தற்போதைய அமெரிக்காவில் பிறந்த இந்தியர்கள், தங்களை ஏபிசிடி என்று அழைத்துக் கொள்ள வைப்பதில்லை. குழம்பாமல் இருப்பது முதல் காரணம் என்றால், நோரா ஜோன்ஸ் போன்ற பலருக்கு இந்திய வம்சாவழி என்று சொல்லிக்கொள்வதும் பெரிதாகப் பிடிக்காதது இரண்டாம் காரணம்.
இவர்கள் தங்களை ஓபிஐ (ஓவர்ஸீஸ் பார்ன் இந்தியன்ஸ்) என்று அழைத்துக் கொண்டு இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க் போன்ற சொந்தக் கணக்கை டாலர்களால் டல் அடிக்காமல் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய இந்தியா டுடே (ஜன. 19, 2004) கவர் ஸ்டோ ரியில் இருந்து புகழ் பெற்ற ஓபிஐ-க்களும், மிகச் சிறிய குறிப்புகளும்….
பவர்
* கமலா ஹாரிஸ், 39
– டிஏ என்றழைக்கப்படும் அரசு வக்கீல்
– சான் ப்ரான்ஸிஸ்கோவின் முதல் பெண் டிஸ்ட்ரிக்ட் அட்டர்னி
– ஆப்பிரிக்க-அமெரிக்க அப்பாவிற்கும், இந்திய அம்மாவிற்கும் பிறந்தவர்.
* சத்வீர் சவுத்ரி, 32
– மின்னஸோடா செனேட்டர்
– அமெரிக்க சட்டசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது இந்தியர்.
– 32 வயதில் அடையக்கூடிய சாத்தியங்கள் எவ்வளவோ இருக்கிறது
* பர்ம்ஜீத் தண்டா, 34
– இந்தியப் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டாதவர்
– இங்கிலாந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
* பாபி ஜிந்தால், 32
– புஷ் அரசாங்கத்தால் பெரிதும் கவனிக்கப்படுபவர்; மதிக்கப்படுபவர்; விரும்பவும் படுபவர்.
– மதத்தை மாற்றி ஓட்டு கேட்டாலும், சொற்ப வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
– இந்திய வம்சாவழியை மறக்க நினைப்பவர்
– சுகாதாரத்துறையில் இருக்கிறார்
* கரன் பாடியா
– போக்குவரத்துத் துறை: துணை செயலாளர்
* நீல் படேல்
– டிக் செனியின் கீழே செயலாற்றுகிறார்
* கோபால் கன்னா
– Peace Corps-இன் CIO
* ஷ்யாம் மேனன்
– கல்வித்துறை: நம்பிக்கை சார்ந்த முயற்சிகளின் திட்டக்குழு உறுப்பினர்
* அஜய் குண்டமுக்கால
– வணிகம் : துணை செயலாளர்
* ஸுஹேல் கான்
– போக்குவரத்துத் துறை: சட்ட ஆலோசகர்
அறிவு
* கோவிந்த் பிள்ளை, 20
– சொந்த நிறுவனம்
– மைக்ரோசாஃப்ட்டின் நம்பகத்தைப் பெற்றவர்
* ரூபன் சிங், 27
– முதலீட்டு நிறுவனம் (venture capital) நடத்துகிறார்
– கூடவே நிரலிகள் தயாரிக்கும் நிறுவனம்
– தொட்டுக்க நலிவடைந்த நிறுவனங்களின் நிதிகளை மேய்க்கும் பணி
* நிர்மலா ராமானுஜம், 35
– புற்றுநோயை கண்டுபிடிக்க புதியமுறையை உருவாக்கியவர்
– எம்.ஐ.டி.யினால் நம்பிக்கை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டவர்
* தேஜல் தேசாய், 31
– தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளத் தேவையில்லாத வழிமுறையை உருவாக்கியவர்
– சர்க்கரை வியாதி தவிர பல்வேறு நோய்களுக்கான செயற்கை உறுப்புகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
* அஜித் லாலாவனி, 39
– எளிதாக, விரைவாக டிபியை கண்டுபிட்க்கும் சோதனையை கொடுத்தவர்.
– சொந்த நிறுவனத்தின் மூலம் நோய்தடுப்புமுறைகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார்.
புகழ்
* பிரதிபா வார்கி, 29
– புகழ்பெற்ற மேயோ க்ளினிக்கின் இளமையான பேராசிரியர்.
– அமெரிக்காவில் கற்றதை இந்தியாவுக்குத் தருகிறார்
* மாயா கைமல், 38
– புகைப்படக் கலைஞர்
– ரெசிபி புத்தகங்கள் மூலம் கிடைத்த பெயரை வைத்து, தென்னிந்திய உணவுப் பதார்த்தங்களை விற்க ஆரம்பித்து விட்டார்.
* சஞ்சய் குப்தா, 34
– சி.என்.என். நம்பும் மெடிகல் ரிப்போர்ட்டர்.
– குவைத்தை விடுவிக்கும் வளைகுடாப் போரில், அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப்பிரிவில் பணிபுரிந்தவர்.
