Monthly Archives: ஏப்ரல் 2004

தமிழோவியம்

என்க்குத் தற்புகழ்ச்சி அவ்வளவாக பிடிக்காது. இருந்தாலும் என்னை ஜீனியஸ் போலத் தெரிகிறதே என்று ஒருவர் சொல்லும்போது சொல்லாமலும் இருக்க முடியவில்லை 🙂



Thank you for recently taking the IQ Test, your score was: 145

Our test usually gets within 5 points of the professional tests–a

remarkable feat for a 13 minute test.

Our test gives you a quick and fast measurement of your abilities, and

that can indicate directions for you to take.

Average: 85 – 115

Above average: 116 – 125

Gifted Borderline Genius: 126 – 135

Highly gifted and appearing to be a Genius to most others: 136 – 145

Genius: 146 – 165

High Genius: 166 – 180

Highest Genius: 181 – 200

Beyond being measurable Genius: Over 200

தமிழோவியத்தில் இந்த ஐக்யூத் தேர்வை எடுக்க சொன்ன முத்துராமன் முடிவுகளை சுவைபட விளக்கியுள்ளார்

நீங்களும் எடுத்து விட்டு எவ்வளவு நுண்ணறிவுத் திறன் என்று சொல்லுங்கள். பதின்மூன்று நிமிடங்கள் இடையூறு இல்லாமல் இருப்பது அவசியம். அமெரிக்க அளவுகோல்கள் போன்றவை தெரிந்திருத்தலும் அவசியம்.



முத்தொள்ளாயிரம் – எளிய தமிழில் – என். சொக்கன் : நம் இல்லத்தரசிகள் ·பில்டர் கா·பியை நன்றாக ஆற்றித் தரும்போது, தம்ளரின் நுனியில் கொஞ்சம் நுரை பொங்கியிருக்கும் – அதேபோல், கள்ளை ஊற்றிய கோப்பையின் நுனியிலும், இயல்பாகவே நுரை படிந்திருக்கும் – கள் அருந்துபவர்கள், அந்த நுரையை வழித்துக் கீழே போட்டுவிட்டு, மொடமொடவென்று குடிப்பார்கள் !

சேரனின் நாட்டில், இப்படிப்பட்ட பெருங்குடியர்கள் வழித்தெறிந்த நுரை, தெருவெங்கும் படிந்திருக்கிறது – அரசனின் யானைகள் அந்த வழியே நடக்கும்போது, அவற்றை மிதிக்க, வீதியெல்லாம் சொதசொதத்து, சேறாகிவிடுகிறது !

MIFF 2004

சென்னை ஆன்லைன் இன்றைய பக்கம்:

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மும்பை சர்வதேச ஆவணப்பட & குறும்பட விழா பிப்ரவரி 3 – 9 வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த விழாவுக்கு தமிழகத்திலிருந்து

ரேவதி இயக்கிய ‘உங்களில் ஒருத்தி’;

ஜெயபாஸ்கரனின் – ‘சென்னப்பட்டணம்’,

விஸ்வனாதனின் – Water Boy;

புவனாவின் – தேடல்;

அருண் சாதாவின் – சுயம்;

கனகராஜின் – The beginning of a journey;

ஜேடி – ஜெர்ரியின் ‘Kalamkari – A natural Dye painting;
முதலியவை இடம் பெற்றிருந்தன.

அருண் சாதா வடநாட்டவர்; இவர் தமிழகத் திலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பற்றி எடுத்திருந்தார். கனகராஜின் படம் வித்யா சாகரின் பணிகளை விவரிக்கிறது; விஸ்வநாதனின் Waterboy, சுத்திகரிக்கப்பட்ட வாட்டர்கேனை விநியோகிக்கும் பையன், தன் தேவைக்கு லாரித் தண்ணீருக்கு ஓடுவதை சித்தரித்திருந்தது. தமிழகத்திற்கு வெளியே வட இந்தியாவில் இருந்து கொண்டு தொடர்ந்து ஆவணப் படங் களை எடுத்து வரும் பக்கிரிசாமி, புதுக் கோட்டையைச் சேர்ந்தவர். இவரது ‘The March of Time’ அருணாசல பிரதேசத்திலுள்ள பழங் குடிகளைப் பற்றிய படம் – இந்த விழாவில் கலந்து கொண்டது.

