வாரயிறுதிக்கு ஓ போடு!


உலாக்கு உலா



Pardon my Planet

ரொம்ப நாளாய் உறங்கிய கலீல் கிப்ரான் விழித்துக் கொண்டு விட்டார்.

இட்லி-வடையின் உதவியால் காம்ப்ளெக்ஸ் நம்பர்களின் ஞாபகம் வந்தது. எட்டாவதிலோ ப்ளஸ் ஒன்னிலோ ஆரம்பித்து சுவாரசியமாய் கூடவே வந்து கொண்டிருந்தது. எதற்கு பயன்படுகிறது, எங்கு உபயோகிக்கிறார்கள் என்று யாராவது சொல்ல வேண்டும்.

பெயரிலி கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தது போல் பிகேஎஸ் ஆரம்பித்து உள்ளார். ரமணீயின் பதிவுகள் இன்னும் விளங்கிக் கொண்டேனா என்று சந்தேகத்தோடு படிக்க வைக்கிறது. இவருடையது direct delivery.

டைனோ என்று வலைப்பதிவு ஆரம்பித்து கவிதை டைம் கொடுக்கப் போகிறாரோ!

வலைப்பதிவில் சிறுகுறிப்பாக இட்டதை இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேர்த்து தமிழோவியத்தில் கட்டுரையாக வந்துள்ளது.

உலகத்தமிழின் 43, 44 பதிப்புகள் வெளிவந்து விட்டது. அதில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் கட்டுரைக்கு மெய்யப்பர் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ்-உலகத்தில் வரும் தொடருங்கள் கதைப் போட்டியையும் நடந்த பறிமாடல்களையும் இன்றைய தினமலர் கம்ப்யூட்டர் மலர் விவரிக்கிறது.

பாராவின் காதல் அத்தியாயங்கள் கிறங்கடிக்கும். மெல்லினத்தில் வரும் இளவயதுக் காதல், அலகில்லா விளையாட்டின் கதாநாயகனை உழற்றும் வாத்தியார் மகளுடனான காதல் தோல்வி, தூணிலும் இருப்பான் மீனாட்சி என்று எல்லாவற்றிலும் தொட்டுக் கொள்ள உபயோகித்த காதலை தலைப்பிலே வைத்து 19.75 காதல் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்த சமயமாவது ஹீரோவும் ஹீரோயினும் சேருவாங்களா???



Rudy Park by Darrin Bell and Theron Heir



ராஜா எழுதியது:

1 புதிய வானம் அஃமார்க் மசாலா படம். அது எந்த வகையில் சிறந்தது என்று விளக்கினால் நல்லது.

2 “அடிதடி” இடம் பெற்றிருக்கும் பட்டியலில் “என்னம்மா கண்ணு” இல்லாதது குறையாக தெரிகிறது. என்னம்மா கண்ணு பரவலாக அனைவராலும் பாராட்ட பட்ட வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம்.

கடமை கண்ணியம் கட்டுபாடு, கடலோர கவிதைகள், வேதம் புதிது, பூவிழி வாசலிலே, அண்ணா நகர் முதல் தெரு,நடிகன் ( சிறந்த நகைச்சுவை சித்திரங்கள், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு (சத்யராஜும், ரகுவரனும் சந்திக்கும் காட்சிகள் – மிக யதார்த்தம் ஆகியவை சத்யராஜ் படங்களுள் அமரத்துவம் பெற்றவைகளாக நான் கணிக்கிறேன்.

படங்களைப் பட்டியலிட்டது அவரது வளர்ச்சியை சொல்லவே. எப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன… எங்கே எப்படி மாற்றங்களைக் கொண்டிருக்கிறார்… எவ்வாறு சத்யராஜ் என்னும் பொருள் பரிணாமம் பெற்று மக்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதை சொல்ல, நான் கண்ட அவருடைய ஹிட் படங்களை பட்டியலிட்டேன்.

புதிய வானத்தை மிக சமீபத்தில்தான் பார்த்தேன். (அப்பொழுதெல்லாம் பொறுக்கியெடுத்துதான் படம் பார்ப்போம்… சில படங்கள் மசாலா என்பதால் தள்ளுபடி செய்யப்படும். ‘ஜீவா’ போன்ற சில காவியங்கள், அமலாவின் நீச்சலுடைக்காக தடா செய்யப்படும்.) சன் டிவியின் ஒரு சனி மதியத்தில் ‘புதிய வானம்’ காட்டப்பட்டது. அன்று மாலை விஜய் நடித்த படம். புதிய வானத்தின் ஆரம்பத்தில் டாங்கர் ட்ரெய்லர் நிறைந்த சண்டைக் காட்சி. கடைசியில் வீரதீர சண்டைக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிறார். அதே டாங்கர் ட்ரெயிலர்+க்ரேன்கள் நிறைந்த வளாகத்தில் ஹீரோயினை மீட்டெடுக்கிறார் விஜய், பத்து வருடத்திற்குப் பிறகு. புதிய வானமுக்கு முன்பே இவ்வகை சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கக் கூடும். ஆனால், ஜனரஞ்சகமான வெற்றிப் படம் என்பதை சொல்ல நினைத்தேன்.

‘என்னம்மா கண்ணு’ இன்னும் பார்க்கவில்லை. அண்ணா நகர் முதல் தெரு கூட கடைந்தெடுத்த மசாலாப் படம்தான். நல்ல பாடல் (மெதுவா… மெதுவா ஒரு காதல் பாட்டு…), ரெண்டு மூணு டிஷும் டிஷூம், காமெடி சரி விகிதாசாரத்தில் வந்த படம்.

வாரயிறுதிக்கு ஓ போடு!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.