Monthly Archives: திசெம்பர் 2003

RAAGA – Pudhukottayilirundhu Saravanan – நாட்டு சர…

RAAGA – Pudhukottayilirundhu Saravanan – நாட்டு சரக்கு: அடுத்த ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா’ கேட்டாச்சா? முனைவர் லாவண்யா பாடியிருக்கும் கானா.

‘மலர்களே’ என்று ஒரு வசீகரமான பாடலையும் கொடுத்திருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ. ஹஸ்கி குரல் தவிர வேறு விதமான பாடல்களையும், அவரை பாட வைக்க சொல்ல வேண்டும். ‘அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே’ என்ற கிண்டல் வரிகளுக்கு சொந்தம் யார்?

Movie Review | ‘The Return of the King’: Triumph T…

Movie Review | ‘The Return of the King’: Triumph Tinged With Regret in Middle Earth: ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ முதல் பகுதியின் திரைவட்டு வீட்டில் தூங்குகிறது. ஒவ்வொரு முறை படத்தை ஓடவிட்ட பிறகும் தூங்கி வழிந்து பாதியில் நிறுத்தி இருக்கிறேன். இந்த முறையும் ஆஸ்கார் கிடைக்கலாம் என்னும் கருத்து உலாவுவதால் மட்டுமல்ல; வெள்ளித்திரையில் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்னும் காரணத்தினாலும், வாரயிறுதியில் மூன்று ‘வளையங்களையும்’ பார்த்து விடுவதாக உத்தேசம்.

டைம்ஸ் விமர்சகர்களுக்கும் எனக்கும் ஒத்துப் போவதில்லை. சில படங்களை (காட்டாக ‘யூ ஹாவ் மெயில்’) அவர்கள் ‘ஆஹா… ஓஹோ…’ எனப் புகழ எனக்கு, ‘ஏண்டா வந்தோம்’ என்று ஆகி விடும். இன்னும் அப்படித்தானா என்று உறுதிபடுத்துவதற்கே இந்த பலபரீட்சை.

E! Entertainment Special – Entertainer of the Year…

E! Entertainment Special – Entertainer of the Year 2003 – The Winners: “காலின் ஃபாரெலும் இந்த பட்டியலில் உள்ளார் என்னும் ஆவலில் பார்த்த நிகழ்ச்சி. ஜானி டெப் சிறந்த நடிகருக்கான ஆஸ்காரை எடுத்து செல்வாரா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சின்னப் பசங்களுக்காக பியான்ஸ், ஜஸ்டின் என்று ஜனரஞ்சகமாக்கப்பட்ட விருதுகள்.”

BBC NEWS | South Asia | Security stepped up for Mu…

BBC NEWS | South Asia | Security stepped up for Musharraf: “முஷாரஃப் உயிருக்கு இரண்டாவது குறி. அரை நிமிடம் தாமதத்திருந்தால், இன்னுமொரு புதிய தலைவருடன், ‘அடியைப் பிடிடா…பாரத பட்டா’ என்று பேச்சுவார்த்தை கால்ககோள் ஆரம்பித்திருக்க வேண்டும்.”

அம்மா… என்னுடைய அம்மா ஆர். பொன்னம்மாளை குறித்…

அம்மா…

என்னுடைய அம்மா ஆர். பொன்னம்மாளை குறித்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, நாளை முதல் அவர்களின் வாழ்க்கையை சிறிது சிறிதாக பதிய முயலப் போகிறேன். அதற்கு முன் அவர்களின் தற்போதைய எழுத்துக்களை படிக்க விழைவோருக்கு, சில சுட்டிகள்.

காமகோடியில் எழுதுவதில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பரமாசார்யாளின் பாதையிலே’ . எளிய தத்துவங்கள்.

கிராம தேவதைகள், விரத விசேஷ தினங்கள் என மாதா மாதம் எழுதுகிறார். அவ்வப்பொழுது கோலங்கள் பகுதியும் காமகோடியில் வருகிறது.

நவமபர் மாதப் பகுதிகளையும் படித்து விட்டு காத்திருங்கள் 🙂

கடைசியாக, அவர்களின் சமீபத்திய புத்தகமான ‘பக்த விஜயத்துக்கு’ ஓர் அறிமுகம்.

பட்டியம் போடுவது எனக்குப் பிடிக்கும் அமெரிக்கத…

பட்டியம் போடுவது எனக்குப் பிடிக்கும்

அமெரிக்கத் திரைப்பட நிலையம் (AFI) ஐம்பது சிறந்த ஹீரோக்களையும்,

ஐம்பது ஒண்ணாம் நம்பர் போக்கிரிகளையும் வரிசை படித்தியுள்ளனர்.

தமிழில் சிறந்த 50 கதாநாயக/வில்லன் வேடங்களை தேர்ந்தெடுத்தால்,

உங்கள் பட்டியலில் எவர் வருவார்கள்?

