Category Archives: Uncategorized

வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல்

1. வலைப்பதிவுகளுக்குள் தடுக்கி விழுதல்

2. தொடர்ச்சியாக ஒரு சில வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தல்

3. பின்னூட்டமிட தொடங்குதல்

4. வலைப்பதிவுக்கு காள்கோளிடுதல்

5. எவ்வளவு பேர், எப்பொழுது வந்தார்கள், எத்தனை தடவை, எப்படி வரவழைத்தோம் என்று புள்ளி விவரப் புள்ளியாக மாறுதல்

6. எதைப் பார்த்தாலும் இது வலைப்பதிவுக்குப் பொருந்துமோ என்ன்னும் சிந்தனை மேலோங்குதல்

7. மாற்றுக் கருத்தை இடித்துரைப்பதாலும் தனி மனிதத் தாக்குதலினாலும் புலம்புதல்

8. வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்துதல்

9. மூன்று நாளுக்குள் ரசிகர்களின் பேராதரவுக்கிணங்க சொந்த மனையில் புது அவதாரம் எடுத்தல்

10. சுட்டி கொடுத்து நிறைய வாசகர் உள்ள வலைப்பதிவர்களின் கவனத்தை ஈர்த்தல்

11. வலைப்பதியும் சகாக்களை கண்டம் விட்டு கண்டம் சென்று அளவளாவுதல்

12. செய்திகளையும் சொந்த அனுபவங்களையும் எழுதுவதை நிறுத்திவிட்டு, இன்ன பிற வலைப்பதிவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் பற்றி மட்டுமே கிறுக்குதல்

13. மீண்டும் #7 முதல் #12 சுழலுதல்

14. #12-காக பிற பதிவுகளில் பழியாகக் கிடந்ததால், வேலையை இழத்தல்

15. புத்தம்புதிய கொந்தி அணிந்து பிறிதொரு பதிவைத் தொடங்குதல்

மறுப்புக்கூற்று: இந்தப் பதிவு என் சொந்த அனுபவத்தில் எழுதப்பட்டதல்ல 🙂

நன்றி: MinJungKim.com – Braindump v 5.0 :: Lifecycle of Bloggers (வழி: எஸ் கே)

திண்ணை

பாவண்ணன் ::

மானுட வாழ்வின் ஆனந்தம் (வெளி ரெங்கராஜனின் “இடிபாடுகளுக்கிடையில்”)

குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு கட்டுரை. தடைசெய்யப்பட்டுவிட்ட கர்பா நடனத்தின்மீது குஜராத் கிராமத்துப் பெண்களுக்கு இருந்த அளவுகடந்த ஈடுபாட்டை முன்வைக்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு பத்திரிகை நிரூபரின் தற்கொலைக்காகப் பரிவு காட்டாத உலகத்தின் அலட்சியம், தாய்மொழிக்கல்வியின் அவசியம், நகுலன், கோபிகிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோரின் இலக்கியப் படைப்புகள் தந்த வாசிப்பனுவபங்கள், அவ்வப்போது நிகழ்த்தப்படுகிற கூத்துகள், நாடகங்கள், ஆய்வரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஊட்டிய சிந்தனைகள் என விதம்விதமான தளம்சார்ந்தவையாக கட்டுரைகள் உள்ளன.

முடிவின் நிச்சயமின்மைதான் விளையாட்டுக்கு ஓர் ஆர்வத்தைத் தருகிறது. பலவிதமான கணக்குகள் ஒவ்வொருவர் மனத்திலும் சுழன்றபடியிருக்க, வெற்றி தோல்விகள் மாறிமாறி இடம்பெயர்ந்தபடி இருக்கும். உண்மையில் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை இந்த வெற்றி தோல்விகள் அதிகம் பாதிப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் தற்செயலானவை. அவ்வளவுதான். விளையாட்டில் உண்மையான திளைப்பே ஆட்டக்காரனுக்கு அளவற்ற ஆனந்தம் தருகிறது.

