1. ஆறு ரன் எடுப்பது எப்படி?
– ஷேவாகுக்கு ஒரு பந்து
– டிராவிடுக்கு ஒரு ஓவர்
– கங்குலிக்கு இரண்டு ரன் அவுட் பலிகள்
– டெண்டுல்கருக்கு மூன்று நாலு இன்னிங்ஸ்
2. மடல் இதழ் என்றால்?
– சுட்டிகள் கொடுத்து அதன் கீழ் ரெண்டு வரி விரிவுரை மட்டும் கொடுப்பது
– உறவின் ஆதுரத்தோடு நண்பனின் நோக்கில் எழுதப்படும் எதுவும்
– வலைப்பதிவில் இருந்து வித்தியாசமானது; வலையிதழ்களுக்காக எழுதப்படுவது
– ஆர்.எஸ்.எஸ். செய்தியோடை
3. ரஜினியின் அரசியல் அறிக்கையின் முக்கியத்துவம் ஏன்?
– பிகு செய்து கொள்ளும் பெண்தானே ஆணுக்குப் பிடிக்கும்.
– சரித்திர காலத்தில் இருந்து பத்து தலை ராவணனை வெல்லும்
மானுடன் ராமன்தானே நமக்குப் பிடிக்கும்.
– எல்லோரும் பேசுகிறார்கள்… நாமும் பின் தொடர்கிறோம்
– ஜெயலலிதாவுக்குப் பின் தனி மனிதனாக மக்களைக் கவருபவர்
4. தமிழ் இணைய இதழ்கள் என்ன செய்கிறது?
– வலைப்பூக்களுக்கு நல்ல மாற்றாக விளங்குகிறது.
– மடலாடற்குழுக்களுக்களிலும், வலைப்பதிவுகளிலும் வருபனவற்றின் மறுபதிப்பு.
– புதிய சிந்தனைகளுக்கும் ஆக்கங்களுக்கும் சண்டைகளுக்கும் ஊக்கம் தருகிறது.
– விகடன் குமுதம்; மிஞ்சி மிஞ்சிப் போனால் காலச்சுவடு தவிர எதுவும் படிக்க முடிவதில்லை.
5. தமிழில் லீனக்ஸ்…
– வெளிவந்து விட்டது
– என்றாவது யாராவது உபயோகிப்பார்கள்
– பரவலாக பயன்பெற போதுமான அங்காடித்தல் இல்லை
– எழுதியவர்கள் கூட இயக்க முடியாதபடி, நுட்பியல் வல்லுனர்களிடையே ஆங்கிலம் மிகுந்துவிட்டது










