Category Archives: Uncategorized

தேர்தல் தில்லுமுல்லுகள்

இது பல செய்தித்தாள்களிலும் அய்யா, அம்மா டிவியில் (கை நிறைய உப்போடு) பார்த்து அதிலிருந்து கொஞ்சம் சலித்ததும், கொஞ்சம் சொந்தமாக, நேரடியாக சிலரிடம் விசாரித்ததிலிருந்தும்…

1. கையில் இட்ட மையை அழித்து, பின் கள்ள வாக்கு போடுவது: நேற்று என் கையில் இட்ட மையை லேசாக அழித்துப் பார்த்தேன். மை காய்வதற்கு முன் இழுத்தால் கையோடு வந்துவிடுகிறது. நக்கலாமா என்று யோசித்துப் பார்த்தேன். அதில் என்ன ரசாயனம் இருக்கிறது என்று தெரியாததால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். தினமணி செய்தியில் இதற்கெனத் தனியாக ஓர் அமிலம் கிடைக்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதே செய்தியில் தினமணி நிருபர் அவ்வாறு நான்கைந்து முறை வாக்களித்த சிலரிடம் பேசியதும் தெரிய வந்தது. உண்மையாக இருக்கலாம்.

2. வாக்குச்சாவடியில் குளறுபடிகள்:
(அ) ஒரு வாக்குச்சாவடியில் வேலை செய்யும் அரசு அலுவலர், நாளின் இறுதியில் தானாகவே சில வாக்குகளை (ஏதோ ஒரு கட்சிக்குப்) பதிவு செய்ய முயன்றுள்ளார். அதைக் கண்ட தேர்தல் முகவர்கள் புகார் செய்ய, அவர்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
(ஆ) சில வாக்குச்சாவடிகளில் வேட்பாளரோ, அவரது ஆதரவாளர்களோ அடிதடியில் இறங்கியதாக திமுக, அஇஅதிமுக வட்டாரங்கள் இரண்டுமே குறை கூறின. ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தையே அதிரடியாக செயலிழக்கச் செய்ய சீமான் முயன்றதாகப் புகார்கள் வந்துள்ளன.
(இ) வாக்குச்சாவடிக்கு அருகில் கையில் செல்பேசியுடன் சில அரசியல்வாதிகள் ஆள்களைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். இது அனுமதிக்கப்படாத செயல். நான் வாக்களிக்கச் சென்றபோதே இதை கவனித்தேன்.
(ஈ) வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல். பல செய்தித்தாள்களில் இது வந்திருந்தாலும் நான் நேரடியாகவே இதனை உறுதி செய்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பகுதிகளில் (கோபாலபுரம்) திமுக, அஇஅதிமுக இருவருமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இரண்டு கட்சிகளிடமிருந்தும் மக்கள் பணம் வாங்கியுள்ளனர். அஇஅதிமுக தலைக்கு ரூ. 250-ம், திமுக அதற்குமேலும் தந்ததாக நான் பேசியவர்கள் சொன்னார்கள். இரண்டு பேரிடமும் பணம் வாங்கிக்கொண்டு யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு சிரிப்புதான் பதில். ஒருவேளை விஜயகாந்த் கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கலாம்:-)
(உ) வாக்களிப்போருக்கு நாள் முழுதும் உணவு. என் வீடு வாக்குச்சாவடிக்கு (National Public School, Lloyds Road) நேர் எதிரே. பலர் கூட்டம் கூட்டமாக எதிரே இருந்த காதி அலுவலகத்தின் வாயிலில் உட்கார்ந்து காலை உணவு, மதிய உணவு (பிரிஞ்சியாம்…) சாப்பிட்டுவிட்டு பின்னர்தான் வீட்டுக்குப் போனார்கள். கட்சி அலுவலர்கள் (பார்க்க திமுக போல் இருந்தது) தம் ஆதரவாளர்களுக்கு – அல்லது தம் கட்சிக்கு வாக்களிப்பவர்களைப் போல இருந்தவர்களுக்கு – நாள் முழுதும் சாப்பாடு வாங்கிக்கொடுத்தனர். வாக்களித்து வந்தபின்னும் அவர்கள் உட்கார்ந்து மாலை வரை வாங்கி சாப்பிட்டுவிட்டு, பின்னர்தான் நகர்ந்தனர். இன்று காலை செய்தித்தாளில் பிரியாணி கிண்டும் திமுக ஆதரவாளர்கள் படமும் இருந்தது.
(ஊ) 49 O? அப்பிடின்னா என்ன? பல வாக்க்குச்சாவடிகளில் 49 ஓ பிரிவு பற்றித் துளியும் புரிதல் இல்லை என்றும், மீறி 49 ஓ போடுவோம் என்றவர்களை “அது உங்களுக்கு நல்லதில்லை” என்ற மாதிரியான மிரட்டலும் வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(எ) வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. ஓரிடத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை ஒளிர்ந்ததாகச் செய்தி. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை – கருணாநிதி வாக்களிக்கும் சாவடியிலும் (இதுவும் எங்கள் தெருவில்தான் உள்ளது) இதுதான் நிகழ்ந்தது; பின்னர் சரி செய்யப்பட்டது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் 1%க்கும் குறைவான வாக்குச்சாவடிகளிலேதான் நிகழ்ந்தது.

