தீராநதி & குமுதம்




தீராநதி: அந்த ஆளைப் பார்த்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஜேப்படிக்காரன் போல இருக்கிறது’’ என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பாராளுமன்ற அங்கத்தினர் ரேணுகா சவுத்தரி சொன்னதாக ஒரு தேசிய ஆங்கில மொழி நாளேட்டில், ‘இவர்கள் சொன்னார்கள்’ பகுதியில் வெளி வந்தது. அந்த ஆள் யார் என்று இன்றைய இந்திய அரசியல் பரிச்சயம் உடையவர்கள் கூறி விட முடியும்; சந்திரபாபு நாயுடு. ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இதை அரசியல் விமரிசனம் என்பதைவிட வசை பாடல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தால் ரேணுகா சவுத்தரிக்கு ஒரு பிரதி அனுப்பலாம். பஸ் நிறுத்தங்களில் நிற்பவர்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படக்கூடும்.ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் பஸ் நிறுத்தங்களைக் கவனித்திருக்கிறார்!



அரசு பதில்கள்

முரு. ராமலிங்கம், திருப்பத்தூர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

யானையிறவு யுத்தத்தில் எதிரிகளைச் சிதறடித்தவர் அவர். பிரபாகரனின் சொந்த ஊரை ராணுவம் சூழ்ந்தபோது கிழக்கிலிருந்து மாபெரும் படையுடன் புறப்பட்டு வந்து முற்றுகையை உடைத்தெறிந்தவர். கொரில்லா போர் முறையில் கில்லாடியான வீரர். இன்று…? எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்னதான் நடந்தது?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.