படவிழாவில் எல்லோராலும் பாராட்ட பட்ட படம் ‘Mistake ஹோகயா’ இரண்டேகால் நிமிட படம். ஓடுகிறவனை ஒரு கும்பல் துரத்துகிறது. அவன் ஓடிக்கொண்டே போய் முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்கிறான். கும்பல் அவனை கத்தியால் குத்தி கொல்கிறது. பின்னர் அவன் பேண்ட் ஜிப்பை திறந்து பார்த்து, “mistake ஹோகயா!” என்கிறது.

திண்ணை – ஞானி

யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?

“கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !

ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்

பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

அமெரிக்காவை ஆளுவது யார் ?

ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.



அன்புள்ள மனுஷ்யபுத்திரன்



காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்



கல்பாக்கம்



கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்



பேய் அரசுசெய்தால்



கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?



கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?



உயிர்ப்பலியும் பெரியாரும்



முரசொலி மாறன்



பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)



நெடுமாறன்



காமராஜர் 100



அய்யா



கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்



அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்



பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வௌ¢ளி விழா கொண்டாடுகிறது.



சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்



இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.



காம்ரேட்கள் தைரியசாலி ஆவது எப்படி?



அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு



அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு



அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு



மஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்



மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.



ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

பாபா: படம் அல்ல பாடம் !



ஓ போடு ! – அசல் முகங்கள்

மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்



சமரசமன்று : சதியென்று காண் !



என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்



பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை



“நந்தன் வழி” பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்



கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.



கலைஞர்-ஜெயமோகன்



கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி



நூலகம்



கவிஞர் கனல்மைந்தன் (அக்கினிபுத்திரன்) அவர்களோடு பேட்டி

இருவர் – கவிதை


மற்றவை

எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt – மனுஷ்ய புத்திரன்

ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள் – மஞ்சுளா நவநீதன்

மன்னியுங்கள், ஞாநி – மஞ்சுளா நவநீதன்

ஞாநிக்கு மீண்டும் – மஞ்சுளா நவநீதன்

கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள் – சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

ஞாநியின் “கான்சர் கல்பாக்கம்” கட்டுரையில் தவறான சில கருத்துக்கள் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா

மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்! – சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

ஞாநியின் “கான்சர் கல்பாக்கம்” கட்டுரையில் தவறான சில கருத்துக்கள் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா

மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி… – அரவிந்தன் நீலகண்டன்

நூல் அறிமுகம் – வினோதினி

பெண்ணே நீ- Sify.com:

பெண்மைக்கு இணையுண்டோ? – தங்கம்மா அப்பாக்குட்டி

இந்த நூலை எழுதிய தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாருக்கு எழுபத்தேழு வயது. யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். “சங்ககாலப் பெண்மை, வள்ளுவர் காட்டிய பெண்மை, கச்சியப்பர் காட்டிய பெண்மை, கம்பர் காட்டிய பெண்மை, பரஞ்சோதி முனிவர் காட்டிய பெண்மை, பாரதி காட்டிய பெண்மை, பிற்காலப் பெண்மை” என்ற தலைப்புகளில் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.

