Category Archives: Uncategorized

Cartoon of the Day

From Junior Vikadan thru Dinakaran

Mayavathi Disproportionate Assets

செய்தி: ஐ.பி.என். | ஐ.எஃப்.ஜே.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

‘ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு’, என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

நன்றி: விக்கிபுக்ஸ்

தற்காலத்திற்கு ஏற்ற உல்டாக்கள்:

1. தந்தை மகற்காற்று நன்றி சொத்தை
மகனுக்கே விற்கும் செயல்.

2. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்சொத்தை
எங்குபெற்றான் என்பவனைக் கொல்.


| |

Ephemeral Gilli

கில்லி-க்காக விளம்பரம்

தமிழ்மணம் மேய – 4 மணி நேரம்
வலைப்பதிவெழுத – 2 மணி நேரம்
மின்மடலாட – 1 மணி நேரம்
அரட்டையடிக்க – அரை மணி நேரம்
பின்னூட்டமிட – ரெண்டு நிமிஷம்
வோர்ட் வெரிஃபிகேஷன் தட்டச்ச – மூணு நிமிஷம்
தவறான வார்த்தையை உள்ளிட்டதை சரி செய்து மீண்டும் தட்டச்ச – நான்கு நிமிஷம்

குழப்பமில்லாமல் தமிழ் இணையத்தை கில்லியில் பார்ப்பது – டைம்லெஸ் லெஸ் டைம்

  • எழுதத் தூண்டியது: மாஸ்டர் கார்ட் ப்ரைஸ்லெஸ் விளம்பரங்கள்
  • உங்களுக்கும் உருப்படியாகத் தோன்றினால் ‘விலைமதிப்பற்றது‘ தளத்துக்கு சென்று போட்டியில் கலந்துக்குங்க… பரிசுகளை அள்ளுங்க…

  • | |

    Oldies Infested Congress – Dinamalar.com

    பதவி சுகம் கண்ட பழைய முகங்கள்

    “காங்கிரஸ் கட்சிப் பணிக்கு மூத்தவர்கள் வர வேண்டும். அரசியல் பதவிகள் புதியவர்களுக்கு தர வேண்டும்’ என்று காமராஜர் அறிவித்துவிட்டு, முதல்வர் பதவியை துறந்தார். அப்படிப்பட்ட வாய்ப்பில் தான் பக்தவச்சலம் முதல்வராக வர முடிந்தது.

    எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்: இவர் இரண்டு முறை எம்.எல்.ஏ., தேர்தலிலும், ஒரு முறை எம்.பி., தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். ஒரு முறை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மூன்று முறை (15 ஆண்டுகள்) எம்.எல்.ஏ., பதவியும் வகித்து தற்போது சட்டசபை தலைவராக பணியாற்றி வருகிறார்.

    குமரி அனந்தன்: இவர் இரண்டு முறை எம்.பி., தேர்தலிலும், எம்.எல்.ஏ.,தேர்தலில் ஒரு முறையும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    டென்னிஸ்: ஆறு முறை எம்.பி.,யாக பணியாற்றி ஒரு முறை எம்.பி., தேர்தலில் தோல்வி அடைந்தவர். இவரும் 19 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

    நாகர்கோவில் மோசஸ்: ஒரு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றியுள்ளார். ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரும் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    கோவை வீ.கே.லட்சுமணன்: ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    ஊட்டி எச்.எம்.ராஜூ: இவர் ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    யசோதா: மூன்று முறை எம்.எல்.ஏ.,தேர்தலில் வென்று 15 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.

    கே.ஆர்.ராமசாமி: திருவாடனையில் இவர் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    வேலூர் ஞானசேகரன்: இவர் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    நிலக்கோட்டை பொன்னம்மாள்: இவர் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    ரிஷிவந்தியம் சிவராஜ்: இவர் ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    பாரமலை: இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    சுதர்சனம்: இவர் மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றியுள்ளார்.

