Tamil | ThatsTamil | Tamil | Tamil Portal | Tamil News On The Net
சொன்னாங்க..சொன்னாங்க..
Tamil | ThatsTamil | Tamil | Tamil Portal | Tamil News On The Net
சொன்னாங்க..சொன்னாங்க..
Posted in Uncategorized
thamizmaNam.com :: All Tags ??????? ??????? thamizmaNam.com :: Tag post 453 

Posted in Uncategorized
அசின் இப்போது இங்கிலாந்துக் கட்சி!
“பிரேசில் பிறவியிலேயே ஃபுட் பால் விளையாடும் திறமையோட பிறந்தவங்கன்னா, இங்கிலாந்துக்காரங்க பிறந்ததுக்கு அப்புறம் அந்தத் திறமையை வளர்த்துக் கிட்டவங்க. ஒரு இங்கிலாந்து ரசிகையா, நான் அந்த நாட்டுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, தனியான பிளேயரா எனக்குப் பிடிச்சது பிரேசிலின் ரொனால்டோ.”
விசைப்பொறி பிடித்த முதல்வரின் எழுத்தில் கால்களின் சோர்வும் நெஞ்சில் அலைமோதிய கோபமும் ஒருசேர தட்டிப்பார்க்க… அது நக்கலான பதிவானது. முதன்முதலில் விளையாடிய கால்பந்தை நினைவுகூர்ந்தவர், கடந்த இதழ் ஆனந்த விகடனில் அசின் சொல்லிய விருப்பத்தைக் குறிப்பிட்டு, கடகடவெனத் தன் உணர்வுகளைக் உல்டாவாக்கி விட்டார்.
“‘பிரேசில்-பிறவி, ட்ரினிடாட்-திறமை, இங்கிலாந்து-இந்திரன்’ என கவிதைத் தமிழில் பேசுகிறார்கள்.
தாய்லாந்துக்குத் தாய்ப்பாலிலேயே திறமை; கோஸ்டா-ரிக்காவினர் கால்களை உதைத்துதான் பிறந்தார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் காலோடுதான் நடக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் காலணியின் ரப்பர் சோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை. பார்வையாளனின் புத்தியைத் உசுப்பிவிடும் வேலை இனியும் வேண்டாம்.
இது ஏதோ டிவியைக் கொடுத்து… மன்னிக்க… பார்த்துவிட்ட காரணத்தால், கடந்த ‘பெண்ட் இட் லைக் பெக்கம்‘ போல சினிமாக் குரல் அல்ல. புத்தம் புதிய ‘டாவின்சி கோட்‘ குரல்தான். படைப்பாளியின் கற்பனைதான்” என்றார் கருணாநிதி.
உலகக் கோப்பையைப் பார்க்கத் துவங்கியதுமே, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் கண் நீர்கட்டிப்போனது. மறுநாள் 4-ம் தேதி காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜெண்டைனாவுக்கு எதிராகவும் வசனமெழுப்பி, விகடன் இதழ்களையும் ரொனால்டோ உருவ பொம்மையையும், பெக்கம் போஸ்டருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் அன்று நடந்தாலும், இத்தாலிக்கு எதிராக நடந்த கொடும்பாவி கொளுத்தலை, கலைஞர் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.
‘Azzurri-கள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு வேதனையில் வாடுகிறார்கள். அவர்கள்,
அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை(தயாநிதி மாறன் குறுக்கிடவே) ஈராக் போர் ஆதரவாளர்களை எதிர்க்கப் போகிறவர்கள். அவர்களை இந்தப் பிரச்சினையில் உள்ளே நுழைப்பது அன்னை சோனியாவுக்கு மன வருத்தத்தைத் தரும்’
என்று கடிதம் தீட்டியுள்ளார்.
Kannagi | FIFA | Pshychic | Karunanidhi | தமிழ்ப்பதிவுகள்
Posted in Uncategorized
Dinamani.com – TamilNadu Page: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சங்க கலையரங்கில், சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவ அறிவிப்பு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் அவர் கூறியது:
நடிகர் சங்க உறுப்பினர்களுக்குள் எந்த அரசியலும் இல்லை. வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை ஜூலை 30-ம் தேதி நடத்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. சங்கத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்வோம். வேட்பு மனு தாக்கல் எப்போது என்பது உள்பட தேர்தல் பணிகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பின்னர் அறிவிக்கப்படும்.
நிர்வாகிகள் வற்புறுத்தினால் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்.
படப்பிடிப்பு காரணமாக பல நடிகர், நடிகைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தலைவர் தேர்வு குறித்து அவர்களுடனும் பேசுவோம் என்றார் விஜயகாந்த்.
