Category Archives: Uncategorized

Jolie Movie – Campaign Trail – Tonsure – Nuclear – Movie Marxist

பேசும் செய்தி

நன்றி: திண்ணை

Sometime the Spy is Spied!!! Spy shot of me & my bazooka lens *Lol1. ஹாலிவுட் நடிகர்களை புகைப்படம் எடுக்க வந்தவர், மெய்காப்பாளரின் கிடுக்கிப்பிடியில் சிக்கி கொலை மிரட்டலுக்கு உள்ளானார்: ஆங்கில உலகின் நட்சத்திரத் தம்பதியினரான அஞ்சலினா ஜோலியும் ப்ராட் பிட்டும் இந்தியாவில் படபிடிப்பில் இருந்தார்கள். எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கும் இவர்களை, இந்தியாவிலும் நிருபர்கள் பின் தொடர்ந்து நிழற்படங்கள் எடுக்க முனைந்தனர். ‘அத்துமீறுபவர்களின் உயிர் போய்விடும்’ என்று மிரட்டிய பாதுகாவலர்கள், கேமிராகாரர் ஒருவரின் குரல்வளையை நெறித்து அச்சுறுத்தினார்.

பாதுகாப்பாளரைத் தொடர்பு கொண்டோம். “தமிழ்ப் படங்களில் ஹீரோ சேலை கட்டி விடுவதைப் பார்த்த பிராட் பிட், ஹாலிவுட்டில் இந்த மாதிரி நாயகிகளை அலங்கரிக்கும் காட்சிகள் அமைவதில்லை என்று வருத்தப்பட்டார். அவரின் குறையைப் போக்கும் விதமாக ‘A Mighty Heart’ திரைப்படத்தில் அஞ்சலினாவுக்கு ரிவர்ஸிபள் சேலை கட்டிவிடுவதாக காட்சியமைக்கப்பட்டது” என்றார். நாம் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் அஞ்சலினா 4-இன்-1 சேலை கட்டியதை புகைப்படமெடுக்க மெய்காப்பாளர் மறுத்துவிட்டார்.

மூச்சு விட சிரமப்பட்ட புகைப்படக்காரர் சம்பவம் குறித்தும் விசாரித்தோம். “நான் திராவிட பாரம்பரியத்தில் வந்தவன். சொல்வதைத்தான் செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன். படமெடுத்தால் உயிர் போகும் என்று வாக்குறுதி கொடுத்தேன். அவன் கவலைப்படாமல் ஃப்ளாஷ் அடித்தான். சொன்னதற்கு ஏற்ப, உயிர் எடுக்காமல், கொடுத்த வாக்கை நிறைவேற்றாத திராவிடக் கலாச்சாரத்தைத்தானே பின்பற்றினேன்?” என்று முடித்துக்கொண்டார்.

Urban colours2. உள்ளாட்சித் தேர்தல் 2006: “சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு”: அதிரடியான அறிக்கையைப் படித்தவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தொலைபேசினேன். அடுத்த குற்றச்சாட்டைத் தயார் செய்யும் அலுவலுக்கு நடுவிலும் எனக்கு நேரம் ஒதுக்கினார்.

“அடுத்த தாக்குதல் ரெடி. விலைவாசி உயர்வுக்கு ஜெயலலிதாவே காரணம். அதிமுகவினர் பல்லாயிரக் கணக்கான டன் அளவில் மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்களை பதுக்குகிறார்கள். இதனால் ஒரு செயற்கையான பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தேர்தலுக்கு முந்தின நாள் சொல்லப் போகிறேன்.” என்று சொற்பொழிவைத் தொடங்கினார்.

சிகுன் குனியா குறித்து விசாரித்தேன். “கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. 2003-ம் ஆண்டு கொசுக்கள் அன்றைய முதல்வரை சந்திக்க வந்தன. அவர் பார்க்க மறுத்ததால், கடுங்கோபம் கொண்டு, வெஞ்சினம் கொண்ட வேங்கை போல சூளுரைத்தது. அதன் பலனைத்தான் இன்று சிகுன் குனியாவாகப் பார்க்கிறோம். இப்போது சொல்லுங்கள்… அதிமுக அரசு அன்றே கொசுவை சந்தித்து உரையாடியிருந்தால் இவ்வளவும் நிகழ்ந்திருக்குமா?” என்றவுடன் வாயடைத்துப் போனேன்.

Shaved Pussy 023. “கிறிஸ்தவ இளைஞருக்கு மொட்டை: ஒரிசா கிராமத்தில் பதற்றம்”: கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த இளைஞரை மீண்டும் இந்து மதத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக மொட்டையடித்ததால் ஒரிசா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தவர்களை துப்பறிந்து விசாரணையைத் தொடங்கினோம்.

“கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவரின் சிறார்களையும் காவு வாங்கியது போல் கொலையா செய்துவிட்டோம்?” என்று எங்களை ஏளனப்படுத்திவிட்டு பேசுவதற்கு மறுத்துவிட்டார்கள். கட்டாயப்படுத்தியதில் “அஃப்சலுக்குக் கூட கருணை காட்ட பணிக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே எண்ணிணோம். இருபதாயிரம் பேர் மொட்டை போடும் திருப்பதியில் நாற்பது கோடி ரூபாய் தலைமுடியில் புரளுகிறது. ஒரிசாவிலும் குட்டி திருப்பதியை உருவாக்க உள்ளோம்” என்று உற்சாகமானார்கள்.

