Daily Archives: மே 18, 2004

அலைகள்

16 வில்லன்கள் நடிக்கும் புதிய திரைப்படம் தனுஷ்:

தனுஷ் நடிக்காவிட்டாலும் அவருடைய பெயரை வைத்து ஒரு திரைப்படம் தயாராகிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் புதுமுகம் குருமணி கதாநாயகனாக நான்கு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் மொத்தம் 16 வில்லன்கள் நடிக்க அடிதடி சண்டைப்படமாக வெளிவருகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் சரவணன் நடிக்கிறார் பிதாமகனுக்குப் பிறகு அவர் இப்படத்தில் பேசப்படுவார்.



தமிழ் நாடு 2050 – குமுதம்: 2050ம் ஆண்டு டிசம்பர் மாத செய்திகளின் தொகுப்பு இது.

  • சத்தியமங்கலம் மாநில முதல்வர் வீரப்பர்

  • வலுக்கிறது காவிரிப் பிரச்னை… களத்தில் சிலம்பரசன்!

  • தொடையப்பா ரிலீஸ் ஆனது!

  • ‘அண்ணாமலை 12’ ராதிகாவுக்குப் பாராட்டு!

முழுப் பட்டியல்

ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் (1999) – வேணுஜி

திரை அம்பலம்:

என் இசை வாழ்வில் நான் மூன்று விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறேன். தொழுகை, இசையமைத்தல், மேலும் இசையைக் கற்றல்-இந்த மூன்றும் எனக்கு இன்றியமையாதவை. மூன்று விஷயத்திற்கும் எனக்கு அவகாசம் வேண்டும்.

என் பாடல் பதிவில் வழக்கமான இசைக்கருவிகளின் திறன் மேம்பட்டு ஒலிப்பதால் அவை இசைக்கருவிகளின் வாயிலாக இசைக்கப்படாதது போல் தோன்றுகிறது

நான் இங்கு பதிவு முடிந்ததும் அதை மிக மட்டமான ‘ஒலிபெருக்கியில்’ ஒலிக்க விட்டுதான் சோதனை செய்கிறேன். நான்கு வகையான ஒலிபெருக்கியில் கேட்டு திருப்தி ஏற்பட்டவுடன்தான் பாடலைப் பதிவு செய்கிறேன்.

மிகத் திறமையான இயக்கத்தில் பாடல்கள் இல்லாமலேயே படத்தை வெற்றியடைய வைக்க முடியும். ‘குருதிப்புனல்’ தமிழ்ப்படமும், நான் பின்னணி இசையமைத்த ஃபயர்’ ஆங்கிலப்படமும் இதற்கு உதாரணங்கள்.

நவீன தொழில்நுட்பத்தில் அமையும் இசையை, ‘இசையின் வளர்ச்சி’ என்று சொல்லலாமா?

‘இசை என்றைக்குமே ஒன்றுதான். அதைக் கொண்டு சேர்க்கும் ‘வாகனங்கள்’ தான் மாறிக்கொண்டிருக்கின்றன. கால்நடை, கட்டை வண்டி, கார் என்று மாறி வந்தாலும் பயணம் ஒன்றுதான் இல்லையா? இசையும் இப்படித்தான்.’

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற உங்கள் நம்பிக்கை, தன்னம்பிக்கையைக் குறைப்பதாக இல்லையா?

‘தன்னம்பிக்கையே இறைவன் கொடுத்ததுதான்’.