விருப்பப் பட்டியல் – தினம் ஒரு கவிதை


1. இணையத்தில் யூனிகோட் தமிழிலும் பதியவேண்டும்.

2. பழைய இதழ்கள் அனைத்தும் இற்றைப்படுத்தவேண்டும்.

3. ‘சிந்தனை செய் மனமே’ சீக்கிரமே ஆரம்பிக்கவேண்டும்.

4. கொறிக்க ‘கொத்து பரோட்டா’ தேவை.

5. அவ்வப்பொழுது வரும், நட்போடு ஓட்டளிக்க அழைக்கும் சுவாரசியமான தேர்தல்கள் வேண்டும்.

6. முடிந்தவரை முன்னுரை, பின்னுரை, என்னுரை என்று ஏதாவது ஒவ்வொரு நாளும் கவிதையோடு ஒட்டிக் கொண்டு, தினம்-ஒரு-கவிதை ரசனையை மேம்படுத்தவேண்டும்.

7. தி.ஒ.க., கல்கியின் ‘வலைபாயுதே’ முதல் ‘நெட்டன் பக்கம்’ வரை புகழடைய வேண்டும்.

8. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ ஸ்டைல் சொக்கரின் காமெண்டோடு, கவனிக்கத்தக்க புகைப்படங்களுடன் பதிப்பிக்கப்பட்டு, என் கைகளில் தவழவேண்டும்.

9. ‘மூக்கு’ சுந்தரின் மமஎவா வரவேண்டும்.

10. இன்னும் மறந்துபோன ‘விருத்தம் கற்க வருத்தம் எதற்கு’ முதற்கொண்டு ‘கொஞ்சம் கதைக்கலாம் வாங்க’ வரை அனைத்துத் தொடர்களும் தூசி தட்டி வெளியில் வரவேண்டும்!

Yahoo! Groups : dokavithai

One response to “விருப்பப் பட்டியல் – தினம் ஒரு கவிதை

  1. ஹீம்… அப்படி எழுதுங்கப்பா எல்லாரும் சொக்க(ரு)க்கு…
    அப்போதான் நம்ப விருப்பம் நிறைவேறும்.
    நவீன அம்மா

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.