3. அடையாள அட்டை உண்டு; பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது ஒவ்வொரு தேர்தலிலும் வரும் குற்றச்சாட்டு. உண்மையில் இதில் தேர்தல் ஆணையத்தின் மீது எந்தக் குற்றமும் இல்லை. வாக்காளர் பட்டியலைத் திருத்தும் நேரத்தில் பெயர்கள் விடுபட்டால் நாம்தான் கவனமாக மீண்டும் நமது பெயரைச் சேர்க்கவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதுவே வாக்களிக்கும் உரிமையாகிவிடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.

திமுக கூட்டணி வெற்றி

வாக்களித்தோர் வெளியேறும்போது எடுக்கப்பட்ட கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. இதில் மாற்றம் ஏதும் இருக்கப்போவதாக எனக்குத் தோன்றவில்லை. திமுக+ 140-150 தொகுதிகளாவது பெறும். அதற்கு மேலும் போகலாம்.

ஆனால் 200ஐத் தொடும் என்று நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கூட்டணி ஆட்சி அவசியம். மூன்று கூட்டணி வாய்ப்புகள் உள்ளன:

1. திமுக + காங்கிரஸ்
2. திமுக + காங்கிரஸ் + பாமக
3. திமுக + காங்கிரஸ் + பாமக + இடதுசாரிகள்

இதில் முதலிரண்டுக்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகச் சொல்வார்கள்.

CNN-IBN-Hindu கணிப்பில் ஒரேயோர் ஆச்சரியம் மட்டும் இருந்தது – அது அஇஅதிமுக வட மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெறும்; ஆனால் தென் மாவட்டங்களில் நிறையத் தோற்கும் என்பது. அப்படி நடந்தால் அதற்கான காரணங்களாக இவைதான் இருக்கும்.

1. விஜயகாந்த் பாமக வாக்குகள் பலவற்றைப் பிடித்துள்ளார்.
2. விடுதலைச் சிறுத்தைகளின் பலமும் விஜயகாந்த் பிளவும் சேர்ந்து பாமக+திமுக பலத்தைக் குறைத்து அஇஅதிமுகவுக்கு நிறைய வாக்குகளைக் கொடுத்து இடங்களையும் கொடுக்கப் போகிறது.
3. பார்வர்ட் பிளாக் (தேவர்) வாக்குகள் சிதறியதால் அஇதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் வாக்குகள் குறைந்துள்ளன.
4. மதிமுகவால் தென் மாவட்டங்களில் அதிகப் பிரயோசனம் இல்லை.
5. மேல் இரண்டு காரணங்களுடன் இடதுசாரி+காங்கிரஸ் பலத்தால் திமுக கூட்டணி தென் மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெற்று அஇஅதிமுகவை ஒழித்துள்ளது.

சென்னையில் என்ன நடந்துள்ளது என்று வியாழன் அன்றுதான் சரியாகத் தெரியவரும்.

திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க கருணாநிதிக்கு வாழ்த்துகள். அதே சமயம் ஜனநாயக முறை குலையாமல் இருக்க எதிர்க்கட்சிகளுக்கு 70 இடங்களாவது கிடைக்கும் என்று நம்புவோம். அதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 5 இடங்களும் மதிமுகவுக்கு 10 இடங்களுமாவது இருக்கட்டும் என்றும் நம்புவோம்.

