Category Archives: Uncategorized

Elections – 2060

தேர்தல் 2060 – சில குறிப்புகள்

தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டியில் என்னுடைய பதிவு:

  1. 2060-இல் ஒரு கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கும்?

    • 1
    • 100
    • 1000
    • தலா ஒரு குடும்பத்துக்கு ஒரு கட்சி என்று பார்த்தால்…
  2. 2060-இல் தேர்தல் எப்படி நடக்கும்?

    • இணையம்/தொலைபேசி/கணினிகள் மூலம்
    • வாக்குசாவடிதான்
    • கருத்துக் கணிப்புகள் மூலம்
    • தேர்தலா???
  3. 2060-இல் வெற்றிவாய்ப்புள்ள பெண் வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடுவார்கள்?

    • தொகுதிக்கு ஒருவராவது
    • மாவட்டத்துக்கு ஒருத்தர்
    • மாநிலத்துக்கு ஒருத்தர்
    • பெண் வேட்பாளர் என்று கணக்குப் பார்ப்பது அருகி விடுமளவு பரவலான பங்களிப்பு
  4. 2060-இல் வேட்பாளர் தேர்வில் எது முக்கியமாகக் கருதப்படும்?

    • ஜாதி
    • பணம்
    • வாரிசு
    • ஒவ்வொரு வேட்பாளரும் கட்சியின் உள்-அமைப்பு (primary) தேர்தலில் வெல்வது
  5. 2060-இல் கருணாநிதியின் எந்த வாரிசின் கையில் திமுக இருக்கும்?

    • திமுக (மாறன்)
    • திமுக (ஸ்டாலின்)
    • வாரிசு அல்லாத – திமுக (வைகோ)
    • ஹூ இஸ் கருணாநிதி?
  6. 2060-இல் ஊடகங்கள் எப்படி தேர்தலை கண்காணிக்கும்?

    • உள்ளூர் வலைப்பதிவுகளுக்கு, வேட்பாளர்களின் தினசரி அரட்டை நேரம்
    • தொலைக்காட்சியில், அரசியல் கட்சித் தலைவர்களின் நேரடி விவாதம்
    • தேர்தலை எல்லாம் ஊடகங்களில் பார்க்க எங்கே நேரம்? வீட்டுக்கு வீடு வருகை
    • அதே தினகரன்; தினமலர்; தி ஹிந்து; வலைப்பதிவு குமுறல்கள்
  7. 2060-இல் திரை நட்சத்திரங்களின் தாக்கம் எப்படி இருக்கும்?

    • ஐஷ்வர்யா ரஜினியும், ஸ்ருதி கமலும், முக்கிய கட்சித் தலைவர்கள்
    • விஜய்க்கு ஆயிரம் பில்லியனா? என்னும் வதந்திகளின் உலாவலோடு
    • சன், ஜெயா டிவிகளில் தேர்தலுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரித்த, முழுநீளப் படங்களோடு
    • விசிடி நட்சத்திரத்தைத்தானே கேக்கறீங்க?
  8. 2060-இல் எது முக்கியமான பிரச்சினை?

    • தற்பால் திருமணம், அரவாணிகளுக்கு சம உரிமை
    • தலித் ஒடுக்குமுறைகள், பிற்படுத்தப்பட்டவருக்கு உரிமை
    • இலவச இணைய வசதி, ஏழைகளுக்கு சல்லிசான விலையில் மகிழுந்து
    • சுற்றுச்சூழல் கொள்கை, உடல்நலப் பாதுகாப்பு வரைவு, வரிவிதிப்பு வித்தியாசங்கள், கல்வித் திட்டங்கள்
  9. 2060-இல் வலைப்பதிவுகளின் பங்களிப்பு என்ன?

