Monthly Archives: மே 2004

உண்ணி – பா. ராகவன்

எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது.

கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள்.

பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை கிருமிகள், உண்ணிகள் இருக்குமோ? ஐயோ, இந்தப்பெண் ஏன் இப்படி ஈஷுகிறாள்; உடம்புக்கு ஏதாவது வந்துதொலைக்கப் போகிறதே என்று எனக்குத் தான் எப்போதும் பதறும்.

எதிர்வீடு தான் என்றாலும் எங்காவது பார்த்தால் அடையாளம் கண்டு அரைப் புன்னகை செய்யுமளவு மட்டுமே எங்களுக்குள் நெருக்கம் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். போயும் போயும் முதல் சம்பாஷணையைப் பூனை உண்ணியிலிருந்தா தொடங்குவது?

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி ஒன்றுக்குப் போகவென எழுந்திருக்க வேண்டியதானது. உறக்கம் கலைந்ததால் கொஞ்சம் வெளியே வந்து இரவின் மரகத வெளிச்சத்தை அனுபவித்தபடி சற்று நின்றேன்.

தற்செயலாக எதிர்வீட்டு மொட்டைமாடியைப் பார்த்தால், அங்கே மாலதி! எப்போதும் போல் அப்போதும் அவள் மடியில் அந்தப் பூனை. என் யூகம் சரியானால், அவள் அப்போது அந்த ஜந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

மிகத் தீவிரமாக.

என் வியப்பு அதுவல்ல; பூனையும் தன் மொழியில் கிசுகிசுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தது தான்.

இது என் பிரமை, அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாயிருக்கும் என்று நினைத்தேன். ஒரு வேளை அவள் சித்தம் பிறழ்ந்தவளாக இருப்பாளோ? ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான்? ஜீவ காருண்யம் உத்தமமானது தான். ஆனால் இது வேறுவிதமாகவல்லவா இருக்கிறது?

அவள் தன் பூனைக்கு வெங்காய சாம்பார் சாதமும் தக்காளி ஜூஸும் பாப்கார்னும் (ரகசியமாக) பான்பராகும் தருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே அவளிடம் இல்லாவிட்டாலும் அவளது பெற்றோரிடம் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். எதுவோ என்னை அப்போதெல்லாம் தடுத்தது.

ஆனால் இந்த அர்த்தராத்திரி கூத்தைப் பார்த்தபின் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

விடியட்டும் என்று காத்திருந்தேன். பல் கூடத் துலக்காமல் நேரே அவள் வீட்டுப் படியேறி, கதவைத் தட்டிவிட்டு நின்றேன்.

சில விநாடிகளில் கதவு திறந்தது. அவர் எதிர்ப்பட்டார். படபடவென்று விஷயத்தைக் கொட்டிவிட்டு, கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.

அடுத்த சில நாட்களில் அவள் மீண்டும் என் பார்வையில் தென்பட்டபோதெல்லாம் பூனை இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் வாடியிருந்தது போலிருந்தது. நான் ஏதும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விரைவில் அவள் சகஜநிலைமைக்குத் திரும்பியதையும் கவனித்தேன். பூனையை மறந்துவிட்டாள் போலிருக்கிறது .

எனக்கு அரிக்க ஆரம்பித்தது.

நன்றி: புத்தகப் புழு

இந்திய புத்தகங்கள் வாங்கும் இடங்கள்

புத்தகம் வாங்குவதற்காக சில இணையத்தளங்கள்.

1. இந்தியா க்ளப்

அழகாக வகைபடுத்தியுள்ளது ரசிக்கத்தக்கது. என்ன வாங்க வேண்டும் என்று குறிக்கோளோடு வருவது ஒரு ஜாதி; பொழுதுபோகாமல் உள்ளே வந்தவர்களுக்கும் வழி காட்டுகிறது இந்தத் தளம்.

2. ஃபர்ஸ்ட் & செகண்ட்:

கஸ்டமர் கேள்விகளுக்கு சுடச்சுட பதில், விளக்கம் என என்னை மிகவும் கவர்ந்த தளம். வாரம் ஒரு புத்தகம் அல்லது மாதம் ஒரு புத்தகம் என்று புக் கிளப் நெறிபடுத்துவதும் இங்கு உபயோகமானது. எல்லா உறுப்பினரும் குறிப்பிட்ட நூலை படித்து முடித்து, இரண்டு வரி பேசி, (நேரில் சந்திக்க முடியாவிட்டால் இணையத்தில் தட்டி) கலந்துரையாடுவதும் இனிமை.

