அமெரிக்காவில்:
- எவருக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறது (ஆண்கள், பெண்கள், கறுப்பர், குடிபுகுந்தோர், குற்றம் புரிந்தோர் போன்ற பிரிவுகளில்) என்று யார் அறிவுறுத்துகிறார்கள்?
- எது சுதந்திரம் (துப்பாக்கி வைத்துக் கொள்ளுதல், கருவைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது சுயமாக நிர்ணயம் செய்வது போன்ற பிரச்சினைகளில்) என்று எவர் முடிவெடுக்கிறார்கள்?
- சமூக நீதியை (சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, ஆண்/பெண் ஏற்றத்தாழ்வு, வந்தேறிகளுக்கும் குடிமகன்களுக்கும் இடையே வித்தியாசங்களை) பரிபாலிப்பவர் யார்?
- இன்ன பிற (சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், நோய்க்கான மருந்து போன்றவற்றில் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள பொறுப்பை) தீர்மானிப்பது எங்கே?
எல்லாக் கேள்விக்கும் விடை: அமெரிக்க உச்சநீதிமன்றம்
இதில் ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து முடிவெடுக்கிறார்கள். 88 வயதான ஜான் பால் ஸ்டீவன்ஸ் கூடிய சீக்கிரமே ஓய்வெடுப்பார் என்று நம்பப்படுகிறது. அவரின் இடத்தை நிரப்புவது அடுத்த அதிபரின் மிக முக்கிய கடமை.
புஷ் அதிபராக இருந்தபோது இரண்டு பாரம்பரிய (பழமைவாத) நீதிபதிகளை மெகயினின் அருந்துணையோடு அமர்த்தினார்.
மெகயின் அதிபரானால் கலாச்சார காவலர்களில் கை வலுப்படும். ஒபாமா வந்தால் தாராள சிந்தனை உள்ளவர் வருவார்.
இது இன்றைய நிலை:
மெகயின் அதிபரானால் என்னவாகும்? அலசல்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் – Shifting Median: A McCain Supreme Court
ஒபாமா அதிபரானால்… ஆய்வு: Dissenting Opinions on the Supreme Court’s Future: See what an Obama Supreme Court might look like.











