் தொடர்ச்சியைக் கேட்கும்போதுதான் அவை குழப்பமாக, துன்பமாக மாறுகின்றன. அத்தகைய விஷயங்கள் மீண்டும் நடக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்.

    எனக்கு ஒரு விஷயம் மகிழ்ச்சியைத் தந்தால், அது திரும்பவும் நிகழ்வதை மனம் விரும்புகிறது. அது பாலுணர்வு சார்ந்ததாகவோ, கலையுணர்வுடன் கூடியதாகவோ, அறிவு சார்ந்ததாகவோ, இவற்றில் எந்தக் குணமும் அற்ற வேறெதுவாகவோ இருக்கலாம். இங்குதான் மகிழ்ச்சி மனத்தை இருளடையச் செய்யத் தொடங்குகிறது.

    தன்னிறைவு அடைவதில், ஒரு குறிப்பிட்ட ஆளுமையாக இருப்பதில், ஒரு நூலாசிரியராகவோ ஓவியராகவோ பெரிய மனிதராகவோ அங்கீகரிக்கப்படுவதில் உள்ள சந்தோஷத்தை நாம் புரிந்துகொள்கிறோமா? ஆளுமையைச் செலுத்துவதிலும் நிறைய பணம் வைத்திருப்பதிலும் வறுமையை சவாலில் தோற்கடிப்பதிலும் இருக்கிற சந்தோஷத்தை நாம் புரிந்துவைத்திருக்கிறோமா? சந்தோஷத்தைப் பெற முடியாதபோதுதான் ஏமாற்றமும் கசப்புணர்வும் ஆரம்பமாகின்றன.

    இரண்டு வகையான வெற்றிடங்கள் இருக்கின்றன.

  • மனம் தன்னைத் தானே பார்த்து,”நான் வெறுமையுடன் இருக்கிறேன்” என்று சொல்லிக்கொள்வது ஒரு வகை.

  • இன்னொன்று உண்மையான வெற்றிடம்.

    நான் வெற்றிடத்தை நிரப்ப விரும்புகிறேன். ஏனெனில் வெற்றிடத்தை, அந்தத் தனிமையை, தனித்து விடப்படுவதை, எல்லாவற்றிலிருந்தும் நான் முழுமையாகத் துண்டிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நம்மில் ஒவ்வொருவரும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விதத்திலோ, தற்செயலாகவோ, மிக ஆழமாகவோ அந்த உணர்ச்சியைப் பெற்றிருந்திருக்க வேண்டும். அந்த உணர்ச்சி குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதன்மூலமாக ஒருவர் அதிலிருந்து திட்டவட்டமாகத் தப்பிக்கிறார். அறிவின்மூலமாக இன்னொருவர் அதை அடக்க முயல்கிறார். அல்லது உறவுகளின் மூலமாக, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான உன்னதமான சேர்க்கையின் மூலமாக, மீதமிருக்கும் அனைத்தின் மூலமாக. உண்மையில் இதுதான் நடக்கிறது, இல்லையா? நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஒருவர் தன்னைத் தானே கவனிக்கும்போது, தனக்குள்ளேயே கொஞ்ச தூரம் செல்லும்போது – மிகப் பெருமளவில் அல்ல, அது பின்னாட்களில்தான் நடக்கும் – இது உண்மை என்று தெரியவரும். தாங்கிக்கொள்ள முடியாத தனிமையுணர்வு, வெற்றிடம் இருப்பதாக மனம் உணர்வதால் ஏற்படும் வெறுமையுணர்வு இவை இருக்கும் இடத்தில்தான் அதை அடக்க வேண்டும் என்ற மிகப் பெரும் உந்துதல் இருக்கிறது.

    அதனால், சுயநினைவுடன் அல்லது தன்னுணர்வற்ற நிலையில் ஒருவர் இந்த நிலையைப் பற்றிய விழிப்புடன் இருக்கிறார். நான் வெற்றிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒரு அழகான வார்த்தை. ஒரு கோப்பையைப் போல, ஒரு அறையைப் போல வெற்றிடமாக இருக்கும்போது உபயோகமானதாக இருக்கும் ஒரு பொருள். ஆனால் கோப்பை நிரம்பியிருந்தால், அறை மரச் சாமான்களால் குழுமியிருந்தால் அது பயனற்றதாகிவிடுகின்றது. வெறுமையுடன் இருக்கும்போது எல்லா வகையான சப்தங்களாலும் சந்தோஷத்தாலும் தப்பித்தலின் ஒவ்வொரு வடிவத்தாலும் நம்மை நாமே நிரப்பிக்கொள்கிறோம்.