3. காந்தளகம்:

நண்பர் ஒருவர் உபயோகித்துள்ளார் என்பது தவிர வேறு எதுவும் பெரியதாக அறியேன். அனைத்து புத்தகங்களுக்கும் ஒரு catalaog மாதிரி இருப்பதால் மிகவும் பயனுள்ளது. ஆனால், shipping காசு அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து.

அதை விட அதி முக்கியமாக, தவணை அட்டையை பயன்படுத்தி வாங்க முடியாது. இங்கு உள்ளவர்களுக்கு (இந்திய) ரூபாயில் செலவு கணக்கைக் காண்பிப்பதை விட (அமெரிக்க) டாலரில் எவ்வளவு ஆகும் என்று சொன்னால் கம்மி போல் தோன்றும் 🙂

4. ரீடிஃப்

டாலரில் காண்பிக்கிறார்கள். ரீடிஃப் ஒரு பெரிய நிறுவனம் போன்ற எண்ணத்தை விதைத்திருக்கிறார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகமான தளம்.

5. சிலிகான் இந்தியா:

தற்சமயம் எனக்கு மிகவும் பிடித்த தளம். தினசரி மடலில் குட்டி முன்னுரையுடன் முகப்புப் படத்தையும் கொடுத்து நாய்க்கு ரொட்டித் துண்டு போல் உள்ளிழுப்பார்கள். அமேசான் அளவு மதிப்பீடுகளும், விமர்சனங்களும் கொடுக்காவிட்டாலும் பெஸ்ட் செல்லர்ஸ் வைத்திருப்பது, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கொஞ்சம் குறிப்புகள் என்று புத்தகங்களை வாங்கத் தூண்டும்படி அமைத்திருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளின் தலை பத்து தலைவலி பட்டியல்

Jeremy Zawodny’s blog:

1. மறுமொழி தருவதற்கு வசதி செய்து தராமல் விட்டு விடுவது.

2. சொந்தமாக எதுவும் எழுதாமல், ஏற்கனவே படித்த பதிவுகளின் சுட்டிகளைத் தந்தே காலத்தை ஓட்டுவது.

3. வலைப்பதிவுகளில் வலைப்பதிவதின் அருமை பெருமைகளை குறித்து மட்டுமே எழுதுவது.

4. ஆங்கிலப் பதிவுகளுக்கே பெரும்பாலும் பொறுத்தமென்றாலும், எழுத்துருவை தக்கினியூண்டு சைஸில் வைத்துக் கொள்வது; இயங்கு எழுத்துரு பயன்படுத்தாவிட்டால், எவ்வாறு தமிழைக் காண்பது என்பதற்கு உதவி பக்கங்களின் சுட்டி தராமல் இருப்பது.

5. ‘என்னைப் பற்றி’ என்று எந்த குறிப்பும் இல்லாமல் மொட்டையாய் வைத்திருப்பது.

6. (Blogroll குறித்து சொல்லியிருக்கிறார்; அதில் எனக்கு உடன்பாடில்லை; ஆதலால் பில் [#15] சொல்வதை வழிமொழிகிறேன்:) மற்றவர்கள் எப்படி வலைப்பதிய வேண்டும் என்று சதா அறிவுறுத்துவது.

7. என்னால் இன்று வலைப்பதியவே முடியவில்லை; நான் ரொம்ப பிஸியாக்கும் என்று வழிசலாக தினசரி வலைப்பதிவது.

8. மேய்ந்த வலைப்பதிவுகளின் தாக்கமாகவே தன்னுடைய பதிவுகளை வைத்திருப்பது. பின்னூட்டங்கள் மட்டுமே வலைப்பதிவாகாது.

9. ஆர்எஸ்எஸ் செய்தியோடை (RSS) கொடுக்காமல் இருப்பது.

10. பின் தொடரும் வசதியை (TrackBack) சரியாக உபயோகம் செய்யாதது.

