பாக். ஒரு புதிரின் சரிதம் – நாகூர் ரூமி


புதிர் அவிழ்க்கும் விரல்: “காஷ்மீரில் தொடர்ந்து ஏன்தான் அடித்துக்கொள்கிறார்கள்? குண்டு வைத்துக்கொண்டே இருக்கிறார்களே ஏன்? தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சென்றவர்கள் தங்களை ‘மதராஸி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் பதிலுக்கு காஷ்மீரிகள், “ஓ ஹிந்தி?!” (ஓ, இந்தியனா?!) என்று ஏன் கேட்கிறார்கள்? அப்போ காஷ்மீர் மக்களின் மனதில் இந்தியம் இல்லாததற்கு என்ன காரணம்? பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு இருக்கின்ற ஜென்மப்பகைக்கு காஷ்மீர்தான் காரணமா? அப்போ காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன காரணம்? ஏன் காஷ்மீருக்கு அனுப்பப்படும் அமைதிப்புறாக்களெல்லாம் குண்டடிபட்டு சாகின்றன? இதற்கெல்லாம் ரிஷிமூலம், நதிமூலம் என்ன? இப்படி நிறைய கேள்விகள் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கெல்லாம் ஒரு ஆதாரப்பூர்வமான 184பக்க பதில்தான் இந்த நூல்.

புத்தகத்திலிருந்து:

  • ‘வெள்ளைக்கார’னிடம் அடிமையாக நாம் இருந்தபோது நம் நாட்டை ‘ஆண்ட’ ராஜாக்களுக்கு இருந்த அதிகாரம் எவ்வளவு தெரியுமா? “ராஜாக்கள் என்று பெயர்தானே தவிர, அவர்களுக்கு ஒரு மாவட்ட கலெக்டருக்கான அதிகாரங்கள்தான் இருந்தன. பிரிட்டிஷ் அரசின் உத்தரவில்லாமல் ஒரு கொசுவர்த்திச் சுருள் கொளுத்தி வைக்கக்கூட அவர்களால் முடியாது”(பக்கம் 13).
  • ஆப்கனை ஆண்டுகொண்டிருந்த சுல்தான், “தம் நாட்டின் எல்லையை, சிந்துநதி வரைக்கும் விஸ்தரித்துவிட வேண்டும் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் கனவு கண்டு வந்தார்”(பக்கம் 18). “நேரம் கிடைக்கும்போதெல்லாம்” என்ற வார்த்தைகளில்தான் இந்த வாக்கியத்தின் உயிர் உள்ளது!
  • காஷ்மீருக்கு பாக். படைகளால் ஆபத்து என்றதும் நேரு பதறிவிட்டார். ஏன்? “காரணம், அவர் கமலாவை மணப்பதற்கு முன்பிருந்தே காஷ்மீரைக் காதலித்தவர்” (பக்கம் 25).”

நன்றி: சிஃபி சமாச்சார்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.