    • ஒவ்வொரு முக்கிய கட்சிக்கும், நூறாயிரம் வலைப்பதிவுகள் இருக்கும்.
    • ஒவ்வொரு வேட்பாளரும் சொந்தமாக, தினசரி வலைப்பதிவார்.
    • கட்சிகள், வேட்பாளர்களின் தகிடுதத்தங்கள் உடனடியாக அம்பலமாகி, வாக்காளரை சென்றடையும்.
    • கலவரங்களை ஒருங்கிணைக்கப் பயன்படும்.
  10. 2060-இல் தேர்தல்…

    • வன்முறை + வாக்காளரை மிரட்டல் + கலவரம்
    • நேர்மை + கொள்கை + கண்ணியம்
    • கூட்டணி + இனம் + அதிகார பலம்
    • I have better things to worry about…

| |

Vikadan on Mr. Voter

தேர்தல் குதிரைகள் :: மாண்புமிகு வேட்பாளர் – எஸ். உமாபதி (2004-இல் எழுதியது)

‘இவர் காரெக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!’ என்று ராஜதந்திரிகளான அரசியல் தலைவர்களே ஆதங்கப் படுகிறார்கள். ‘அரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர் என்றெல்லாம் இவரை எடை போட முடியாது. ரொம்ப சாமர்த்தியசாலி. புத்திசாலித்தனமாக முடிவெடுப்பார். தப்பு செய்யும் அரசியல்வாதிகளைத் தன் கையிலிருக்கும் வோட்டு என்ற ஆயுதத்தால் கடுமையாகத் தண்டித்து, மண்ணைக் கவ்வ வைப்பார்’ என்று அரசியல் விமரிசகர்கள் அடிக்கடி இவரைப் பற்றி எழுதுவார்கள்.

சில அரசியல்வாதிகள் இந்த வாதத்தை அப்படியே அலட்சியப் படுத்திவிட்டு,

‘அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை… பட்டைச் சாராயத்தையும் பத்து ரூபாய் நோட்டையும் கொடுத்து இவரைச் சுலபமாக விலைக்கு வாங்கி விடலாம்’

என்பார்கள்.

ஒவ்வொரு தேர்தல் ரேஸிலும் எத்தனையோ குதிரைகள் ஓடினாலும் அதில் எந்தக் குதிரையை ஜெயிக்க வைப்பது, எதைத் திணறடிப்பது என்று தீர்மானிப்பது இவர்தான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா. இந்தத் திருவிழாவில் இவர் தான் ராஜா.. ஒரு நாள் ராஜா!

இவரை அலட்சியப்படுத்திய, காத்திருக்கவைத்த, கண்டுகொள்ளாத பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் அந்தச் சமயத்தில் கூழைக்கும்பிடு போடுவார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இவர் நிற்பார். இவர் வாழ்த்துவாரா… வீழ்த்துவாரா எனப் புரியாமல் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள் கும்பிடு தலைவர்கள்.

‘நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி’ என்பதால், இவர் ஆயுசு முழுக்க காங்கிரஸுக்கு விசுவாசமாக இருப்பார் என அந்தக் கட்சி நம்பியது. ஆனால், எமர்ஜென்ஸி கொடுமைகளை அனுபவித்த பிறகு, ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியைத் தோற்கடித்தது இவர் கொடுத்த பெரிய ‘ஷாக்’! ஒரு பிரதமரையே தோற்கடிக்கிற பயங்கரமான ஆசாமி இவர் என்பதை அப்போதுதான் உலகமே உணர்ந்தது.

இந்திராவைத் தோற்கடித்த இவர், அங்கு தேர்ந்தெடுத்தது ராஜ்நாராயண் என்ற அரசியல் ஜோக்கரை! இந்திராவைத் தோற்கடித்தது மிஸ்டர் வாக்காளர்தான் என்பதை உணராமல், தன் ‘பலத்தின்’மீது அபார நம்பிக்கை கொண்டு ராஜ்நாராயண் ஆடியபோது, அவரை அரசியலில் பெரிய குழிதோண்டிப் புதைத்து மீளவே முடியாமல் செய்தார்.

‘மேதாவித்தனம் பாதி… பாமரத்தன்மை பாதி.. கலந்து செய்த கலவை இவர்’ என்பது இவரது பயோடேட்டா. இதனாலோ என்னவோ இவர் பல சமயங்களில் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்துவிட்டு லேட்டாக வருத்தப்படுவார். ஆனால், செய்த தவற்றை மறு தேர்தலிலேயே திருத்திக் கொள்வார். ராஜீவ் காந்திமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவரைத் தோற்கடித்த பெருமைக்குரியவர் இவர்தான். அப்புறம் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் அடித்துக்கொண்ட போது, தன் தவற்றை உணர்ந்து அடுத்த தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தவரும் இவர்தான்!