எரிக் இவற்றை தலை பத்து கருத்துகணிப்பின் மூலம் வரிசைப் படுத்தியுள்ளார். தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று தனியாக ஒரு தலை பத்து கொடுக்கலாம். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா 🙂

தமிழகத்தை முன்னேற்றுவாரா முதல்வர்?

ஜெயலலிதா இரண்டாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்குவதுதான் தனது லட்சியம் என்றார். அதற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.

1. சென்னையை தொழில் முதலீட்டைக் கவரும் நகரமாக மாற்ற ரூ. 1,800 கோடியில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

2. கிராமப்புற கட்டமைப்புக்கு ரூ. 2,000 கோடி.

3. மூன்று இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம்.

4. இரண்டு இடஙளில் ஆயத்த ஆடை தயாரிப்பு மையம்.

5. இரண்டு இடஙளில் தோட்டக்கலை மையம்.

6. மாநிலத்தில் 62% மக்களின் விவசாயம் சார்ந்த நிலையை மாற்றுவதற்காக, தொழிற்துறையில் புதிய திட்டங்கள்.

சமீபத்திய இந்தியா டுடே- தமிழில் அவரது ஆட்சியின் பற்றி எரியும் தலை பத்து பிரசினைகளாக சொல்லப்படுபவை:

1. விவசாயம்:

  • காவிரி டெல்டா பகுதியில் நெல்கொள்முதலை நிறுத்தியது.

  • இலவச மின்சாரத்தை ரத்து செய்வது.

2. தண்ணீர்:

  • கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பம்.

  • ஏரி/குளங்களை சீர் செய்தல்.

3. தொழில் துறை

  • நேரடியாக சந்திக்கமுடியாமை.

  • BPO போன்ற திட்டங்களுக்கு சலுகை தரவில்லை.

4. மெகா திட்டங்கள்:

  • தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

  • சேது சமுத்திரம் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.

  • கூடன்குளம் முடியவில்லை.

  • நாங்குநேரி (திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது) தொழில் பூங்கா கிடப்பில் இருக்கிறது.

  • பம்பா-அச்சன்கோவில் நதிநீர் இணைப்பில் முன்னேற்றம் இல்லை.

  • சென்னை பறக்கும் ரயில் திட்டம் இன்னும் முடியவில்லை.

5. உள் கட்டமைப்பு:

  • 51.18% கிராமங்களே (சாலைகளால்) நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

  • போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயமாக்குவது

6. ஆரம்பக் கல்வி

  • 75% குழந்தைகள் 18 வயதிற்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.

  • தனியார் பள்ளிகளின் தரம் மற்றும் பணம் பிடுங்கும் போக்கு.

7. சுற்றுச் சூழல்:

  • மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் அதிகம்.

  • பாலாற்றுப் படுகை மொத்தமாகப் பாழாகி விட்டது.

  • 25,000 ஹெக்டேர் காடுகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகிறது.

8. சுற்றுலா:

  • தமிழகம் என்றால் ஜெ-கலைஞர் சண்டைதான் நினைவுக்கு வருவதாக சொல்கிறார்கள்

9. நெசவாளர் பிரச்னை:

  • கஞ்சித்தொட்டியில் ஒரு வேளைக் கஞ்சிக்காக நிற்கிறார்கள்.

  • இலவச வேட்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டது.

  • பஞ்சு விலையேற்றம்.

  • அதீத மின் கட்டணம்.

  • நவீன முறைகளுக்கு மாறவில்லை.

  • கோவையில் 15/20 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.

10. பெண்கள் பிரச்னை:

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே முண்ணனி வகிக்கிறது.

  • தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தொடர்பு கொள்ள உரிய வசதிகள் இல்லை.

  • பெண் போலீசார் சென்சிட்டிவாக இல்லை.

இந்தப் பட்டியலையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பு நோக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறியீடுகள் (economic indicators) கூட ஒப்பிட்டு அலசலாம்.

ஆதாரம்: இந்தியா டுடே, ரீடிஃப்.காம், கல்கி.

