இந்திய ரயில்வே மறைமுகக் கட்டணங்களினால் இலாபம் ஈட்டுகிறதா?
பிபிசி தமிழோசையில் 19:13- இல் ஆரம்பிக்கிறது. சொன்னவற்றில் சில…
1. பல இருவுள் வண்டிகள் சூப்பர்பாஸ்ட் ஆக மாறி இருக்கிறது; பெயர் மட்டுமே மாற்றம். வசதிகளில் முன்னேற்றம் கிடையாது. நிறுத்தங்களிலும் குறைத்தல் இல்லை.
2. 306 வண்டிகள் சூப்பர்பாஸ்டாக மாற்றப்பட்டிருக்கிறது. 198 வண்டிகள் ‘சாதாரண’ எக்ஸ்பிரெசில் இருந்து சூப்பர் ஃபாஸ்ட் என உயர்ந்திருக்கிறது. புதிய அறிமுகங்கள் பெரும்பாலும் இந்த உயர்வகையை சார்ந்தவை.
3. தகவலறியும் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி ‘நாமகரண மாற்றத்தை’ விசாரித்துள்ளார். பாசெஞ்சர் ரயிலுக்கும் மற்ற எக்ஸ்பிரெஸ் வண்டிகளுக்கும்
- குறைந்தபட்ச வேகம்,
- எங்கே நிறுத்தம்,
- வசதி,
- பயணிக்கும் தூரம்
போன்றவற்றில் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை இரயில்வே நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. சூப்பர்பாஸ்ட் என்று பலகை போட்டால் கட்டணம் அதிகம் வசூலிக்கலாம்… அம்புட்டுதான்.
4. பாராளுமன்றமே இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது. அவர்களின் விமர்சனத்தை மீறி பைபாஸ் செய்து, இந்த இடைக்கால அறிக்கைகளை நிறைவேற்றிக் கொன்டுள்ளனர்.
5. தக்கல் :: எமெர்ஜென்சி ரிசர்வேசன் – தக்கால் முறை: Demand vs Supply என்பது போல் முன்கூட்டி பதிவு செய்யக் கூடிய டிக்கெட்டுகளை பெருமளவில் எண்ணிக்கை குறைப்பு செய்துவிட்டு, கடைசி நிமிட டிக்கெட்டுகளை இரட்டிப்பு விலையில் விற்கிறார்கள். இதனால் ரிசர்வ் செய்யும் இடங்கள் அறுபது நாள்களுக்கு முன்பே தீர்ந்து விடுவதால், தற்கால்-ல் ப்ளாக் டிக்கெட் போல் செல்வழிக்க நேரிடுகிறது.
6. கோரிக்கை என்ன? –
- மறைமுக கட்டணங்களிற்கு பதிலாக தட்டையான, வெளிப்படையான கட்டணங்களைத் தெரிவிக்க வேண்டும்.
- ரயில்வே பட்ஜெட் மூலமாகவே இந்த மாதிரி பின்வழி விலையேற்றங்களையும் அறிவிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒரு விவரம், அதன் பின் பைபாஸ் செய்து இன்னொரு விலையேற்றம், கட்டண அதிகரிப்பு கூடாது.
முந்தைய பதிவு: மாபெரும் விலைக்குறைப்பு – நகைக்கடையும் லாலுவின் இரயில்வேயும்
தொடர்புள்ள பதிவு: மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் – பயணங்கள்: இரயில் கட்டணங்கள் அதிகரித்துள்ளனவா, குறைந்துள்ளனவா
Posted in Lalu, Railways, Trains
குறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அறிக்கை, இரயில்வே, ஏமாற்றுதல், கன்ஸ்யூமர், ட்ரெயின், தமிழோசை, நிதி, நிதிநிலை, பயணம், பிபிசி, பொக்கீடு, யாதவ், லல்லு, லாலு, விலையேற்றம்