- வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
- நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்…
- பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
- சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
- மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
- (தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் இன்டெல் நிறுவனம் வரை அனைவரும் ‘லாபியிஸ்ட்’களை நியமித்திருப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் பணத்தை எதிர்த்து சட்டம் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே, லாபியிஸ்ட் பணத்தை வாங்கிக் கொண்ட கதை.
- வங்கி அதிபரின் தனி விமானத்தில் பலமுறை வாஷிங்டன் டிசிக்கும் சொந்த ஊருக்கும் பறந்து சென்றது;
- அமெரிக்காவில் (முன்பு) ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணகர்த்தாக்களில் ஒருவருடன் பஹாமாஸ் உல்லாசப் பயணம் சென்றது;
- மெகெயினின் மனைவிக்கு ஷாப்பிங் மாலில் பங்கு கொடுத்து விட்டு, அதற்கு பிரதிபலனாக வங்கியின் கடன் கெடுபிடிகளை, நடுவண அரசு கண்டும் காணாமல் இருக்கச் செய்தது
- தொலைத்தொடர்பு நிறுவன லாபியிஸ்ட்களை தன்னுடைய பிரச்சாரக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களாக நியமிப்பது; அது மட்டுமல்லாமல், அதே தொலைபேசி/தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து எண்ணிலடங்கா நிதியை தன்னுடைய பிரச்சாரத்துக்காகப் பெற்றுக் கொள்வது
விடைகளையும் விவரங்களையும் அறிய (நியு யார்க் டைம்ஸ்): For McCain, Self-Confidence on Ethics Poses Its Own Risk
இதற்கெல்லாம் நேரில் விளக்கம் கொடுக்கும் பேட்டி கொடுத்து தன் பக்கத்து நியாயங்களை வைக்குமாறு வாய்ப்பு வழங்கிய நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேர்காணல் வழங்காமல் புறக்கணித்தும் விட்டார்.











