Daily Archives: நவம்பர் 16, 2004

நேயர் விருப்பம்

சூரியன் எப்.எம்மை கூப்பிடலாமா அல்லது ரேடியோ மிர்ச்சியை அழைக்கலாமா என்று சிந்தனையில் இருக்கிறார் சிறையில் வாடும் ஜெயேந்திரர். அவர் கேட்க நினைக்கும் பாடல்:

“ஆட்டுவித்தால் யாரோருவர் ஆடாதாரே கண்ணா

ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா”



ஜயேந்திரரும் விஜயேந்திரரும் பேசிக் கொண்டால்

(ஜயேந்திரர்:) “சக்கை போடு போடு ராசா…

உன் காட்டிலே மழை பெய்யுது

(விஜயேந்திரர்:) டேய்… என்னடா பாட்டில பேச ஆரம்பிச்சுட்டே

ஆமா… மழை பெய்யுது… நீ வந்து குடை பிடி..”



ஜெயலலிதாவை தொலைபேசியில் கூப்பிட்டு காத்திருக்கும்போது ஒலிபரப்பப்படும் கீதம்:

“கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ?”



ஜெயலலிதாவுக்காக ஜெயேந்திரர் ஒலிபரப்ப கேட்கும் பாடல்:

“பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே

நியாயமாய் வாழவும் வழியுமில்லையே

இது அநியாயம் அநியாயம்

இங்கே ஆண்களைப் பெண்கள் அடிமையாக்கும் அநியாயம்”



ஜூவியும் நக்கீரனும் போட விரும்பும் பாடல்:

“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”



சிவகாசி ஜெயலட்சுமிக்கு ஜெயேந்திரர் அர்ப்பணித்த பாடல்:

“மாப்பிள்ளைய பார்த்துக்கடி மைனாக்குட்டி

எனக்கு மந்திரத்தச் சொல்லிப்புடு நைசா தட்டி”



ஜெயிலர் ரிலாக்ஸ் செய்ய கேட்கும் பாடல்:

“வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா

எங்கப்பா..?”



தமிழ்ப்பாடல்களில் திடீர் ஆர்வம் காட்டும் அத்வானி கேட்க விரும்பிய பாடல்:

“அவரா செய்தார் இருக்காது… அப்படி எதுவும் நடக்காது…

நடக்கவும் கூடாது… நம்பமுடியவில்லை இல்லை… இல்லை!”



விஜயேந்திரர் விரும்பிக் கேட்ட பாடல்:

“சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்”



விஜயேந்திரர் மனதுக்குள் முணுமுணுத்த பாடல்:

“நீயும் நானுமா

கண்ணா… நீயும் நானுமா”



ஜெயலலிதா மனதுக்குள் முணுமுணுத்த பாடல்:

“முத்து நகையே உன்னை நானறிவேன்

கத்துங்கிளியே என்னை நீயறிவாய்

நம்மை நாம் அறிவோம்”



கலைஞர் பெப்ஸி உமாவின் ‘ஜெயச்சந்திரன் உங்கள் சாய்ஸை’க் கூப்பிட்டு ஜெயேந்திரருக்காக பாடல் வழங்குகிறார்:

“ஆறு மனமே ஆறு

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”



சங்கர்ராமன்:

“சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா”



எல்லாவற்றையும் பார்க்கும் பொதுஜனம்:

“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”



எல்லாவற்றையும் படிக்கும் இணையஜனம்:

“ஒண்ணுமே புரியலே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது”



கடவுளும் ஜெயேந்திரருக்காக தனக்குப் பிடித்த பாடலை போஸ்ட்கார்டில் ஓல்ட்-பேஷண்டாக விவிதபாரதிக்கு அனுப்புகிறார்:

“நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு

ஒன்று மனசாட்சி

இன்னொன்று தெய்வத்தின் சாட்சியம்மா”



கடவுள் பொதுமக்களுக்காக விரும்பிக் கேட்ட பாடல்:

“தம்பிக்கு ஒரு பாட்டு

அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு

வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்

நான் சொல்லும் கதைப்பாட்டு”

-பாஸ்டன் பாலாஜி

Attagasam Ajith, Pooja – Official Attahasam Websit…

Attagasam Ajith, Pooja – Official Attahasam Website Posted by Hello

Who was Sankararaman Anantakrishnasharma ? 

Who was Sankararaman Anantakrishnasharma ? Posted by Hello

How a ‘literary’ genius supposedly finds time from…

How a ‘literary’ genius supposedly finds time from his actual employment? Posted by Hello