கே.ஜே. யேசுதாஸ் – சந்திப்பு: கேடிஸ்ரீ


ஆறாம்திணை – இன்றைய பக்கம்: அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் இருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.

கடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் இருக்கட்டும்… அவர் அவர்தான்… அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ’ என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது… பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர்.

எனக்கு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற ஆசை உண்டு. நான் ஐந்தாறு மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தமிழில் Jesus chirst என்கிற படத்திற்கு இசையமத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய இசையமைப்பாளர் ஆசையை பாதியில் நிறுத்திவிட்டேன். ஏனென்றால் என்னுடைய நினைவாற்றல்தான் அதற்கு காரணம்.

ஒருமுறை நான் ஒரு பாடலை கேட்டேன் என்றால் அந்தப் பாடல் என்னுள் ஆழமாக பதிந்துவிடும். இதனால் நான் இசையமைக்கும் போது பல தடவை என் இசையமைப்பில் அந்தப் பாடல்களின் தாக்கல்/சாயல் பிரதிபலிக்கும்.. மறுபடியும் மறுபடியும் ஏற்கெனவே வந்த பாடல்களின் சாயல் என்னுடைய இசையில் வருவதை நான் விரும்பவில்லை.

இக்காரணத்தினால் எனக்கு இசையமைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.. நிறைய நேரம் எனக்கு தேவைப்பட்டது.. ஆனால் இன்றைய காலத்தில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிற நிலையில் என்னால் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க முடியவில்லை.

என்னுள் வாய்ஸ் பேங்க் பற்றிய எண்ணம் உருவானதற்கு காரணம் சித்ரா என்றே கூறுவேன். ஏனென்றால் சித்ரா ஆரம்ப காலத்தில் எங்களின் திருவனந்தபுரத்தில் உள்ள தரங்கிணி ஸ்டூடியோவில் எல்லோருக்கும் டிராக் பாடிக்கொண்டிருந்தார், அதனால் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. சுஜாதா போன்றவர்கள் இந்த வகையில் வந்தவர்கள் தான்.

நான் முதலில் வாய்ஸ் பேங்க் பற்றி விளம்பரம் செய்யும் போது கர்நாடக சங்கீத வித்வான்களைத்தான் மனதில் நினைத்து விளம்பரம் கொடுத்தேன். நான் நினைத்தது உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் போன்ற வித்வான்களை. ஆனால் மேடை கச்சேரி செய்பவர்கள் எல்லோரும் தவறாக புரிந்துககொண்டு அதிகளவில் வந்துவிட்டார்கள். 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துவிட்டது. விண்ணப்பங்கள் இலவசம் என்பதால் அதிகளவில் வந்தது.

கர்நம் என்றால் காது… அடக்கம் என்றால் காதில் அடக்க வேண்டியது என்று அர்த்தம்.. குரு முன்னால் உட்கார்ந்து அவரின் முகபாவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல் இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது என்பது என்னுடைய கருத்து.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.