    சில முந்தைய பகுதிகள்:

    மூளைக்கும் அறிவுக்குமான வித்தியாசம்

    வார்த்தைகளின் வலையில் சிக்காத மனம்

    நம்மை முடமாக்கும் தீர்மானங்கள்

    நிர்ணயிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் பழக்கம்

    உண்மையைக் கவனியுங்கள்

    வெளிவந்த வலையிதழ்: உலகத்தமிழ்.காம்

  • கதைகளும் கூறுகளும்

    மன்னிக்கவும்… இங்கு அடுக்கங்களின் குடியிருந்த பலருக்கும் பரிச்சயமான நிகழ்வு. Short & crisp கதை.

    அபார்ட்மெண்டில் தங்கியிருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு. உப்பு, புளி இல்லாவிட்டால் எங்காவது சட்டென்று கடன் வாங்கலாம். பைப்பில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்தவுடன் நுனிக்கால் கூட நோகாமல் ப்ளம்பரை கூவி விடலாம். குந்துரத்த தூர நகரத்துக்கு செல்ல ஆரம்பித்தால் ஜாகையையும் பைநாகப் பாயாக சுருட்டிக் கொண்டுவிடலாம். இடுப்பளவு புல் வளர்ந்து விட்டதே என்று வாரயிறுதி கண்ணீர் கிடையாது. வழிபாதையெங்கும் பனி பொழிந்து கட்டியாகி ஸ்கேட்டிங் மைதானமாகிப் போச்சே என்ற புலம்பல் இல்லை.

    ஐம்பது டாலர் அமெரிக்க ஒரிஜினல் புத்தகத்தை, உள்ளூரில் அச்சடித்து, சென்னையின் ரோட்டோரங்களில் அம்பது ரூபாய்க்கு விற்பார்கள். அபார்ட்மெண்ட் வாழ்க்கை என்பது இந்த புத்தகங்களை வாங்குவது போல சுகமானது.

    புத்தகத்தில் சில சமயம் கடந்த ஃபாரமே திரும்பவும் வரும். சில பக்கங்களில் வரிகள் பைஸா நகரத்து கோபுரம் போல் சாய்ந்திருக்கும். இந்த மாதிரி குடியிருப்பு அனுபவம் ஒன்றை கொடுத்திருக்கிறார் ராஜ்.

    அமெரிக்க வசிப்பில் கேட்கும் ‘வினோத சப்தங்கள்’ என்று சுஜாதா சொல்பவை வேறு 😉



    கண்களும் பார்வையும் – மாலன்: சினிமாவும் டிவியும் ஆண், பெண், குழந்தைகள், எல்லோர் பார்வையையும் மாற்றி விட்டன.

    “இன்று இப்படி நடக்குமா? நடந்திருந்தால் அவளது புருஷனும் அந்த ஊரும் என்ன செய்திருக்கும்?”

    அருணா ஸ்ரீனிவாசன்: “ஒரு சமுகத்தின் பார்வைகள் அமையும் விதத்தில் எந்த அளவு டிவி, சினிமா, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களுக்கு பங்கு இருக்கிறது என்பது நெய் / தொன்னை அல்லது முட்டை / கோழிக்குஞ்சு போன்ற சமாசாரம். சமூகத்தின் பார்வைகளைதான் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. அதே சமயம் நிழலில் வரும் பாத்திரங்களை அல்லது “தத்துவங்களைப்” பார்த்து பார்வைகளும் மாறுகின்றன என்பதும் நிஜமே.

    ஆனால் சமூகப்பர்வைகள் மாறுகின்றன என்று குற்றம் சாட்டி ஒட்டு மொத்தமாக ஊடகங்களைப் பழி சொல்வதும் சரியல்ல. எத்தனைதான் பார்த்தாலும் படித்தாலும் கேட்டாலும், வள்ளுவரின் “எப்பொருள்…” பின்பற்றிக் கொண்டிருந்தால் சுசி கணேசன் எழுப்பியுள்ள கவலைக்கும் இடம் இருந்திருக்காது.