A Leap of Faith4. “வடகொரியாவுக்கு இந்தியா கண்டனம்”: ‘சர்வதேச எதிர்ப்பை மீறி இந்த அணுகுண்டு சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. கொரிய தீபகற்ப பகுதியில் அமைதியை இது பாதிக்கும்’ என்று இந்தியா கூறியுள்ளது. வெளியுறவுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். மேலோட்டமாக செய்திகளைப் படித்து செல்லாமல், ஆழமாகவும் அமரிக்கையா அறிந்து கொள்ள அறிவுறுத்தினார்கள்.

“தற்போதைய சோதனையின் படி வட கொரியாவின் ஏவுகணைகள் அமெரிக்காவை சென்றடையாது. அப்படி இருக்கும்போது இந்தியாவிற்கு இது வருத்தத்தையேத் தரும். அமெரிக்காவிற்கு ஆபத்து என்றால்தான் புஷ் போர் தொடுப்பார். பொருளாதாரம் உயரும்; பட்ஜெட் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். அங்கே இருப்பவர்கள் போர்க்களம் காணச் செல்வார்கள். அதன் மூலம் அவுட்சோர்ஸிங் தேவை அதிகரிக்கும். இந்தியாவுக்கும் லாபம்” என்பதை உணர்த்தினார்.

இன்னொரு வல்லுநர், “இந்தியாவைப் பொறுத்தவரை இது வருத்தமான நிகழ்வு. ஈரான், துருக்கி, எகிப்து என்று நாற்பது நாடுகள் அணுகுண்டு சோதனையின் விளிம்பில் நிற்கிறார்கள். இவர்களுக்கான தொழிற்நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தானே முந்திக் கொண்டால், போட்ட முதலீட்டை எடுக்கமுடியாமல், இந்தியாவின் அணு ஆராய்ச்சி திவாலாகும் அபாயம் நேரிடும்” என்று அச்சுறுத்தினார்.

laemmle theatres 75. “லகான் ஸ்டைலில் கிரிக்கெட் போட்டி: கம்யூனிஸ்டு வற்புறுத்தல்”: லகான் படத்தைப் போன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா முதல் சுதந்திர போராட்டம் 150-வது ஆண்டு விழாவையொட்டி நடத்த வேண்டும் என்று மாரக்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி வற்புறுத்தி இருக்கிறார். இதற்காக இந்தியா, பாகிஸ் தான், வங்காளதேசம் கொண்ட தனி கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். இந்த அணி இங்கிலாந்துடன் மோத வேண்டும் என்று கூறி உள்ளார்.

பிரகாஷ் காரட் உள்ளிட்ட பலரும் இந்தத் திரைப்பட் மோகத்தை வரவேற்று இருக்கின்றனர். “முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருப்பார். அதன் பிறகு ஆட்சியையும் பிடிப்பார். அது போல், ஜோதிபாசுவிற்கு ஒரு நாள் பிரதம மந்திரியாக வாய்ப்பளிக்க வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“இஸ்ரேலிய பராக் ரக, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கியதற்காக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இளைஞர்களைக் கவர இது நல்ல சந்தர்ப்பம். ரங் தே பஸந்தி திரைப்படத்தைப் போல் ஜெயா ஜெட்லி போன்றோரை விசாரணையின்றி பலியாக்கலாம். உண்மையான லெனினிசத்தை இந்த மாதிரி ரத்த வெளிப்பாடுகள் நிறைவேற்றும்” என்று ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் தெரிவித்தார்.

பொலிட்பீரோ சந்திப்பில் பிருந்தா காரத் சூர்யவம்சத்தை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


| |

Harlot’s Prerogative

தேஸிபண்டிட் – 2

‘வாக்கு கொடுத்துட்டேன் வேலு’ என்பதால், தேசிபண்டிட் காவியத்தில் இரண்டாம் பதிவு.

முதல் பதிவு: ஈ – தமிழ் :: Desipundit plans to close shop

நேற்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ‘சுதந்திரத்தைப் அச்சுறுத்தும் நீதிபதிகள்’ (படிக்க OpinionJournal – John Fund on the Trail :: Taking the Initiative – How judges threaten direct democracy) கிடைத்தது.

WSJ நீலிக்கண்ணீர் வடித்தாலும் சொல்ல வந்த அடிநாதமான விஷயம் அர்த்தபுஷ்டியானது.

அமெரிக்காவில் குடியுரிமை என்பது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தவிர மற்ற சிலவற்றுக்கும் பயன்படும்.

  • ‘தற்பாலார் திருமணம் புரிந்து கொள்ள அனுமதிக்கலாமா? கூடாதா?’,
  • ‘கருத்தடை செய்யலாமா? தடுத்து விடலாமா?’
    போன்ற சமூக அமைப்புக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்து, சொந்த மாநிலத்தின் சட்டதிட்டத்தை மாற்றப் பரிந்துரைக்கலாம்.
  • ‘பியர், வைன் போன்றவை சூப்பர்மார்க்கெடுகளில் விற்கலாமா?’,
  • ‘ஞாயிற்றுக்கிழமையும் கள்ளுக்கடை திறந்து வைக்கலாமா’
    போன்ற வினாக்களும் கேட்பார்கள். (இந்த வருட மற்றும் சென்ற வருட எடுத்துக்காட்டுகளுக்கு :: Massachusetts ballot questions — 2006 Election | Boston.com | 2004 General Election Results)

    எம்.பி.க்கள் மட்டும் திட்டங்கள் தீட்டாமல், பொதுமக்களும்

  • ‘புகைபிடித்தலுக்கு கூடுதல் வரி’,
  • ‘இட ஒதுக்கீட்டில் இனி கிராமப்புற மாணாக்கர்களுக்கும் சிறப்பு அந்தஸ்து’,
  • ‘குறைந்தபட்ச ஊதியத்தை 18% உயர்த்துவோம்’
    என்று தீர்மானம் போட்டு மக்கள்மன்றத்தில் வென்றால், சட்டம் இயற்றும் வாய்ப்பு இருக்கிறது. இந்த உரிமையை ‘கனம் கோர்ட்டார் அவர்கள்’ தட்டிப் பறிக்கிறார்கள் என்கிறது அந்தக் கட்டுரை.

