
இது என்னுடைய ஐநூறாவது பதிவு. ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸில் மரையா ஷரபோவா விளையாடததற்கு வருத்தம் தெரிவித்து இந்தப் பதிவை எழுத எண்ணம் 😉
‘நான்கு வருடம் என்பது மின்னல் வேகத்தில் பறந்து விடும்’, என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார். நான் கூட ஒரு வருடம் முன்பு ஆர்வக் கோளாறில் வலைப்பூக்கள் என்று தலைப்பிட்டு கிறுக்க ஆரம்பித்தபோது, இவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை.
தேவையற்ற படத்துக்கு தேவையான குறிப்புகள் சில:
1. ஒலிம்பிக்ஸில் 1984-ஆம் ஆண்டு டென்னிஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், 1988-இல்தான் பதக்கம் பெறும் போட்டியானது.
2. 1984-இல் ஸ்டெஃபி க்ராஃப் பதக்கம் இல்லாவிட்டாலும், போட்டியிட்டு வென்றார்.
3. ஆண்கள் பிரிவில் முதல் முப்பது தரவரிசைகளில் உள்ளவர்களில் 27 பேர்களும், பெண்களில் 23 பேர்களும் கலந்து கொண்டு, வரப்போகும் அமெரிக்க ஓபனுக்கு நிகரான போட்டியைக் கொடுக்கப் போகிறார்கள்.
4. இந்த வருடத்தில் மட்டும் இவ்வளவு முண்ணனி வீரர்கள் கலந்துகொள்வதற்கு மிக முக்கிய காரணம், ஒலிம்பிக்ஸில் வெல்லும் ஒவ்வொரு பாயிண்ட்டும், உலகத் தர வரிசைகளுக்கான புள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப் படுவதே.
5. நாற்ப்பதியேழு வயதான மார்ட்டினாவும் களத்தில் இருக்கிறார்.
6. டென்னிஸ் போட்டிகள், வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகிறது.
7. சென்னையின் அக்னி நட்சத்திர வெயிலில் ஆடிப் பழக்கமில்லாத உள்ளரங்குகளில் மட்டுமே ஆடிப் பழகிய வீரர்களுக்கு இந்தப் போட்டி கஷ்டமாக இருக்கும்.
8. டேவிஸ் கோப்பை போன்ற நாட்டுப் பற்று, லியாண்டர் பயஸ், மஹேஷ் பூபதியை மிளிர வைக்கலாம்.
9. ஒலிம்பிக்ஸின் குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் அரை-இறுதிக்கு சென்றாலே, ஒரு பதக்கம் நிச்சயம் கிடைக்கும். வெண்கலமேயானாலும், கால்-இறுதியை வென்றவுடனேயே, பதக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம். டென்னிஸில் அவ்வாறு கிடையாது. இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறாவிட்டால், இன்னொரு ஆட்டம் (அரை-இறுதியில் தோற்றவர்களுக்கிடையே) ஆடியபிறகுதான், யாருக்கு வெண்கலம் என்று தெரியும்.
நம்ம ஊரு நாயகர்கள் ஜெயிக்க வாழ்த்துக்கள்.











500 பதிவிற்கு வாழ்த்துக்கள். படமும் அருமை. பாரா இன்னும் பார்க்கவில்லையோ? 😉
என்ன மொழியில் எழுதியிருக்கீங்க..?? படிக்கவே “முடியலையே” ( விடலையே..!!! )
வந்தியத்தேவன் 🙂
மூக்கன் :)))
நன்றி!
Congrats BO-BA for the 500th Post + Jolluuuuuuu!!!
இப்பிடி படத்தை போட்டா மனுஷன் எங்கே போயி லாஜிக் எல்லாம் யோசனை பண்ணுரது :-)))
500 பதிவா!!!!!
கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டிற்கு செய்தி அனுப்பி விட்டீற்களா!!!
வாழ்த்துக்கள் பாலா !
Welcome to the club.
Badri,
Which club?! :-))
விரைவில் 1000த்தைத் தொட வாழ்த்துகள்!