வலை வலம்


குற்ற வரலாறு உள்ள வேட்பாளர்கள்

ஹரியின் புலம்பல்ஸ்: பொதுத் தேர்தல் 2004 – ல் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், யார் யாரின் பெயரில் வழக்கு (சிவில்/கிரிமினல்) நிலுவையில் இருக்கிறது (அல்லது ஏற்கனவே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது) என்று பார்த்து அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி.



செருப்பு குறும்படம் பற்றி சில நிமிடம் – செல்வி தர்மினி பத்மநாதன்

ந. பரணீதரன் – துளி துளியாய்: “செருப்பு” குறும்படத்தில் ஆரம்பத்தில் உயிர் பெறுகின்ற களம் வன்னிநிலப்பரப்பு என்பதை உணர்த்துகின்றது. பாழடைந்த கட்டிடம். ஏழ்மை நிறைந்த குடும்பம். அவர்களை பிண்ணனியாக கொண்டு கதை நகர்த்தப்படுகின்றது பொருளாதார வசதியின்மையால் செருப்பு வாங்குவதற்கு சிறுமி உண்டியல் சேர்க்கிறாள். உண்டியல் சேர்த்த பணத்தில் செருப்பு வாங்கியும் அவள் ஆசைக்கு அதை அணியவில்லை என்பதே குழந்தை மனத்தின் சோகம். வெளிப்பார்வை என்பதைவிட அவள் அடிமனதின் ஆழத்தை அவளது ஏக்கத்தை ரசிகர்கள் மீது நேரடியாக உடைக்காமல் மெல்ல மெல்ல நுழைக்கிறார் தயாரிப்பாளர் கௌதம்.

வன்னி நிலத்தில் இன்று எம் உறவுகளை முடக்கி விடும் விதைகள் எத்தனை ? அந்த வகையில் “செருப்பு” யுத்தமேகம் சூழ்ந்த எமது தாயகத்தின் ஓரு துளியினை ஆவணமாகத்தந்துள்ளது. பிரதேச ஆக்கிரமிப்பும்; அவற்றின் விளைவுகளுமே எண்ணிலடங்காதன. அவற்றின் ஓரு துளியே கௌதமின் “செருப்பு”.



தெரியுமா சேதி?

தமிழோவியம் செய்திருக்கும் குறுக்கெழுத்துப் போட்டியைப் பார்த்துவிட்டீர்களா? மிகவும் உபயோகமான சொவ்வறை போல் தெரிகிறது. விடைகளை உடனடியாக சரி பார்க்கலாம். அச்சடித்தோ, பெயிண்ட் பிரஷ்ஷிலோ கஷ்டப்படாமல் நேரடியாக ஈ-கலப்பை கொண்டு விடைகளை அடிக்கலாம்; சேமிக்கலாம். நல்லா இருக்கு; ஆனால், குறுக்கும் நெடுக்கும் புதிர் என்னவோ இட்லி-வடை கொடுத்தது போன்ற குழப்ப முறை.



கோஷ்டி கானம்

நக்கல் நாகராஜன் பக்கங்கள்: மனிதர்களை மொத்தம் நான்கு வகையாக பிரிக்கலாம் – பாலகுமாரன் கோஷ்டி, சுஜாதா கோஷ்டி, சிவசங்கரி கோஷ்டி, பட்டுக்கோட்டை பிரபாகர் கோஷ்டி. அவர்களின் குணாதிசயங்களை பட்டியலிட்டு, அப்படியே நக்கல்சலைட்டுகள் என்று ஒரு கலாய்த்தல் செய்கிறார். தொடர்வாரா? தொடரணும்…



தனிமையிலே இனிமை எது?




நக்கீரன் லட்சுமிகாந்தன்

இதழ்களின் இணையம்: நவீனம், கனடா, நகைச்சுவை, அறிவியல், இலக்கியம், மதம், சமயம், தமிழ் தேசியம், பெண்ணியம், இளைஞர், ஈழம், விடுதலைப்புலிகள், கொள்கை, பரவலான வாசிப்பு, சினிமா, ஆங்கிலம், சந்தா என்று பட்டியலிட்டு வரப்போகின்ற இதழ்களின் இணைய முகவரியைக் கூட அழகாகத் தந்திருக்கிறார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.