Monthly Archives: ஜனவரி 2005

Dhaba – Birla Institute of Technology & Sciences -…

Dhaba – Birla Institute of Technology & Sciences – BITS Pilani in 2005 Posted by Hello

Birla Institute of Technology & Sciences – BITS Pi…

Birla Institute of Technology & Sciences – BITS Pilani in 2005 Posted by Hello

கட்டுரை விருப்பங்கள்

திண்ணை/தமிழோவியம்/வலைப்பதிவுகளில் பின்வருபனவற்றில் எவை இடம்பெறும்?

1. சோனியா மிர்ஸாக்கள் உருவாக மேலும் மகேஷ் பூபதிகள் நமக்கு தேவை – டென்னிஸ் விளையாட்டின் பொருளாதாரங்களை புதிய நட்சத்திரத்தின் மூலம் அலசும் பதிவு.

2. ஈராக் தேர்தல்:

– ஆக்கபூர்வமான முயற்சியா அல்லது வறட்டு பயிற்சியா?

– என்ன, எப்படி, யார், ஏன்? விரிவான செய்திகள்

3. கொண்டலீஸா ரைஸ்: கடந்த நான்கு வருடங்களும் தொடரும் போர்களும்.

4. நியு ஜெர்ஸி எடிஸனின் உருமாற்றம்: இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு முன்னுதாரணமாகிறது.

5. அமெரிக்காவின் பற்றாக்குறை பொருளாதாரமும் உலக சந்தை மாற்றங்களும்: இந்தியாவை எவ்விதம் பாதிக்கும்?

6. நியு இங்கிலாந்து பாட்ரியாட்ஸின் (Patriots) வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் என்ன காரணிகள்?

7. குறைந்த கலொரி பக்கார்டி ரம்மும் காஃபி கலந்த பட்வெய்ஸர் பியரும்.

8. நடன இயக்குநர் லாரென்ஸின் தெலுங்கு நெறியாள்கை சங்கதிகள்.

9. இலங்கையில் இஸ்லாமும் சுனாமியும்.

10. புஷ் பதவியேற்புக்கு காணிக்கை செலுத்தியவர்கள் கணக்கு.

11. ஆந்திராவின் நக்ஸல் : தற்போதைய நிலைமை.

12. பத்மஸ்ரீ ஷாரூக் தனது சொந்தப் படத்தில் ஹிந்துவை தீவிரவாதியாக வைத்தது ஏன்?

13. ‘காதல்’ இசையமைப்பாளரின் கள்ளக்காதல்.

14. சந்திரமுகிக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம்.

15. சாத்தானா? பாபா-வா? – ‘டெக்ஸாஸ் ஃப்ரைய்ட்’ புஷ் முத்திரை.

16. இந்தியாவில் மக்கள் குவியும் இடங்களில் எளிதில் வெளியேற கட்டாய வழிமுறைகள்.

17. கலிஃபோர்னியாவில் தற்கொலை செய்ய எத்தனித்தவன், மூன்று ரயில்களை மோதவிட்ட கதை.

சுனாமி மதிப்பெண்கள்

1994-ஆகத்தான் இருக்கும். கலைஞர் ஆட்சி. புரட்சிகரமான திட்டம் அறிவித்தார். பள்ளிக்கூடம் செல்லாத பெற்றோரை உடையவர்களுக்கு பொறியியல்/மருத்துவ நுழைவுத்தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் கூட்டித் தருவதாக சொன்னார்.

எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டு செய்ய ஆரம்பித்த கொள்கை. அடுத்த ஆண்டு TNPCEE-யிலேயே இந்த முறை கைவிடப்பட்டாலும், நான் எழுதிய ஆண்டு மட்டும் கடைபிடிக்கப்பட்ட பழக்கம்.

முதன் முதலாக வேலையில் அமர்ந்தவுடன்தான் இந்த மாதிரி பாதிப்புகளை மிகச் சிறியதாக உணர்ந்தேன். ஐந்து மதிப்பெண் கொடுக்கப்பட்டதால் முன்னேறிய எவரும் எனக்கு அறிமுகமில்லை. மேலோட்டமாக கூகிளில் தேடினால் சார்புள்ள பக்கங்கள் கூட எதுவும் கிடைக்கவில்லை. கருணாநிதிக்கே கூட மறந்து போயிருக்கலாம்.

அதே போல், இந்த ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து நுழைவுத்தேர்வு எழுதுவோருக்கு ஐந்து மதிப்பெண்களை அண்ணா பல்கலை ‘போட்டு‘க் கொடுக்கலாமே?

