India Retains Optimism and Economic Growth – NYTimes.com: By HEATHER TIMMONS (NYT):
- முரசொலி மாறன் முதல் மன்மோகன் சிங் வரை எல்லோருமே இந்தியா முழுமையாக உலகமயமாவதை விரும்பவில்லை. உள்நாட்டு வியாபாரிகளுக்கு வரி பாதுகாப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வியாபார ஏற்றுமதிக்கு சாதகமில்லாத சூழல் போன்றவற்றை அமைத்து வைத்தார்கள். அதுவே, இப்போதும் இந்தியாவை உலகப் பொருளாதார சுனாமியில் இருந்து ரட்சிக்கிறது.
- சாதாரணமாக இந்தியர்கள் சாப்பாட்டுக்கும் இருப்பிடத்துக்கும் போக பாக்கி எல்லாவற்றையும் வங்கி சேமிப்பிலோ, தலையணை உறைப் பதுக்கலிலோ ஈடுபடுவார்கள். இப்போது அது 35 சதவிதமாகக் குறைந்தாலும், வருடத்துக்கு அமெரிக்க டாலர் 200 பில்லியன் கிடைக்கிறது. அமெரிக்கரிடம் இந்த வருங்கால தொலைநோக்கு சேமிப்புப் பழக்கம் கிடையாதே!
