    கிட்டத்தட்ட தேஸிபண்டிட் (eponym போன்ற பிரயோகம்; eponym குறித்து அறிய: கேள்வியும் நானே… பதிலும் நானே) பங்களிப்பாளர்களை நீதிபதியாகக் கருதலாம். பயனருக்கு எது உகந்தது, எவ்வாறு சமூகம் அமைய வேண்டும், எப்படியெல்லாம் யோசிக்க வேண்டும், எதை கருத்தில் கொள்ளலாம், எது பொருட்படத்தக்கது, எது பொதுபுத்தியிடம் விடக்கூடாது என்று சில கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை.

    ஊடகத்தில் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு harlot’s prerogative வந்து விடுவதாக குற்றஞ்சாட்டுவதும் இயல்பே. (Media proprietor – Wikipedia: British Prime Minister Stanley Baldwin once accused the London press of “exercising the prerogative of the harlot through the ages: power without responsibility.”)

    ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும் தோழா’ என்பது போல் அதிகாரத்துடன் பாரமும் பழியும் உத்தரவாதம்.


    | |

  • Desipundit plans to close shop

    தேசிபண்டிட் வலைப்பதிவிற்கு மூடுவிழா. தமிழில் இருக்கும் பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்த சுட்டிகளை துளசியும் (துளசிதளம்) டுபுக்கும் (Dubukku- The Think Tank) கோர்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் எண்ணற்ற இந்திய வலைப்பதிவுகளில் மேய பொறுமை இல்லாதவர்களுக்காகத் தொடங்கப்பட்டது தேஸிபண்டிட். தமிழில் தமிழ்ப் பதிவுகள், தமிழ்மணம், தேன்கூடு, இருப்பது போல் ஆங்கிலத்தில் இம்புட்டு வசதிகள் கிடையாது.

    இடதுசாரி பதிவர்களுக்கென்று விஐபி ஒருவர் இருப்பார். வலதுசாரி, கிரிக்கெட், சினிமா, அச்சுபிச்சு, சென்னை, நிழற்படம் என்று ஆளுக்கொரு கிரவுண்ட் கட்டி பின்னூட்டத்தில் ஜமாபந்தி கச்சேரி அமர்க்களப்படும்.

    ரொம்ப காலம் முன்பு நான் சின்னப்பையனாக இருந்தபோது ப்ளாக்மேளா நடத்தி வந்தார்கள். கூத்தாக சுவாரசியமாக இருந்தது. தமிழ் வலையின் அசுவாரசியங்களை பருக்கை விடாமல் கவனித்ததினால், ‘ப்ளாக்மேளா’ (blogmela – Google Search) ஏன்/எதற்கு/எப்படி முக்கியத்துவம் இழந்து நிறுத்தப்பட்டது என்று அறியேன்.

    கிட்டத்தட்ட வலைப்பூ (site:valaippoo.yarl.net வலைப்பூ yarl – Google Search & Valaippoo) & இந்த வார தமிழ்மண நட்சத்திரம் மாதிரி ப்ளாக்மேளா நடந்து வந்தது. வாரம் ஒரு வலைப்பதிவர். தனக்குப் பிடித்த, தீர்க்கமாக எழுதப்பட்ட பதிவுகளை உரல் கொடுத்து இரண்டு வரி விமர்சனம் வழங்கி, வாசகர்களுக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுவார்.

    பல பதிவர்களும் சொந்தமாக எழுதுவதையே பெரிதும் விரும்பியதாலும், பற்பலரின் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை படித்து டெலீட் செய்ய முடியாததாலும், இந்த ப்ளாக்மேளாவில் சுணக்கம் விழுந்திருக்கும்.

    தமிழுக்கு கூகிள் தேடல் போல் (Google Blog Search: site:http://) ஆங்கிலத்திலும் டெக்னோரட்டி தேடலும் கூகிளும் மட்டுமே பெரும்பாலும் கை கொடுத்தது. காமத் போன்ற சிலரின் அட்டவணை, இற்றைபடுத்தாத இடுகைகளையும் காட்டி சோர்வுறச் செய்யும். சுன்சுனா, மைடுடே, இண்டிப்ளாக், சுலேகா, தேஸிப்ளாக்ஸ், ப்ளாக்தேசம் என்று திரட்டிகள் குட்டி போட்டு பெருகினாலும், தேசிபண்டிட் தொடங்கிய காலத்தில் இருந்த குறைபாடுகள், இவற்றில் இன்னும் களையப்படவில்லை.

    இதன் அடுத்த பரிணாமமாக பூங்கா, கில்லி – Gilli, போன்று முன்மாதிரி சேவையை தேஸிபண்டிட்காரர்கள் சுபயோகதினத்தில் துவக்கினார்கள். ஆங்கிலத்தில் பிடித்த, பார்க்கவேண்டிய, சர்ச்சைக்குள்ளான, தேமேயென்று அப்பாவியான, சோப்ளாங்கியல்லாத எழுத்துக்களாக தேர்ந்தெடுத்து கோர்க்க ஆரம்பித்தார்கள்.

    மோகம் முப்பது நாள் கணக்காக, சூட்டோடு சூடாக, இண்டிப்ளாகீஸ் (The Indibloggies » The Word is out) தேர்தலிலும் வெற்றிவாகை சூடியது. அதே தேர்தலில் (Best IndiBlog directory/service/clique) தமிழ்மணத்தை ஆயிரத்து சொச்சம் தமிழ் வாக்காளர்களே வாக்குசாவடிக்கு சென்றோ செல்லாமலோ காலைவாரி விட்டது தனிக்கதை.

