Monthly Archives: நவம்பர் 2004

டி.வி.

பிடித்த தற்போதைய அமெரிக்கத் தொலைகாட்சி தொடர்கள்.

1. Inside Actor’s Studio – ஞாயிறு – 8:00 – ப்ரெவோ

2. Desperate Housewives – ஞாயிறு – 9:00 – ஏபிசி

3. Boston Legal – ஞாயிறு – 10:00 – ஏபிசி

4. According to Jim – செவ்வாய் – 9:00 – ஏபிசி

5. Chappele’s Show – செவ்வாய் 10:00 – காமெடி சென்ட்ரல்

6. The West Wing – புதன் – 9:00 – என்பிசி

7. The Apprentice – வியாழன் – 9:00 – என்பிசி

8. Insomniac Music Theater – வாரயிறுதி பின்னிரவுகள் – விஎச்1

9. Biography – அவ்வப்பொழுது – A&E

10. Tonight show with Jay Leno – தினந்தோறும் – 11:35 – என்பிசி

கொசுறு:

(அ) Sex and the city – புதன் – 10:00 – டிபிஎஸ்

(ஆ) The Planet’s Funniest Animals- அவ்வப்பொழுது – அனிமல் ப்ளானெட்

ராம் மோகன் ராவ் சுதந்திரப் பறவையா? — ப.திருமாவேலன்

Vikatan.com::

”ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ராஜ்பவனில் தியாகிகளுக்கு கவர்னர் விருந்து தருவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படியரு விருந்து நடத்தாமல் கவர்னர் தவிர்த்துவிட்டு… ஏதென்ஸ் போய்விட்டார்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தொலைபேசியில் பேசும்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் சொன்னதாக லட்சுமி பிரானேஷ் சொல்கிறார்.

”நான் வெளிநாடு செல்வதற்கு ஜனாதிபதியும், உள்துறையும்தான் அனுமதி கொடுத்திருந்தது. நான் இங்கு இருந்திருந்தாலும் அன்று விருந்து கொடுத்திருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தீவிபத்தில் நூறு குழந்தைகள் இறந்த சோகம் கப்பியிருந்தது” என்று அழவைத்துவிட்டார் ராமமோகன் ராவ்.

‘என்னை வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்துவிட்டு… ஏன் போனாய் என்று இப்போது கேட்பதில் நியாயமில்லையே’ என்று கேட்கும் கேள்விக்கு மாண்புமிகு சிவராஜ் பாட்டீல் தான் பதில் சொல்லவேண்டும்.

வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும் ஆசாமி, பசித்தால் இட்டிலி சாப்பிட்டுவிட வேண்டுமே என்ற பயத்தில் ஹோட்டலுக்கு ஓடிப்போனதுபோல…. பாவம் கும்பகோணம் சோகத்தை தாங்கமுடியாத ராம மோகன்ராவ்…. அந்த சோகத்தை மறக்க ஒலிம்பிக்ஸ் விளையாட்டு பார்க்கப்போனது தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் தோன்றியிருக்காது.

ஏதென்ஸில் விளையாடப் போன சிலருக்கு பதக்கம் கிடைத்தது. உற்சாக மருந்து அருந்திய சிலரின் பதக்கம் பறிக்கவும்பட்டது. ராம்மோகன் ராவின் பதவி பறிப்புக்கு ஏதென்ஸ் போட்டியும் காரணமாகிவிட்டது. ஏதென்ஸின் முக்கியத்துவம் பற்றிக்கேட்டால் தமிழ் மக்கள் சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது.”

வாங்க வேண்டிய பு(து)த்தகங்கள்

விட்டுப் போனவற்றையோ, தவிர்க்க வேண்டியவற்றையோ சொன்னால் நன்றியுடையவனாவேன். அனைத்தும் இந்த வருடம் வெளியானவை.

சிறுகதை

  • அழைப்பு – சுந்தர ராமசாமி – காலச்சுவடு – 80.00

  • அவன் அவள் – விக்ரமாதித்யன் – புதுமைப்பித்தன் – 60.00

  • ஏற்கனவே – யுவன் சந்திரசேகர் – உயிர்மை – 100.00

  • எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் – ஆதவன் தீட்சண்யா – சந்தியா – 45.00

  • மண்பாரம் – இமையம் – க்ரியா – 170.00

  • மௌனியின் கதைகள் – மௌனி – Peacock – 185.00
  • முதல் மழை – ஆர் வெங்கடேஷ் – மித்ர – 45.00

  • ஒரு மனிதனும் சில வருஷங்களும் – பாவண்ணன் – அகரம் – 50.00

  • பரதேசி – ப்ரேம் ரமேஷ் – மருதா – 40.00

  • பூ – எஸ் பொ – மித்ர – 75.00

  • சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா – உயிர்மை – 225.00

  • வாத்தியார் – ம வே சிவக்குமார் – கிழக்கு – 75.00
  • குதிரைகளின் கதை – பா ராகவன் – கிழக்கு – 35.00

