ராஜ்ய சபா என்றழைக்கப்படும் இடத்திற்கு செல்ல கீழ்க்கண்டவற்றில் இரண்டு தகுதி தேவை:
- தற்போது மத்திய அமைச்சராக இருக்க வேண்டும். (பிரதம மந்திரியாக இருத்தல் நலம்.)
- முன்னாள் மாநில முதல்வராக இருக்க வேண்டும்.
- கலாட்டா செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
- அகவை முப்பதே போதுமென்றாலும், எழுபதைத் தாண்டியிருத்தல் நலம். (தற்போதைய சராசரியான 61.8 ஆக இருந்தாலும் போஸ் ஸிஸ்டம் திருகியாவது கூச்சல் போட வல்லமை கொண்டிருக்க வேண்டும்.)
- பொதுத் தேர்தலில் தோற்றிருக்க வேண்டும்.
- சினிமாவில் தோன்றியிருந்தால் நலம்.
- கட்சித் தலைவரின் குழவியாக இருத்தல் இன்னும் நலம். அட்லீஸ்ட், வளர்ப்புக் குழவியாகவது இருக்க வேண்டும்.
- தப்பித்தவறி தூக்கக் கலக்கத்தில் பேச அழைத்துவிட்டால், நேற்று படித்த ஜோக் மடலை சபாவில் பகிரத் தெரியவேண்டும். (Email Forwards « Flyswatting….)
- என்னை மாதிரி எதுவுமே நடக்க மாட்டேங்குதே என்று புலம்பல் எழும்பினால், ‘நீங்க தேர்வாகாமல் இருப்பதினால்தான்’ என்று திசைதிருப்பும் பழிபோடும் அரசியல் வித்தகராக இருக்கவேண்டும். (So, who’s to blame for what happened to Scarlett Keeling? – Ambika Soni & Shantaram Laxman Naik blamed the ghastly crime on the victim’s folks)