அலைகள்

16 வில்லன்கள் நடிக்கும் புதிய திரைப்படம் தனுஷ்:

தனுஷ் நடிக்காவிட்டாலும் அவருடைய பெயரை வைத்து ஒரு திரைப்படம் தயாராகிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் புதுமுகம் குருமணி கதாநாயகனாக நான்கு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் மொத்தம் 16 வில்லன்கள் நடிக்க அடிதடி சண்டைப்படமாக வெளிவருகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் சரவணன் நடிக்கிறார் பிதாமகனுக்குப் பிறகு அவர் இப்படத்தில் பேசப்படுவார்.



தமிழ் நாடு 2050 – குமுதம்: 2050ம் ஆண்டு டிசம்பர் மாத செய்திகளின் தொகுப்பு இது.

  • சத்தியமங்கலம் மாநில முதல்வர் வீரப்பர்

  • வலுக்கிறது காவிரிப் பிரச்னை… களத்தில் சிலம்பரசன்!

  • தொடையப்பா ரிலீஸ் ஆனது!

  • ‘அண்ணாமலை 12’ ராதிகாவுக்குப் பாராட்டு!

முழுப் பட்டியல்

ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் (1999) – வேணுஜி

திரை அம்பலம்:

என் இசை வாழ்வில் நான் மூன்று விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறேன். தொழுகை, இசையமைத்தல், மேலும் இசையைக் கற்றல்-இந்த மூன்றும் எனக்கு இன்றியமையாதவை. மூன்று விஷயத்திற்கும் எனக்கு அவகாசம் வேண்டும்.

என் பாடல் பதிவில் வழக்கமான இசைக்கருவிகளின் திறன் மேம்பட்டு ஒலிப்பதால் அவை இசைக்கருவிகளின் வாயிலாக இசைக்கப்படாதது போல் தோன்றுகிறது

நான் இங்கு பதிவு முடிந்ததும் அதை மிக மட்டமான ‘ஒலிபெருக்கியில்’ ஒலிக்க விட்டுதான் சோதனை செய்கிறேன். நான்கு வகையான ஒலிபெருக்கியில் கேட்டு திருப்தி ஏற்பட்டவுடன்தான் பாடலைப் பதிவு செய்கிறேன்.

மிகத் திறமையான இயக்கத்தில் பாடல்கள் இல்லாமலேயே படத்தை வெற்றியடைய வைக்க முடியும். ‘குருதிப்புனல்’ தமிழ்ப்படமும், நான் பின்னணி இசையமைத்த ஃபயர்’ ஆங்கிலப்படமும் இதற்கு உதாரணங்கள்.

நவீன தொழில்நுட்பத்தில் அமையும் இசையை, ‘இசையின் வளர்ச்சி’ என்று சொல்லலாமா?

‘இசை என்றைக்குமே ஒன்றுதான். அதைக் கொண்டு சேர்க்கும் ‘வாகனங்கள்’ தான் மாறிக்கொண்டிருக்கின்றன. கால்நடை, கட்டை வண்டி, கார் என்று மாறி வந்தாலும் பயணம் ஒன்றுதான் இல்லையா? இசையும் இப்படித்தான்.’

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற உங்கள் நம்பிக்கை, தன்னம்பிக்கையைக் குறைப்பதாக இல்லையா?

‘தன்னம்பிக்கையே இறைவன் கொடுத்ததுதான்’.

சாலையோரச் சிந்தனைகள் – என். சொக்கன்

தினம் ஒரு கவிதை:

என்னுடைய ‘செல்ல’ வாகனம், ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வாங்கியது. ஆகவே, ஆந்திரப் பிரதேசப் பதிவெண்தான் அதில் உண்டு. பின்னர், பெங்களூருக்கு மாறியபோதும், இங்கேயே நிரந்தரமாய் இருந்துவிடுகிற யோசனை இல்லை என்பதால், கர்நாடக நம்பருக்கு வண்டியை மாற்றாமல், உரிய வரியைக் கட்டிவிட்டு, ஆந்திர நம்பரையே வைத்துக்கொண்டேன்.

இதனால், ஒரு புதிய பிரச்சனை முளைத்தது – சாலையோரங்களில் என் வாகனத்தை மடக்குகிற போக்குவரத்துக் காவலர்கள், என் வண்டியில் ‘AP’ முத்திரையைப் பார்த்ததும், சுபாவமாய் தெலுங்கில் பேசத்துவங்கிவிடுகிறார்கள். (அதெப்படியோ, பெங்களூரிலுள்ள பெரும்பான்மை போலீஸ்காரர்களும், ஆட்டோ க்காரர்களும் கன்னடத்தோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பாஷைகளையும் சரளமாய்ப் பேசுகிறார்கள் !)