  • மனதில் உனது ஆதிக்கம் – சித்ரன் – கிழக்கு – 50.00

    நாவல்

  • 37 – எம் ஜி சுரேஷ் – புதுப்புனல் – 160.00

  • ஜன கன மன – மாலன் – கிழக்கு – 40.00

  • கலசரப்பம் – ஸ்டெல்லா ப்ரூஸ் – அகரம் – 110.00
  • கோவேறு கழுதைகள் (மறுபதிப்பு) – இமையம் – க்ரியா – 125.00

  • க்ருஷ்ணா க்ருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி – மித்ர – 95.00

  • நனவிடை தோய்தல் – எஸ் பொ – மித்ர – 100.00

    தொகுப்பு

    பிரமிள் படைப்புகள் – அடையாளம் – 210.00

    கவிதை

  • கானா – அபுல் கலாம் ஆசாத் – கிழக்கு – 30.00

  • நீர் வேலி – அய்யப்ப மாதவன் – அகரம் – 35.00

  • நீரின்றி அமையாது உலகு – மாலதி மைத்ரி – காலச்சுவடு – 40.00
  • சுடலைமாடன் வரை… – விக்ரமாதித்யன் – சந்தியா – 50.00

  • தனிமையில் ஆயிரம் இறக்கைகள் – குட்டி ரேவதி – பனிக்குடம் – 40.00

  • பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் – தொகு. எம்.ஏ. நு·மான், et al – காலச்சுவடு – 100.00

  • விடிந்தும் விடியாப் பொழுது – தேவதேவன் – தமிழினி – 45.00

    நாடகம்

  • என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது – செழியன் – உயிர்மை – 50.00

  • பலி பீடம் (கிரீஷ் கர்னாட்) – மொழிபெயர்ப்பு: பாவண்ணன் – காவ்யா – 60.00

  • வடக்கு முகம் – ஜெயமோகன் – தமிழினி – 40.00

    திரைக்கதை

    தக்கையின் மீது நான்கு கண்கள் – வசந்த் – கிழக்கு – 30.00

    கட்டுரை

  • சி கனகசபாபதி கட்டுரைகள் – தொகு. சண்முகசுந்தரம் – காவ்யா – 140.00

  • தலித்திய விமர்சன கட்டுரைகள் – ராஜ் கௌதமன் – காலச்சுவடு – 90.00

  • எனக்குப் பிடித்த கதைகள் – பாவண்ணன் – காலச்சுவடு – 120.00

  • ஃப்ரெஞ்ச் இலக்கிய வரலாறு – பதினெட்டாம் நூற்றாண்டு – ராஜகோபாலன் – காவ்யா – 95.00

  • கா சுப்பிரமணிய பிள்ளை – கருவை பழனிச்சாமி – SA – 25.00
  • கி.ரா. நாட்குறிப்பில் இருந்து – கி ராஜநாராயணன் – அகரம் – 90.00

  • மா அரங்கநாதன் கட்டுரைகள் – அரங்கநாதன் – காவ்யா – 85.00

  • ந பிச்சமூர்த்தி – அசோகமித்திரன் – SA – 25.00

  • புனைவும் வாசிப்பும் – எம் வேதசகாய குமார் – தமிழினி – 50.00

  • சிற்றிலக்கிய திரட்டு – 2 பகுதிகள் – வையாபுரிப் பிள்ளை – M U – 465.00
  • வரலாற்றில் வாழ்தல் – 1 – எஸ் பொ – மித்ர – 450.00

  • வரலாற்றில் வாழ்தல் – 2 – எஸ் பொ – மித்ர – 450.00

  • எட்டு திசையெங்கும் தேடி – பாவண்ணன் – அகரம் – 90.00

  • இஸ்லாம்: ஒரு எளிய அறிமுகம் – நாகூர் ரூமி – கிழக்கு – 200.00

  • ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி. புஸ்பராஜா – Adaiyalam – 275.00
  • காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை – நாகூர் ரூமி – கிழக்கு – 50

  • பாகிஸ்தான் : ஒரு புதிரின் சரிதம் – பா ராகவன் – கிழக்கு – 75.00

  • பசும்பொன் தேவரும் திராவிட இலக்கியமும் – கே ஜீவபாரதி – குமரன் – 50.00

  • புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன் – தமிழினி 75.00

  • சட்டப்பேரவையில் தேவர் பற்றிய சாதி வழக்கு – கே ஜீவபாரதி – குமரன் – 80.00
  • சே ராமானுஜம் நாடக கட்டுரைகள் – தொகு. சி. அண்ணாமலை – காவ்யா – 175.00

  • சே ராமானுஜம் நாடகங்கள்: தொகுப்பு – தொகு. சி. அண்ணாமலை – காவ்யா – 150.00

  • சொல்லாத சொல் – மாலன் – கிழக்கு – 100.00

  • தமிழ் களஞ்சியம் ரசிகமணி டிகேசி – மஹாகவி பாரதி ட்ரஸ்ட் – 50.00

  • தேர்தல் மேடைகளிம் பசும்பொன் தேவர் – கே ஜீவபாரதி – குமரன் – 40.00
  • ராயர் காபி க்ளப் – இரா. முருகன் – கிழக்கு – 65.00