நாசர், விஜயகுமார், எஸ்.வி.சேகர், ராதாரவி, செந்தில், மனோரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து மீண்டும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
நாசர்:
அரசியல் கட்சிகளில் இருப்பவர்களில் நடிகர் சங்க முக்கிய பொறுப்புகளை விகிக்கக் கூடாது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் தலைவர்களிடம் கோபமாகப் பேசினார் நடிகர் நாசர்.
Posted in Uncategorized
காங்கிரஸை சமாளிக்க திமுக புது பார்முலா – thatstamil.oneindia.in
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியை சமரசப்படுத்த புதிய பார்முலாவை திமுக வகுத்துள்ளது. இதன்படி மத்தியில் 2 திமுக அமைச்சர்களை வாபஸ் பெற அக்கட்சி முன் வந்துள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மை பலம் உடைய திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று கூட்டணியில் உள்ள பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என தமிழக காங்கிரஸார் கோரி வருகின்றனர்.
ஆட்சியில் பங்கு கொடுக்காமல் நீண்ட நாட்களுக்கு ஆட்சி நடத்த முடியாது, காங்கிரஸ் கட்சியினர் எந்த இடத்திலாவது தங்களது ‘புத்தியைக்’ காட்டி விடுவார்கள் என திமுக சந்தேகப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்றபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், கருணாநிதியே மாற்றுத் திட்டம் குறித்து விவாதித்தாகக் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களில் கணிசமான அளவு அதிமுக ஆதரவாளர்கள் இருப்பதை கருணாநிதி தெளிவாக உணர்ந்துள்ளார். எனவே இவர்களால் ஆட்சிக்கு எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாற்றுத் திட்டத்தை சோனியா காந்தியிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக இருந்தாலும், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தப்பித் தவறி அமைச்சரவையில் இடம் பெற்றால் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் அதிமுக தரப்புக்குப் போய் விடும் அபாயம் இருப்பதை சோனியாவிடம் கருணாநிதி விளக்கியுள்ளார்.
இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆட்சியில் பங்கு தர தான் தயங்குவதாகவும் சோனியாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அத்தனை கோஷ்டியினரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்பார்கள், அப்படி ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டால் அது மக்களிடையே திமுக கூட்டணி குறித்து தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும், கூட்டணியின் இமேஜ் சரிந்து விடும் என்பதையும் சோனியாவிடம் கருணாநிதி எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.
இப்படி பல்வேறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி, ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்த கருணாநிதி அதற்குப் பதில் ஒரு மாற்றுத் திட்டத்தை சோனியாவிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மத்தியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் 2 பேரை வாபஸ் பெற்றுக் கொள்ள திமுக தயார். அதற்குப் பதில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.
நான் ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன். அடுத்து முதல்வர் ஆவேனா என்பது தெரியாது. எனவே இந்த ஆட்சிக்காலத்திலேயே பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
அதற்கு காங்கிரஸ் கட்சி மூலம் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது. எனவே இந்த புதிய திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் கருணாநிதி உருக்கமாக கூறியதாக தெரிகிறது.
Posted in Uncategorized
ஞாயிறு மதியம் சன் டிவியில் திரையிடப்பட்ட ‘பம்பாய்‘. முதல் முக்கால் மணி நேரம் தவறவிட்டுவிட மிச்சத்தை அணு அணுவாக DVR-இல் ரசித்து பார்க்க முடிந்தது. படத்தின் இறுதியில் cliche-வாக கமலும் கபீரும் பெற்றோருடன் இணைந்தாலும், உணர்ச்சிகரமானப் பாடலில், நம்பிக்கையையும் சோகத்தையும் பச்சாதாபத்தையும் கலவையாக நிறுத்தி மௌனித்திருந்தேன்.
ரொம்ப இயல்பான வசனங்கள்:
‘ராம்’ என்னும் பெயர் பொறித்த செங்கற்கள் வேண்டுமென்று பாயிடம் கேட்கும் தெனாவெட்டு ஆகட்டும்; அதே பாய், தன்னை அண்ணன் என்று சொல்லிக் காப்பாற்றியவுடன் ‘எப்படிய்யா‘ என்று நெகிழ்வதில் ஆகட்டும்; கிட்டி வந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உருத்திராட்சக் கொட்டையுடன் விபூதிப் பட்டை போடும் குறும்பில் ஆகட்டும்; சைவப் பிள்ளையாக நாசர் கோபத்தையும் வெறுப்பையும் மனிதத்தையும் நிறுத்தினார்.
படத்தின் இறுதியில் ஒலிக்கும் ‘மலரோடு மலர்‘-இன் கடைசி வரி…
மொழியோடு மொழி சேரட்டும் : Malarodu Malar – Bombay
Posted in Uncategorized
சன் டிவியில் நேற்று (வியாழன், ஜூன் 8, 2006) காலை இடம்பெற்ற சன் செய்திகளில் வலைப்பதிவுகள் குறித்தும், தமிழ் ப்ளாகுகள் குறித்தும் இடம்பெற்ற செய்தித் தொகுப்பு:
Posted in Uncategorized
கட்டாயப் பாடம் – தொண்டைக்குழித் திணிப்பு?