    ஆசை அறுபது நாள் முடிந்ததும் அழுத்தங்கள் ஆரம்பித்தது. தேர்தலில் தில்லுமுல்லு என்னும் பொருமலுடன் மெல்ல துவங்கிய சர்ச்சைகள், ‘என்னை இணைப்பதில்லை’, ‘இந்தக் கருத்தை ஒதுக்குகிறார்கள்’ என்னும் விம்மலுடன் வெடித்தது. இன்று தேஸிபண்டிட்டிற்கு அஸ்தமனம்.

    தொடர்பான முக்கியமான சில பதிவுகளும், கருத்தைக் கவர்ந்த கருத்துகளும்:

  • A Dash of Ash » Goodbye DesiPundit: “I miss the joys of lively online discussion, whether it’s about weighty issues or silly ones. I realized that when I read blogs these days, I read them with the focus of evaluating them for DesiPundit – which is a rather horrifying realization. In short blogging is no longer a joy, and has become a chore.”
  • Recursive Hypocrisy.: Why people blog 101 – கொஞ்சம் கொணஷ்டையான கோணங்கிப் பார்வை (அதாகப்பட்டது, மாற்று கருத்தோட்டம்)
  • Shutting Down DesiPundit at Nerve Endings Firing Away – தொடங்கி வழிநடத்தியவரின் காரணங்கள், வழக்கமாக கேட்கப்போகும் வினாக்களுக்கான பதில்கள்.
  • Desipundit, No More at Psychotic Ramblings Of A Mad Man… – உறுப்பினரின் உடனடி எண்ணங்கள், மாற்று வலைப்பதிவு தொடங்குவதற்கான கால்கோள்
  • DesiPundit » Archives » Farewell – அசல் பதிவில் வெளியான அறிவிப்பு
  • No more DesiPundit at Within / Without: When DP started it was one of the first places to do everyday links. Which was a shift away from the Weekly/ (moody) Monthly Blog Melas. But over time, I was getting a little annoyed with the constant nitpicking of some select readers who accuse that DP contributors were biased.

    ரெண்டணாக்கள் போடாவிட்டால் சில்லறை தேறாது என்பதால்…

  • தனி மனித விமர்சனங்களை எதிர்கொள்வது எளிது; குழுவாக அவற்றைத் தாங்கிக் கொள்ளும்போது முரண்களும் தடைக்கற்களும் எழும்.
  • தேஸிபண்டிட் போல் முகம் தெரிந்த குழுக்களின் வலைப்பதிவுகளில் என்ன எழுதுகிறார்களோ, அதுவே குழுவின் நோக்கமாக நாமகரணமிடப்பட்டு, சாயம் தீட்டி, வண்ணம் அடிக்கப்படும்.
  • இந்த மாதிரி ஏதாவது மூடினாலோ, திறந்தாலோ, ஏப்பை சாப்பையாய் நாலைந்து பேர் ஏழெட்டு பதிவுகளை இட்டு ஆறேழு நாள்களை ஓட்டிக் கொள்வார்கள்.

    | |

  • Over 70 pc cast votes in 2nd phase of civic polls in TN: Sporadic violence

    Dinamani.com – TamilNadu Page

    உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது

    சென்னை, அக். 16: தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடைபெற்றது. சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்ற சாலை மறியல்கள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர, பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

    திருச்சி, மதுரை மாநகராட்சி உள்பட 6 ஆயிரத்து 645 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 54 ஆயிரத்து 630 பதவிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத் தேர்தல் நடைபெற்றது.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.31 லட்சம் உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சுமார் 18 ஆயிரம் பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்கட்டமாக 67 ஆயிரம் பதவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

    2-ம் கட்டமாக சுமார் 54 ஆயிரம் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸôர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் குறிப்பாக, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பொழிச்சலூர், கவுல்பஜார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான வாக்குச் சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

    திருச்சி, மதுரையில் வன்முறை: திருச்சி மற்றும் மதுரை மாநகராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்காக நடைபெற்றத் தேர்தலில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

    திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளரின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    மதுரையில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் கடத்தப்பட்டதாகக் கூறி, அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர்.

    சென்னையில்…: சென்னை புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தில் வாக்குச்சீட்டுகளை சூறையாடியதாக ஊராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

    அம்பத்தூரில் உருட்டுக்கட்டைகளுடன் கள்ள வாக்குப் போட வந்ததாக ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    திருவொற்றியூர் நகராட்சித் தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஞாயிற்றுக்கிழமை வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வாக்குப் பதிவு பாதிக்கப்பட்ட 26 இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: 2 கட்டங்களாக பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தமிழகம் முழுவதும் 826 மையங்களில் புதன்கிழமை (அக். 18-ல்) நடைபெறும்.


    வாக்குச்சீட்டுகளை தூக்கிச் சென்ற அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் உள்பட 7 பேர் கைது

    சென்னை, அக். 16: சென்னை மேடவாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து போலீஸôரை தாக்கிவிட்டு வாக்குச் சீட்டுகளை தூக்கிச் சென்ற அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் காளிதாஸ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    காளிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் செய்த 82 பெண்களைப் போலீஸôர் கைது செய்தனர்.

    சென்னை மேடவாக்கம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 126-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுபவர் காளிதாஸ். இவர், அதிமுக ஆதரவுடன் போட்டியிடுவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சனிக்கிழமை இரவில் மேடவாக்கம் அரசு பள்ளிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அங்கு 234-வது வாக்குச் சாவடியில் இருந்த 600 வாக்குச் சீட்டுகளையும், 235-வது வாக்குச் சாவடியில் இருந்த 3,421 வாக்குச் சீட்டுகளையும் தூக்கிச் சென்றனர்.