    கலை

  • தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் – விட்டல் ராவ் – நிழல் – 100.00

  • தமிழில் மாற்று சினிமா: நம்பிக்கைகளும் பிரமைகளும் – 2 – யமுனா ராஜேந்திரன் – பதிவுகள் – 120.00

  • பரதம் புரிதல் – கிருஷாங்கினி – சதுரம் 100.00

  • திரை உலகில் – வெங்கட் சாமிநாதன் – காவ்யா – 85.00
  • சினிமாவும் நானும் – மஹேந்திரன் – மித்ர – 125.00

  • நடிப்பு கலையும் பேசும் படக்காட்சியும் – பம்மல் சம்பந்த முதலியார் – IITS – 40.00

  • சிற்பக் கலை – சே வைத்தியலிங்கம் – மணிவாசகர் – 115.00

    மொழிபெயர்ப்பு

  • கால்வினோ கதைகள் – மொழிபெயர்ப்பு: பிரும்மராஜன் – யுனைடெட் – 80.00

  • கால்வினோவின் சிறுகதைகள் – மொழிபெயர்ப்பு: கோ பிரேம்சந்த் – புதுப்புனல் – 55.00

  • இரவில் நான் உன் குதிரை – சிறுகதைகள் – எஸ். கே. மகாலிங்கம் – காலச்சுவடு – 125.00

  • நடிகர் விஜய்க்கு சவாலா?

    ‘அட்டகாசம்’ படத்தில் அஜீத்தின் பாடல் — Vaali:

    இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?

    ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?

    எரிந்து போன சாம்பலில் இருந்து

    எழுந்து பறக்கும் ஃபீனிக்ஸ் போல

    மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?

    நான் வழ்ந்தால் உனக்கென்ன?

    உனக்கென்ன ? தம்பி உனக்கென்ன?

    உனக்கென்ன?

    ஏற்றிவிடவோ தந்தையும் இல்லை

    ஏந்திக்கொள்ள தாய் மடி இல்லை

    என்னை நானே சிகரத்தில் வைத்தேன்

    அதனால் உனக்கென்ன?

    தாயின் கருவில் வளரும் குழந்தை

    ஏழாம் மாதம் இதயம் துடிக்கும்

    ஐந்தே மாதத்தில் இதயம் துடித்தேன் அதனால் உனக்கென்ன?

    இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை

    நெருப்பென்றும் தலை கீழாய் எரிவதில்லை

    மலைகளின் தலையோ குனிவதில்லை

    மனமுள்ள மனிதன் அழிவதில்லை

    நீயென்ன உருகும் பனிமலை நான் தானே எரிமலை எரிமலை

    உனக்கென்ன ? தம்பி உனக்கென்ன?

    இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?

    ஹிட்லராக வாழ்வது கொடியது

    புத்தனாக வாழ்வதும் கடிது

    ஹிட்லர் புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன

    வெற்றி என்பது பட்டாம்பூச்சி மாற்றி மாற்றி மலர்களில் அமரும்

    உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல

    எனக்கொரு நண்பன் என்று அமைவதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை

    எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை

    நீயென்ன உருகும் பனிமலை

    நான் தானே எரிமலை எரிமலை

    உனக்கென்ன ?

    தம்பி உனக்கென்ன?

    நெதர்லாந்தின் மைக்கேல் மூர் படுகொலை

    Theo van Goghஅமெரிக்காவில் தேர்தல் பரபரப்பில் அந்தச் செய்தி அவ்வளவாக கவனிப்பைப் பெறவில்லை. இறந்தது என்னவோ ஒருவர்தான். ஆகவே இருக்கலாம். பல்லாயிரக்கணக்கான சூடானியர்கள் இன்றும் பாதுகாப்பின்றி இருப்பதே அமெரிக்காவுக்குப் பெரிய விஷயம் இல்லை.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியரான வான் கோ (Van Gogh)-வின் உறவினர் கொல்லப்பட்டிருக்கிறார். தியோ வான் கோ (Theo van Gogh) நெதர்லாண்ட் நாட்டில் வசிக்கும் குறும்பட இயக்குநர். காலை ஒன்பது மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். நாக்கை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை நிகழ்ந்திருக்கிறது. மொரொக்கோ நாட்டில் இருந்து குடியேறிவன் கொன்றிருக்கிறான். அவன் தவிர வேறு சில மொரோக்கோ நாட்டில் இருந்து வந்த நெதர்லாந்தவர்களும் குற்றத்திற்காக பிடிபட்டிருக்கிறார்கள்.

    Self Portrait by Van Goghமுஸ்லீம்களை பகைத்துக் கொள்ளும் ஒரு பதினோரு நிமிட குறும்படத்தை எடுத்திருக்கிறார். திருமணமான முஸ்லீம் பெண்களின் அவலத்தை, நறுக்கென்று, ஹால்ண்ட் நாட்டு தூர்தர்ஷனில் வெளியிட்டிருக்கிறார்.