    பார்வைகள், பார்க்கும் நபர்களின் மன முதிர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது.”



    இரண்டையும் படித்துவிட்டு குட்டையை குழப்ப நானும் சில அலைகள்.

    வெள்ளந்தியாக இருப்பவர்கள் ஊடகங்கள்/புத்தகங்கள் மூலம் corrupt ஆகிறார்களா? (அல்லது) மாற்று சிந்தனைகளின் மூலம் தங்களின் ஆணிவேர் தாக்கங்களில் இருந்து விடுபடாமல் இருக்கிறார்களா? அப்படி இருப்பது நல்ல விஷயமா? ஜார்ஜ் புஷ், கொண்டலீஸா ரைஸ் போன்றவர்கள் கூட பிடித்த பிடியில் நிலையாக உள்ளார்கள். அது சரியா? கொள்கைகள் வேறு… புரிதல்கள் வேறா?

    கிராமம் முதல் நகரம் வரை எல்லோருக்கும், முதிர்ச்சியான பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் அவசியம் தேவை. இன்றைய ஊடக அமைப்புகள் — ‘முதிர்ந்த பயனுள்ள தெரிவுகளை கொடுக்கிறார்களா?’ என்பது வேறு விஷயம்.

    மாலன் சொன்ன சம்பவம் ‘மனதைத் தொடும் சம்பவத்தின் கதை’. ஆபத்துக்கு உதவுவது கிராமங்களின் மனப்பான்மையாகவும், நமக்கென்ன போச்சு என்பது நகரத்தின் வளர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு இறப்பின் இரண்டு மூலங்கள் என்று பிரசன்ன வர்ணிப்பது போல் சில நகரவாசிகள் சிந்திக்க மட்டுமே இருக்கிறார்கள். கிராமங்களிலும் இப்படி பட்டவர்கள் (ஊடகங்கள் புகுந்து சாயம் அடிப்பதற்கு முன்பில் இருந்தே) பரட்டை கிளப்பாமலா இருந்திருப்பார்கள்?!

    லால்குடியின் 75ஆம் வயலின்

    லால்குடியை நான் முதன் முதலாக கேட்டபோது எனக்கு இளையராஜாவும் அனு மாலிக்கும் மிகவும் பிடித்தமானவர்களாக இருந்தார்கள். (இப்போது வித்யாசாகரும் இஸ்மாயில் தர்பாரும் கோலோச்சுகிறார்கள் 😉 இலவச நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்திற்காகவும் கச்சேரி முடிந்தவுடன் மீரா பவன்வாசிகளுடன் காபி-கடலை போடப் போகலாம் என்னும் ஊக்கமும் ‘தீர்த்தக் கரையினிலே’ போன்று ஏதாவது சினிமாப் பாடலும் இடம்பெறும் என்று ஸ்பிக்-மகே (SPIC MACAY) உறுப்பினன் சொன்னதாலும் போய் உட்கார்ந்தோம்.

    அதற்கு முன் என்னுடைய சாஸ்திரீய சபா அமர்வுகள் மிகவும் குறைவு. அம்மாவுடைய நண்பர் மகளின் திருமண வரவேற்பில் கண்ட ‘சங்கராபரணம்’ மஞ்சு பார்கவி நடனம் அமர்க்களமாகத்தான் இருந்தது. ஆனால், அரசவைக் கலைஞர் போல் உடம்பை வளைக்கிறாரா என்று எதிர்பார்த்தலிலும், ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும் இடையே உள்ள இரண்டு நிமிடத்தில் எவ்வாறு ஆடை, அணிகலன் அனைத்தையும் பொருத்தமாக மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறார் என்று நினைத்ததிலும், பஃபே சாப்பாடா இலை சாப்பாடா என்று ஏவியெம் ராஜேஸ்வரி டைனிங் ஹாலை எட்டிப் பார்ப்பதிலுமே பெரிதும் கழிந்து போனது.