விளையாட்டு மட்டுமல்ல, இலக்கியம், நாடகம், கூத்து, இசை என கலைசார்ந்த துறைகளாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்தத் திளைப்பு முக்கியம். இத்திளைப்புதான் மானுட வாழ்வில் எஞ்சியிருக்கும் ஒரே ஆனந்தம். ஒன்று நம்மைக் கடந்துபோக அனுமதித்தபடி நாமே உடகமாக நின்றிருக்கும் ஆனந்தம். இக்கட்டுரைத் தொகுப்பில் எல்லா இடங்களிலும் ரெங்கராஜன் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த ஆனந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.


ஏ.எம். றியாஸ் அஹமட்

புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01

பூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது.

காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பௌதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபா¤ப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W. Crosbey) என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.

நவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விரித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது.


வடு – கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை ::

தழும்புகளின் பதிவுகள் – பாவண்ணன்

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் பெருமளவில் வாழும் ஊர் இளையான்குடி. அவ்வளவாக சாதி வேறுபாடு பார்க்காதவர்கள். தலித் மக்களுடன் சேர்ந்து பழகுவதில் அவர்களுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. மற்ற ஊர்கள் சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள். மணமக்கள் ஊர்வலமாக இருந்தாலும் சரி, சவ ஊர்வலமாக இருந்தாலும் சரி, தம் ஊர்த் தெருக்கள் வழியாக செல்லக்கூடாது என்பதில் உறுதியைக் கடைப்பிடிப்பவர்கள்.

நேர்மையைவிட சாதியுணர்வை முக்கியமாக நினைக்கப்படுவதற்கு முதல் சம்பவம் எடுத்துக்காட்டு. நன்றியுணர்ச்சியைவிட சாதியுணர்வால் மனத்தை நிறைத்துவைக்கத் தலைப்பட்ட வாழ்க்கைக்கு இரண்டாவது சம்பவம் எடுத்துக்காட்டு. சகஜமாக வெளிப்படவேண்டிய / பின்பற்றப்படவேண்டிய நேர்மை, நன்றி ஆகிய குணங்களைக்காட்டிலும் கூடுதலான அளவில் மனிதர்கள் முக்கியத்துவம் வழங்குகிற சாதியின் குரூர முகங்களின் இறுக்கத்தை இவை சுட்டிக்காட்டுகின்றன. மனிதாபிமானத்துக்கு எதிரானதாக சாதி எப்படி காலம்காலமாக மனிதர்களை தகவமைத்து வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன்மூலம் சமூகத்தின் கட்டுமானத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

நாலணா கூலிக்குக் களையெடுப்பதற்கு தன்னோடு அழைத்துச்சென்றும் தான் விறகுவெட்டிக் குவிக்கும்வரை நிழலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு தலைச்சுமையோடு வீட்டுக்குத் திரும்பும் சின்னம்மா பெரியம்மாக்களின் அன்பைக் குறிப்பிடும் விதமும் முக்கியமானவை.

அ. ராமசாமி

தீராநதி ::

நோய்க் கூறுகள் நிரம்பிய சுதந்திர இந்தியாவின், குறிப்பாக, தமிழ்நாட்டின் நிகழ்காலச் சீர்கேடுகளுக்கான காரணங்களைப் பற்றிப் பேசும் அவரது படங்கள் – ஜெண்டில்மேனில் தொடங்கி இந்தியன், முதல்வன் வரை – எதிலுமே தமிழ் நாட்டுக் கிராமங்களைப் பற்றிய நினைவு வெளிப்பட்டதில்லை. அந்த வரிசையில் ஒரு புதுப்படமாக இல்லாமல் அவற்றின் தொடர்ச்சியாக வந்துள்ள அந்நியன் முற்ற முழுதாகக் கிராமத்தை மறந்த, கிராமத்தை மறுத்துள்ள ஒரு படம்.

அய்யங்காரின் சாகசங்கள்தான் அந்நியன்.