    இந்த நூற்றண்டில் ஹாலண்ட் நாட்டுக்கு இது இரண்டாவது படுகொலை. இரண்டாடுகளுக்கு முன்பு ப்பிம் ஃபார்டூய்ன் (Pim Fortuyn). போன வாரம் வான் கோ. ஆனால், இந்த முறை இஸ்லாமிய தீவிரவாதம். எனவே, இன்னும் பரவலாக எதிர்க்கப்படுகிறது.

    ப்பிம் ஃபார்டூய்ன் கலகக்காரர்.ஃப்ரான்ஸின் வலதுசாரி பிரமுகர் ழான்-மரீ லெ பென் (Jean-Marie Le Pen) போல தீவிரமான கொளகைப்பிடிப்போடு மிதவாதிகள் வயிற்றில் புளியோதரையே கலக்குபவர். மேற்கத்திய நாடுகளில் வறுமைக்கோட்டை நெருங்கிய நிலையில், தினப்படி வாங்கும் ஏழைகள், இப்போது இடதுசாரி கொள்கைகளைத் தூக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு புஷ் போன்ற வலதுசாரிகள் மனங்கவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

    தங்களின் வேலைகளுக்கு லட்சுமி வெடி வைப்பதற்காக, அண்டை அயலில் இருந்து இன்னும் பரம் ஏழைகள் இறக்குமதியாவது பிடிக்கவில்லை. படித்தவர்களின் மனப்பானமையாக தாராளமயமாக்கலையும் அதன் வழித்தோன்றல்களையும் கண்டு அச்சமுறுகிறார்கள். நாகரிகம் எல்லாம் பூசி, ·பினாயில் மெழுகி, தேன் தடவியப் பேச்சுக்களின் நடுவே, இவர்களின் அடக்கி வைத்த ஆசைகளை வெளிக் கொனர்ந்தவர் ப்பிம் ·பார்டூய்ன்.

    Pim Forஇஸ்லாம் ‘பிற்படுத்தப்பட்டது’ என்று அதிரடியாக ஆரம்பித்தார். பெண்களையும், ஓரின மக்களையும் மோசமாக நடத்துவதை நிறுத்தவேண்டும் என்றார். பெண்கள் நிலை, மனித உரிமை, அடிப்படை வசதி போன்ற பலவற்றினால் அமெரிக்காவை விட முன்னேறிய நாடாக நெதர்லாந்து கருதப்படுகிறது. நெதர்லாந்தில் ஓரினக் கல்யாணங்களுக்கு சட்டபூர்வமாக முழு அனுமதியும், சாதாரண மணமக்களுக்குக் கிடைக்கும் அத்தனை சமூக நலன்களும் கிடைக்கும்.

    அமெரிக்காவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மாகாணங்களில்தான் இவை ஏனோ தானே என்று கிடைக்கிறது. கடந்த தேர்தலில் பதினொன்று மாநிலங்கள், ஓரினத் திருமணங்களை எதிர்த்து வாக்களித்திருக்கிறது.

    ஹாலந்து நாட்டவருக்கும் ப்பிம்மின் பேச்சுக்கள் பிடித்திருந்தது. ஒண்டவந்தப் பிடாரன் ஊர்ப்பிடாரிகளை விரட்டுவது போல நினைத்துக் கொண்டார்கள். குடியேறிகள் புகுந்துகொண்டு தங்களின் தனித்துவத்தை மாற்றியமைப்பதை எதிர்த்தார்கள். பக்கத்து நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் குடிபுகல் எளிது அல்ல. நெதர்லாந்திலும் குடிபுகலை நிறுத்தி வைப்போம் என்று ப்பிம் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.ஃப்ரான்ஸின் ழான் இவரைவிட இன்னும் ஒரு படி அதிகம் சென்று வெளிநாடுகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரை துரத்தியடிப்பேன் என்று தேர்தல் அறிக்கை விடுகிறார்.

    ஆனால், ப்பிம்மின் இறப்பு பெரிய அளவில் கண்டனத்துக்கு ஆளாகவில்லை. அவரின் மறைவு ஒருவித நிம்மதியையும், நிஜத்தை ஒத்திப்போடவும் வசதி செய்தது. இப்பொழுது, மீண்டும் அதே போன்ற ஒரு கொலை. ஆனால், இன்னும் கொடூரமாக. சுதந்திரப் பேச்சை அறைகூவியவர் கொல்லப்பட்டிருக்கிறார். ப்பிம் அன்றே அடித்துச் சொன்னதை உண்மையாக்கும் விதமாக நிகழ்ந்திருக்கிறது.