எனது வரிசை:

கதாநாயகர்

1. ‘மனதில் உறுதி வேண்டும்’ சுஹாசினி

2. ‘மலைக்கள்ளன்’ எம்.ஜி.ஆர்.

3. ‘அண்ணாமலை’ ரஜினி

4. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ சத்யராஜ்

5. ‘தூக்கு தூக்கி’ சிவாஜி

வில்லன்

1. ‘நாயகன்’ கமல்

2. ‘சத்யா’ கிட்டி

3. ‘வாலி’ அஜீத்

4. ‘குட்டி’ எம்.என்.ராஜம்

5. ‘அவர்கள்’ ரஜினி

உங்கள் எண்ணங்கள்?

‘கூப்பிடு தூரம்’ அது எவ்வளவு தூரம் என்பதைப் பா…

‘கூப்பிடு தூரம்’

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம்.

வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்

ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. அப்படியானால்

12000 கஜம் X 4 = 48000 கஜங்கள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல்

என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம்

என்று இப்படி.

நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து

வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம்

நீங்கள் கதை சொல்லும்போது, “இப்படியெல்லாம் அளந்து

விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)

12 விரக்கடை = 1 சாண் (9 inches)

2 சாண் = 1 முழம் (18 inches)

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)

4 முழம் = 1 பாகம் ( 6 feet)

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள்.

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள்.

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும்

தூரமாக இதைக் கருதினார்கள்.

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே

முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர்

கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர்

தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு

பேரேரி இருக்கிறது. ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில்

வெட்டப்பட்டது. அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில்

தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை

கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது.

அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின்

நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

நன்றி அகத்தியம் இணைய குழு

காலங்களில் அவள் ??? 6-00am – 8-24am – பூர்வான்ன…

காலங்களில் அவள் ???

6-00am – 8-24am – பூர்வான்னம்

8-24am – 10-48am – பாரான்னம்

10-48am – 1-12 pm – மத்தியான்னம் (மத்ய அன்னம்)

1-12pm – 3-36pm – அபரான்னம்

3-36pm – 6-00pm – சாயான்னம்

சாமம் என்பதற்கு இரண்டு மூன்று வகையாக கணக்குகள் இருந்தன.

சாதாரண வழக்கத்தில் ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை

கொண்டது. அதாவது மூன்று மணி நேரம். அப்படியானால் ஒரு நாளில்

எட்டு சாமங்கள் இருக்கின்றன.

முழுக்கணக்கு –>

2 கண்ணிமை = 1 நொடி

2 கைந்நொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 வினாடி

60 வினாடி = 1 நாழிகை

2.5 நாழிகை = 1 ஓரை (1 மணி நேரம்)

3.75 நாழிகை = 1 முகூர்த்தம் (1.5 மணி)

2 முகூர்த்தம் = 1 சாமம் (3 மணி)

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் = 1 ஆண்டு

12 ஆண்டு = 1 மாமாங்கம்

5 மாமாங்கம் = 1 வட்டம்

பெரும்பொழுது 1 இளவேனில் சித்திரை, வைகாசி 2 ம…

பெரும்பொழுது

1 இளவேனில் சித்திரை, வைகாசி

2 முதுவேனில் ஆனி, ஆடி

3 கார் ஆவணி, புரட்டாதி

4 குளிர் ஐப்பசி, கார்த்திகை

5 முன்பனி மார்கழி, தை

6 பின்பனி மாசி, பங்குனி

சிறுபொழுது

1 காலை காலை 6 மணி – 10 மணி வரை

2 நண்பகல் காலை 10 மணி – பிற்பகல் 2 மணி வரை

3 எற்பாடு பிற்பகல் 2 மணி – மாலை 6 வரை

4 மாலை மாலை 6 மணி – முன் இரவு 10 மணி வரை

5 யாமம் இரவு 10 மணி – பின் இரவு 2 மணி வரை

6 வைகறை விடியற்காலம் 2 மணி – பின் இரவு

சல்மான் ருஷ்டி : என் சொக்கன் [ஃபத்வா முதல் பத்மா வரை]

சல்மான் ருஷ்டி

——————————————————

டெண்டுல்கரைத் தொடர்ந்து மற்றுமொரு சுவையான வரலாறு ஸ்டைல் நாவல்.

அயாதுல்லா கொமேனியே புத்தகத்தை படித்திருந்தால், ·பாத்வா கொடுப்பதற்கு பதில், விருந்துக்கு வரவழைக்கும் அளவு சல்மான் ருஷ்டி என்னும் படைப்பாளியை தூக்கி நிறுத்தும் அறிமுகம்.

ருஷ்டி என்றவுடன் என் மனதில் ஓடிய பிம்பம், இஸ்லாமியத்தைப் பழிக்கும் ஒரு முஸ்லீம்; மேற்கத்திய தாக்கத்தினால் இந்தியாவைத் துறந்த ஒரு முசுடு; முட்டை உடைப்பதற்காக உலக்கை உபயோகபடுத்தும் எழுத்தாளர். புகழ் பெறுவதற்காக சலசலப்பு ஏற்படுத்தும், வார்த்தை ஜால வித்தகர்.