‘Dubbing’ Janaki Interview

நிகழ்ச்சி: நூற்றுக்கு நூறு
விருந்தினர்: ‘டப்பிங்’ ஜானகி
தொலைக்காட்சி: கே டிவி

Dubbing Janaki - 1 : Actress Jaanaki (Intro) - this is an audio post - click to play


ரஜினிகாந்த்தும் பின்னணிக்குரல் ஜானகியும்

Sankarabaranam Salangai Oli fame Janaki on Super Star Rajniganth - this is an audio post - click to play


| |

கருணாநிதி is back

ஐபிஎன் லைவ் – ஹிந்து கருத்துக் கணிப்பில் தி.மு.க முந்தியிருக்கிறது. Exit poll-இல், கலர் டிவி, கம்யூட்டரை வென்றிருக்கிறது

தொகுதிகள்

தி.மு.க. கூட்டணி 157 – 167
அ.தி.மு.க கூட்டணி 64 – 75
மற்றவர்கள் 2 -6

ஓட்டு விழுக்காடு

தி.மு.க. கூட்டணி 45%
அ.தி.மு.க கூட்டணி 35%
தே.மு.தி.க 10%
மற்றவர்கள் 10%

ஆக, பதினோறாம் தேதி ஒட்டு எண்ணும்போது தெரிய போவது இதுவாகவும் இருக்கலாம். இதில் ஆச்சர்யம், விஜயகாந்த் 10% ஒட்டுக்களை கைப்பற்றியிருப்பதாக சொல்லியிருப்பது. ஆக, இன்னும் இரண்டு தேர்தல்கள் பார்த்தால், தமிழகத்தின் முதல்வர் “கேப்டனாய்” வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

ஐபிஎன் – ஹிந்து exit poll

Maalai Malar Election Coverage

  • சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் இடதுகை ஆள் காட்டி விரலில் அழியாத மையால் கோடு போடப்பட்டது. கடந்த தேர்தலின்போது அழியாத மையால் புள்ளி வைக்கப்பட்டது.
  • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மாகாணியம் கிராமம், விருத்தாசல தொகுதி முகவை, பாரூர் கிராமம் ஆகிய 3 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு
  • அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் அருகே உள்ள பொன்பேத்தி கிராமத்தில் சுமார் ஆயிரத்து 500 ஓட்டுகள் உள்ளன. இங்கு உள்ள வாக்குச் சாவடியில் பகல் 1 மணி நிலவரப்படி ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை.
  • விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 9 தொகுதியிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். தி.மு.க. கூட்டணி மக்களை நம்பாமல் பண பலத்தையும், வன்முறையையும் நம்பியது. பத்திரிகைகளின் கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு அதி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
    – விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன்
  • ஆரணி ஆதனூரில் வாக்குச்சாவடியில் புகுந்த 20 பேர் கும்பல்: கதவை பூட்டிக்கொண்டு வாக்களித்தனர். அங்கு முன்னாள் ராணுவத்தினர் 2 பேர் மட்டுமே பாதுகாப்புக்கு நின்றனர்.
  • குளச்சல் தொகுதிக் குட்பட்ட சேரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப்போட சென்றவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. காரணம் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் தலைகீழாக இருந்தது.
  • குளச்சல் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளியில் கீழக்கரையைச் சேர்ந்த முருகன் என்ற 65 வயது முதியவர் இன்று காலை ஓட்டுப்போட வந்தார். தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் அவரது கையில் ‘மை’ வைத்தார். பின்னர் அதே ஊழியர், முருகனை அழைத்துச் சென்று ஓட்டுப்போடச் செய்தார். முருகனின் விரலால் 4வது இடத்தில் இருந்த பொத்தானை பெண் ஊழியர் அழுத்தினார். இதனால் முருகன் அதிர்ச்சி அடைந்தார்.

    நான் வேறுகட்சிக்கல்லவா ஓட்டுப்போட நினைத்தேன். எனக்கு உதவுவதாக கூறி மோசடி செய்துவிட்டீர்களே என முருகன் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

  • சேலம் அருகே உள்ளது பனமரத்துப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உடை யாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). அயோத்தியாபட்டணம் முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர் இன்று காலை தன் மகளுடன் உடையாப்பட்டி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட வந்தார்.

    அப்போது அவர் தி.மு.க. கரை வேட்டி அணிந்திருந்தார். இதைப்பார்த்த போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கரை வேட்டி அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. எனவே வேறு உடை அணிந்து வருமாறு கூறினர். ஆனால் ராஜன் அதற்கு மறுத்தார். தொடர்ந்து போலீசார் வாக்குச்சாடிக்குள் விட மறுத்ததால் திடீரென ராஜன் தான் கட்டி இருந்த தி.மு.க. கரைவேட்டியை அவிழ்த்து தூக்கி வீசி எறிந்தார்.

    கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு நிர்மல்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் இப்படி அநாகரீகமாக உள்ளாடையுடன் வாக்கு சாவடிக்குள் செல்லக்கூடாது என்று கூறி வேறு வழியில்லாமல் அதே தி.மு.க. கரை வேட்டியை எடுத்துக் கொடுத்தனர். பின்னர் அவர் தன் கரை வேட்டியை கட்டிக்கொண்டு வாக்களித்தார்.

    Thanks: Maalai Malar.com

  • Star News exit poll predicts big DMK win

    திமுக – 175 இடங்கள்
    அதிமுக – 51 இடங்கள்
    மற்றவர்கள் – 8

    வாக்கு சதவீதம்
    திமுக – 48.5 %
    அதிமுக – 37.5

    The Star News-AC Nielsen Exit Poll conducted during today’s Assembly elections in Tamil Nadu gives a big win to the DMK-led front and predicts that the DMK will return to power in the State.

    Color Tv vs Computer – Dinamalar

    1. கலர் டிவியும், கம்ப்யூட்டரும் கவருமா மக்களை?

    இந்தத் தேர்தலுக்கு மல்லு கட்டியுள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் பலப் பல “பளபள’ அறிவிப்புகளை அறிவித்துள்ளன. தி.மு.க., சார்பில் இலவச கலர் “டிவி’ கவர்ச்சிகரமான அறிவிப்பாக உள்ளது. அ.தி.மு.க.,வில் மிகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அறிவிப்பு தான் மிகக் கவர்ச்சியாக உள்ளது. பொழுதுபோக்கு, படிப்பு என்ற இரு தேவைகளில் எதை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது வரும் 11ம் தேதி தெரிந்துவிடும். இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின், பிரசாரங்களின் “ஹைலைட்ஸ்’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ஜெயலலிதா :

    ஜெயலலிதா பிரசாரத்தில் மக்களிடையே பேசிய விவரம் வருமாறு:

    * ரேஷனில் அரிசியை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்து கிலோ அரிசி இலவசம்.

    * முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வேலை இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.

    * மாநில அரசின் வருவாயை பயன்படுத்தி, விவசாய கூட்டுறவு கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    * நெசவாளர் நலன் காக்க பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படும்.

    * பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

    * இரண்டாயிரத்து 900 கோடி ரூபாயில் இரண்டு நீர்வள ஆதார திட்டம் அமைக்கப்படும்.

    * உழவர் பாதுகாப்பு திட்டம் போல மீனவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

    * தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த தொழிற்சாலைகளிலும் சமூக விரோதிகள், ரவுடிகள் பண வசூலில் இறங்கியது இல்லை.

    * தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகரித்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.

    * வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம்/ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தை எதிர்த்து சாலை மறியல், துப்பாக்கிச் சூடு போன்ற கலவரம் ஏற்பட்டதுண்டு. பஸ் எரிப்பு சம்பவங்களும் நடந்ததுண்டு. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை.

    * சுனாமி ஏற்பட்டதும் தமிழக அரசின் பணியை உலக நாடுகளே பாராட்டின.

    * மழையால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், தமிழக அரசின் மீட்புப் பணிகள் வேகமாக நடந்ததை மக்களே அறிவார்கள்.

    * பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகம் வழங்கியது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.

    * சென்னையில் மக்கள் குடிநீருக்காக குடத்தை எடுத்துக் கொண்டு அலைவது தடுத்து நிறுத்தப்பட்டது எங்கள் ஆட்சியில் தான். வீராணம் குடிநீர் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் நிறைவேற்றி, சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்த்தது எங்கள் ஆட்சியில் தான்.

    * பல்வேறு தொழில்நுட்ப பூங்காக்கள் இந்த ஆட்சியில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஐந்து ஆண்டில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    * சென்னையில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியே விடுதிகள் கட்டப்படும்.

    * சென்னைக்கு அருகில் இரண்டு சேட்டிலைட் நகரங்கள் அமைக்கப்படும். இதனால் பல தொழிற்சாலைகள் உருவாகும்.