சினிமாவுக்கு பின்னால்…

(தமிழ்) சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் – பெ.கணேஷ்

முன்னுரை

திரைப்படத்திற்கு கதை எழுதுவது எப்படி? பாகம் -1

திரைக்கதை எழுதுவது எப்படி? பாகம் -2

சினிமாவின் இயக்கம் என்பது என்ன? பாகம் 3

சீனுக்கு ஷாட் பிரிப்பது எப்படி? பாகம் 4

ஒரு காட்சிக்கு எண்ட்ரி என்பது எவ்வளவு முக்கியம்? பாகம் 5

கேமராவை பத்தியும் லென்ஸ் பத்தியும் சொல்லுங்க பாகம் 6

பார்வை அதாவது கேமரா லுக் பாகம் 7

சினிமாவில் உதவி இயக்குனர்களின் பங்கு பாகம் 8

அவங்கதான் கேமரா அசிஸ்டெண்டா? பாகம் 9

எடிட்டிங் பாகம் 10

டப்பிங், ரீ-ரெக்கார்டிங், மிக்ஸிங் பாகம் 11

மினிமம் பட்ஜெட் படம் பாகம் 12

டிஸ்ட்ரிப்யூஷன் என்பது என்ன? பாகம் – 13

வெளியான வலை: kumudam.com

என் குறிப்பு: இலவசமா கொடுக்கும் போதே படித்து/சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். காதலர் தினத்துக்குப் பின் Vikatan.com காதல் முடிந்து கல்யாணம் கட்ட சொல்கிறார்கள். அடுத்து தமிழ் புத்தாண்டுக்குள் குமுதமும் காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்குள் ‘சுவடுகள்’, கோப்புகள் எல்லாவற்றையும் எங்காவது குழவி கொந்திப் போடுங்கம்மா.

Notable Notes (திண்ணை)

மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டி: தமிழில் : இரா முருகன்

மதத்தை எல்லாம் விட்டுட்டு, இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு. இந்த உலகத்திலே ஆட்டை, மாட்டை, மனுஷனை, நிலாவை, பாம்பை எல்லாம் பிறப்பித்துவிட்ட ஒரே ஒரு தெய்வத்தோடு தான் என் நம்பிக்கை. மசூதிக்கும், கோவிலுக்கும் போயிட்டு வரவங்க முகத்தைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. எல்லாம் சுயநலம். தன்னோட காரியம் மட்டும் நிறைவேற பிரார்த்தனை.

இது ஆபாசம் அப்படீன்னு தெய்வத்துக்குத் தோணாதது எல்லாம் நான் எழுதுவேன். புரணி பேசறது, அடுத்தவங்களைக் கேலி செய்யறது, அப்பாவிகளைப் பரிகசிக்கறது இந்த மாதிரி ஒண்ணும் நான் எழுதினதில்லே. காதலிக்கிறவங்களுக்கு சிற்றின்பத்தில் இச்சை வராதா என்ன? கண்ணனும் ராதையும் போகத்திலே ஈடுபட்டு இருக்கறதைச் சொல்றதுதானே கீத கோவிந்தம்?



ஆறடி அறைகளின் குரல்கள் – பாவண்ணன்:

கிராமம், வாழ்வின் கசப்புகள், கையறு நிலை, இசைவான உறவில்லாததன் வலி, வாழமுடியாத தவிப்பு என்ற களங்களில் இயங்குபவை மற்ற கவிதைகள். 1984ல் அய்யனார் எழுதிய ஒரு வரி “எனக்குரிய காற்றை எனக்குப் பிரித்துத்தாரும்” என்பதாகும். 2002ல் அவரே எழுதிய இன்னொரு வரி “காற்று அழிந்துபோன இந்த நகருக்குள் வந்தேன்” என்பதாகும். இடைப்பட்ட பதினெட்டு ஆண்டுகளாக சுதந்தரத்தின் அடையாளமாக விளங்கும் காற்றைக் கண்டடைந்து துய்க்கும் ஆவலில் அலைந்த அலைச்சல்களையும் நீண்ட பயணத்தின் தவிப்புகளையும் தனிமைத் துயரங்களையும் பதிவுசெய்த வரிகளே இத்தொகுப்பில் கவிதைகளாக உள்ளன.