இந்த பிம்பங்களையும், அவை ஏன் உண்டாயின, எழுத்தில் எங்கு தெரிகின்றன, எவ்வாறு இவற்றில் சிலது சரி, எங்கு தவறாக எடை போட்டோம் என்பதை நிலா இரவில் கதை சொல்லும் அம்மாவாக உணவைக் கொடுக்கிறது, இந்த புத்தகம்.

என்னைப் போன்ற attentiion deficit syndrome மக்கள் கூட கீழே வைக்க முடியாத வேகம். (வேகத் தடைகளாய் ஆங்காங்கே சில மொழிபெயர்ப்புகள் தென்படுகிறது: ‘நம்முடைய இப்போதைய இந்த வாழ்க்கை எந்த அளவு பாதுகாப்பாய், சவுகர்யமாய் இருக்கிறது என்பதைப்பற்றி சிந்திப்பதிலேயே வாழ்நாள்களைச் செலவிட்டுவிட்டால், நம்மெதிரே இருக்கிற சாலைகளை நாம் எப்போதும் கடக்கப்போவதில்லை’).

ருஷ்டி என்னும் கதாநயாகனுடன் வாசகனை வளர விடுகிறார் நூலாசிரியர். அவரோடு பம்பாயின் தெருக்களில் உலாவுகிறோம். அங்கிருந்து லண்டன் பள்ளியில் நம்மை சேர்த்து, எழுத வைத்து, இருட்டில் தள்ளி, ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, விருது வாங்கி குதூகலித்து என்று frame by frame நெருங்கியும் விலகியும் காட்டும் பாலு மகேந்திராவின் படத்தில், சொக்கனின் மொழி நடை இளையராஜாவின் பிண்ணனி இசையாக இடையூறு செய்யாமல் ஒன்ற வைக்கிறது.

அலுப்பு தட்டாத விவரங்களுடன் ருஷ்டியின் எழுத்து பாணிகள், கிண்டல், satire, மண வாழ்க்கை, இலக்கியத் தடங்களை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ருஷ்டியின் எழுத்துக்களை உள்வாங்கியது போல் அவரின் சலனமற்ற முகத்தை கூட சொக்கர் படித்து விடுகிறார். இந்தியாவில் நடந்த காமன்வெல்த் பரிசு கிடைக்காத சோகத்தை மறைத்ததை குறிப்பிடுதல், தாய்நாடு பற்றிய மனோபாவம், வளர்ந்த இடத்தை இழந்த வருத்தம் என அலசி, ஒரு எழுத்தாளனை பல கோணங்களிலும் முன்னிறுத்துகிற நிறைவான அறிமுகம்.

சோகத்தையும், சுய அகப்பாடுகளையும் ருஷ்டியின் எழுத்துக்களில் கண்டுபிடுத்து சொல்லும் அதே வேகத்தில், அவரின் காதல் லீலைகளையும் துள்ளலாக ஒரு பகுதியில் எல்லை மீறாமல் வர்ணிக்கிறார். விரவியிருக்கும் புத்தக சுருக்கங்களும், குறிப்புகளும் ‘ருஷ்டியின் படைப்புகள்’ என ஒரு சேர ஒரே அத்தியாயத்தில் reference ஆக்குவது பயனுள்ளது. மேஜிக்கல் ருஷ்டி-யிசம் பகுதியும் குறிப்பிடப்பட வேண்டிய பதிவு கட்டுரை.

சுண்டி இழுக்கும் பகுதி தலைப்புகளுக்கும், அவற்றின் உள்ளடக்கங்களுக்கும் சில சமயம் சம்பந்தம் இல்லை என்பது எல்லாம் படிக்கும் போது தோன்றாது; கருத்து வழங்கும்போது தோன்றலாம். நிறைய ஆச்சரியகுறிகள், பலர் அறிந்த மும்பையும் பம்பாயும் ஒன்று போன்ற குறிப்பிடல்கள், ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.

‘சாத்தானின் வேர்ஸசை’ விவரித்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அவரின் சிறுகதை/கட்டுரை ஒன்றையாவது எடுத்து அலசியிருக்கலாம். புத்தகக் குறிப்புகளில் கோடிட்டு காட்டிவிட்டு, வாசகனின் ஆர்வத்துக்கே விட்டு விடுகிறார். சொக்கனின் அறிமுகத்தைப் படித்த பிறகு, புத்தகத்தில் குறிப்பிட்ட சில மேட்டர்களைத் தேடி பிடித்து நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை பற்றி, தேர்ந்த எழுத்தாளர் எழுதிய, எழுத்துலக ஆர்வம் கொண்டவர்கள் அனவரும் படிக்க வேண்டிய அறிமுகம்.

——————————————————

“சல்மான் ருஷ்டி – என். சொக்கன் – சபரி பதிப்பகம் வெளியீடு –
128 பக்கங்கள் – ரூ 45/-”

——————————————————