7G ரெயின்போ காலனி – கனாக் காணும் காலங்கள் (1)


பாடகி:மதுமிதா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: நா முத்துக்குமார்

கனாக் காணும் காலங்கள்

கரைந்தோடும் நேரங்கள்

கலையாது கோலம் போடுமா?

விழி போடும் கடிதங்கள்

வழி மாறும் பயணங்கள்

தனியாக ஓடம் போகுமா?

இது இடைவெளி குறைகிற தருணம்

இரு இதயத்தில் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம்

இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்

தினம் கனவினில் அவரவர் உருவம்

சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்

கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை

இதயம் இரண்டு பேசிடும் பாஷை

மெதுவாய் இனி மழை வரும் ஓசை…

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை

நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பெயரில்லை

பறக்காத பறவைக்கெல்லாம் பறவையென்று பெயரில்லை

திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை

தனிமையில் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ?

திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ?

தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்

தோழமையில் அது கிடையாதே

தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்

தடுத்திடவே இங்கு வழியில்லையே….

இது என்ன காற்றில் இன்று

ஈரப்பதம் குறைகிறதே

ஏகாந்தம் பூசிக் கொண்டு அந்திவேளை அழைக்கிறதே

அதிகாலை நேரம் எல்லாம்

தூங்காமல் விடிகிறதே

விழி மூடி தனக்குள் பேசும்

மௌனங்கள் பிடிக்கிறதே

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்

நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்

பனித்துளியாய் அது மறைவது ஏன்

நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை

மன நடுக்கம் அது மிகக் கொடுமை

பாடல் கேட்க: RAAGA – 7G Rainbow Colony

2 responses to “7G ரெயின்போ காலனி – கனாக் காணும் காலங்கள் (1)

  1. Balaji,
    Where can I see R.Parthiban’s “Kudaikul Mazhai” trailor ?
    – Raja

  2. சன் டிவியில் வரும் ‘புத்தம்புதுசில்’ காட்டுகிறார்கள். அதை ட்ரெயிலர் என்று சொல்லவே முடியாது. ஒவ்வொரு படத்தின் ஆரம்பத்திலும், பாரதிராஜா பேசுவாரே, ‘என் இனிய தமிழ் மக்களே… பாசத்துக்குரிய பாரதிராஜா…’ என்று; அது போல், ரா பார்த்திபனும் ஒரு முழத்துக்கு எடக்கு முடக்காகப் பேசுகிறார்.

    பல ஆங்கிலப் படங்களின் மயிர் கூச்செறியும் சம்பவங்களோடு ட்ரெயிலர் ஆரம்பிக்கிறது. ஒரு விநாடி கார் சேஸ், அடுத்த நொடி உணர்ச்சிகரமான காதல் காட்சி, விண்ணில் பறக்கும் ராக்கெட்கள் என்று ஆங்கிலப் பட அறிமுகமோ என்று யோசிக்க வைக்கும் அளவு. பிறகு பார்த்திபன், கமல் போல் கஷ்டப்பட்டு படம் எடுத்ததையும், ஷங்கர் போல் மாட்டி யோசித்ததாகவும், ‘குணா’ மாதிரி கமர்ஷியல் படமாக்கியதையும், ‘உள்ளே வெளியே’யை விட காதலை மாறுபட்ட கோணத்தில் எடுத்திருப்பதை நாங்கள் வித்தியாமாக செய்திருக்கோம் என்று சொல்லி உங்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கவில்லை என்பதையும், ஐந்து நிமிடம், பேனாவை சுழற்றிக் கொண்டே, டேபிள் வெயிட்டை உருட்டிக் கொண்டே பேசி முடிக்கிறார்.

    இப்போதைக்கு அவ்வளவுதான் ட்ரெயிலர் கொடுத்திருக்கிறார்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.