– மூளை அறுவை சிகிச்சையில் கைதேர்ந்தவர்
– அமெரிக்காவின் ‘குமுதம்’ — பீப்பிள் சஞ்சிகையினால், ‘கவர்ச்சிகரமான மனிதராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
* அடுல் கவாண்டே, 38
– மருத்துவநலத்துறையில் க்ளிண்டனுக்கு ஆலோசகர்
– முன்னாள் துணை ஜனாதிபதி ஆல் கோருக்கு ஆராய்ச்சியாளர்
– ஹார்வார்ட்டில் பேராசிரியர்
– தி நியு யார்க்கர் இதழின் ஆஸ்தான எழுத்தாளர்
– புகழ்பெற்ற ‘அறுவை சிகிச்சை’ புத்தகத்தின் மூலம் டைம் இதழினால் 2002-ஆம் ஆண்டின் தலை-ஐந்து சிறந்த விற்பனைப் பட்டியலில் பெயர் பொறித்தவர்
* ரூபா புருஷோத்தமன், 25
– பொருளாதாரப் புலி
– கோல்ட்மேன் சாக்ஸின் நம்பகமான ஆய்வறிஞர்
* கணேஷ் வைத்யநாதன், 48
– இண்டஸ் காபிடல் மூலம் நிதி நிறுவனங்களுக்கான வர்த்தக நிரலியை வழங்குகிறார்
– இந்தியாவில் முதலீட்டு நிறுவனம் (venture capital)
* மங்கேஷ் ஹத்திகுடூர், 24
– அமெரிக்காவின் புதிய ஹாட் பத்திரிகை + இணையத்தளமான ‘மெண்டல்_ஃப்ளாஸ்’ நடத்துபவர்
– அதே பத்திரிகையை இந்தியாவிற்கும் கொண்டுவருகிறார்
* அஞ்சனா ரஹேஜா, 37
– ஃபோர்ட், சோனி, வர்ஜின் அட்லாண்டிக் என பல வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ‘மீடியா மொகல்ஸ்’ நடத்துகிறார்.
– மிகப்பெரிய சந்தையான இங்கிலாந்தின் ஆசியர்களைக் குறிவைத்து சந்தைப்படுத்தும் நிறுவனம்
பாதி இந்தியா.. பாதி வெளிநாடு
* நோரா ஜோன்ஸ், 24
– உலகப் புகழ்பெற்ற, எட்டு கிராமிகளை வென்ற பாடகி
– அப்பா யார் என்று தெரியும் இல்லையா 😉
* மைக்கேல் சோப்ரா, 20
– இங்கிலாந்து அணியில் ஆடப்போகும் கால்பந்து வீரர்
– நியுகாஸ்ல் யுனைடெட்-க்காக ஆடிய முதல் (அரை) இந்தியர்
* ரோனா மித்ரா, 27
– அமெரிக்க பிராஸிக்கியூட்டர்களை வைத்து எழுதப்பட்ட ‘தி ப்ராக்டிஸ்’ தொடரில் நடிப்பவர்.
– பல படங்களில் நடித்து வருபவர்
– புகழ்பெற்ற மாடல்
* சைரா மோகன், 25
– சானல், கால்வின் க்ளின், விக்டோ ரியாஸ் சீக்ரெட் என்று எல்லாப் பெருந்தலைகளுக்கும் மாடல்
* ஜிமி மிஸ்ட்ரி, 30
– இந்தியப் பிண்ணனி கொண்ட மிஸ்டிக் மஸூர், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட், தி குரு போன்ற படங்களின் நாயகன்
– இங்கிலாந்து தொலைக்காட்சியின் முண்ணனி நடிகர்
ஆட்டம்…பாட்டம்
* பர்மீந்தர் நக்ரா, 29
– பெண்ட் இட் லைக் பெக்கம் – நாயகி
– அமெரிக்காவின் ‘மெட்டி ஒலி’ – ஈ.ஆர். தொலைக்காட்சித் தொடரில் முக்கிய வேடம்
* மனோஜ் ஷ்யாமளன், 34
– 🙂
* மார்க் டேவார்ஸன், 27
– ‘டோ பாஸ்’ என்ற குழுவை இசைக்கும் ஜாஸ் கலைஞர்
* பாபி ஃப்ரிக்ஷன், 30
– பிரிட்டிஷ் ரேடியோவின் புகழ்பெற்ற வீடியோ ஜாக்கி
– புதிய ஆல்பம் வெளிவருகிறது
* ஆசிஃப் மாண்டவி, 30
– சாகினாஸ் ரெஸ்டாரண்ட் என்னும் விமர்சகர்களால் ரசிக்கப்பட்ட ஷோவின் மூளை, நாயகன், இயக்குநர்
* சைமன் & டைமண்ட், 35/36
– அபாசி இந்தியன், ஷனையா ட்வெயின், நஸ்ரத் ஃபதே அலிகான் என்று பலரோடு இசையால் இணைந்தவர்கள்
* ஆசிஃப் கபாடியா, 30
– தி வாரியர் படத்தின் மூலம் விருதுகளை வென்றவர்
– ஆஸ்கார் வெல்லக்கூடிய கதைகளை எழுதுகிறவர்
* ஜும்பா லஹிரி, 37
– 2000-த்தின் புலிட்சர் பரிசு வென்றவர்.
– சுவாரசியமான இந்திய காரெக்டர் கொண்ட கதைகளை வித்தியாசமான நடையில், எளிமையாக எழுதுபவர்.
இன்னும் நிறைய பேரை அடுக்கியிருந்தார்கள். பார்த்தபோது, கொஞ்சம் பொறாமையும், நிறைய ஆசையும் வருவதை தடுக்க முடியவில்லை! செயல்திட்டம்தான் பாக்கி 🙂
-பாஸ்டன் பாலாஜி
நன்றி : இந்தியா டுடே
(“In the future everyone will be world-famous for 15 minutes”: Andy Warhol)


