    இதைத் தடுக்கவந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்தேலு உள்பட 3 தலைமைக் காவலர்களை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில், ஒருவரின் செல்போன் தவறி கீழே விழந்தது. உடனே, அந்த செல்போனை போலீஸôர் கைப்பற்றினர்.

    விசாரணையில், அந்த செல்போன் வேட்பாளர் காளிதாஸின் ஆதரவாளர் அசோக்குக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாஸ், பாலகிருஷ்ணன், அசோக், மகேஷ், செல்வம், சுரேஷ், சுந்தர் ஆகியோரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    வாக்குச் சீட்டுகளுடன் இருவர் தலைமறைவு: மொத்தம் 4,021 வாக்குச் சீட்டுகளுடன் தப்பி ஓடிய காளிதாஸின் தம்பி குமார் மற்றும் ரவி ஆகியோரை போலீஸôர் தேடி வருகின்றனர்.


    சில நிமிடங்களில் பதிவான ஆயிரம் வாக்குகள்

    சென்னை, அக். 16: பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஆயிரம் வாக்குகளை சில நிமிடங்களில் பதிவு செய்தது என்று திருவொற்றியூர் 31-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் மாலதி கூறினார்.

    திருவொற்றியூர் நகராட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து அவர் கூறியது:

    நான் கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். கடந்த முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு இதே வார்டில் வெற்றி பெற்றேன். பின்னர் திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் எனக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் சுயேச்சையாகப் போட்டியிட்டேன்.

    ஆனால் எனக்கு பழக்கமானவர்களே பெரிய கத்திகளுடன் உள்ளே புகுந்து மிரட்டியதைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். என் வாழ்நாளில் இத்தகைய வன்முறை நடைபெற்ற தேர்தல்களைப் பார்த்ததே இல்லை. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சில நிமிடங்களில் பதிவு செய்துவிட்டு பின்புற வாசல் வழியாக மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர் என்றார் அதிர்ச்சி கலந்த பயத்துடன்.


    26 இடங்களில் மறுவாக்குப் பதிவு: 2-ம் கட்ட தேர்தலில் 70% வாக்குப் பதிவு

    சென்னை, அக். 16: தமிழகத்தில் 2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவியிடங்களுக்கு அக். 13, 15 (வெள்ளி, ஞாயிறு) ஆகிய நாள்களில் பெரும்பாலான இடங்களில் அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது.

    தேர்தலில் முதற்கட்டமாக 72 சதவீதமும், 2-ம் கட்டமாக 70 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    தமிழகத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

    கடந்த 2001-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்டமாக 62.9 சதவீதமும், 2-ம் கட்டமாக 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 525 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.

    சென்னை மாநகராட்சியில் கடந்த 2001-ம் ஆண்டில் 36.11 சதவீதமும், தற்போது 55.03 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் இத் தேர்தல் பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்றுள்ளது.

    ஒரு சில இடங்களில் மட்டுமே அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.

    மறு வாக்குப்பதிவு:ஆனால், தற்போது 26 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப்பதிவு அக்டோபர் 16, 17 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

    இதில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்த 26 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    மாவட்ட வாரியாக மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை விவரம்:

  • தர்மபுரி,
  • திருநெல்வேலி தலா 5,
  • விருதுநகர் 4,
  • கடலூர்,
  • விழுப்புரம் தலா 3,
  • ராமநாதபுரம்,
  • திருவள்ளூர்,
  • மதுரை தலா 2,
  • தேனி 1.

  • CPI(M) charge against DMK

    Dinamani.com – TamilNadu Page

    சென்னையில் மறு தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    சென்னை, அக். 16: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக வேட்பாளர்களும் தொழில்முறை ரவுடிகளுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும், திமுகவின் நியாயமற்ற அணுகுமுறை காரணமாக சென்னை மாநகராட்சியில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 8 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்தது.

    தேர்தல் தினத்தன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் பற்றியும், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி நடத்திய மோசடி வாக்குப் பதிவுகள் குறித்தும் கட்சியின் வட சென்னை, தென் சென்னை மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பார்வையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் புகார் செய்தும் எவ்வித பயனும் இல்லை.

    ஆயுதம் தாங்கிய தொழில்முறை ரவுடிக் கும்பல்களுக்கு திமுக வேட்பாளர்களும், சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் தலைமை தாங்கி, வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து தேர்தல் முகவர்களை விரட்டியடித்து விருப்பம்போல வாக்குச் சீட்டுகளை முத்திரையிட்டு, வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர். தட்டிக் கேட்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரையும், முகவர்களையும் தாக்கியுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட 8 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

    வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீதோ, இதற்குப் பொறுப்பானவர்கள் மீதோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். தாக்கியவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிக்கையில் வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    First phase civic polls end; Opposition seeks repoll in Chennai

    சென்னை உள்ளாட்சித் தேர்தல், வன்முறை தொடர்பான தமிழ் வலைப்பதிவுகள்:

