பாய்ஸ் இசை – சில மேற்குறிப்புகள் Secret of Rehm…


பாய்ஸ் இசை – சில மேற்குறிப்புகள்

Secret of Rehman’s வேட்ற்றி is Britney Spears, N’Sync and Remix

of பீட் இட் & his own ‘ஓட்யா’வின் ‘பூக்கும் மலர்கள்’. Not path breaking,

ஆனா certainly youthish and hep, complete with மாரோ kids’ lingo!

மன்னிக்க…

ரொம்ப நேரம் ‘பாய்ஸ்’ எம்.பி3கள் கேட்டதனால், ஆங்கிலமும், தமிழ் போன்ற

இங்கிலீஷ¤ம் மட்டுமே வாயில் வருகிறது. கொஞ்சம் நிலைப்படுத்திக் கொண்டு

தொடர்கிறேன்.

1. அலெ… அலே (எகிறி குதித்தேன்) – கபிலன் – **** / 5

கொஞ்சம் அமைதியாக, தமிழ் தெரிந்தவர்களுக்கும் புரியக்கூடிய

பாடல். யார் இந்த சித்ரா சிவராமன்? ஒழுங்காகப் பாடுகிறார்;

இளசாக சிரிக்கிறார். உதட்டில் அடிபட்டதாலோ என்னவோ

ச்

கவர்ந்த வரி:

வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறி விட்டேன்!

சாதா வரி:

ஒரு விதை இதயத்தில் விழுந்தது;

அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே!

2. பூம் (காதல் இதுதான்) – கபிலன் – – * / 5

திருச்சி லோகனாதனும், எஸ். வரலட்சுமியும் ஆங்கிலப் பாடல்

பாடியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். பழகிப்போன உதித்தைத்

துறந்து, அத்னான் சாமியும், கீச் சர்கமும் குரல் உதிர்க்கிறார்கள்.

சத்தியமாய் புரியவில்லை. boysthemovie.com-இல் வரிகள் கண்டால்

புரிந்து கொள்ள ஐந்து சதவீத வாய்ப்பு இருக்கு. (ஆனால், அத்னான்,

கார்த்திக் மொழியை விட எவ்வளவோ தேவலை)!

கவர்ந்த வரி:

தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்!

ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழலாகும்!

சாதா வரி:

குப்பை மேட்டில் ரோஜாச் செடி பூப்பதில்லையா?

(போனஸ்: அழுகிவிட்ட மாம்பழத்தில் இருவண்டுகள் நாம்தான்!)

3. டேட்டிங் (யாரை கேட்டு) – பா.விஜய் – *.5 / 5

தமிழை வித்தியாசபடுத்த இன்னொரு கண்டுபிடிப்பு ப்ளாசி.

பார்பி குரலோடு கர்னாடக வசுந்தரா தாஸ் வாய்ஸ்.

‘பேட்டை ராப்’ போல இல்லாமல், வித்தியசமான ராப் (முயற்சி).

ஆங்கிலப் பாடல்; தமிழும் இருக்கிறது! (நான் உச்சரிப்பை சொல்லவில்லை).

கவர்ந்த வரி:

ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே…

·ப்ரெண்ட்ன்னு ·புல்ஸ்டாப் வைக்காதே!

சாதா வரி:

கற்க கசடற கற்பவை

கற்றபின் மறக்க செய்வது லவ்வாகும்!

4. கேர்ள்·ப்ரெண்ட் (பால் போல) – பா.விஜய் – **.5 / 5

கார்த்திக், டிம்மி, திப்பு என்று மூவர் பெயர் குறிப்பிட்டிருந்தாலும், என்

காதில் ஒலித்தது ஒரு குரலே! புகழ் பெற்ற வைரமுத்துவின் பெயர்ச்சொல்லும்

அதன் குணாதிசங்களையும், புல்லட் எண் பட்டியலிடும் அடியற்றி கொடுக்கப்

பட்ட பாடல்.

கவர்ந்த வரி:

இணையதளத்தில் கணினி களத்தில்,

மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே!

சாதா வரி:

பார்பி டால் போல போனி டெய்லோடு தேவை கேர்ள் ·ப்ரெண்டுதான்

5. ப்ரேக் தி ரூல்ஸ் (மாரோ மாரோ) – வாலி – **** / 5

பீச்சில் பார்க்கும் முதல் பார்வையிலேயே மயக்க வைக்கும் பிகினி இளங்கன்னி.

நியு யார்க்கின் தெருக்களில் டப்பாவை வைத்து கலக்கும் ஹிப் ஹாப்; கூட கொஞ்சம்

ஹார்ட் ராக்; பாடல் வரிகளின் போது பாப்; பல genres அனாயசமாகக் கலங்கடிக்கிறது.

கவர்ந்த வரி:

பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு!

பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு!

சாதா வரி:

வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு!

6. சீக்ரெட் ஆ·ப் சக்சஸ் (சகசரிகமே) – வாலி – **.5 / 5

‘மாட்டீ ஓஸே’ என்று ஒரு ரகசியம் பரிபாஷையில் சொல்கிறார்கள்.

அது என்னது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு இன்றே திருட்டு விசிடி

கிடைக்கும் வழியை சொல்வேன்! கர்னாடிக சங்கீதம் தெரியாத பாக்யராஜ்

‘ஓ…’ என்று கத்தியே போட்டியை வெல்வது போல் பாட்டும் ஹிட்.

சாதா வரி:

தப்பான ரூட்டில் சென்று ரைட்டான ரூட்டைக் கண்டோம்.

முரண் வரி:

இந்த இசை சொந்த இசை!?

7. ப்ளீஸ் சார் – ??? – * / 5

மெலடி/ப்ளூஸ் என்றும் யாரும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்பதால்,

இங்கும் பாப்/ரீ-மிக்ஸ் வேலைகள் உண்டு.

8. தீம் ம்யூசிக் – *** / 5

நிறைய டெக்னோ, கொஞ்சம் ட்ரம்ஸ், தொட்டுக்க ஹெவி மெடல்;

படத்தின் மற்ற பாடல்களோடு ஒத்துப் போகிறது.

பாய்ஸ் – இலக்கியம் இல்லாத படைப்பு போல சுவாரசியமான பாடல்+இசை.

அன்புடன்,

-பாலாஜி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.