ஹைதராபாதிலிருந்த காலத்தில், ஏராளமான நாகார்ஜுனா, வெங்கடேஷின் படங்களைப் பார்த்துப் பழகியதால், எனக்குத் தெலுங்கு ஓரளவு புரியும். என்றாலும், அவர்களுக்குத் தெலுங்கிலேயே பதில் சொல்வதற்கான இலக்கண அறிவோ, அசட்டு தைரியமோ லேது ! ஆகவே, நான் அவர்களைப் பார்த்துத் திருதிருவென்று விழிக்க, அதை அவர்கள் தப்பாய்ப் புரிந்துகொண்டு, ‘ஊதிக் காட்டு’, என்று எனது சுவாச ஆல்கஹால் அளவைச் சோதிப்பார்கள்.

அடுத்து, எனது ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பார்கள் – நானும் ஒரு முழ(ழு) நீள ஜெராக்ஸ் பிரதியொன்றை எடுத்து நீட்டுவேன் ! (இப்போதெல்லாம், பர்ஸில் வைத்துக்கொள்கிறாற்போல், ஒற்றை அட்டையில் டிரைவிங் லைசன்ஸ் தந்துவிடுகிறார்கள். ஆனால், நான் விண்ணப்பித்தபோது, அந்த நடைமுறை இல்லை – பாக்கெட் சைஸ் கந்த சஷ்டி கவசம்போல, ஒரு குட்டிப் புத்தகமே உண்டு, எப்போதும் அதன் ஜெராக்ஸ் பிரதியைக் கையிலெடுத்துக்கொண்டு திரியவேண்டும் !)

அந்தக் காவலர்கள், என்னுடைய உரிமத்தை கவனமாய்ச் சோதித்தபின், அவர்களின் முகத்தில் ஒரு நிச்சயமான திகைப்பைப் பார்க்கலாம், ‘வண்டி, ஆந்திரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது, வண்டிக்கு உரியவன், தமிழ் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருக்கிறான், ஆனால், வண்டி இப்போது கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கிறது ! இப்போது, இவனிடம் நாம் என்ன மொழியில் பேசுவது ?’

இந்தக் குழப்பத்துடன் அவர்கள் என்னை மேலும், கீழும் பார்த்துவிட்டு, ‘சரி, கிளம்பு !’, என்று அனுமதித்துவிடுகிறார்கள் !

ஆனால், எல்லாக் காவலர்களும் இப்படியில்லை, சென்ற வருடம், கோரமங்களாவில் ஒரு மீசைக்காரபோலீஸ், தவறான இடத்தில் வண்டியை நிறுத்தியதற்காக என்னைப் பிடித்துவிட்டார்.

‘நூறு ரூபா ஃபைன் கட்டு, இல்லைன்னா, எனக்கு அம்பது ரூபா கொடு !’, என்று நேரடியாகவே பேரம் பேசினார் அவர்.

‘ஃபைன் கட்டிடறேன் ஸார்’, என்றேன் நான்.

அவர் மெல்லமாய்த் தலையாட்டினபடி, பெரிய சட்டைப் பாக்கெட்டிலிருந்து ரசீது புத்தகத்தை எடுத்துப் பிரித்தார், இன்னொரு பாக்கெட்டில் பேனாவைத் தேடிப் பிதுக்கினார்.

நானும் அவசரமாய் என்னுடைய பர்ஸை வெளியிலெடுத்துப் பிரித்தேன், ஆனால், சோதனையாய், அதனுள் ஒரே ஒரு இருபது ரூபாய் நோட்டுதான் இருந்தது ! ஆனால், நல்லவேளை – எங்கள் வங்கியின் தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம் (ATM-க்கு இதுதானா தமிழ் ?), அடுத்த தெருவிலேயே இருந்தது – அங்கிருந்து பணம் எடுத்துக்கொண்டு, உடனே திரும்புவதாக அவரிடம் சொன்னேன்.