    1. ஹரிஹரனின் உலகங்கள்: (35) முரசொலிப்பு : சென்னையில் “அர’வழியில் தேர்தல்!
    2. உள்ளாட்சித் தேர்தல் 2006: தேர்தல்வன்முறை வழக்கு விசாரணை
    3. ஓகை: சென்னையில் வரலாறு காணாத வன்முறை
    4. குழலி பக்கங்கள்: திமுக அரசின் கரும்புள்ளி
    5. உலகின் புதிய கடவுள்: 192.ஹிட்லர் திராவிட முன்னேற்ற கழகம்
    6. மாயவரத்தானின் வலைப்பூ….Third Vision: அப்புறம் ஏன்(டா) தேர்தல் நடத்துறீங்க?[#380]
    7. உள்ளாட்சித் தேர்தல் 2006: தேர்தலில் வன்முறை
    8. உள்ளாட்சித் தேர்தல் 2006: தேர்தல் வன்முறை-2
    9. எதையும் ஒருமுறை: உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் பயங்கர வன்முறை
    10. IdlyVadai – இட்லிவடை: ஜெ – பேட்டி
    11. IdlyVadai – இட்லிவடை: உள்ளாட்சி தேர்தல் – செய்திகள், படங்கள்
    12. IdlyVadai – இட்லிவடை: உள்ளாட்சி தேர்தல் – அட்டகாசம், வன்முறை, கள்ள ஓட்டு
    13. oosi aka pin: Tamil Daily Dinamani Cartoon : உள்ளாட்சி தேர்தல் காட்சிகள் About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc
    14. எண்ணம்: முதன்முறையாக வாக்களித்தேன்


    | |

    Kavi Chakravarthy Ottakoothar – Audio Blog (Part I)

    கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் வரலாறு. ஒவ்வொரு பதிவிற்கும் சுருக்கமான முன்னுரையை நேரம் கிடைக்கும்போது இணைக்கிறேன்.

    1.

    this is an audio post - click to play

    2.

    this is an audio post - click to play

    3.

    this is an audio post - click to play

    4.

    this is an audio post - click to play

    5.

    this is an audio post - click to play

    6.

    this is an audio post - click to play

    7.

    this is an audio post - click to play

    8.

    this is an audio post - click to play

    9.

    this is an audio post - click to play

    10.

    this is an audio post - click to play


    | | |

    Keeripatti – History Repeats Itself

    Dinamani.com – TamilNadu Page

    கீரிப்பட்டி ஊராட்சித் தலைவராக தேர்வானவர் தலைமறைவா?

    கீரிப்பட்டி, அக். 13: கீரிப்பட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு பெற்றவர் தலைமறைவாகி இருப்பதாக பிரச்சினை எழுந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய 3 ஊராட்சித் தலைவர் பதவிகளும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்தக் கிராமங்களில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற முடியாமலும், தேர்தல் நடைபெற்று தேர்வு பெற்றவர்கள் பதவியில் நீடிக்க முடியாத நிலையும் இருந்துவந்தது.

    இந்த நிலையை மாற்ற அரசும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து முயற்சித்த போதிலும், தீர்வுகாண முடியாத நிலையே இருந்துவந்தது.

    தற்போதைய தேர்தலில் பரமன், சுப்பன் மற்றும் பாலுச்சாமி ஆகிய 3 பேர் கீரிப்பட்டி ஊராட்சிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில் 2 பேரின் வேட்பு மனுக்கள் குறைபாடுகள் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டன.

    வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் ஒருவரான, அக் கிராமத்தைச் சேர்ந்த எம்.பாலுச்சாமி (35) தாக்கல் செய்த மனு மட்டும் ஏற்கப்பட்டது.

    இதனால் ஊராட்சித் தலைவராக போட்டியின்றி பாலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்த கடந்த செப். 27-ம் தேதி முதல், அந்தக் கிராமத்துக்கு வரவில்லை என கிராமத்தினர் தெரிவித்தனர். அவரது வீடும் பூட்டிக் கிடக்கிறது.

    அவரது உறவினர்களும் வெளியூரில் உள்ளதாக கிராம மக்கள் கூறினர்.

    கீரிப்பட்டி ஊராட்சியானது, கீரிப்பட்டி மற்றும் போலியம்பட்டி கிராமங்களை உள்ளடக்கியது. மொத்தம் 1,287 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 241 பேர் தலித்துகள்.

    பட்டுவாடா

    கில்லியில் இணைக்கலாம். அங்கு ஃபார்முக்கு திரும்பிய டெண்டுல்கராக பிரகாஷ் ஒழுங்காக அடித்து ஆடி வாசகர்களை குஷிக்குள்ளாக்கும்போது, டிராவிட் மாதிரி சிங்கிள் எடுப்பது போஷாக்கு தரும்.

    கோர்வையாக சேர்த்து ஒவ்வொன்றையும் தனிப் பதிவாக ஆக்கலாம். படிப்பவருக்கு பொறுமை போகலாம். எழுதுபவனோ அவசரக் குடுக்கை. அங்கும் எங்கும் தேடி தெளிந்து பதிவு எழுத முடியாத அவசரக் குடுக்கை.

    எனவே, அவசர தபால்.

    1. இருவர்

      பிடித்திருக்க வேண்டிய 7:45-ஐ தவறவிட்ட ரயில் நிலையம். இருவர் கவனத்தை ஈர்த்தனர்.

      1. கண் பார்வையற்றவர்: என்னை மாதிரியே தோளில் கைப்பை. கழுத்துக்கு பட்டை கட்டியிருந்தார். வேலை முடித்து சோர்வுற்ற முகம். சிரிக்கும் பாவம். திடமான உறுதி முகத்தில் தெரிகிறது. நடைபாதையில் தடைகள் இருக்கிறதா என்று அறிய குச்சி ஒன்றை இடதும் வலதுமாக ஆட்டி விறுவிறு நடை. அவரின் வழியில் வந்தவர்கள் ஒதுங்கினார்கள். மூன்று மாடிகளை ஏற்றி அழைத்து செல்லும் எஸ்கலேட்டரில் தடுமாறாமல், தட்டிப் பிடித்து ஏறி நின்றார். இறங்க வேண்டிய இடத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றி சொன்னார். அடுத்த வேலையை பார்க்கவோ, வீட்டுக்கோ துரிதமாக விரைந்து விட்டார்.