    கொலை செய்யும்படி தியோ வான் கோ என்ன படம் எடுத்தார்? ‘சரணாகதி’ (Submission) என்னும் தலைப்பு. கட்டாய மணத்துக்கு ஆளாகும் மணப்பெண். தினமும் அடித்து சித்திரவதைப்படுத்தும் கணவன். வன்புணரும் மாமா என்று பத்து நிமிஷத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணின் இரண்டாம்தர வாழ்க்கையைச் சொல்லும் படம். எழுதியவரும் ஒரு முஸ்லீம் பெண்மணி. பனிரெண்டு வருடத்துக்கு முன் சோமாலியாவில் இருந்து நெதர்லாந்துக்குக் குடியேறியவர். இன்று பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். அயான் ஹிர்ஸி அலி (Ayaan Hirsi Ali)யே படத்தில் உருக்கமான குரலில் விவரித்திருக்கிறார். வன்முறைக்குள்ளான நால்வரின் கிட்டத்தட்ட மார்பகஙள் தெரியும் ஆடையில், குரானின் வாசகங்களை எழுதி குறும்படத்தின் முடிக்கிறார் தியோ வான் கோ. ஆகஸ்ட்டில் ஒளிபரப்பானபிறகு தியோவுக்கும் அலிக்கும் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பில் இருந்தே இஸ்லாமின் இறைத் தூதுவர் முகமத் ‘வக்கிரம் பிடித்தவர்’, ஆறு வயது ஆயிஷாவை ஐம்பத்திமூன்றில் மணமுடித்தவர் என்று ஹிர்ஸி அலி கடுமையாகத் தாக்கிவருபவர்.

    மூன்று பகுதியாக இந்தத் தொடரை எடுக்க தியோ வான் கோ தீர்மானித்திருந்தார். முதல் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள். இரண்டாம் பகுதியில் ஆண்களின் நிலைப்பாடு. கடைசியாக அறிஞர்கள், முஸ்லீம் பெரியோர்களின் கருத்து. அரைகுறைப் படத்திலேயே அவசரப் பிச்சுவாக கொலையாளி, தியோவை முடித்து விட்டார்.

    ஹாலந்தின் பதினெட்டு மில்லியனில் ஒரு மில்லியன் இஸ்லாமியத்தை சார்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ‘சரணாகதி’ திரைப்படத்தையும் ஹிர்ஸி அலியையும் எதிர்த்தாலும், ஐரோப்பாவின் அராபிய லீக் தியோவின் மரணத்துக்கு அதிர்ச்சியை தெரிவித்துள்ளது.

    ‘சரணாகதி’ தவிர இரண்டாண்டுகள் முன்பு தீவிரவாதத்துக்கு பலியான் ப்பிம் ஃபார்டூய்ன் (Pim Fortuyn) குறித்த வாழ்க்கை வரலாற்றையும், அவர் இறந்த தேதியான 06-05 என்னும் தலைப்பில் படம் எடுத்திருக்கிறார். இது இன்னும் வெளியாகவில்லை. தொலைபேசியில் சூடான பேச்சின் மூலம் உணர்ச்சி பொங்க வைக்கும் இளவயது மாதுவை குறித்த 1-900 என்னும் படமும் பரவலாக பாராட்டைப் பெற்றது. ·போன் மூலம் செக்ஸ் பேச விரும்புபவர்கள் அமெரிக்காவில் 1-900 என்னும் இலக்கத்தில் ஆரம்பிக்கும் எண்களை அழைப்பார்கள். நெதர்லாந்து பெண்ணுக்கும் மொரோக்கோ பையனுக்கும் ஏற்படும் காதல், சிறிய வயதில் குற்றம் புரிந்தோருக்கான மறுவாழ்வு திட்டங்களை அலசும் திரைப்படம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. நெதர்லாந்து திரைப்பட விழாக்களில் பலமுறை பரிந்துரைக்கப் பட்டும், ஐந்து விருதுகளும் வாங்கியிருக்கிறார்.

    ஹாலந்து நாட்டவர்கள் கொதித்துப் போயிருப்பதாக லண்டன் டைம்ஸ் எழுதுகிறது. ‘ஹிட்லரை கல்லறையில் இருந்து எழுப்ப வேண்டும்’ என்றும், ‘அனைத்து வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட வேண்டும்’ என்றும் புகைப்படத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள். இதற்கு நேர் மாறாக மொரொக்கோ நாட்டில் இருந்து ஹாலந்தில் குடியேறுபவர்களுக்காக நடத்தப்படும் வலைத்தளங்களில் ஆதரவு கரகோஷம் எழுந்திருக்கிறது. அடுத்து ஹிர்ஸியையும் தீர்க்க வேண்டும் போன்ற பதிவுகளுக்கு அஞ்சி, பெரும்பாலான தளங்கள் மூடப்பட்டிருக்கிறது.