அவர் என்னை நம்பாமல் பார்த்து, ‘வருவீங்களா ?’, என்றார்.

‘கண்டிப்பா வருவேன் ஸார்’, என்று அவருக்கு உறுதி சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன்.

பின்னர், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு, நேராக அவரிடமே திரும்பினேன், நூறு ரூபாயைக் கொடுத்து ரசீது கேட்டேன்.

அவர் என்னுடைய பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார், ‘நீங்க திரும்பி வரமாட்டீங்க-ன்னு நினைச்சேன் !’, என்றார்.

‘அதனால என்ன ஸார் ? இப்போதான் வந்துட்டேனே !’

‘பரவாயில்லை ஸார், உங்க நேர்மைக்கு என்னாலான மரியாதை … நீங்க ஃபைன் கட்டவேண்டாம், போய்ட்டுவாங்க !’, என்று சிரித்தார் அவர்.

அப்போது, அவரது பெருந்தன்மையை ஏற்றுக்கொண்டு, நான் உடனடியாய்க் கிளம்பிவிட்டேன். என்றாலும், இன்றுவரை அந்தச் சம்பவம் என்னை உறுத்திக்கொண்டுதானிருக்கிறது – இவற்றில் எது பெரிய குற்றம்? – தவறான இடத்தில் நான் வண்டியை நிறுத்தியதா ? அந்தக் காவலர் ஐம்பது ரூபாய் லஞ்சம் கேட்டதா? அல்லது, நான் நியாயமாய்ச் செலுத்தவேண்டிய நூறு ரூபாய் அபராதத்தை, அவராகத் தள்ளுபடி செய்ததா ? அல்லது, இதுதான் சாக்கு என்று, நான் அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டதா ?



வார சுரபி – இணைய இதழ்

அண்ணா கண்ணன், பொறுப்பாசிரியர்:

தரமான, ஆரோக்கியமான படைப்புகளை இந்த இதழில் தொடர்ந்து அதிக அளவில் வெளியிட இருக்கிறோம். புதிய சிந்தனைகளைத் தூண்டுவதும் இலக்கிய வளர்ச்சியுமே எமது நோக்கங்கள. இது, வணிக ரீதியிலான முயற்சியன்று எனவே, இதில் பங்களிக்கும் படைப்பாளர்களுக்குத் தனியே சன்மானம் வழங்க இயலாது. ஆயினும், அவர்கள் இந்தியாவுக்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அமுதசுரபி அச்சிதழை அனுப்புவோம்.

ஓராண்டு முழுவதும் (2004 மே முதல் 2005 ஏப்ரல் வரை) அதிகப் படைப்புகளை அனுப்பிய மூவருக்குச் சிறப்புப் பரிசு வழங்குவோம். எனவே, எழுத்தாளர்கள் அதிக அளவு பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி வைத்துள்ள எழுத்தாளர்கள், அதனைத் தெரிவித்தால் அவர்கள் படைப்பின் கீழ் அதனை வெளியிடுவோம். இது, வாசகர்கள், கருத்துத் தெரிவிக்க உதவும்.

அஞ்சல் மூலம் படைப்புகளை அனுப்புவோர்,

‘வார சுரபி’, அமுதசுரபி,

ஏ— 7, இரண்டாம் அவென்யு, அண்ணாநகர் கிழக்கு,

சென்னை – 600 102. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

சேது – திரைக்கதை

தமிழ்.காம்:

அம்பி: ஆமா… மாமா… வேதத்தை மட்டும் படிச்சு நான் என்னத்த கண்டேன்? அவளாவது உலகத்தைப் புரிஞ்சுக்கட்டுமேன்னுதான்…

—-

மிட் ஷாட் – அண்ணன் : ஓ… கெளரவம்! அப்புறம்… இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க… நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது… அப்படித்தானே? அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே…

குளோஸ் ஷாட் – குழந்தை : சிய்யான்… சிய்யான்…

மிட் ஷாட் – அண்ணன் : ஆ… சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்? அவன் தாடியும் டிரெஸ்சும்…

—-

சேதுவின் நண்பன் கூப்பிட நிற்கிறாள் அபிதா.

அபிதா : ம்…?