வெளியீடு : மணிமேகலை பிரசுரம் – விலை: ரூ. 40/

நட்சத்திர தாகம் – ஆரிசன்

காக்கும் கடவுளையும்

அழித்துப் பசியாறின

கரையான்கள்

வெளியீடு : சங்கீதா பதிப்பகம் – விலை : ரூ. 40/

முகங்கள் : தினகரன்

Kanimozhi (c) Dinakaranசந்திப்பு – வைதேகி

சட்ட நிபுணர் அஜிதா

சித்ரா

ஷாலினி

ரமணி சந்திரன்

ஷோபா சந்திரசேகர்

அனுராதா ஸ்ரீராம்

கனிமொழி

This Election… That Poll

Opinion poll predicts ‘edge’ for DMK front: திமுக 123-130 வரை வெல்லும்.

All eyes on voter turnout: வாக்கு சதவிகிதம் அதிகரித்தால் ஆளுங்கட்சி தோற்கும்.

Opinion polls are a Karunanidhi ploy: Vaiko: மதிமுகவை அழிக்கக் கருத்துக் கணிப்புகளை கலைஞர் பயன்படுத்துகிறார் என்று வைகோ குற்றச்சாட்டு.

It is difficult to work with AIADMK: Naidu: ‘அதிமுகவுடன் எந்த கட்சியும் ஒத்துப் போவது ரொம்ப கஷ்டம்’ – வெங்கையா நாயுடு.

Online poll fever: குமுதம் முதல் அம்பலம் வரை.

நன்றி: தி ஹிந்து

தினமணி நாளிதழ்



ஆந்திரம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் 18 சதவீத வாக்குப்பதிவு. பா.ஜ.க உடனான உறவு மறுபரிசீலனை: திரிணமூல் சூசகம்.

ரஜினியை “பயமுறுத்திய’ பத்திரிகையாளர்கள்!

புதுதில்லி, ஏப். 27: தேர்தல் ஆணையத்துக்கு வந்த ரஜினிகாந்த், தில்லி பத்திரிகையாளர்களின் மோதலைக் கண்டு திகைத்து நின்றார். ரஜினி, கேட்டுக்கு உள்ளேயே நின்றுகொண்டார். தொலைக்காட்சி கேமராமேன்கள், மைக்கைக் கம்பி வழியாக உள்ளே நீட்ட, அங்கு நின்றபடியே பேட்டியளித்தார் ரஜினி. பல நிருபர்களால் அதைக் கேட்க முடியவில்லை. பேசிவிட்டு தனது வாடகை வாகனத்தில் ஏறி வெளியே வந்தார் ரஜினி. ஆனால், நிருபர்களும், கேமராமேன்களும் வழியை அடைத்துக் கொண்டு அவரிடம் பேசுவதற்கு முண்டியடித்துச் சென்றனர். இருந்தபோதிலும், ரஜினி வாகனத்தின் டிரைவர் மிக சாமர்த்தியமாகக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறினார். அந்த நேரத்தில், சில நிருபர்கள் வாகனத்தின் ஓரத்தில் ஏறி, மேல் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த், தனது காரின் கண்ணாடியை இறக்கினார். அந்த நேரத்தில் தனது கையை உள்ளே நீட்டிய ஒரு நிருபர், மிகவும் கோபமாக, “மரியாதையாக வண்டியை நிறுத்து, குத்திவிடுவேன்’ என்று டிரைவரைப் பார்த்து ஆவேசமாகக் கத்தினார். போலீசார் அவரை மிகவும் கஷ்டப்பட்டு வண்டிய விட்டுப் பிரித்தனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் இன்னொரு நிருபர், தனது விசிட்டிங் கார்டை ரஜினி மீது தூக்கிப் போட்டு அடிதடியிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளப் படாதபாடுபட்டார்.

மயிலை ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய 80-ம் ஆண்டு நிறைவு விழா

சென்னை, ஏப். 27: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமிகளும் அலர்மேலுமங்கையும் சமேதராக பிரதிஷ்டை செய்யப்பட்டு 80 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இதனைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களும் காலை, மாலை இருவேளைகளிலும் சிறப்பு ஹோமம் நடைபெறும். 30-ம் தேதி டோலோஸ்தவமும், மே 2-ம் தேதி பூர்ணாஹுதி யும் நடைபெறும்.