    * சென்னைக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைவது போல, மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

    * அ.தி.மு.க., ஆட்சியில் தான் தொழிலதிபர்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வளர முடியும். நேரடி வேலை வாய்ப்பும், மறைமுக வேலை வாய்ப்பும் பல லட்சம் பேருக்கு கிடைக்க இந்த ஆட்சி பாடுபடும்.

    * ஏழைகளுக்கு இலவச நிலம் தருவதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, போகாத ஊருக்கு வழி சொல்வதாக உள்ளது.

    * சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் திட்டத்தை ஒழிப்போம்.

    இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு தனது பிரசாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.


    தி.மு.க., தலைவர் கருணாநிதி

    தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரசாரத்தில் இதுவரை கூறியது என்ன? அதன் விவரம் வருமாறு:

    * ஜெயலலிதா தினந்தோறும் கற்பனையான வாக்குறுதிகளை சொல்லி வருகிறார்.

    * எங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கதாநாயகன் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருக்க வேண்டும். அந்த வில்லன் ஜெயலலிதா தான்.

    * இந்திய வரலாற்றில் மாநிலத்திலிருந்து 13 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றதே சாதனை தான்.

    * வியாபாரிகளின் நலனுக்காக “மறுவிற்பனை’ வரியை ரத்து செய்தது தி.மு.க., ஆட்சி தான்.

    * அரிசி விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பு செய்திருப்பது ஏட்டிக்கு போட்டி.

    * தனி ஆட்சியோ, கூட்டணி ஆட்சியோ, எப்படி அமைந்தாலும் பரவாயில்லை. இந்த ஆட்சி ஒழிய வேண்டும்.

    * தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் வாரம்தோறும் சத்துணவில் இரண்டு முட்டை வழங்கப்படும்.

    * ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுக்க முடியுமா. இலவச டிவி தர முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும். முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது.

    * கல்வி கட்டணத்தை கண்டிப்பாக குறைப்போம்.

    * “தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்’ என்று ஜெயலலிதா அறிவித்தார். முதலைகள் மாநிலமாக மாற்றிவிட்டார்.

    * மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்கள் திருமண நிதிஉதவி திட்டம் கொண்டுவரப்படும்.

    * தாய்மார்கள் பொது அறிவு பெற கலர் “டிவி’ தருகிறோம்.

    * “கலர் “டிவி’ கொடுப்பாய், கேபிள் இணைப்பு கொடுக்க முடியுமா என்று ஒருவன் கேட்கிறான். அவசியம் ஏற்பட்டால், அதையும் கொடுப்போம்.

    * காஸ் ஸ்டவ் தருவோம்.

    * விவசாயி இயற்கையாக மரணமடைந்தால், அவர் பெற்ற கூட்டுறவு கடனை ரத்து செய்வோம்.

    * நிலமற்ற ஏழை விவசாய குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்.

    * மகளிர் சுய உதவிக் குழுக்களை போல, இளைஞர்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துவோம்.

    * கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்துவோம்.

    * சென்னை நகரில் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மேலும் பாலங்கள் கட்டப்படும்.

    * சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ளுவோம்.

    * சுனாமி நிவாரண நிதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவோம்.

    * மீண்டும் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவுவோம்.

    * மீண்டும் சட்டசபை மேலவையை கொண்டு வர பாடுபடுவோம்.

    * அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வருவோம்.

    * காலியாக உள்ள பணியிடங்களில் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

    * எதிர்முகாமில் இருப்பவர்கள், பிரபல நடிகர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் பேரம் பேசி, பிரசாரத்துக்கு அழைத்தனர். அவர் வரமறுத்துவிட்டார்.

    * எங்கள் ஆட்சியில் ஜாதி கலவரங்கள் ஏற்பட, எதிர்க்கட்சிகள் தான் காரணம்.

    இவ்வாறு அவர் பிரசாரம் செய்தார்.


    2. தேர்தலுக்குப் பின் கூட்டணிகளில் தலைகீழ் திருப்பம்? அடுத்த காட்சி :: அணி மாற கட்சிகள் இப்போதே வியூகம் அமைப்பு

    கடந்த பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து பேசினார். காங்கிரஸ் தலைவர்களையும், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் கடுமையாக சாடினார். ஆனால், இந்த முறை முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின் போது தனது ஆட்சியின் சாதனைகளை மட்டுமே எடுத்துக் கூறியுள்ளார். தி.மு.க.,வைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் ஜெயலலிதா பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.

    டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் டாடா தரப்பில் இருந்து மறுப்பு வெளியாக வேண்டும் என்பது தி.மு.க.,வின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்காக எவ்வ ளவோ நெருக்கடி கொடுத்தும் காங்கிரஸ் தலைமை அதற்கு இசையவில்லை. இது தி.மு.க.,வுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மகாஜன் இறுதிச் சடங்கிற்கு தயாநிதி சென்ற விவகாரம் காங்கிரசிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    Engal Anna Supports Vijayakanth & Murasu Icon

    அறிஞர் அண்ணா ஆதரிக்கும் முரசு ஒலி

    1. இசைக்கு அடுத்தபடியாகத் தமிழரின் செவிக்கும் சிந்தனைக்கும் இனிமை பயப்பதாகும்
    2. போர்க் கருவியாக மட்டுமல்ல, புகழ்க்கருவியாக, கொடை அறிவிக்கும் கருவியாகக் கொள்ளப்பட்டு தமிழகத்தில் ஏற்றம் பெற்றிருந்த ஒன்றாகும்.
    3. கேட்டுத் தமிழர் இன்புறுவர்; மாற்றார் மருளுவர்; இறுதி வெற்றி பெற்றுத் தமிழர் மகிழ்ச்சி கொள்வர்.
    4. வீரத்தினை விளக்கிற்று; வீண் ஆரவாரத்தை ஆர்ப்பரிப்பைக் காட்டும் கருவியாக இருந்ததில்லை.
    5. கேடு களைந்திட விழைவோருக்கு, நாடு வாழ்ந்திட வழி காண விரும்புவோருக்கு, தேவைப்படும் எழுச்சியைத் தரவல்லது.
    6. தம்பியின் முரசு தன்னைச் சிறிது போழ்து தட்டி மகிழ்கின்றேன்.
    7. இன்று மீண்டும் தமிழர் தன்னரசு பெற்றுத் தரணியில் தலை நிமிர்ந்து வாழ்ந்திட நடாத்தப்பட்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிக்கு ஓர் எழுச்சி முரசாக அமைந்து பணியாற்றி வருகிறது.
    8. இன்று நமது நாடு, மலர்த்தோட்டமாகவுமில்லை; நமது அரசும் நடத்திடவுமில்லை. எனவேதான் ‘முரசு’ தேவைப்படுகிறது.
    9. ‘போர் முரசு’ – இதன் மூலம் கிடைக்கும் எழுச்சி, வீடெல்லாம் விழா என்று கூறத்தக்க விடுதலையைப் பெற்றிட, நமக்கு ஆர்வம் தரும் – தந்து வருகிறது. அந்த ஆர்வத்தின் வளர்ச்சி, வெற்றியை நமக்கு அளித்திடும். அந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறோம்.

    அண்ணாதுரை
    நன்றி: 1960, 61, 62 – முரசொலி – பொங்கல் மலர்கள்

    நமீதா அறிமுகம் செய்த ‘எங்கள் அண்ணா‘ விஜய்காந்த்தின் முரசு ஒலிக்க செய்வீர்.


    | |

    How to avoid Avian Flu? – Vote DMK

    1. முதலில் மக்கள் மனத்தில் இருக்கும் ஓர் ஆதங்கம் – பறவைக் காய்ச்சல் நாடெங்கும் பரவி இருக்கும் காட்சி. பெண்மணிகள் அழுது கொண்டே மரக்கறி வெட்டிக் கொண்டிருக்கின்றனர்.

    2. உங்களுக்கு பறவைக் காய்ச்சல் வந்துவிடுமோ என்னும் பயமா?
    உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க… டாமிஃப்ளூ விற்க டீலர்ஷிப் கொடுப்போம்.

    3. கலைஞர் தன்னைத்தான் தருவார்!
    தனக்காகத்தான் தருவார்!!!

    திமுக-வின் நிஜ விளம்பர விவரிப்பு


    பதிவுக்கு உணர்வூக்கம் கொடுத்த நிஜ குறுஞ்செய்தி:

    நன்றி: தினமலர்


    | |

    My vote – Rs.11,000 Free

    இந்தத் தேர்தலில் என்னுடைய மேலான வாக்கு யாருக்கு என்று கேட்பவர்களுக்காக:

    விளம்பரம் வெளியான இதழ்: தினமலர்

    ரொம்ப சிந்திப்பவர்களுக்கான மறுப்புக்கூறு: இலவசமாகக் கணினி கொடுக்கும் அதிமுக அறிவிப்புக்கும் இந்தப் பதிவுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது.


    | |