காற்று அழிந்துபோன நகரில் அய்யனார் வசிப்பதற்குத் தேர்ந்தெடுத்த இடம் மேன்ஷன். சுதந்தரத்தை அறியும் வாய்ப்பைத் தராவிட்டாலும் வாழ்வின் மற்ற முகங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்புகளைக் கொடுக்கிறது மேன்ஷன் அறை. எளிமையாக தூக்கத்தில் மூழ்க வழியற்ற இடம் அது. கனவுகளின் வெப்பத்தில் கொதிப்பேற்றும் இடம். தெரிந்த பெண்களின் முகங்களை மனப்பரப்பில் நௌ¤யவைக்கும் இடம். ஓர் இரவுத் து£ரத்தில் வசிக்கும் மனைவியின் ஞாபகத்தை வரவழைக்கும் இடம். சந்தேகங்களாலும் ரகசியங்களாலும் ஆளை உருட்டிஉருட்டி விளையாடும் இடம். இலக்கியப் பரப்பில் சிற்றில் என்றொரு சொல்லாட்சி உண்டு. குழந்தைப் பருவத்தில் விளையாடுவதற்காக மணல்வீட்டில் கட்டப்படும் வீட்டுக்குத்தான் சிற்றில் என்ற பெயர். கதவு, வாசல், ஜன்னல், தோட்டம் எதுவுமே இல்லாத ஒன்று அது. ஆனால் எல்லாமே இருப்பதைப்போன்று பாவிக்கப்படுகிற வடிவம். ஓடி உழைத்து உயிர்த்திருக்க பெருநகரைநோக்கி வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உடனடித் தங்குமிடமாக அமையும் அறைகள் இத்தகு சிற்றில்வகைப்பட்டவை. எல்லாமே உருவகித்துக்கொள்ளப்படவேண்டிய இடம். அன்பையும் நட்பையும்கூட இருப்பதைப்போல உருவகித்துக்கொள்ளுமாறு அமைந்துவிடுவதுதான் மிகப்பெரிய துரதிருஷ்டம். அப்படிப்பட்ட ஒரு கணத்தில் எழும் கேள்விதான் “அறை என்பது வீடாகுமா?” என்பது.

ஏன் இந்த மனிதர்கள் இப்படி கொடுக்குமுனை மின்னும் சொற்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள்? பழகியவர்கள், பழகாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற எந்த பேதமும் ஏன் இச்சொற்களுக்கு இருப்பதில்லை? இப்படி கொட்டிக்கொட்டி எதற்காக விஷத்தைப் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறார்கள்? கொட்டிக்கொட்டி சாதாரண பிள்ளைப்பூச்சிகள்கூட ஏன் குளவிகளாக மாற்றப்படுகின்றன?எல்லாமே குளவிகளாக மாறினால் இந்த மண்ணில் வண்ணத்துப் பூச்சிகளையும் தேனீக்களையும் எங்கேபோய் கண்டுபிடிக்கமுடியும்? இந்த மாற்றத்தால்தான் எல்லாருமே கொம்புள்ளவர்களாகவும் உளவாளிகளாகவும் உருமாறிவிடுகிறார்களா?



‘நிகழ்’

வீடுகள் முளைக்கும்

விளைநிலம் எல்லாம்

காடுமேடெல்லாம் கார்கள்

காற்றை நசித்துக் கடக்கும்

பற்சக்கரப் பதிவுகள்

இனிய தோட்டத்தில்

இரும்புக் கழிகள்

இதயத்துக்கருகில்

இயந்திரப் பொறிகள்

கம்ப்யூட்டரின் மடியில்

படுத்துப் புரளும் பூமி

காற்றும் விற்கப்படும்.

சத்தியமும் அன்பும்

வாங்க ஆளின்றி!

மேன்ஷன் கவிதைகள் :: பவுத்த அய்யனார்

தட்டிக்கொடுத்தவர் – சுஜாதா/Anandha Vikadan



அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங் — ஆசாரகீனன்:

“தியானமன் சதுக்கத்தில் மாணவர் புரட்சியை சீன அரசு வன்முறையைக் கையாண்டு அடக்கியதை ஒப்புக் கொள்ளாத சீனர்களின் வலிமை மிக்க அடையாளமாகத் திகழ்ந்தவர் இவர். ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர் மட்டத் தலைவர்களை கடுமையாகக் கண்டித்ததோடு, மாணவர் போராட்டமானது எதிர்-புரட்சித் தன்மை கொண்டது என்ற சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான நிலையை ஒப்புக் கொள்ளவும் மறுத்தவர் ஜாவ் ஜியாங்.

அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தின் பொறுப்பாளராக ஆகிவிட்ட அவர் டெங்கின் ஆசியுடன் தீவிர பொருளாதார சீரமைப்புகளை மேற்கொண்டார். ஜாவ் ஜியாங் 1987-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றதன் மூலம் டெங்கின் வாரிசாகவும் ஆனார்.”



நன்றி: Thinnai – Weekly Tamil Magazine

புகைபிடிக்க விட்டவை

புயலுக்கு முன் அமைதி மாதிரி சனி காலை மேகமூட்டமாய் மட்டுமே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சனிக்கிழமை சாயங்காலம்தான் பனி போட ஆரம்பித்தது. நிறையப் போட்டுக் கொண்டே இருந்தது. இரண்டடி உயரத்துக்கு பனி விழப் போகிறது என்று டிவியில் சொன்னார்கள். காரை சுத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை பயன்பட்டது.

நியு இங்கிலாந்து பாட்ரியாட்ஸ் அமெரிக்கக் கால்பந்தில் மீண்டும் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றார்கள். ஜெயிப்பதை மிக எளிதாக செய்துகாட்டியதன் மூலம், சூப்பர் பௌலை வெல்வது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. பத்து பனிரெண்டு டிகிரி ஃபாஹ்ரென்ஹெய்ட்டில் சளைக்காமல் ஆடுகிறார்கள். குளிரில் பத்து நிமிஷம் நடந்தாலே மூக்கெல்லாம் உலர்ந்து, மாநிற முகம் கூட சிவந்து போய், கிளவுஸுக்குள் கை உறைந்து போகுமாறு எனக்கு ஆகிப் போகிறது. மனைவி மக்களுக்கு ஜலதோஷம், தும்மல், இருமல் எல்லாம் ஒட்டிக் கொள்கிறது.

கடந்த வருடத்துக்குப் பின், மீண்டும் நுழைந்த அடுக்களையில் புதிது புதிதாக பாத்திரங்கள் வந்திருந்தது. நான் மட்டும் தனியே இருந்தபொழுது இரண்டு கை விரலுக்குள் அடங்கும் உபகரணங்களைக் கொண்டு எளிதாக காலந்தள்ளியதை மனைவியிடம் நினைவு கூறாமல் புழங்க முடியவில்லை. பூண்டு முதல் பெப்பர் வரை அனைத்துப் பொடிகளும் போட்ட என்னுடைய பாஸ்டாவை ரசித்து சாப்பிட்டு பாராட்டிய பொழுது, நானும் அவ்வப்பொழுதாவது நல்லாயிருக்கிற சாப்பாட்டை, சத்தமாக வெளியே சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு வாங்கினால் பெரிய கிச்சனாய் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்திருக்க வேண்டிய அண்டை வீட்டார், இன்றுதான் வருகிறார்கள். இணையத் தளத்தின் மூலம் எங்கே இருக்கிறார்கள், எப்படி வருகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடிவது மிகவும் வசதி. லண்டனிலிருந்து மாஸ்கோ சென்று அங்கிருந்து மாண்ட்ரியால் வந்து சேர்ந்து பாஸ்டன் கொண்டு வந்து விடுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் சொல்லியிருந்தது.

ஒரு வயது குழந்தையுடன் நான் சென்றபோது இது மாதிரியெல்லாம் நடந்திருந்தால் கடவுளைக் கொஞ்சம் திட்டியிருப்பேன். சில நாள் முன்பு பார்த்த கார்ட்டூன் மனதில் ஊசலாடியது:

விமான நிலையம். எக்கச்சக்க பயணிகள் காத்திருக்கிறார்கள். அறிவிப்பில் நிறைய ‘Delayed/Canceled’. கைக்குழந்தையுடன் உள்ள பெண்மணி ‘டயாபர்’ பிச்சை எடுப்பதாக வரைந்திருந்தார்.

குழந்தைகளுக்கென சிறப்பு உணவு, பழரசங்கள், ஓவ்வாத பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு என்று இந்தக்கால குழந்தைகளுக்கு நிறைய மரியாதை. அப்படியே ‘கொலாடர’லில் டாம் க்ரூய்ஸ் சொல்லும் வசனமும் தோன்றியது: ‘ஒன்பது மாதம் உன்னைக் கருவில் சுமந்தவளுக்கு இந்த மரியாதை கூட செய்ய மாட்டியா?’

இதே டயலாக்கை தல அஜீத் சொல்லியிருந்தால் மனசில் பதிந்திருக்காது. அமெரிக்கன் சொன்னவுடன் ‘நீயும் மதிக்கிறாயா?’ என்று மகிழவைத்தது.