சனி மதியம் கே டிவியில் ‘பட்டணத்தில் பூதம்‘ திரையிடப் போவதாக, அறிவிப்பு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தது. சாப்பாடுக் கடையை மூடிவைத்துவிட்டு, திரைச்சீலையெல்லாம் இழுத்துவிட்டு, ஆசையாக உட்கார்ந்தால் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ என்று மனோகராவிற்கு மாறிவிட்டார்கள்.
இதே மாதிரி பிறந்த நாளுக்காக ‘கிளாசிக் மேட்டினி’யை ‘நண்பகல் நல்விருந்து’ என்று அடுக்குமொழியில் கொடுத்தால் இருவரும் சந்தோஷப்படுவார்கள். இங்கே இருவர் என்பது நானும் தர்மசங்கடத்தில் சன் டிவி குழுமத்தைத் தள்ளி வைத்து அழகு பார்க்கும் கலைஞரும்.
ஆங்கிலக் கேள்விகளுக்கு தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பதிலளிக்கும் தங்க வேட்டை; நாடக மொழியில் அடைமொழி அதிர்ச்சிகளுடன் சன் செய்திகள்; சன் டிவி யில் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேசுகிறார்களே, விகடன் சஞ்சிகைகள் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதுகிறதே என்று புலம்புவது பழங்கதை.
தமிழ் பாடமாக பயிற்றுவிப்பதை வரவேற்பதே சென்ற வார in-thing.
பத்ரி: ‘தமிழே என் உயிர்’ என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.
அனேகமாக, ஆங்கிலம் கூட நான் இப்படித்தான் எழுதுவேன். மைக்ரோசாஃப்ட் வோர்ட் என்னும் நிரலி இல்லாவிட்டால்… தட்டச்சுப் பிழை செய்தால் சிவப்பு மசி; இலக்கணப் பிழை என்றால் பச்சை மசி கோடு என்று தவறுகளை இலகுவாக சுட்டிக் காட்டுகிறது. அந்த மாதிரி MS-Word-க்கு ஒரு plugin கொடுத்து விட்டால் வலைஞர்கள் எல்லாரும் தூய தமிழில் தட்டச்சி கலைஞரை மேலும் பாராட்டலாம்.
ஒருமை/பன்மை கலத்தல், ஒற்று விதிகள், கால மயக்கம், று/ரு போன்ற பொருட்குற்றம், ஈறு கெட்டவற்றை சரியாகக் கெடுத்தல் என்று அனைத்து விதிகளையும் நினைவில் நிறுத்த முடியாதவர்களுக்கு, கணினியின் நினைவில் நிற்குமாறு செயலி எழுதினால், ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது நிரலிப்பழக்கமாக கைகூடும்.
கவனக்குறைவினாலோ நினைவின்மையாலோ நிகழும் வழுக்களை சுட்டிக் காட்டுவதற்கு மென்கலன் எழுதுவதற்கு தமிழறிஞர்களும் பரி நிரலாளர்களும் இந்தக் கட்டாயப் பாடத்தினால் வருவார்கள்.
கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும் :: சின்னக்கருப்பன்: “பாமக உறுப்பினர் ஜி.கே மணி கூறியதை இங்கு ஆதரிக்கிறேன். இது முதல் வகுப்புக்கு மட்டுமே கட்டாயம், ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்துக்கு கட்டாயம் என்று இருப்பதை நீக்க வேண்டும். எல்லா வகுப்புகளுக்கும் இந்த வருடமே கட்டாயமாக்கப்பட வேண்டும்.”
ராஜன்: if a person gets transfer to TN and if his kid is studying in, say 9 Std. That student would have been studying say Oriya as his/her first language in his/her previous place. Now how come suddently that student is expected to learn and pass 9th standard level Tamil? So forcing non Tamil speaking pupils to learn Tamil as the first language amounts to linguistic fanaticism.
இன்னும் பத்து வருடம் கழித்து இந்தியா சென்றால் அமெரிக்காவில் இருப்பது போன்ற English immersion law எதுவும் கிடைக்காது. கண்டிப்பாக அனுசரிக்குமாறு சட்டதிட்டங்கள் இயற்றுவது ‘மாரோ மாரோ’ என்று கோபத்தை வரவைத்து மொழி மீதே வெறுப்பை உண்டாக்கும் அளவுக் கோபத்தை வரவைக்கும். ‘ஆஹா… மெல்ல நட மெல்ல நட…’ என்று பரிவோடு பிற மாநில/நாட்டு குடியேறிகளுக்கு மொழியைப் பயிற்றுவிப்பதில்தான் தமிழின் ருசியும் நலனும் நாவில் தனித்து நிற்கும்.
