ஒரு காதல் கதை – சாரு நிவேதிதா


முகம் I: “சரி, பேசி விட வேண்டியதுதான்’ எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று நினைத்த

படி, வாங்கி வந்த போகர் வைத்தியம் 700 என்ற நுõலைப் புரட்ட ஆரம்பித்தேன். கண்ணில்

தென்பட்ட பக்கம் சுவாரசியமாக இருந்தது. இதோ:

“”உலகத்தில் மக்கள் கழுதையை இழிவாகக் கருதுகிறார்கள். ஆனால், உண்மை அப்படியன்று.

கழுதைப் பிறவி மாண்புடையதாகும். அதற்கு மறுபிறவி இல்லை. கழுதையைக் கொண்டு பற்பல

வித்தைகளை உலகில் செய்து முடிக்க முடியும்.

உதாரணமாக, சுழல் வண்டு, குழியானை, மின்மினிப்பூச்சி, ஈப்பு1⁄4 என்னும் பூச்சி, நாய்ப்பால்,

மருள் ஊமத்தை விதை, ஐவிர1⁄4ச்சாறு, பேய்க்கரும்பின் சாறு, செந்நெல்முளையரிசி, பாதரசம்,

கோரோசனை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கல்வத்தில் இட்டு அதோடு கழுதையின் விந்தை

எடுத்துச் சேர்த்து அரைக்க வேண்டும். இதனோடு சல்1⁄4க்கொடியின் வேரையும் அரைத்துச் சேர்த்துக்

குளிகையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இக்குளிகையோடு பெண்ணை வசியம் செய்ய நினைப்

பவனுடைய கண் பீளை, காதுக்குறும்பி, மூக்குச்சளி, எச்சில், வேர்வை ஆகிய ஐந்து அழுக்குகளை

யும் அவனுடைய விந்தையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட குளிகையைப் பால்,

பழம், காய்கறி, சாப்பாடு, வெற்றிலைப் பாக்கு, பலகாரம் ஆகியவற்றுள் எதனுடனாவது சேர்த்துத்

தனக்கு வேண்டியவளை உட்கொள்ளச் செய்தால் அவள் வசியமாவாள்…”

என்னவென்று சொல்ல முடியாத அதி ஆச்சரிய உணர்வுகளுடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு

நிமிர்ந்தேன்.



நான் மிக நேர்த்தியாக ஆடை அணிவேன். ஒரு நாள்… தலை குளித்திருந்தேன். தலை பின்ன நேரம் இல்லை.

தலைமுடி விரிந்து கிடந்தது. கருஞ்சிவப்பு நிறப் புடவை. நான் கரும்பலகையில் எழுதிக் கொண்டே

இருந்தேன். பொதுவாக மாணவர்கள் முன்னே புடவைத் தலைப்பை பறக்க விட மாட்டேன். இதிலெ

ல்லாம் நான் மிகவும் கண்டிப்பு. ஆனால், அன்றைக்கு என்று பார்த்து செருகியிருந்த புடவைத்

தலைப்பு அவிழ்ந்து விட்டது. வழுக்கிக் கொண்டு போகும் சேலை அது. அந்த வகுப்பில் குறும்பு

செய்பவர்கள் அதிகம் என்று பேர்.


நன்றி: கோணல் பக்கங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.