போன வாரம் என்.எஸ்.கே.யின் ‘நல்லதம்பி’. இந்த வாரம் டி.ஆர். ராமச்சந்திரனின் ‘சபாபதி’, சென்னை சென்று வரும்போது வாங்கவேண்டிய பட லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பனியினால் பார்த்த படங்களை சிறு குறிப்பிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  • குண்டர்கள் தடுப்பை மைக்கேல் மூர் ஸ்டைலில் சொல்லிய ‘சூப்பர்சைஸ் மீ’.
  • சல்மான் கான் மேல் பரிதாபத்தை உண்டாக்காமல், கொஞ்சம் குழப்பமாக சென்ற ‘ஃபிர் மிலேங்கே’. (‘ஏக் அலக் மௌஸ’மாவது வித்தியாசமாக இருக்க வேண்டும்.)
  • அப்பு/சடக்-கின் ஒரிஜினலோ என்று நினைத்து எடுத்த ‘டாக்ஸி ட்ரைவர்’. விஜய்க்கு பதிலாக ராபர்ட் டிநீரோவைக் கொண்டு ‘திருப்பாச்சி’யை மார்ட்டின் சார்ஸீஸ் இயக்கியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்யவைத்தது.
  • ‘மேகிங் ஆஃப்’ போன்றவற்றிற்காக மீண்டும் பார்த்த ‘கொலாடெரல்’. பொங்கல் பேட்டியில், சூர்யாவிடம் ‘மெத்தட் ஆக்டிங்’ தெரியுமா என்று கேட்டு மிரளவைத்தார்கள். டாம் க்ரூய்ஸும் மைக்கேல் மான்னும் மெத்தட் ஆக்டிங்கை விளக்கினார்கள்.
  • ‘மேமாத’த்தில் அறிமுகமான சோனாலி குல்கர்னியின் இறப்பை குறித்த கேள்வியில் அசத்த ஆரம்பித்தார்கள் ‘அக்னி வர்ஷா’. கடைசி க்ளைமாக்ஸ் வரை சிந்திக்க வைத்தது.
  • எதற்கு சிறந்த நடிகை என்று புரியாத ‘மான்ஸ்டர்ஸ் பால்’. சான் பி டிட்டி கோம்ப்ஸ் நன்றாக நடிப்பார் என்று இப்பொழுதுதான் தெரிகிறது.

    அதற்கு முன் இன்று காலை புகைப்படபிடிக்க மறந்துபோன சில விஷயங்கள்:

  • பஞ்சத்தில் காய்ந்த பூமி பாளம் பாளமாய் வெடித்திருக்கும். இன்றைக்கு சார்ல்ஸ் நதியும் பாளம் பாளாமாய் பனிக்கட்டியாய் உறைந்து போய் இருந்தது.
  • வழுக்காமல் நடக்க கரடு முரடான ‘ஸ்னோ ஷூக்கள்’ போட்டுக் கொண்டு வருவது வழக்கம். சில அலுவலகங்களில் பிஸினசுக்கு ஏற்றவாறு கறுப்புக் காலணிகள்தான் யூனிஃபார்ம். பனிக்கான காலணியை அணிந்து கொண்டும், பிஸினஸ் ஷூவை தோள்பையில் மாட்டிக் கொண்டும் மக்கள் நடந்து கொண்டிருந்த காட்சி.
  • நான் உட்பட பலரும் வழுக்கி விழப் பார்த்து ஒரு காலில் பேலன்ஸ் செய்யும் வித்தைகள்.
  • பனி மலைகளின் நடுவே தங்களது கார்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள்.

    சன் டிவியின் ‘சிறப்பு பார்வை’ எளிமையாக முக்கியமான பதிவாக அமைந்தது. பஞ்சாபில் இருந்து சாமான்களைக் கொண்டு வந்த முன்னூறு சீக்கியர்களின் பணியை காண்பித்தார்கள். விவேக் ஓபராய் களத்தில் பணியாற்றியது போல் உடனடியாக, அமைதியாக சுனாமி மீட்புப் பணிகளில் செயலாற்றியவர்களில் சிலரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்கள். இது தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தால் இன்னும் சிலருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பங்குபெற ஊக்கமளிக்கலாம்.

  • Space Station 

    Space Station Posted by Hello

    Sania Mirza – Only Modeling, Advertisements, Comme…

    Sania Mirza – Only Modeling, Advertisements, Commercial? Posted by Hello

    Sania Mirza – No acting, No cinema, No Movies!? 

    Sania Mirza – No acting, No cinema, No Movies!? Posted by Hello