ஸ்தல வரலாறு: இந்த ஆலயம் 1924-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும், பூர்வாங்கமாக 1832-ல் ஸ்தாபிக்கப்பட்டது. தாமல் வில்லிவலம் வீரராக வச்சாரியார் தானமாக அளித்த நிலத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, ஸ்ரீ வேதாந்த தேசிகர் மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆலயத்தின் வேதபாராயண சபை 1905-ல் உருவாக்கப்பட்டது. 1975-ல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கான மூலவரும், உற்சவமூர்த்திகளும் செய்யப்பட்டன. ஸ்ரீசுதர்சன ஆழ்வாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராஜகோபுரமும், சன்னதிகளுக்கு மேல் விமானங்களும் அமைக்கப்பட்டன.

மவுஸ் போன போக்கில்

ஆய்த எழுத்து

‘ஆய்த எழுத்து’ வலைத்தளத்தை வாராவாரம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஹிந்தி ‘யுவா’வுக்கும் தமிழுக்குமாக ஒரே போஸ்டராக இருக்கட்டுமே என்று மொத்தமாக ஆங்கிலத்திலேயே கொடுப்பது சோம்பேறித்தனத்தை காட்டுகிறதா அல்லது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் கொடுத்தால் மட்டுமே புரியும் என்று நினைத்தார்களா என்று தெரியாது.

அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சான் என்று மூன்று நாயகர்கள். சேரி, மாடி, மிடில் கிளாஸ் என ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர். ‘செல்வநாயகமாக’ பாரதிராஜா (ஹிந்தியில் ஓம் பூரி?). மூன்று ஹீரோக்களுக்கு மட்டுமே லைம்லைட். ஏன் ஹீரோயின்களுக்கும் ட்ரெயிலர்களிலோ, டீஸர்களிலோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை? சுகாசினி அடக்கி வாசிக்கிறார் போல. ரொம்ப மூக்கை நீட்டினால் சரிகா போல் அகிவிடுமோ என்று நினைத்திருப்பார்.

தமிழில் இன்பசேகராக மாதவன் தாதாத்தனம் காட்டுகிறார்.



‘எனக்குப் பணம் வேணும்

பவர் வேணும்’

பதவி வேணும்’



என்ற மிரட்டலுடன் உருட்டுகட்டைகளுடன் தொண்டர் புடைசூழ புஜம் காட்டுகிறார்.

அவருடைய ஜோடி ‘சசி’ என்று செல்லமாகக் கூப்பிடப்படும் ரன் ஜாஸ்மின். நடுத்தர குடும்பம். எல்.ஐ.சி வேலை செய்யும் சமத்து அப்பாவின் சுட்டிப் பெண். கல்லூரிக்கு ஒழுங்காக சென்று படிப்பில் முதல் மார்க் எடுக்கும் இன்னொரு ரேவதி. ‘மௌன ராகம்’ கார்த்திக் போன்ற அடியாள் மாதவனுடன் காதல். அவன் அவளுக்காக உலகைக் கொண்டு வர தயார். மணி ரத்னம் பட கதாநாயகிகள் போல் அவளுக்கு அவன் சாதாரண மனிதனாக வேண்டும்.


‘மைக்கேல் வசந்த்’ சூர்யாவுக்கு ஜோடி ‘கீதாஞ்சலி’ இஷா தியால். ஐந்து வயது வித்தியாசம். ஆனால், அஞ்சாவது வயதில் இருந்தே நட்பு; வயதுக்கு வந்த பின் காதலாக உருமாற்றம் ‘கீது’ (சூர்யா இப்படித்தான் கூப்பிடுவார் என்று நம்பலாம்) பொலிடிகல் சயின்ஸ் படித்துக் கொண்டு ப்ரெஞ்ச் கற்றுக் கொடுக்கிறாள். அவள் அவனுக்காக பெசண்ட் நகர் பீச், பனகல் பார்க், ஸ்பென்ஸர் ப்ளாசாவின் ·புட் கோர்ட் என்று காத்திருக்கிறாள். அவனோ ரத்தகளறியாய் உதைபட்டு வந்து சேருகிறான். அவளுக்கு ‘மில்ஸ் அண்ட் பூன்’ காதல். அவனுக்கோ திருமணம் என்னும் instituition மீது நம்பிக்கை கிடையாது (கொஞ்சம் ‘அலைபாயுதே’?). ஆனால், இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் தூய காதலில் உள்ளார்கள்.