    எப்பொழுதோ சென்னையில் கேட்ட மஹாராஜபுரம் சந்தானம் கச்சேரி பெரிதாக கவரவில்லை. கொட்டாவிதான் வந்தது. ஆனால், லால்குடியும் அவர்களின் மகன் மற்றும் மகளின் வாசிப்பு கவர்ச்சியான வேகத்துடன் துடிப்பாக இருந்தது. என்ன ராகம், தாளம் போன்ற டெக்னிகல் தகவல்களை ஒவ்வொரு பாட்டிற்கு முன் சொன்னாலும் புரிபடவில்லை. இருந்தாலும், ஓரத்து சீட்டில் உட்கார்ந்திருந்து விட்டு, அரை மணி நேரம் குசுகுசு உரையாடிவிட்டு பிச்சுக்கலாம் என்னும் எண்ணத்தில் மண். அனைவரும் ஆர்வத்துடன், விரும்பி, முழுவதும் கேட்டுவிட்டு அதிசயித்தோம்.

    அதன்பின் ஸ்பிக்-மக்கே ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளும் அந்தந்த செவ்வியல் துறைகளில் எங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கூட்டியது.

    Lalgudi Jeyaraman – பிரம்மராஜன்: “மேற்கத்திய இசைக் கருவியான வயலினைக் கர்நாடக சங்கீதத்திற்குத் தகுந்தவாறு வாசிக்கும் முறையை மாற்றியமைத்து ஏறத்தாழ நம்மூர்க் கருவியைப் போல நாம் புழங்கிவருகிறோம். ஒரு கச்சேரியின் பிரதான பாடகருக்கான பக்க வாத்தியமாக (அ) துணை இசைக் கருவியாக இருந்த வயலின் 60களுக்குப் பிறகு கச்சேரியின் பிரதான வாத்தியமாக மாறியது. அப்படி மாற்றியவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். இவருக்குச் சமமாக வயலின் இசையில் சாதனை படைத்தவர்கள் என்று சொல்லக்கூடிய இன்னும் இருவர் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் டி.என். கிருஷ்ணன்.

    லால்குடி பல மூத்த குரலிசைக் கலைஞர்களுக்கும் (அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய அய்யர், ஜி.என். பாலசுப்பிரமணியன், மதுரை மணி அய்யர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, எம்.டி. ராமநாதன், மதுரை சோமு, ராம்நாட் கிருஷ்ணன்) புல்லாங்குழல் இசைக் கலைஞர்களுக்கும் (டி. ஆர். மஹாலிங்கம். என். ரமணி) வீணை இசைக் கலைஞர்களுக்கும் (ஏமனி சங்கர சாஸ்திரி, மைசூர் தொரைசாமி ஐயங்கார், எஸ். பாலச்சந்தர்) பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். ஆனால் பெண் குரலிசைக் கலைஞர்களுக்கு அவர் வாசிக்கவில்லை. பெண் குரலின் ஸ்தாயிக்கேற்ப வயலின் ஸ்ருதி சேர்க்கப்படும்போது வயலினுக்கே உரிய இனிமைச் செழுமையை இழந்துவிடுவதாக அவர் கருதியது இதற்கான காரணமாக இருக்க முடியும்.

    சாகித்யம் கர்நாடக இசையில் மையப்பங்கு வகிப்பதாலும் மேலதிகமாகக் கச்சேரியே இசைப் பிரதியைச் சார்ந்திருப்பதாலும் ஒரு குரலிசைக் கலைஞர் குறிப்பிட்ட ராகத்திற்கான பாடல் (அ) கீர்த்தனையைக் கற்காது காதில் விழுந்த ஸ்வரங்களை வைத்து இசையை நிகழ்த்துகின்றனர். ஆனால் லால்குடி அப்படிப்பட்டவரல்லர். அவர் வாசிக்கும் எல்லா இசைப் பிரதிகளையும் குரலில் அவரால் பாட முடிந்த பிறகே அவர் அதை வாத்தியத்தில் வாசிக்கிறார். தொடக்கத்தில் பாடகராகக் கச்சேரிகள் செய்திருக்கிறார். அவருடைய வயலின் வார்த்தைகளை ஸ்பஷ்டமாக உச்சரிக்கும் திறன் மிக்கது. எடுத்துக்காட்டாக, “தீராத விளையாட்டுப் பிள்ளை‘ என்ற ராகமாலிகையின் இரண்டாவது வரி மீண்டும் வாசிக்கப்படும் சமயம் இதை அவதானிக்கலாம். குரலிசையின் பாணியைப் பின்பற்றிக் கருவி இசையில் வாசிப்பதை ஹிந்துஸ்தானியில் “காயகி’ என்கிறார்கள். அதுபோன்ற ஒரு சொல்லாக்கம் கர்நாடக இசையில் புழக்கத்தில் இல்லை. ஜெயராமனின் வாசிப்புப் பாணியில் பாதி குரல்அம்சமும் பாதி வாத்தியஅம்சமும் இருப்பதாக இசை விமர்சகர் டாக்டர் என். ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