    நெதர்லாந்து நாட்டின் குடிபுகல்துறைக்கான மந்திரியும் இஸ்லாமின் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கிறார். ‘மசூதிகளில் ‘டட்ச்’ மொழிதான் ஒலிக்கவேண்டும். ஹாலந்தில் இருந்து கொண்டு எதற்கு வேற்று மொழிகள்?’ என்று கேட்டிருக்கிறார். இவர் ப்பிம் ஃபார்டூய்னின் அரசியல் கட்சி சார்ந்தவர். குடியுரிமை வழங்குவதற்கான கேள்விகளிலும், பயிற்சிகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மதத்தலைவர்களுக்கான விசா கிடைப்பதற்கே இந்தப் பரீட்சையை பாஸ் செய்ய வேண்டும். டட்ச் மொழி, ஹாலந்து சரித்திரம், சமூக அமைப்பு போன்றவற்றைக் கரைத்துக் குடிக்காவிட்டால் இமாம்களுக்கு விசாவே கிடைக்காது. கருணைக் கொலை, பேச்சு சுதந்திரம், ஆகியவையும் இதில் அடக்கம்.

    ஒருவரையருவர் நம்பாத பொழுதுதான் கோபம் உதிக்கிறது. பயம் வருகிறது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட, சந்தேகக் கண்ணால் பார்க்கப்படுபவர்களுக்கு எரிச்சல் கிளம்புகிறது. சொந்த அடையாளங்கள் முக்கியத்துவம் அடைய ஆரம்பிக்கின்றன. குழுக்களாக சேர ஆரம்பித்து, தங்கள் நிலைப்பாட்டை பிரகடனப்படுத்துகிறார்கள். குடியேறியதற்காக ஃப்ரான்ஸில் சர்தார்ஜி கொண்டை கூடாது; இடுப்பில் கத்தி தவிர்க்க வேண்டும். அமெரிக்காவில் (பெரும்பாலான இடங்களில்) தீபாவளி பட்டாசு கிடையாது. வந்தேறியாக இருப்பதால், சொல்வதை எல்லாம் பின்பற்றி அடக்கமாக இருக்க வேண்டுமா? அல்லது நம் மேல் என்றாவது நம்பிக்கை பிறக்கும் என்று அமைதியாகப் பின்பற்றுவதா? அமெரிக்காவில் புஷ் ஜெயிப்பதற்குக் கூட இவ்வாறான காரணங்களை சொல்கிறார்கள். அன்னியப்படுத்தலும் பயமுமே பலரை வலதுசாரியாக்கியுள்ளது என்கிறார்கள்.

    France's Jean-Marie Le Penகாந்தி, மார்ட்டின் லூதர் கிங் சொன்ன அஹிம்சைக்கு இது நல்ல காலமில்லை. வீரப்பனுக்கும், விஜயகுமாருக்கும் துப்பாக்கி தூக்கி காரியத்தை முடிப்பதே பெரிதெனத் தோன்றும் காலம். கொஞ்சம் அறிவியல் புனைகதை போல் யோசித்தால், அமெரிக்காவில் இருக்கும் குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவதாகவும், சிவில் போர் போல ஒன்று வெடிப்பதாகவும் கற்பனை விமானம் ஓடுகிறது. நீதிமன்றங்கள், மக்கள் தீர்ப்பு போன்றவற்றில் நம்மில் பலர் நம்பிக்கையிழந்து வருகிறோம். அன்றாவது ‘அரசன் அன்றே கொன்றான்’. இப்பொழுது பாதிக்கப்பட்டவர்கள்தான் இன்றே கொல்கிறார்கள்.

    தன் கருத்தை பட்டவர்த்தனமாக படம் எடுத்ததற்கு தியோ பலியாகியுள்ளது வருத்தத்திற்குரியது. பேச்சுரிமை அனைவருக்கும் இருக்கும் நெதர்லாந்தில் இது இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்குகிறதோ என்று அச்சப்பட வைத்துள்ளது. கிறித்துவத்தை நக்கல் செய்து வரும் மெல் ப்ரூக்ஸ் போன்றோரின் படங்களை ஏற்றுக் கொள்ளும் சமூகத்தில் இருப்பவர்கள், இஸ்லாமியரையும் அவ்வாறே பொறுத்துப் போகச் சொல்வது மிகவும் சரியே.

    ஆனால், முழுச்சுதந்திரமென்பது தங்களின் பேச்சுரிமையை அளந்து அனுபவிப்பதற்கா அல்லது தங்களின் கோட்பாடுகளை பிறர் புண்படும் அளவு நம்புவதே என்று நினைப்பதற்கா?

    – பாஸ்டன் பாலாஜி

    தொடர்புடைய திண்ணை கட்டுரைகள்:

    அஞ்சலி: இயக்குனர் வான் கோ – ஆசாரகீனன் | Submission – ஆசாரகீனன்

    தீபாவளிப் படங்கள்

    நிறைஞ்ச மனசு – விஜயகாந்த், சூசன், மஹிமா
    இயக்கம் : சமுத்திரகனி
    Newindpress.com: ஏய்… விஜய்காந்த்… கைய வச்சிகிட்டு சும்மா இருடா… என்று கோர்ட் பாடப் போகிறார்கள்.


    அட்டகாசம் – அஜித், பூஜா
    இயக்கம்: சரண்
    Sify.com: அஜீத் விஜய்யைச் சீண்டறாரோ இல்லையோ… தூத்துக்குடி மக்கள் டென்ஷனாயிட்டாங்க!