‘இந்த அமெரிக்கன் ஸ்காலர்ஷிப் எனக்கு வேண்டாம்

நான் போக விரும்பலை

தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்பறேன்’


‘அர்ஜுன் பாலகிருஷ்ணன்’ என்னும் சுத்த ஐயர் பெயரை வைத்துக் கொண்டு அமெரிக்க கனாக்களுடன் ‘பாய்ஸ்’ சித்தார்த் (ஹிந்தியில் வரும் விவேக் ஓபராய் பின்னுவார் என்று தோன்றுகிறது). ஜோடியாக மீரா – த்ரிஷா.



‘என் ·பிலாஸபி ரொம்ப சிம்பிள்

நாம நம்மளப் பாத்துக்கணும்

உலகம் தானா தன்னை பாத்துக்கும்’

இன்றைய இளைய் தலைமுறையை கொஞ்சம் ஸ்டீரியோடைப் செய்ய நினைத்துள்ளார். காதலிப்பார்கள்; பைக்கில் ஊர் சுற்றுவார்கள்; துணையின் பிறந்த நாளை மறக்க முடியாத பரிசுகளுடன் கொண்டாடுவார்கள்; கல்யாணம் என்று வரும்போது வேறொரு துணையை சிரித்துக் கொண்டே தேர்ந்தெடுத்து நண்பர்களாக விலகி விடுவார்கள். They have better things to worry than love.


ஏ.ஆர். ரெஹ்மானின் இசையில் பாடல்கள் நல்ல ஹிட். சுஜாதாவின் வசனம், பல வெற்றிப் படங்களின் சாயலில் கதை சுருக்கம், பொறாமைப்பட வைக்கும் நட்சத்திர அணிவகுப்பு என்று நாம்தான் அதீத ஆர்வக் கோளாறில் நிறைய எதிர்பார்த்து ஏமாற்றமடையக் கூடாது.


இது தேர்தல் காலம்

India won in Pakistanவாஜ்பேய் ஜெயிப்பது அனேகமாக உறுதிதான். அவருக்கு எதிராக நட்சத்திர வேட்பாளராக ராம் ஜெத்மலானி போட்டியிடுகிறார். ராஜீவ் காந்திக்கு எதிராக ஒரு நாளைக்கு இருபது கேள்விகள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது தாத்தா வாஜ்பேய்க்கு ஒரு கேள்வி முன் வைத்துள்ளார். ஊர்ந்து ஊர்ந்து கஷ்டப்பட்டு நகரும் ஒருவர் எப்படி பிரதம மந்திரியாக அல்லது எம்.பி.யாக எப்படித் திறம்பட செயல்பட முடியும்?



‘வாஜ்பேய்க்கு வேண்டுமானால் நான் நண்பராக இருக்கலாம்;

அவர் எனக்குத் தோழர் அல்ல!’

– ராம் ஜெத்மலானி (சொன்னதாக ‘சன் நியுஸ்’)


கருணாநிதிக்கு மூக்குமேல்

கோபம் வருவது தெரிந்த விஷயம்தான். அதுவும் ‘ஞாபகம் வருதே’ போல் கணக்குக் கேட்டு பத்தாண்டு வனவாசம் அனுப்பிய ம.கோ.ரா.வையும் தற்போதைய கழுவுற நீரில் நழுவுற மீன் ரஜினியையும் முடிச்சு போட்டால்? வெடித்து விட்டார். கருணாநிதியை யாராலும் அசைக்க முடியாதாம். ‘தளபதி’ படத்தில் சூர்யாவிடம் அடிபட்டு குற்றுயிராகக் கிடக்கும் தேவாவின் நிலையை குறித்து விசாரிப்பார் அவரது மனைவி.



