குமுதம்.காம்


சோமரத்னே திசயனாயக்கே – உரையாடல்: “வசந்தகுமார்: ‘லிட்டில் ஏஞ்சலை’ நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983 இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?

“இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.”



Truth, Love & a little Malice: குஷ்வந்த் சிங் – கி அ சச்சிதானந்தம்:

இந்திரா காந்திக்கும் அவருடைய இரண்டாம் மருமகளான மேனகா காந்திக்கும் இடையிலான மோதலை, மாமியார் மருமகள் சண்டையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேனகா காந்தியை தன் நேர்முக உதவியாளராக இந்திராகாந்தி நியமித்தார். இதை சோனியா காந்தி கடுமையாக எதிர்த்தார். தன் நாடான இத்தாலிக்கே தன் குடும்பத்துடன் திரும்பிப் போய்விடுவதாக மிரட்டினார். இந்திரா காந்தியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்திராகாந்தி, மேனகாவை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். பத்திரிகைகள் மாமியார் மருமகள் சண்டையைப் பெரிது படுத்தின.



விக்ரமாதித்யன்: “வாழ்வினுடைய சாரமே இல்லாத வெறும் மொழியை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் கவிதைகளைத்தான் நான் ‘டொமஸ்டிக்’ கவிதைகள் என்கிறேன். அவற்றில் அக்கவிஞனுடைய வாழ்வுகூட இல்லை. மொழியால் செய்யப்படும் கட்டடங்கள்தான் எல்லாம். வாழ்வும் மொழியும் இசையும் போதுதான் நல்ல கவிதை பிறக்க முடியும். அது இங்கு நடக்கவில்லை.

ராமர் பிறப்பதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய முனிவர் எழுதி விட்டாரே என்று அவனும் அதுபடி வாழ்ந்து விட்டான் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதுபோல் நான் குடிகாரன் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.