      சலிப்புற்ற இரவில், அனுதினச் சுழலில் மாட்டிக்கொண்டவர்களை, அவரிடம் தென்பட்ட உற்சாகமும், செயல்படுதிறனும் தொற்றிக் கொள்ள வைக்கிறார்.

      2. அனாமதேயமாக திட்டிக் கொண்டிருந்தவர்: அதே போர்ட்டர் சதுக்கம். புத்தகக் கடையில் ஏறி இறங்கி திரும்புகிறேன். மின்விளக்கு வேலை செய்யாத தெருமுக்கு. நடையை வேகப்படுத்துகிறேன். ஆங்கிலத்தின் நான்கெழுத்து சுடுசொற்கள் கொண்ட உரையாடல் காதில்படுகிறது. இரவலர்கள் இருப்பதை அப்போதுதான் பார்க்க நேரிடுகிறது. பயம் கலந்த பச்சாதபம் வருகிறது. எதையோ மோசமாக கடிந்துரைத்தார்கள். தொடர்ந்து விரக்தி மேலிட்ட கோப சம்பாஷணை சன்னமாக தொடர்கிறது.

      காதல் கவிதையில் எதிர்பாலாரின் கவர்ச்சியும் தாபமும் ஏக்கம் கலந்த உணர்வோடு வெளிவரும். தாடி வளர்த்த வீடற்றவர்களின் கோபத்தில் நேரவிரயமும் குறைபாடுகளும் பச்சாதாபம் கலந்த வெறுப்புடன் வெளிவருகிறது.

    2. NBC.com – Studio 60 on the Sunset Strip: ஸ்டூடியோ 60 ரசிக்க வைக்கிறது. நெடுந்தொடர் எழுதுபவர்களின் வாழ்க்கையை விளக்கும் புதிய தொலைக்காட்சித் தொடர். கிண்டல், கேலி செய்வதில் உள்ள சூட்சுமங்களை சொல்கிறார்கள். உள்ளர்த்தம் பார்வையாளனுக்கு விளங்காவிட்டால் எபிசோடின் தரத்தைக் குறைத்துக் கொள்ள நேரிடுகிறது. ஆட்சியாளரை நக்கலடித்தால், ‘எதிர்க்கட்சி ஆதரவா’ என்னும் நாமம் விழுகிறது.

      ஒரு வாரத்தில் அடுத்தவரை மட்டும் பகிடி செய்யாமல், தன்னை வைத்து நகைச்சுவை செய்தார்கள். மற்றொன்றில் ஏழு நாள் என்னும் கெடுபிடிக்குள் எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிப்போர், அரங்க நிபுணர், மேலாளர் என்று பலரின் பங்கை செவ்வனே திரையாக்கினார்கள். சென்ற வாரத்தில் எழுத்து திருட்டு கவனிக்கப்பட்டது.

    3. தமிழில் பழைய படங்களைத் திரும்ப எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார் சுதர்சன். பிடித்த நட்சத்திரங்களை பழைய கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்க்க நினைக்கிறேன். மீண்டும் தூசி தட்டி வெளிவர ஆசைப்படும் பட்டியல்:
      1. தூறல் நின்னு போச்சு – இரண்டாம் பகுதியில் போதிய மாற்றங்கள் தேவை : பரத், அசின்; நண்பர்களாக மற்ற ‘பாய்ஸ்’
      2. பொய்க்கால் குதிரைகள் – புதிய படத்திற்கு சுந்தர் சி இயக்குநர் : நந்தா (மௌனம் பேசியதே), பாவ்னா
      3. பட்டணத்தில் பூதம் : பிரசன்னா, மீரா ஜாஸ்மின்
      4. தூக்கு தூக்கி : சூர்யா, கோபிகா
      5. மூன்று முகம் : பசுபதி (விருமாண்டி ‘கொத்தாளன்’), நவ்யா நாயர் (ராஜலஷ்மி வேடத்திற்கு), சினேஹா (ராதிகாவாக), சமிக்ஷா (சில்க் ஸ்மிதாவிற்கு)

    4. Angelina Jolie sparks casting controversy – Race in America – MSNBC.com :: பெரியார் திரைப்படத்தில் குஷ்பு மணியம்மையாக நடிப்பது உள்ளூர் விவகாரம். இது ஹாலிவுட் பிரச்சினை.

      டேனியல் பேர்ல் பாகிஸ்தானில் அல்-க்வெய்தாவினால் கொல்லப்பட்டார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழின் செய்தியாளர். தீவிரவாதத்திற்கு பலியானார். கத்தி தூக்காமல் பேனா தூக்கியவர். கத்தியால் கொடூரமாக மரணமடைந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கர். இவரின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

      நிஜ வாழ்க்கையில் டேனியலின் மனைவி மரியான் பேர்ல் (Mariane Pearl) எழுதிய A Mighty Heart: The Brave Life and Death of My Husband Danny Pearl என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டி திரைப்படம் தயாராகிறது. மரியான் க்யூபாவை சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும் நெதர்லாண்டுக்காரருக்கும் பிறந்தவர். ஆஞ்சலினா ஜோலியோ அக்மார்க் வெள்ளை ரகம்.

      சலசலப்புக்கு அஞ்சாமல், ஆன்ஜலினா Daniel Pearl Foundationக்கு $100,000 நன்கொடை வழங்கியிருக்கிறார்.

      என்னுடைய சலசலப்பு கேள்வி: பெரியார் படத்தில் நடிப்பதற்காக குஷ்பு எந்த தொண்டு அமைப்பிற்காக நிதி தர்மம் செய்துள்ளார்?