    மன்மதன் – சிம்பு, ஜோதிகா, மந்த்ராபேடி, யானாகுப்தா, சிந்துதொலாணி, அதுல் குல்கர்ணி
    கதை, திரைக்கதை, வசனம்: சிம்பு
    இயக்கம்: முருகன்
    IndiaGlitz: ‘மர்டர்’ புகழ் மல்லிகா ஷெராவத்தையும் ஆட்டத்துக்கு சேர்த்திருக்காங்க… படம் ‘ஏ’தானே?


    சத்ரபதி – சரத்குமார், நிகிதா
    இயக்குநர்: ஸ்ரீமகேஷ்.
    AllIndianSite.com – Cinema seidhigal: பட்ஜெட் படம் போல. ரம்பாதான் ஆட்டத்துக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்.


    கிரிவலம் – ஷாம், ரிச்சர்ட், ரோஷிணி
    இயக்கம்: ஷிவ்ராஜ்.
    AllIndianSite.com: மாயவரத்துக்காரரை வம்புக்கு இழுக்கும் பாடல் இருந்தாலும், ஹம்ராஸ் ஹிந்திப்படத்தின் தழுவல் என்கிறார்கள்.


    ட்ரீம்ஸ் – தனுஷ், தியா, பாரு, பிரமிட் நடராஜன்
    இயக்கம்: கஸ்தூரி ராஜா
    Sify.com: அடுத்த ‘சுள்ளான்’ ரெண்டு வருஷம் கழித்து தயார்.


    மகாநடிகன் – சத்யராஜ், நமிதா, மும்தாஜ்
    இயக்கம்: சக்தி சிதம்பரம்
    Mahanadigan: கடைசியாக மனோஜ் கே பாரதிக்கு ஏற்ற ரோல் அமைந்திருக்கிறது. நக்கலுக்காகவே பார்க்கணும். விசு, ‘சந்திரமுகி’ பி. வாசு’ என ஏழு இயக்குநர்கள் கிண்டலில் பங்கு கொள்கிறார்கள். ஆட்டோகிராஃப்’ மல்லிகா கூட இருக்காங்களாம்.


    அயோத்தியா – ரேகா உன்னிகிருஷ்ணன், ராகினி, மோகன் குமார்
    இயக்கம்: ஜெயப்பிரகாஷ்
    IndiaGlitz: அட போங்கப்பா… காதல்… ஹிந்து… முஸ்லீம்.


    ஜனனம்: பிரியங்கா, அருண்குமார்
    இயக்கம்: டி ரமேஷ்
    New Launches: ‘சொக்கத்தங்க’த்தொடு பூஜை போட்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் தற்கொலை செஞ்சுக்காதவரைக்கும் சரி. வேலையில்லாத் திண்டாட்டம்… புரட்சி… நாஸர்… ரகுவரன்… ஹ்ம்ம்.


    மீசை மாதவன் – குட்டி ராதிகா, ரமணா
    இயக்கம்: எஸ் ராமு
    Movie Previews: மலையாள ‘காபூலிவாலா’ ரீமேக்காம்.


    நன்றி: Tamil Cinema News @tamil.galatta.com
    கோலிவுட் தீபாவளி – வீ. மீனாட்சிசுந்தரம்

    கிளிப்பிள்ளையா? எளிமையானவரா?

    காலையில் சுறுசுறுப்பாய் ஐந்து மணிக்கு எழுந்து செய்தி கேட்டவுடனேயே சப்பென்று ஆகிப்போனது. என்.பி.ஆர்., ஏபிசி எங்கு திருப்பினாலும் தொய்வான பேச்சுக்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    இவ்வளவு ஸ்திரமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். படையெடுப்பது அவ்வளவு முக்கியமாக பட்டிருக்கிறது. ஒஸாமாவின் வீடியோ சரியான நேரத்தில் வந்திருக்கிறது. ஃப்ளோரிடாவை சாதாரணமாக ஜெயித்திருக்கிறார். நெவாடா போன்ற இடங்களும் செல்லுபடியாகவில்லை.

    ஜான் எட்வர்ட்ஸின் சொந்த ஊர் வட கரோலினாவும் கெர்ரிக்குக் கிடைக்கவில்லை. இந்த மாகாணம் பதினைந்து எலெக்டோரல் வாக்குகளைக் கொண்டது. ப்ளோரிடாவின் பாப் க்ரஹாமை துணைக்கு சேர்த்துக் கொண்டாலாவது இருபத்தியேழு ஃப்ளோரிடா எலெக்டோரல் வாக்குகள் கிடைத்திருக்கலாம்.

    இல்லினாய் செனேட்டர் தேர்தலில் ஒபாமா வென்றிருக்கிறார். நூறு பேர் கொண்ட செனேட்டில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்கர். செனேட் வரலாற்றிலேயே மூன்றாவது கறுப்பர்! இந்தியாவில் சம உரிமை போன்ற விஷயங்கள் தேவலாம் என்று நினைக்க வைக்கிறது.

