Daily Archives: ஜூலை 21, 2004

படித்ததும் நினைத்ததும்

1. அஜீவன்: “என்னிடம் (2000) இரண்டாயிரத்துக்கு மேல் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன. மு.வரதராசன், கல்கி, திருக்குறள், பாரதியார் கவிதைகள்……………………..” என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்கு தலை கிறு கிறுத்தது. சோவென பனிமழை கொட்டி உடலெல்லாம் நனைந்து நடுங்குவது போன்ற உணர்வு. (வலைப்பதிவு வைத்திருக்கிறாரா என்று அஜீவனிடம் விசாரிக்க வேண்டும்.)

2. ஞானதேவன்: “உறவினர்களை அங்கேயே விட்டு, தனியே குளிக்க சென்றேன். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், எனக்கு இடுப்பளவு மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் மனம் மாறியது, கம்பியை தாண்டி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். யாரும் அறியாமல், நீருக்குள் மூழ்கி, உடலை வளைத்து கம்பிக்கு நடுவில் புகுந்து மறுபக்கம் வந்தோம். ஏதோ சுதந்திரமே கிடைத்து விட்ட சந்தோசம்.” (நீமோ மாதிரி மாட்டிக் கொண்டிருக்கிறார்… மெர்லின் உதவியுடன் தப்பித்தாரா?)

3. ஜூனியர் விகடன்:: ‘காட் ஃபாதர்’ என்ற ஒரு நாவலில் ‘வெற்றியின் மூலமாக நண்பர்கள் வருவார்கள். மிகப் பெரிய வெற்றியின் மூலமாக நிறைய எதிரிகள் உருவாவார்கள்’ என்று இடம்பிடித்திருக்கும் வரிகளைத்தான் இப்போது நினைத்துக்கொள்கிறேன். மிகப் பெரிய வெற்றியின் பலனாக எனக்கு இப்படியரு பிரச்னை வந்திருக்கிறது. – தங்கர்பச்சான் (எனக்கு எதிரிகள் உருவாகியிருக்கிறார்களா? நண்பர்கள் வந்திருக்கிறார்களா? நெனப்புதாண்டா பொழப்பக் கெடுக்குது 🙂

4. ஹாய் மதன்: இரா. வெங்கடேசுவரன், திருமலைராயபுரம்

ஒருவருக்கு முக்கியத்துவம் தருவது பிடிக்காவிட்டால் ‘அவருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு?’ என்று கேட்கிறோமே.. இதில் கொம்புக்கு என்ன சம்பந்தம்? (மதனுக்குக் கொம்பு முளைக்கவில்லை என்கிறார்!?)

5. இது சிறகுகளின் நேரம் – கவிக்கோ அப்துல் ரகுமான்:

‘வணக்கம்’ என்பதற்குத் ‘துணிவு’ என்று எழுதினாலே போதும், எதுகை ஆகிவிடும். ஆனால், அழகாக இருக்காது.

கவிதை என்பது ஒர் அழகியல் அனுபவம். அரங்கத்தில் பாட வந்திருப்பவர்கள் பெரிய புலவர்கள். தாமோ “நீர் எழுத்துக் கவி எழுதுபவன்” என்கிறார் கலைஞர். நீர் மேல் எழுதும் எழுத்து உடனே அழிந்துவிடும். அதைப்போல் அற்பமானது தம் கவிதை என்கிறார் கலைஞர்.

“நீர் எழுத்து” என்பதில் வேறொரு பொருளும் தொனிக்கிறது. பூமியில் விளையும் தாவரங்கள் எல்லாம் நீர் எழுதும் எழுத்துத்தான். இது அவைக்கு அடங்குவது போல் காட்டி அவையை அடக்குதல்.

(புலவருக்கும் கவிஞருக்கும் இவர் சொல்லும் வித்தியாசம் சிரிப்பை வரவைக்கிறது.)

6. நிழல்கள் – பிரசன்னா: நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. (இன்னொரு அ.மு.ந. படித்து விட்டீர்களா?)

7. சந்தோஷ் குரு: “சன் டி.வி யோ இந்த நேரத்தில் தான் கும்பகோணம் நகராட்சி சுடுகாட்டினை சரியாக பராமரிக்கவில்லை, நகராட்சி மந்தமாக இருக்கிறது என்று கூறி இங்கேயும் கூட ‘அரசியல்’ செய்துகொண்டு இருக்கிறது.” Publicity, publicity, PUBLICITY is the greatest moral factor and force in our public life என்று கூறினாராம் பத்திரிக்கையாளர்களின் குரு என மதிக்கப்படும் ஜோஸஃப் புலிட்சர், சரியாத்தான் சொன்னார்.”

