நான் கற்றுக் கொண்ட பாடங்கள்


பாடங்கள்

1. எழுதுவதில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நட்பு முறையில் கிண்டலடித்தால் கூட கேலியாகும் அபாயம் இருக்கிறது. குறை கூறும் விமர்சனத்தை வைத்தாலும், தனிமனிதத் தாக்குதலாக நினைக்க வாய்ப்புண்டு.

2. அக்கா அண்ணாக்களுடன் பிணக்குக் கொள்வது போல் அல்ல இணையச் சண்டைகள். வெட்டு, குத்து, ரத்தம் எல்லாமே virtual-ஆக வர வாய்ப்புண்டு.

3. எவருக்கும் அறிவுரை போல் தோற்றம் தரும் நினைவூட்டல் மடல்களோ, செல்ல ஐடியாக்கள் பட்டியலோ தேவையற்றது.

4. தனி மடலாக அனுப்பித்தாலும், வலைப்பதிவில் கிறுக்கினாலும், மைக்ரோசா·ப்ட்டின் அழிக்கப்பட்ட மடல்களைத் தோண்டியெடுத்தது போல் மீண்டும் கிளறப்பட்டு, உங்களுக்கு எதிராக வினையாகலாம்.

5. எவரையும் ‘நண்பர்தானே… தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்’, என்று நினைக்க வேண்டாம்.

6. சில சமயம் துணிச்சல் அதிகம் கொள்ளாமல் கோழையாகக் காட்சியளிப்பது நல்ல பெயரையும், வீரராகத் தோற்றம் காண்பிப்பது தியாகியாகவும் — பார்ப்பவருக்கு மயக்கத்தை உண்டு செய்யலாம்.

7. பெரியாரையும் பிரபாகரனையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு ஜெயலலிதாவையும் ஜார்ஜ் புஷ்ஷையும் விமர்சிப்பதே non-controversial and the secret to remain unbranded. அப்படி விமர்சிக்கத்தான் வேண்டுமென்றால் முகமூடி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

8. கருப்பு-வெள்ளையாக எந்த விஷயத்தையும் அணுக கிடையாது. எல்லாமே shades of grey.

9. விருந்தினர்களின் வீட்டில் அவர்களுக்காக பாத்திரம் கழுவும் வரை நம்ம வீடு. நமக்காகவும் உழைக்க ஆரம்பித்தால் அவர்களின் சொந்த வீடாகி நாம் அன்னியனாகப் போய்விடுவோம்.

10. இந்த மாதிரி பாடங்களை வெளியில் சொல்லாமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு ‘குப்பைத் தொட்டி’யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.