    எது எப்படியோ அடுத்த முறை ஹில்லாரி க்ளிண்டன் நின்றாலும் தோற்றே போவார் என்பதை இந்தத் தேர்தல் சொல்லுகிறது. அடக்கி வாசிக்கத் தெரிந்த ஜான் எட்வர்ட்ஸ் போன்றோர் நின்றால்தான் சுதந்திர கட்சி, வெள்ளை மாளிகையை கைப்பற்ற முடியும். இல்லையென்றால் மீண்டும் குடியரசு கட்சியே அமரும் வாய்ப்பிருக்கிறது.

    அடுத்த முறை மெக்கெயின் அல்லது ரூடி கியுலியானி என யார் வந்தாலும் கொஞ்சம் சிறப்பாகவே செய்வார்கள். அது வரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

    உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்!?

    கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே

    கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

    மாதா கோவில் மணியோசை

    நன்மை போற்றும் அருளோசை

    தேவா நீயும் வா….

    Pct. reporting George W. Bush John F. Kerry Electoral
    IOWA 99.7 741,325 (50.1%) 725,700 (49.1%) 7
    NEVADA 99.6 388,963 (50.5%) 368,458 (47.8%) 5
    NEW MEXICO 99.2 335,311 (50.3%) 323,691 (48.6%) 5
    OHIO 100 2,794,346 (51%) 2,658,125 (48.5%) 20
    WISCONSIN 99.3 1,466,963 (49.3%) 1,480,256 (49.8%) 10

    President (as of 10:07 a.m. ET)

    Popular Electoral
    Bush 58,357,731 (51.1%) 249
    Kerry 54,840,741 (48.0%) 242
    Nader 390,715 (0.3%) 0
    NEEDED — 270

    UNDECIDED — 47

    நன்றி: The New York Times > Election 2004 > President, Senate, House & Governor Results > The Race for President

    வேதனையாக இருக்கிறது – ஆனந்த் சங்கரன்

    Yahoo! Groups : Maraththadi Message 21252 – Prabanjan & The USA

    இடப்பெயர்ச்சியின் மாயங்கள் – வெங்கடேஷ்



    எழுத்தாளர் பிரபஞ்சன் அமெரிக்காவில் இருந்த 45 நாட்களின் அனுபவத்தை பற்றிய 4வது கட்டுரை இது என்று நினைக்கிறேன்.

    அவர் பெரிய எழுத்தாளர் சந்தேகமில்லை; ஆனால் வெறும் 45 நாட்களில் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை (சுற்றுப்பயணங்களுக்கும், விழாக்களுக்கும் இடையே அறிந்து) சர்வ சாதாரணமாய் எழுத முடியுமா என்றால் முடியாது என்றே சொல்ல வேண்டும்.

    அங்கும் இங்கும் கேட்ட சில செவி வழிச்செய்திகளை மறுபடியும் மறுபடியும் பேசுவதால் கைதட்டல்கள் கிடைக்குமே தவிர அது நிதர்சனம் ஆகிவிடாது.

    – 30 வருட கடனாளிகள்

    – சீரியலில் உயிர் வாழ்கிறார்கள்

    – வேலை நேரம் போக சாதி சங்கம் நடத்துகிறார்கள்

    – யாருக்கும் சமீபத்திய தமிழ் இலக்கியம் தெரியவில்லை.

    – நிரந்தர வேலையில்லை

    ஏதோ இதெல்லாம் தான் அமெரிக்க வாழ்க்கை என்பது போன்ற ஒரு தப்பிதமான எண்ணத்தை, இவ்வளவு பெரிய எழுத்தாளர் ஏன் ஊர் ஊராக பரப்புகிறார் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

    ஆனந்த் சங்கரன்



    அமெரிக்காவில் பிரபஞ்சன்

    எழுத்தாளர் பிரபஞ்சன் பேட்டி – கணேஷ் சந்திரா

    Thendral.com – ‘தென்றல்’ மணிவண்ணனின் பிரபஞ்சன் பேட்டி

    • புதுமைப்பித்தனில் தொடங்குகிறதா நவீன இலக்கியம்?
    • குழு மனப்பான்மை?
    • பல்கலை.களும் பேராசிரியர்களும் படைப்பாளர்களும்
    • சிற்றிதழ்களின் இடம்
    • மரபும் புதுசும்
    • படைப்பாளியாக என்ன படிக்க வேண்டும்?
    • புலம்பெயர்ந்த தமிழர்கள் படிக்க வேண்டிய தமிழர்கள்
    • கல்கி போன்ற சிலர் ஏற்கனவே இருக்கும்போது, தமிழில் நீங்கள்தான் முதல் வரலாற்றுப் புதினம் எழுதியவர் என்று ஏன் அழைத்துக் கொண்டீர்கள்?

    அமெரிக்கத் தேர்தல் களம்

    இன்று ஜனாதிபதித் தேர்தல் தவிர வேறு சில முக்கியமான பிரச்சினைகளுக்கும் அமெரிக்கர்கள் வாக்களிக்கிறார்கள்.