தீர அலசாமல் நெடுங்காலப் பிரச்சினைகளுக்குக் குறுகிய கால அவசரப் பிரகடனங்கள் இட்டு எம்.எல்.சி. தேர்தலில் வாக்குகளை அள்ளுவது கட்சிகளின் தொலைதூரப் பார்வை. சின்னக்கருப்பனின் ‘எல்லோருக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்பதில் எனக்கு ஒப்புதல் உண்டு. அதே போல், ராஜனின் ‘சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொள்ள வெண்டும்’ என்பதில் மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது.
இரண்டையும் ஒருங்கே அமல்படுத்த ‘விரைவுத் தமிழ் அமிழ்தல்’ என்பது போன்ற முழுமையான திட்டங்கள் தேவை. விடுமுறைக் காலத்தில் தமிழ் கற்க சிறப்பு வகுப்புகள் வைக்கலாம்; வெண்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்காமல் கம்பராமயணத்தின் கவர்ச்சியையும் (நான் சீதையின் வருணனைகளைச் சொல்லவில்லை) திருக்குறளின் உள்குத்துகளையும் ரசமாக விளக்கினால், மயங்காதவர் எவரும் உண்டோ?
வேற்று நாடுகளில் இருந்து (மெக்ஸிகோ போன்ற ஸ்பானிஷ் மொழியைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு) படிப்படியாக ஆங்கிலத்தை எவ்வாறு நுழைக்கிறார்கள் என்பதை மேலும் அறிய: Implementing Sheltered English Immersion (SEI) and Improving the Academic Performance of English Language Learners. இவ்வாறு பதவிசாக அறிமுகம் செய்வதற்கே கடும் எதிர்ப்பு இங்கு நிலவுகிறது என்பது விரிவாக விவரிக்கவேண்டிய வேறு விஷயம்.
பத்து ஆண்டுகள் கழித்து ஃபோர்ட் வேலையில் சேர உத்தர பிரதேசத்தில் இருப்பவருக்கு வேலை கிடைக்கிறது. ஏழாவது படிக்கும் மக்ள், ஒன்பதாவது படிக்கும் மகன் கொண்ட குடும்பம். கணவன் மட்டும் தனியாக உ.பி.யிலேயே தங்கிவிட, மனைவி மட்டும் சென்னையில் வேலை. வாரயிறுதிகளில் விமானத்திற்கு செலவழித்து சொந்த ஊருக்கு செல்வதா? அல்லது கிடைக்கும் கொஞ்ச நஞ்ச ஓய்வை அமல்படுத்தி இளைப்பாறுவதா?
ஏழாவது தமிழை எப்படி அவர்களால் நேரடியாகப் படிக்க முடியாது. அதற்காக தமிழை சொல்லிக் கொடுக்காமலும் விடக் கூடாது. முப்பது நாளில் தமிழ் என்னும் ரேபிடெக்ஸ் வழியில் கொஞ்சம், முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடம் முழுக்க பயிற்றுவிக்க வேண்டும்.
மதங்களுக்கிடையே துவேஷம் வளர்வது போல் மொழிகளுக்கிடையேப் பிரிவினையும் தனிமைப்படுத்தலும் இந்த மாதிரி ‘உடனடிக் கட்டாயத் தீர்வு’களினால் நிகழும். வேற்று மாநிலக் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தாய்மொழி போல் கற்கவியலாத கோபமும் கழிவிறக்கமும் வருத்தமும் உளவியலை பாதிக்கும். அதன் பின் கொஞ்ச நாள் கழித்து ‘ரேகிங்’ கொடுமை, பாலியல் வக்கிரங்கள், ‘மத மாச்சரியங்கள்’ என்று உளவியலைக் கொண்டு அலச எனக்கு புதுத் தலைப்பு கிடைப்பது மட்டுமே இந்தக் கட்டாய பாடத்தின் பக்கவிளைவாக இருக்க கூடாது.
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் கட்டாயப் பாடமாக்கும் செய்கை சட்டமாகிறது. அனைத்து சாராரையும் கருத்தில் கொள்ளாமல், மொழிப் பயிற்சியை உலகத் தரத்தோடு மதிப்பிட்டு மாற்றாமல், தற்காலப் போக்குகளை சமச்சீராக நெறிப்படுத்தாமல், பள்ளியில் மட்டும் போதிப்பதினால் ‘பயனில சொல்லாமை’ அதிகாரத்துக்கு எடுத்துக்காட்டாக ஆகாமல் இருந்தால் தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
நன்றி: தமிழோவியம்
News | கல்வி | தமிழ்ப்பதிவுகள்
Posted in Uncategorized