இன்றைய செய்திகளில், அலசல்களில் –
எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு.
ப்ராட்லி விளைவு (Bradley effect) –
1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.
ஆளவந்தான் படப் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
வைரமுத்துவும், கமலும் மற்றும் ஒபாமாவும் மன்னிக்க.
| கறுப்பு பாதி வெள்ளை பாதி கலந்து செய்த கலவை நான்! வெளியே தெளிவு உள்ளே கவலை நிறவெறி கொன்று நிறவெறி கொன்று ஆனால் அமேரிக்காவே! அமேரிக்காவே! -இது போதுமென்று நிறுத்திக் கொள்கிறேன். |
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்! வெளியே மிருகம் உள்ளே கடவுள் மிருகம் கொன்று மிருகம் கொன்று ஆனால்………. நந்த குமாரா! நந்த குமாரா! |










