வேலைகளே வெளியேறு


New Economy: Offshore Jobs in Technology: Opportunity or a Threat?: இந்திய நண்பர் ஒருவரின் கூற்றுப்படி, தொலைபேசியில் வழங்கும் தொழிற்நுட்ப சேவைக்கு ஒரு நிமிடத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அநியாயமாகப் பட்டது! சேவையழைப்பு (call-center?) ஒரு மணி நேரத்தில் 360 டாலர் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவிலேயே சல்லிசாக மாட்டும் என்று தோன்றியது. அதனால்தான் லேஹ்மான், டெல் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டன போலும்.

கட்டுரையில் இருந்து:

–> இந்தியாவிற்கு செல்வதனால் 20 முதல் 40 சதவிகிதம் வரை மிச்சம் பிடிக்க முடியும்.

–> அமெரிக்காவில் 80,000 டாலர்களுக்கு வேலைக்கு அமர்த்துபவரை, இந்தியாவில் 20,000த்துக்கே வைத்துக் கொள்ளலாம். (ஒரு மாதத்துக்கு 75,000 ரூபாய் 🙂

–> 2015-க்குள் 3.3 மில்லியன் வேலைகள் வளரும் நாடுகளுக்கு சென்று விடுகிறது.

–> இதில் 462,000 கணினி வல்லுநர் வேலையும் அடக்கம்.

–> அமெரிக்காவில் தற்போது 130 மில்லியன் மக்கள் வேலையில் உள்ளார்கள். ஒரு வருடத்துக்கு கிட்டதட்ட 3.5 மில்லியன் வேலைகளை புதிதாக அமெரிக்கா உருவாக்குகிறது. எனவே, பத்து வருடங்களில் 35 மில்லியன் புதிய வாய்ப்புகள் வரும்போது, 3.3 மில்லியன் வெளியேறுவது எல்லாம், கடல் நீரில் சிறு துளியே.

–> ஒரு டாலருக்கான வேலை வெளியூருக்கு சென்றால், அமெரிக்காவுக்கு 12 முதல் 14 விழுக்காடு அதிக லாபம் ஈட்டித் தருகிறது.

–> இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் உற்பத்தித் துறையில் வேலை இழந்தவர்கள் 25 சதவிகித குறைந்த சம்பளத்துக்கு புதிய உத்யோகம் கிடைத்தது.

–> சொன்னதை செய்பவரின் வேலை பறி போய் விடும். கணினி அறிவுடன் கூட வங்கி, தொழில் துறையின் நுணுக்கங்களும் அறிந்து பிரசினைகளைத் தீர்த்து புதிய கோணங்களில் ஆராய்பவர் மட்டுமே தாக்குப் பிடிப்பார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.