ஆனால், இவரது பெரிய மைனஸ் பாயிண்டே அடிக்கடி பொங்குகிற அனுதாப உணர்வுதான். யாராவது தலைவர் இறந்தால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுபோல அவர் சார்ந்த கட்சிக்கு வாக்குகளைக் குத்தித் தள்ளி விடுவார். அந்த விஷயத்தில் கடல் அலை மாதிரி கண்ணீர் அலை கிளப்புவார்.

அடிக்கடி மாற்றங்களை விரும்புகிற டைப் இவர். அதனால் சமயங்களில் குயுக்தியாக யோசிப்பார். ‘நான் உங்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கேன். எனக்கு வோட்டுப் போடுங்க’ என்று யாராவது வந்து கேட்டால், ‘இவரே இவ்வளவு செய்திருக்காரே… இவரை எதிர்க்கறவரை ஜெயிக்கவெச்சா அவர் இன்னும் ரெண்டு மடங்கு செய்வாரோ?’ என யோசிப்பார். அதிலும் சிலசமயம் மோசம் போவார்!

ராம்விலாஸ் பாஸ்வான் ஒரு தடவை இவரைப் பற்றி வெறுத்துப்போய் அடித்த காமெண்ட் ரொம்ப பிரபலம். ‘அமைச்சராக இருந்து பல நன்மைகள் செய்தபோதும் ஜெயிக்க வெச்சாரு. எதிர்க்கட்சி எம்.பி.யா இருந்து ஒண்ணுமே செய்யாதபோதும் நாலு லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வெச்சு, என் பெயரை கின்னஸ் புக்கிலும் போட வெச்சாரு. இவரு என்ன நினைக்கிறார்ன்னே புரிஞ்சுக்க முடியலை.’

‘ராமன் ஆண்டால் என்ன… ராவணன் ஆண்டால் என்ன’ என்பது இவர் அடிக்கடி பாடும் பாட்டு. மிக நேர்மையான தலைவர்கள் இவரிடம் வந்தால்கூட, ‘போப்பா! நீயெல்லாம் அரசியலுக்கு வேஸ்ட்’ என தோற்கடித்து துரத்துபவர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கிரிமினல் சட்டத்தில் இருக்கிற எல்லா செக்ஷன்களிலும் சிக்கி சிறையிலிருக்கிற ஆசாமியை ஜெயிக்கவைப்பார்.

இந்தியாவில் ஒரு பொதுத்தேர்தலின் செலவு ஆயிரம் கோடிக்கு மேல். அரசியல் கட்சிகள் தேர்தலுக்குச் செலவழிப்பது அதைவிடப் பத்துமடங்கு அதிகமான பணம். பலருக்கு செலவு கட்டுப்படியாகவில்லை. ‘இவரை எப்படித் திருப்திப்படுத்துவது என்று தெரியவில்லையே. அது தெரிந்தால், அதை மட்டும் செய்துவிட்டு ஜெயித்துக்கொண்டே இருக்கலாமே’ என்று யோசிக் கிறார்கள். ‘கொஞ்சம் பர்ஸனல் டச்… கொஞ்சம் அன்பான பேச்சு… பெயர் சொல்லிக் கூப்பிடுகிற அளவு நெருக்கம் காட்டிவிட்டால் போதும்… இவரைக் கவிழ்த்து விடலாம்’ என்று தேர்ந்த தேர்தல் நிபுணர்கள் பலர் கணித்துச் சொன்னார்கள். ஆனால், அதெல்லாம்கூட வேலைக்கு ஆகாது என்று நிரூபித்துவிட்டார் நம்ம ஆள்.

இப்போதும் அப்படித்தான்.. ‘ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே. இந்தியா ஒளிர்கிறது. உனக்காக நல்ல ரோடு போட்டாச்சு.உன் எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கு’ என்று சொல்லி பி.ஜே.பி. (அதிமுக?) இவரை வளைக்கப் பார்க்கிறது.

‘உனக்கு வேலையில்லை… சாப்பாடு இல்லை… எதிர்காலம் இல்லை… எல்லாத்தையும் நாங்க தர்றோம்’ என்கிறது காங்கிரஸ் (திமுக?).

இவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, மையமான ஒரு மர்மப் புன்னகையுடனே அலைகிறார். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாமல் ஆளாளுக்கு கருத்துக் கணிப்பு பூதக்கண்ணாடி வைத்து இவர் மனசைப் படிக்கப் பார்க்கிறார்கள்.

அது லேசில் பிடிபடுகிற விஷயமா என்ன?!

Reduplicative paramnesia

கார்ட்டூன்விகடன் : சுவடுகள் – 2004 பாராளுமன்ற தேர்தல் குறித்து மதன்

Blogs & the Blogging Bloggers who Hype them

தலைப்பு உதவி: Lies and the Lying Liars Who Tell Them: A Fair and Balanced Look at the Right: Al Franken

கருத்துப்படத்துக்கு நன்றி: ஜிட்ஸ் – washingtonpost.com


| |

2004 Loksabha Eelction Memoirs

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ::

கோயில்களில் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றைப் பலிகொடுக்கக்கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்ததே! அது, பாரம்பரியமாக குலவழிபாடு முறையில் எம்மக்கள் செய்துவந்த சடங்குகளில் கைவைத்து விட்ட இந்துத்வா திணிப்புதான்.

“பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் துணை ராணுவம் வரவேண்டும் என பேசியுள்ளீர்களே.. தமிழகம் பீகாராகிவிட்டதா என்ன?”

“தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவிடாமல் பா.ம.க-வினர் தடுத்துவிடுவார்கள் என்பதைத்தான் கடந்த கால தேர்தல்கள் காட்டின. தமிழகக் காவல்துறையினரால் இவர்களின் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதால்தான் அப்படி ஒரு கோரிக்கை வைத்தேன்.”


தாமரைக்கனி ::

“தமிழ்நாட்டுல இப்போ இன்பத் தமிழன் அதாவது இன்பமான தமிழன் யாரு?”

“‘இன்பத் தமிழனா?’ அது யாரு? ஓ… அப்பிடி வர்றீங்களா! தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடி நம்மளைச் சந்தோசப்படுத்தி அதுல இன்பம் காண்ற கலைஞர்தான் எனக்கு உண்மையான இன்பத்தமிழன். மத்தபடி அப்பிடிப் பேர் வெச்சிட்டுத் திரியறதெல்லாம் சும்மா வெத்துவேட்டு!”


வைகோ ராமேஸ்வரத்தை வந்தடைந்தபோது இரவு மணி ஒன்பதரை.

“வைகோ ராமேஸ்வரத்தில் பேசுகிறானே.. கடல்கடந்து யாராவது வந்திருக்கிறார்களா என்று க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கண்கள் அலைமோதுவதையும் நான் பார்க்கிறேன்”

என டைமிங்காக ஜோக்கடிக்கிறார்.

வைகோ சஸ்பென்ஸ்!

டெல்லிக்குப் போற வாய்ப்பை உதறிட்டு, சிவகாசியைத் தூக்கி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்கிட்ட குடுத்துட்டு, தேர்தல் பிரசாரத்துல பிஸியா இருக்காரு வைகோ. ‘அடுத்து என்ன பண்ணப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ்’னு அடிக்கடி பத்திரிகைக்காரங்ககிட்ட சொல்றாரு.

2006 சட்டமன்றத் தேர்தல்தான் அவரோட லட்சியமாம். ‘அதுக்குள்ள புத்தம்புது பலம் திரட்டிப் பெரிய சக்தியா தேர்தலை அவர் சந்திப்பாரு’னு வைகோவோட இருக்கிறவங்க சொல்றாங்க.. அப்படி என்ன திட்டம் வெச்சிருக்காருனுதான் புரியலை!


விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்..?
“அரசியலைப் பத்தி நான் எந்த முடிவும் இப்ப எடுக்கல. இந்தத் தேர்தல்ல யாருக்கும் ஆதரவு கொடுக்கறதாகவும் முடிவு பண்ணவேயில்லை. அரசியல்வாதிங்க என் மன்றத்து தோழர்களை சந்திச்சு ஆதரவு கேட்டிருக்கலாம். அதுல தப்பு இல்ல.. என்னை சந்திக்க வந்தாலும் நானும் அவங்கள சந்திக்க முடியாதுனு சொல்லப்போறதில்ல. ஆனா நாங்க யாரையும் ஆதரிக்க போறதில்லங்கிறதுதான் உண்மை. ஜனநாயகக் கடமையைச் செய்யற வகையில என் மன்றத்தினர் தவறாம வோட்டு மட்டும் போடுவாங்க.