(கும்பகோணம் தீ விபத்தின் மறுபக்கத்தை இன்னும் விரிவாக அனைவரும் எழுதவேண்டும். சோனியா, பிரியங்கா, ராஜீவ் என்று பெயர் வைத்த குழந்தைகளை வைத்து கலைஞர் அறிக்கை விடுவதும், ஜெயலலிதா மூக்கை மூடிக் கொண்டதை க்ளோஸப் கொடுக்கும் cheap politics-உம், ஆய்வுக்காக (inspection) தமிழ் மீடியம் நடத்தப்படும் நிர்ப்பந்தங்களும் அலசப்படவேண்டும்.)

8. Ananova: இரண்டு இதயம் வேண்டும் என்று எழுதிய கவிஞர் பொறாமைப்படும்படி, இரு இதயங்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது. அடுத்து இதயமே இல்லாமல் யாராவது பிறப்பார்களா?

ஃபோர் ஸ்டுண்ட்ஸ்



இசை: ஜஸ்ஸி கிஃப்ட்

லஜ்ஜாவதியே

– ஜஸ்ஸி கிஃப்ட் – 2.75 / 4

‘ஞாபகம் வருதே’வை ஜாலியாகப் பாடினால் எப்படி இருக்கும்? இளமைக் காதலை சந்தோஷமாக உருகுகிறார். அடுத்த வாரம் நடக்கும் டெமொக்ராடிக் மாநாட்டினால், போக்குவரத்தில் மாட்டிக்கொண்டால், கஷ்டப்படாமல் தாளம் போட்டு ட்ராஃபிக்கையும் என்சாய் செய்ய ஒரு பாடல். ‘லஜ்ஜாவதியே’ என்றால் என்னங்க அர்த்தம்?

உந்தன் விழிமுனை

– ஜஸ்ஸி கிஃப்ட், கங்கா – 1.5 / 4

ஜஸ்ஸி கிஃப்ட்-தான் அடுத்த ஏ.ஆர்.ரெஹ்மான் என்பது எல்லாம் டூ மச். ஆனால், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் அதிர வைக்காத இசை. அத்னான் சாமியின் கொஞ்சல், உதித் நாராயண் குரலில் தெரியும் குழந்தைத்தனம், மனோவின் கணீர் உச்சரிப்பு என்று வித்தியாசமான கலவை.

பூவாலே இந்த

– ஹரீஷ் ராகவேந்திரா – 1.75 / 4

வீட்டில் விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு, பால்கனியில் கையில் கோப்பையுடன், மூன்றாம் பிறையை தரிசனம் செய்துகொண்டே, வெறுந்தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்க, jazzy ஹரிஷ் ராகவேந்திரா பாடல்.

அன்னக்கிளி – 1 – பிரசன்னா – 3 / 4

அன்னக்கிளி – 2 – ஜஸ்ஸி கிஃப்ட் – 2.5 / 4

பிரசன்னாவின் ‘அன்னக்கிளி’, ஜஸ்ஸியை விட சாதாரணமாக இருந்தாலும் பெட்டராக இருக்கிறது. மற்றொரு எளிமையான அசத்தல் பாடல். ‘ஜெயச்சந்திரன் உங்கள் சாய்ஸி’ல் அனைவரும் விரும்பிக் கேட்கும் பாடலாக ‘அன்னக்கிளி’ நிச்சயம் இருக்கும்.

ஃபோர் தி பீப்பிள்

– உன்னி மேனன் – 1 / 4

இளைஞர்கள் அமைக்கும் இயக்கத்தின் தீம் சாங். உருப்படியான ஆங்கிலப் பாடலாக அமைத்திருக்கலாம். அல்லது, வழக்கம்போல் ஒரு எழுச்சிப் பாடல் கொடுத்திருக்கலாம். இரண்டுங்கெட்டான்.

Four Students பாப் பாடல்கள்தான் மலையாளர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது என்கிறார்கள். தமிழில் அவ்வளவு பெரிய ஹிட் ஆகாவிட்டாலும், ஜஸ்ஸி கிஃப்ட் குரலில் பல மயக்கும் பாடல்கள் வரப்போவது நிச்சயம்.

பாடல்களைக் கேட்க: RAAGA – Four Students – Tamil Movie Songs

எம்பி3: ((::Mohan’s Music/Mp3 Page – Latest Mp3 – 4 Students::))

குமரகுரு: teakada: Lajjavathiye enna asathura rathiye

Song of the Day: LajjavathiyE from 4 Students

செவ்வி: Music India OnLine – Jassie Gift, Music Director (4 The People) 2004