Daily Archives: ஜூலை 8, 2004

விருப்பப் பட்டியல் – வலைப்பூ

  1. வார ஆசிரியரின் பெயரையும், அவருடைய வாரத்தையும் (போன ப்ளாக்ஸ்பாட் வலைப்பூ போல்) கொடுக்கலாம்.

  2. Posted by எடிட்டர் என்பதை, ஆசிரியரின் பெயர் வருமாறு அமைக்கலாம்.

  3. மதி, காசியின் மின்னஞ்சல் முகவரிகளும் உதவி கோருபவர்களுக்காக முதல் பக்கத்திலேயே கொடுக்கலாம்.

  4. மறுமொழிந்தவர்களுக்கும், பின்னூட்டங்களை நீக்கும் வசதியைத் தரலாம்.

  5. அரட்டைபெட்டியை பயன்படுத்துவோருக்குக் குலுக்கல் முறையில் பரிசளிக்கலாம்.

  6. அனைத்துப் பதிவுகளையும் categorize செய்ய வசதி அமைக்கலாம்.

  7. License, copyright, privacy என்று அறிக்கை தந்து விடலாம்.

  8. தமிழ் தேதிகளை இடலாம்.

  9. வலைப்பூக்களின் நோக்கம், எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறித்து ‘About us’ போன்ற பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கலாம்.

  10. இணைப்புக்கள் திடீர் என்று கட்டம் கட்டியும்/கட்டாமலும் வருவதை, consistent ஆக மாற்றலாம்.

http://tamilblogs.blogspot.com

  1. குப்பை: “MSNBC – The Secret Lives of Wives”

  2. விழித்திருப்பதனால் வாழ்பவன் குறிப்புகள்: எளிய தலைப்புகளில் சிந்திக்கவைக்கும் சுடலை மாடசாமியின் கவிதைகள்.

  3. சோழியன்: மே மாதத்திற்குப் பிறகு எழுதவில்லை. ஆனால், எழுதிய மட்டும் அனுபவம் புதுமை

  4. மனசு: சரண் தமிங்கிலத்தில் மட்டுமே எழுதி படுத்துகிறார் 🙂

  5. உணர்வுகள்: குமரேசன் எதை குறித்தும் எழுதுகிறார். கொஞ்சம் அனுபவங்கள்; ஆங்கிலத் தலைப்புக்கு தமிழாக்கம் கொடுத்து கவிதைகள்; வித்தியாசமான செய்திகள்.

  6. டமாசு: இளைஞர் வில்ஸ் காதல்வயப்பட முயற்சிக்கிறார்; முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார் போல 😉

  7. மின்னல்கள்: ஜெய் கணேஷ் அவ்வப்பொழுது மட்டுமே வலைப்பதிந்தாலும், இ.பா.வின் ‘குருதிப்புனல்’ போன்ற கவனிப்பு பெறும் பதிவுகள்.

  8. வந்தே மாதரம்: விவாதத்தைத் தொடங்கப் போகிறேன் என்றார்… இன்னும் எதுவும் காணோம்!

  9. காதல் உலகம் – மன்மதன்: ரெண்டு போஸ்ட்; ஆறு காமெண்ட்ஸ்.

  10. எழிலுலகம்: வெண்பா எல்லாம் இயற்றியிருக்கிறார் 😛

  11. குடில்: பல பதிவுகளை விரைவில் காண மிகச் சிறந்த வழி!