    ஜெயராமன் இசைப் படைப்பாளராகவும் பரிணமித்திருக்கிறார். குறிப்பிடத்தக்க “தில்லானாக்கள்’ மற்றும் “வர்ணங்கள்’ போன்ற இசை உருக்களை எழுதியிருக்கிறார். வர்ணங்கள் கச்சேரியின் தொடக்கத்திலும் தில்லானாக்கள் இறுதியிலும் பாடப்படுகின்றன. 29 தில்லானாக்களையும் 13 தான வர்ணங்களையும் 3 பத வர்ணங்களையும் எழுதியிருக்கிறார். வசந்தா ராகத்தில் ஜெயராமன் எழுதிய முதல் “தில்லானா’ ஜி. என்.பியின் முழு ஆமோதிப்பைப் பெற்றது. அவர் ஒரு சிறந்த குருவும்கூட. அவரது சகோதரி ஸ்ரீமதிக்கும் மகன் கிருஷ்ணனுக்கும் மகள் விஜிக்கும் வயலின் கற்றுக்கொடுத்திருக்கிறார். பல இசைப் பள்ளிகளுக்கு ஆலோசனைகள் அளிக்கிறார்.

    தீவிர இசை ரசிகரல்லாதோரும் அணுகும் விதமாக The Dance of Sound என்ற பெயரில் 1978ஆம் ஆண்டு ஓர் இசைத்தட்டு வெளிவந்தது. “தில்லானா’ என்கிற இசை வடிவம் ஒரு நாட்டிய அரங்கேற்றத்தின்போது பாடப்படும் இன்றியமையாத இசை. கச்சேரியைப் பொருத்தவரை அது “லேசான’ அயிட்டமாகக் கருதப்பட்டுக் கடைசியில் பாடப்படும். ஆனால் அவற்றைப் பிரதானப்படுத்தியது 8 தில்லானாக்கள் கொண்ட ஜெயராமனின் இந்த இசைத்தட்டு. அவற்றை இன்றைக்குக் கேட்டாலும் மனதில் மாயங்களை நிகழ்த்தும் திறன்கொண்டவை. இந்த எட்டில் எனக்குப் பிரியமானவை மோகன கல்யாணி, தேஷ், துவிஜாவந்தி மற்றும் பஹாடி. இத்தில்லானாக்களின் கடினமான தாளப் பிரயோகம் மற்றும் ஸ்வரங்களைக் கையாளும் முறை தேர்ச்சி மிக்கவை. ஆரம்பகாலப் பயிற்சியாளனுக்கு இவை சிரமம் தரக்கூடியவை. என்றாலும் ஒரு கூர்ந்த ரசிகனுக்குக் கலை ஞானத்தின் வேறு அனுபவச் சாளரங்களைத் திறந்துவிடக் கூடியவை. “ஆர்க்கெஸ்ட்ராவை’ அவர் தன் துணைக்குச் சேர்த்துக்கொண்டது பற்றி அப்போது சில முணுமுணுத்த விமர்சனங்கள் இருந்தன – தீவிர இசையை அவர் நீர்த்துப்போக அனுமதித்து விட்டதாக. ஆனால் ஜெயராமனின் “தில்லானாக்களை’ கேட்ட அனுபவத்தின் விளைவாய்க் கர்நாடக இசை ரசிகர்களாக மாறியவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கக்கூடும்.