    வள்ளல்பெருமான்: மூன்று முறை எம்.பி.,யாகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை எம்.பி., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி வரும் வள்ளல் பெருமான், எம்.பி.,யாக மட்டும் 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    TN Election Posters from Tamil Dailies

    நிழற்படத்தைக் க்ளிக்கினால் பெரிய படம் தெரியும்…

    ஒரு மிருகம் கூட்டை விட்டுத் தப்பிச்சுடுச்சா?

    வெளியான ஈ-தினசரி: தமிழ் முரசு

    எதிர்மறை விளம்பரம் திமுக-விற்கு மட்டும் சொந்தமா?

    நுணுக்கிப் படிக்கத் தெரிந்தவர்கள்தான் அதிமுக அனுதாபிகளா?

    வெளியான ஈ-தினசரி: தினகரன்


    | |

    Heartfulfilling Jeyalalitha ADMK Govt. – Poster fo…

    Heartfulfilling Jeyalalitha ADMK Govt. – Poster for Amma (Dinagaran.com) Posted by Picasa

    Heartbreaking Jayalalitha Govt. – Poster for DMK (…

    Heartbreaking Jayalalitha Govt. – Poster for DMK (Dinakaran.com) Posted by Picasa

    Velachery Dog – Deer incident – Thamizh Murasu 

    Velachery Dog – Deer incident – Thamizh Murasu Posted by Picasa

    Nayinaar Nagendran’s Poster/Banner in Thirunelveli…

    Nayinaar Nagendran’s Poster/Banner in Thirunelveli – Tamil Murasu Posted by Picasa

    Reactions to Varanasi Blasts

    செய்தி: ரீடிஃப் | கூகிள் தேடல் | IBNLive : Narendra Nag’s Blog

    1. நடுநிலைவாதி: கண்டிக்கிறேன்.

    2. மறுமொழிவாதி: நன்றி!

    3. இடதுசாரி அலசல்வாதி: காசியை இன்னொரு அயோத்தியாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறது. நடக்கப்போகும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு அவர்களே குண்டுவெடிப்பைத் தூண்டியிருக்கிறார்கள்.

    4. நாத்திகவாதி: கடவுள் காப்பாற்றுவான் என்கிறார்களே… இறந்தவர்களை ரட்சிக்க இறைவனால் முடியவில்லையா?

    5. குரூர நகைச்சுவைவாதி: கோவிலுக்கு சென்றால் மோட்சம் கிட்டும் என்றார்களே? இவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

    6. ஹிந்துத்வாவாதி: காசி விச்வநாதருக்குப் பக்கத்தில் இருக்கும் மசூதியை இடித்துவிட்டு அன்னபூரணிக்கு புனருத்தாரணம் செய்வது மட்டுமே தீர்வு.

    7. அமெரிக்க வெளியுறவுத்துறை: இந்தியாவுக்கு தற்போது செல்லுதல் வரவேற்கத்தக்கதல்ல. பாதுகாப்பு குன்றிய நிலையில், வெளிநாட்டுக்காரர்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவதால், அமெரிக்கர்கள், உத்தர பிரதேசம், பிஹார், உத்தரான்சல் மாநிலங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    8. முற்போக்குவாதி: இந்த குண்டுவெடிப்பை வரவேற்கிறேன். இது போன்ற வீரதீரச்செயல்களால்தான் நாட்டில் இருக்கும் அவலங்கள் கவனிப்புக்குள்ளாகிறது. பிரச்சினையை மூடி மறைத்து புஷ்ஷை வரவேற்கும் செய்கைகள் உலக அளவில் திரும்பிப் பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினரை அடக்கியாளும் வரை இவ்வித வெடிப்புகள் தொடரும் என்பதை தேசியவாதிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை.

    9. தமிழக பி.ஜே.பி. அரசியல்வாதி: கோவை குண்டுவெடிப்பை மறந்து விட்டோமா? தமிழகம் வாரணாசியாக மாறாமல் இருக்க பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்கள்.

    10. ஆளுங்கட்சி: குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தோம். மிகவும் வருந்தத்தக்கது. நாசகார சக்திகளை அடையாளம் கண்டுபிடிப்பதில் காவல்துறை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. கூடிய சீக்கிரமே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மேலும் பல திட்டங்களை முன்பே அறிந்து முறியடித்து வருகிறோம்.


    | |