அதே போல, இந்த தேர்தல்ல என் மன்றத்தினர் போட்டியிடப் போறதில்ல. அரசியல்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவாத்தான் இருக்கேன். என் ரசிகர்களும் அப்படித்தான். என் பேச்சை மீறி ஒரு துரும்பைக்கூட அவங்க அசைக்க மாட்டாங்க.

அரசியல்ங்கிறது தவிர்க்க வேண்டிய விஷயம் கிடையாது.. நான் சொன்னா சொன்னபடி அரசியல் களத்துல குதிப்பேன்” என்று விடைகொடுத்தார் கேப்டன்!


வேட்பாளர்களில் அதிக பசை உள்ளவர்?
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றதுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் காட்டியிருக்கும் சொத்துக் கணக்குப்படி… மிகபெரிய பணக்காரராக இருப்பது, ப.சிதம்பரம்தான்! இவர் தன் குடும்பத்துக்கு சுமார் 15 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் நிலவரம்.

பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் சொத்துமதிப்பு, நான்கு கோடி ரூபாய்தான்! ஆனால், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது!

தி.மு.க.வைச் சேர்ந்த கரூர் தொகுதி வேட்பாளரான கே.சி.பழனிசாமி, கொடுத்திருக்கும் கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு ஐம்பத்திரண்டு கோடி!

நன்றி: ஆனந்த விகடன் & ஜூனியர் விகடன்

This Election… That Poll

2001 Election Dejavu

1. Opinion poll predicts ‘edge’ for DMK front: திமுக 123-130 வரை வெல்லும்.

2. All eyes on voter turnout: வாக்கு சதவிகிதம் அதிகரித்தால் ஆளுங்கட்சி தோற்கும்.

3. Opinion polls are a Karunanidhi ploy: Vaiko: மதிமுகவை அழிக்கக் கருத்துக் கணிப்புகளை கலைஞர் பயன்படுத்துகிறார் என்று வைகோ குற்றச்சாட்டு.

4. It is difficult to work with AIADMK: Naidu: ‘அதிமுகவுடன் எந்த கட்சியும் ஒத்துப் போவது ரொம்ப கஷ்டம்’ – வெங்கையா நாயுடு.

5. Online poll fever: குமுதம் முதல் அம்பலம் வரை.

இதுவெல்லாம் போகட்டும்… வைகோ-வின் ‘இரண்டாவது மனைவி’யைக் குறித்து விசாரித்தபோது சொன்ன முதல் மரியாதை டயலாக், யாருக்காவது நினைவிருக்கிறதா? செய்தியின் சுட்டி கைவசம் உண்டா???

நன்றி: தி ஹிந்து – Copyrights © 2001 The Hindu

Product Positioning

(c) Purina Dog Food

சன் டிவியில் திமுகவும் உதயசூரியனும்

1. ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சிக்கு பதிலாக திமுக தலைவர்களுடன் பேட்டி ஒளிபரப்பபாகிறது. முக ஸ்டாலின் பேட்டியில் சொன்ன குட்டிக் கதை:

‘வீட்டைத் திருட வந்தவன் காவல் நாய்க்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் போடுகிறான். நாய் யோசிக்க ஆரம்பித்தது. நாலரை வருஷமா இந்த வழியாகத்தான் தினசரி போய் வருகிறான். என்றுமில்லாமல், திடீரென்று ஏன் இந்த பாசம்? எதற்கு பிஸ்கெட் போடுகிறான்? பொதுமக்கள் யோசிப்பாங்க… கடந்த நாலரை வருஷம் இல்லாமல் எப்படி இன்று மட்டும் இலவசத் தீனி கொடுக்கிறான்? என்று சிந்திக்கணும்’

குயுக்தி: நாலரை வருஷம் முன்னாடி இருந்தவன் திடீரென்று இந்த வழியா வந்திருக்கான்… தடாலடியா இலவச ஃப்யூரினாவை எதற்காக ஆசை காட்டுகிறான்?