    1983இல் வெளிவந்த South Meets North (An enchanting hour with Lalgudi G. Jayaraman & Ustad Amjad Ali Khan) என்ற இசைத்தட்டின் வழியாக உஸ்தாத் அம்ஜத் அலிகானுடன் சேர்ந்து கர்நாடக இசையின் வயலினையும் ஹிந்துஸ்தானி இசையின் சரோடையும் கேட்க வழிவகுத்தார் லால்குடி. 1 மணி நேரத்திற்கான அந்த இசைத் தட்டில் மால்கோன்ஸும் (ஹிந்தோளம்) பூபாலியும் (மோஹனம்) இடம் பெற்றுள்ளன. வேலூர் ராமபத்ரன் மிருதங்கமும் ஷாபட் அகமத் கான் தப்லாவும் வாசித்திருக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இருந்த இரு ராகங்களும் இரவு நேரத்திற்குரியவை. “ஜுகல் பந்தி’ என்றழைக்கப்படும் இந்த “இசை சந்திப்பில்’ இரண்டு கலைஞர்களும் ஒரு ராகத்தில் தளம் அமைத்துக்கொண்டு தத்தமது பாணியில் தனிப்பட்ட திசையில் பயணப்பட்டு இறுதியில் ஒன்றிணைகிறார்கள். வடக்கும் தெற்கும் இதில் இணைகின்றன. ஆனால் பிணைவதில்லை. மூல அர்த்தப்படி “ஒரு ஜோடியைப் பிணைப்பது’ தான் ஜுகல்பந்தி.

    ஒரு எல்.பியின் 20 நிமிடப் பக்கத்தில் பல சிறிய துக்கடாக்களைக் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் விரிவான ஆலாபனைகளும் ஸ்வரப் பிரஸ்தாரங்களும் கொண்ட இந்த இசைத்தட்டு, கேட்பவனின் நிறைவை நீட்டிக்கக் கூடியதாய் அமைந்தது. ஹெச்.எம். வி. கம்பெனி இந்த இசைத்தட்டின் ஒரு பக்கத்தை வழக்கமான 20 நிமிடத்திற்கு மாறாக 30 நிமிடத்திற்குப் பதிவுசெய்திருந்தது. அன்றைக்கு அது பெரிய விஷயம். ஹிந்துஸ்தானி இசை குறித்து ஜெயராமன் கொண்டிருந்த விசாலமான அணுகு முறையே இப்படிப்பட்ட ஓர் இசை சந்திப்பு சாத்தியமாகக் காரணமாக இருந்தது. ஹிந்துஸ்தானியில் பல வேறுபட்ட இசைக் கருவிகளுக்கிடையிலான ஜுகல் பந்திகள் சாத்தியமாகியுள்ளன. நான் கேட்டு அனுபவித்த முதல் ஜுகல்பந்தி அனுபவம் ஷிவ்குமார் ஷர்மாவும் (சந்த்தூர்) ஹிரபிரஸாத் சௌராஸியாவும் (புல்லாங்குழல்) இணைந்து கொடுத்த ஒரு எல்.பியைக் கேட்டதுதான்.

    ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் அளவுக்கு கர்நாடக இசைக் கலைஞர்களின் “வாய்ஸ் கல்ச்சர்’ இல்லை என்ற கருத்தும் ஜெயராமனுக்கு உண்டு. இசைக்கான மரியாதையைவிடப் பக்திக்கான மரியாதை கர்நாடக சங்கீதத்தில் அதிகம் உண்டென்ற கருத்தும் கொண்டவர் அவர். அதிகமும் பிரதியுடன் பிணைக்கப்பட்டுள்ள கர்நாடக சங்கீதத்தின் நிலைமையை விமர்சனம் செய்பவராகவுமிருக்கிறார். பக்தியிலிருந்து விடுதலையடைந்தால்தான் கர்நாடக சங்கீதம் நவீனமாக முடியும் என்று தமிழவன் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்வது தவறில்லை.”

    Thamizhmanam Polls 1 

    Thamizhmanam Polls 1 Posted by Hello

    Wishing Pond with Pennies and Paisa 

    Wishing Pond with Pennies and Paisa Posted by Hello

    Wishing Pond Well 

    Wishing Pond Well Posted by Hello

    Shankar in Anniyan – Vekram, Satha,  

    Shankar in Anniyan – Vekram, Satha,
     Posted by Hello