நண்பன் : உங்க மயில் இறகு குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா…? நானும் வளர்த்துக்கறேன்…

பெண்ணைப் போன்ற பாவனையுடன் கேட்கிறான் நண்பன்.

அபிதா : ம்…

—-

குளோஸ் ஷாட் – குருக்கள் : அது உன் பெரிய பாட்டியோட பேர் இல்லையோ…?

குளோஸ் ஷாட் – அபிதா : சரி வச்சேளோ இல்லையோ… அதுக்கு என்ன அர்த்தமுன்னு இப்போ சொல்லுங்கோ.

குளோஸ் ஷாட் – குருக்கள் : அதுக்கு இப்போ என்ன அவசரம்…?

குளோஸ் ஷாட் – அபிதா : காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்றாப்பா…என்னன்னு சொல்லுங்கோ…

—-

அண்ணி பக்கம் திரும்பிய குருக்கள் : யாரு பேருக்கு…?

அண்ணி : சிய்யான்…

குளோஸ் ஷாட் – சேதுவின் அண்ணன் அதிர்ச்சியாக மனைவியைப் பார்க்கிறார்.

குளோஸ் ஷாட் – அண்ணி பயந்தபடி…

அண்ணி : அய்யோ…! சேது, மக நட்சத்திரம், சிம்ம ராசி.

குருக்கள் : ஓம்…

—-

கே.ஜே. யேசுதாஸ் – சந்திப்பு: கேடிஸ்ரீ

ஆறாம்திணை – இன்றைய பக்கம்: அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் இருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.

கடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் இருக்கட்டும்… அவர் அவர்தான்… அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ’ என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது… பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர்.

எனக்கு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற ஆசை உண்டு. நான் ஐந்தாறு மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தமிழில் Jesus chirst என்கிற படத்திற்கு இசையமத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய இசையமைப்பாளர் ஆசையை பாதியில் நிறுத்திவிட்டேன். ஏனென்றால் என்னுடைய நினைவாற்றல்தான் அதற்கு காரணம்.

ஒருமுறை நான் ஒரு பாடலை கேட்டேன் என்றால் அந்தப் பாடல் என்னுள் ஆழமாக பதிந்துவிடும். இதனால் நான் இசையமைக்கும் போது பல தடவை என் இசையமைப்பில் அந்தப் பாடல்களின் தாக்கல்/சாயல் பிரதிபலிக்கும்.. மறுபடியும் மறுபடியும் ஏற்கெனவே வந்த பாடல்களின் சாயல் என்னுடைய இசையில் வருவதை நான் விரும்பவில்லை.

இக்காரணத்தினால் எனக்கு இசையமைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.. நிறைய நேரம் எனக்கு தேவைப்பட்டது.. ஆனால் இன்றைய காலத்தில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிற நிலையில் என்னால் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க முடியவில்லை.

என்னுள் வாய்ஸ் பேங்க் பற்றிய எண்ணம் உருவானதற்கு காரணம் சித்ரா என்றே கூறுவேன். ஏனென்றால் சித்ரா ஆரம்ப காலத்தில் எங்களின் திருவனந்தபுரத்தில் உள்ள தரங்கிணி ஸ்டூடியோவில் எல்லோருக்கும் டிராக் பாடிக்கொண்டிருந்தார், அதனால் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. சுஜாதா போன்றவர்கள் இந்த வகையில் வந்தவர்கள் தான்.

நான் முதலில் வாய்ஸ் பேங்க் பற்றி விளம்பரம் செய்யும் போது கர்நாடக சங்கீத வித்வான்களைத்தான் மனதில் நினைத்து விளம்பரம் கொடுத்தேன். நான் நினைத்தது உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் போன்ற வித்வான்களை. ஆனால் மேடை கச்சேரி செய்பவர்கள் எல்லோரும் தவறாக புரிந்துககொண்டு அதிகளவில் வந்துவிட்டார்கள். 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துவிட்டது. விண்ணப்பங்கள் இலவசம் என்பதால் அதிகளவில் வந்தது.

கர்நம் என்றால் காது… அடக்கம் என்றால் காதில் அடக்க வேண்டியது என்று அர்த்தம்.. குரு முன்னால் உட்கார்ந்து அவரின் முகபாவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல் இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது என்பது என்னுடைய கருத்து.