2. தேர்தல் கூட்ட சன் செய்தி ஒளிபரப்பில் கருணாநிதியின் உரை:

‘நான் என்பது திமுக ஆட்சியில் இருக்காது. நாம் என்பது மட்டுமே ஒலிக்கும்! நமக்கு எது நன்மை தரும், நாம் எப்படி உயர்வோம் என்று பொதுநலனை முன்வைப்பது திமுக கூட்டணியின் கொள்கை’

குயுக்தி: நாம் என்றால் தயாநிதியும் ஸ்டாலினும்தானே?

3. மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை மட்டுமே டாஸ்மாக் (Tamil Nadu State Marketing Corporation) விற்பதன் மூலம் தமிழக அரசுக்குக் கோடிக்கணக்கான நஷ்டம்.

குயுக்தி: மிடாஸ் போன்ற புதிய நிறுவனங்களை அதிமுக அரசு கை கொடுத்து வளர்த்து விடுவதை திமுக வெறுக்கிறது.

4. கே டியில் ஒளிபரப்பான ‘மௌனம் சம்மதம்‘ படத்தில் ஓரளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமாரின் காட்சிகள் முழுவதுமாக வெட்டப்பட்டது.

குயுக்தி: நல்லவேளை! ‘நட்புக்காக‘ திரையிடவில்லை. விஜயகுமார், சரத்குமார், சிம்ரன் எல்லோர் நடித்த காட்சிகளும் நீக்கியிருப்பார்களே…

5. முன்பெல்லாம் கால் கடுக்க நின்று கொண்டோ, தரையில் அமர்ந்தோ தேர்தல் பேச்சுக்களை கேட்க வேண்டும். மக்களை மதித்து இருக்கைகள் போட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

குயுக்தி: வீட்டில் உட்கார்ந்துகொண்டே கச்சிதமாக படத்தொகுப்புடன் முக்கியமான கருத்துக்களை மட்டும் ‘தங்க வேட்டை‘ நடுவே தடங்கலுக்கு வருந்தாமல், தடாலடியாக பிரச்சார ஒளிபரப்பும்போது, எதற்கு வேகாத வெயிலில் தேர்தல் கூட்டத்துக்குப் போக வேண்டும்?


| |

Rumour News

செய்தியாக கிடைத்த வதந்தி

1. ‘தேர்தலில் ஜெயலலிதா தோல்வி என்பது உறுதியாகி விட்டதாக உளவுத்துறை கணித்துள்ளது. திமுக கூட்டணியின் வெற்றியை ஒப்புக் கொள்ள முடியாத ஜெயலலிதா, ஜாதிக் கலவரத்தைத் தூண்டி விடத் திட்டமிட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன் ஜாதிக் கலவரம் அரங்கேறும் என்று தெரிகிறது’
– சன் செய்திகளில் பா.ம.க.வின் ராமதாஸ்

2. ‘கலைஞர் கைது மக்களிடையே அனுதாபத்தை உண்டாக்கியது. அதே போல் இன்னொரு நிகழ்வு நடந்தால் திமுகவின் வெற்றி உறுதியாகும். தேர்தலுக்கு ஓரிரண்டு நாளே இருக்கும்போது, கலைஞருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்வோம். தொடர்ந்து சன் டிவியில் கலைஞரின் வாழ்நாள் சாதனைகளை செய்தித் தொகுப்பாக காட்ட முடியும்; அதே சமயம் கைதுகளையும் மறு ஒளிபரப்ப வாய்ப்பு அமையும். தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் பிரச்சாரமாகக் கருதமாட்டார்கள்.’
– திண்டிவனம் நண்பரின் கணிப்பு

அவசியமான டிஸ்க்ளெய்மர்: வெற்று கிசுகிசுக்களைக் கண்டிக்கிறோம்.


| |

The Week says too Close Call

தி வீக்கின் கருத்துக் கணிப்புகளில் இருந்து:

திமுக வாக்கு சதவீதம்: 45 %
அஇஅதிமுக சதவிகிதம்: 42 %

இன்னும் 1.5 % வாக்குகள் திமுக பக்கம் திரும்பினால், 160-165 இடங்கள் வரை திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.

செய்தி: நியுஸ் டுடேயில் வெளிவந்ததாக சன் நியுஸ்

பி.கு.: மாலைச்சுடரிலும் தேடியாச்சு; கிடைக்கவில்லை.

Ju.Vi – Galatta Cocktail

நன்றி: ஜூனியர் விகடன்