    5. Chup Chup Ke (2006): தயவு செய்து நான் பட்ட கஷ்டத்தை நீங்களும் படவேண்டும் என்றால் மட்டும் பார்க்கலாம். ஹிந்தியில் கேவலமான படங்கள் வருவதில்லை என்று யாராவது சொன்னால், வாக்குவாதத்தில் பங்குபெற உபயோகமாகும் பொருள்.
    6. காலச்சுவடு

    | |

    Chennai Airport land acquisition opposed – Citizens displaced

    பொழிச்சலூரைக் காப்பாற்றுங்கள்: மேதா பட்கர் வந்தார். அனைத்து தினசரிகளிலும் செய்தி வந்தது.

    தினமணி செய்தி இங்கே: Save Pozhichaloor Houses from Airport Extension Project

    சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    சில தகவல்கள்:

    1. முன்னூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 1457.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கி இருக்கிறார்கள்.
    2. நாலாயிரம் வீடுகள்; 15,000 குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    3. நான்கு கோவில்கள், இரண்டு தேவாலயங்கள், ஒரு மசூதி, 558 வீடுகள், 156 குடிசைகள், 156 மாடி வீடுகள் உட்பட 883 கட்டிடங்கள் இடிக்கப்படும்.
    4. புதிய விமான நிலையத்தை முடிக்க இரண்டாயிரம் கோடி (20,00,00,00,000) செலவழிக்கிறார்கள்
    5. புதிய விமான நிலையத்தை முடிக்க மூன்று வருடங்கள் ஆகும்.
    6. புதிய விமான தளத்தை (terminal) முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும்.
    7. புதிய விமான தளத்தை (terminal) முடிக்க 650 கோடி தேவைப்படும்.
    8. பாதிக்கப்பட்டோர் சார்பாக மத்திய மந்திரி பிரஃபுல் படேலை, சக அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்திருக்கிறார்.
    9. சென்னை மீனம்பாக்கத்தின் அண்ணா & காமராசர் விமான நிலையத்தில் கடந்த வருடத்தில் – 43.2% பயணிகள் அதிகரிப்பு
    10. சென்னை மீனம்பாக்கத்தின் அண்ணா & காமராசர் விமான நிலையத்தில் கடந்த வருடத்தில் – 37.5% விமானப் போக்குவரத்து அதிகரிப்பு
    11. ஜூலை 2000த்தில் திட்டத்திற்கு கால்கோள்.
    12. செப்டம்பர் 2005 வரை மணப்பாக்கம், தாரப்பாக்கம், தண்டலம், கோவூர், கௌல் பஜார், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பெரிபணிச்சேரி ஆகிய கிராமத்தின் நிலங்களைக் கொண்டிருந்தது.
    13. டிசம்பர் 14, 2005 கொடுக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தில் பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் திடீரென்று இணைந்தது.
    14. வீடு கையை விட்டுப்போகும் நிலையில், திருமணங்கள் கூட தடைப்படுகின்றன.

    சில கேள்விகள்:

    1. சென்னையில் துணை நகரம் அமைப்பதை தடுத்த பெரும் பணக்காரர்களும், நிலச்சுவான்தார்களும், கூட்டணிக் கட்சிகளும்தான், இந்தத் திட்டத்தை மாற்றுவதற்கு காரணமா?
    2. யாருமே விட்டுக்கொடுக்கா விட்டால் விமான நிலையத்தை எங்குதான் அமைப்பது?
    3. நஷ்ட ஈடாக எவ்வளவு கொடுக்கிறார்கள்?
    4. மணமுடிப்பைக் கூட வீட்டை காரணம் காட்டி தட்டிக் கழிப்பவர்களை, வரதட்சிணை வழக்கு போட்டு முட்டிக்கு முட்டி தட்ட முடியுமா?
    5. இன்றைய கூட்டணி ஆட்சியில் அங்கத்தினராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு இன்னும் பலமாக குரல் எழுப்புமா?
    6. இன்றைய கூட்டணி ஆட்சியில் அங்கத்தினராக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), துணை நகரத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு கவனிப்பைக் கோரி கைவிடச் செய்கிறது?

      தொடர்புள்ள செய்திகள்:

      1. வண்டலூர் அருகே 30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு : துணை நகரம் அமைக்கும் திட்டம்: உடனே கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்
      2. சேர்த்து வைத்த துணைநகரம் :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! – எஸ்.சரவணகுமார் (ஜூனியர் விகடன்)

    துணை நகரம் (தினமணி தலையங்கத்தில் இருந்து):

    எந்த ஓர் அபிவிருத்தித் திட்டமானாலும் அது மக்களில் ஏதோ ஒரு பிரிவினருக்கு ஓரளவில் பாதிப்பை விளைவிப்பதாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற அளவுகோல் பின்பற்றப்படுவதானால் மேட்டூர் அணையில் தொடங்கி சென்னை சென்ட்ரல் நிலைய விரிவாக்கம் வரை எந்த ஒரு திட்டத்தையும் நம்மால் நிறைவேற்றி இருக்க முடியாது. ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உலகெங்கிலும் இந்த நோக்குத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டநோக்கில் மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆராய வேண்டுமே தவிர அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது.

    கடைசியாக என்னுடைய ரெண்டணா:
    என்னுடைய வீடு, பாதிக்கப்பட்ட பகுதியில் இல்லாததால்தான் இப்படி சாவகாசமாக நீட்டி முழக்கி எழுத முடிகிறது. மேதா பட்கர் போல் உறைவிடம் விட்டு அகல்வோர் அனைவருக்கும் அயராமல் ஓட முடிவதை பாராட்ட மட்டுமே மனம் நினைக்கிறது.


    | | | | |