‘சூர்யா’ ரஜினி: ‘தேவாவுக்கு ஒண்ணும் ஆகாதாம்’.

கீதா: ‘டாக்டர் சொன்னாங்களா?

சூர்யா: ‘தேவாவே சொன்னான்!’

ஆனால், நிருபர்களுக்கு செய்திகளைத் திரித்துத் தருவதுதான் வேலை. அடுத்த குடுமிப்பிடி சண்டை எப்படி ஆரம்பித்து வைப்போம் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். சச்சின் எடுக்கமுடியாத ஆறு ரன்னை முதல் கேள்வியாகக் கேட்டு வாயில் போட்டுக் குதப்ப ஜர்தா கிடைக்குமா என்று தேடுவார்கள்.



‘முதல் கேள்வியாக “ஆறு ரன் எடுக்க முடியாததில் வருத்தமா” என்று கேட்பார்கள். உண்மையாக ‘ஆமாம்’ என்று சொன்னால் எனக்கும் அணித் தலைவருக்கும் தகராறு என்று ரிப்போர்ட் செய்வார்கள். என்னுடைய சுய விருப்பு வெறுப்புகள் வேறு; அணியின் நன்மைகள் திட்டங்கள் வேறு’.

– சச்சின் டெண்டுல்கர்.

டெண்டுல்கர் நின்றால் ஓட்டுப் போடுவோம் என்று இளைய தலைமுறை சொல்லாத குறைதான். ‘ஆய்த எழுத்தின்’ அர்ஜுனாக ‘எனக்கு என்ன நன்மை’ என்று கேட்கிறார்கள். இந்தியாவில் எப்படி இவ்வளவு செல்லாத வோட்டுகள் என்ற சந்தேகம் எப்போதும் எனக்கு உண்டு. மிண்ணனு வாக்குப்பதிவு வந்தாலும் செல்லாத வோட்டுத்தான் போடப்போகும் இவர்களால்தான் என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன்.

அவர்கள் வோட்டு அளிப்பதில் இல்லை பிரச்சினை. சாதி சார்பில்லா வேட்பாளர்களாக அரசியலில் நுழைந்து மனங்கவர் முகத்துடனும் மிஸ்டர். க்ளீனாகவும் இருப்பார்களா?

– பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்.காம்

அண்ணாச்சி(அமர)காவியம் – குரோம்பேட்டைக் கவிராயர்

Jeeva Jyothiமரபிலக்கியம்:

இட்லி சாம்பாரும் இடியாப்பக் குருமாவும்

லட்டுமிட்டாயும் விற்றிருந்தான் – கெட்ட

சனிதசை கண்டு சகவாசம் பலகொண்டு

இனிமீளா இடம் ஏகினான்.

0

குலவிளக்காய் ஒருமனைவி குடிகெடுக்க அன்றே

அளவெடுத்து வேறொருத்தி நீகொணர்ந்தாய் – விலைகொடுத்து

வேறொன்றும் வாங்க விதியுன்னைத் துரத்தியதால்

பார், இன்று பரதேசிநீ!

Thatstamil செய்திகள்: நேற்று ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இன்று 3 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

நெட்டுரு நம் அனைவருக்கும் தெரிந்த சொல். சின்ன வயதில் மனப்பாடம் செய்யும் போது ‘நெட்டுருப் போடாதே’ என்று கண்டிப்பார்கள். இதற்கு உரிய மற்றொரு பொருள் என்ன?

1. நல்ல நிறம்

2. உயர்ந்தோன்

3. பெரியவர்கள் வசிக்கும் மனை

4. அழகிய அசுர உருவம்

5. .NET வடிவமைப்பு