சோம்பேறி இளைஞன், படத்தின் தொடக்கத்தில் அம்பியின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த விட்டு, அவனது பின்கட்டுக் குடுமியைக் கேலி செய்து விட்டுப் போனவன் என்று காட்டுவது கவனித்திருக்க வேண்டிய ஒன்று. திராவிட இயக்கம் செய்த தீவிர எதிர்ப்புப் பிரசாரத்தால், பிராமணர்களின் அடையாளங்களான பூணூலும் பஞ்சகச்சமும் பின்கட்டுக் குடுமியும் கேவலமான அடையாளங்களாகப் பேசப்பட்டன என்பதும், தயிர்சாதமும் ஊறுகாயும் கேலிக்குரிய உணவுப் பொருட்களாகச் சித்திரிக்கப்பட்டன என்பதும் சென்ற நூற்றாண்டின் தமிழக வரலாற்றுக்காட்சிகள். (அடிவாங்கும் போது தன்னுடைய உடம்பு தயிர்சாதம் சாப்பிட்ட உடம்பு; அடியைத்தாங்கும் வலிமை அதற்கு இல்லை என்று அம்பி கூறுவதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்)

இந்த வரலாற்றுச் சொல்லாடல்களின் போது, பிராமணர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் அல்ல; வடநாட்டிலிருந்து வந்தேறிய குடிகள்; இன்னும் சொல்வதானால் இந்திய நாட்டிற்கே அந்நியர்கள்தான் என்றெல்லாம் வாதங்கள் நடந்தன.இந்தப் பின்னணியில் ஷங்கரின் படத்தைப் பார்க்கத் தொடங்கினால் அந்நியன் என்ற சாதாரண வணிக சினிமாவுக்குள் இருக்கும், அரசியல் அர்த்தங்கள் வேறுவிதமாக விரியத் தொடங்கி விடும். அப்பாவிப் பிராமணர்களை வகைமாதிரிக் கதாபாத்திரங்களாக்கி, ஒட்டுமொத்த பிராமணர்களையும் காப்பாற்ற நினைக்கும் அந்த அரசியல், நுண் அரசியல் அல்லாமல் வேறல்ல.

அம்மாஞ்சிகளாக இருந்த அம்பிகளின் அடையாளம் மார்கழி மாதப் பஜனையாகவும் திருவையாற்று பஞ்சரத்தின கீர்த்தனையில் பங்கேற்பதாகவும் இருந்தது. அவர்கள்தான் இன்று கம்ப்யூட்டர் மென்பொருட்களைத் தயாரிக்கத் தெரிந்த புத்திசாலிகளாகவும், மேற்கத்திய அறிவையும் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்த சேர்த்தவர்கள் என்பது நிகழ்கால உண்மை. அத்துடன் இந்தியப் பாரம்பரிய அறிவின்மீதும், கலைகளின் மீதும் பற்றுக் கொண்ட தேசப்பற்றாளர்கள்; ஜனநாயக நடைமுறைகளின் மீது நம்பிக்கை கொண்ட பொறுப்பான இந்திய மற்றும் தமிழகப் பிரஜைகள். இந்த உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், தங்களை இந்த மண்ணில் அந்நியர்களாகக் கருதும் போக்கு தொடரும் நிலையில், அவர்களின் அடிமனம் வன்முறையை நாடுகிறது என்கிறது படம்.

நோய்க் கூறு போல இருக்கும் இந்த அடிமன விருப்பம் வெறுக்கத்தக்கதல்ல; விரும்பத்தக்கது; தக்க வைத்துக் கொள்ள வேண்டியது என்றும் படம் பேசுகிறது. நீதிமன்ற ஆலோசனைப்படி அந்த உணர்வு வெளிப்படாமல் இருந்தால்தான் வெளிப்படையான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்பதை டாக்டரின் வழி அறிந்து கொண்ட அந்நியன், நடப்பு உண்மைகளை ஏற்றுக் கொண்டவனாக மாறி விட்டது உண்மை அல்ல; அது வெறும் நடிப்பு. அவனிடம் அந்த வன்மம் – அந்நியனாக மாறிக் கொலைகளைச் செய்து விடும் வன்முறை – இப்பொழுது இயல்பாக மாறி விட்டது என்பதுதான் படம் சொல்லும் எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கை யாரை நோக்கி என்பது மட்டுமே படத்தில் தெளிவு படுத்தப்படவில்லை. எச்சரிக்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கலாம்; தனக்கு எதிரானவர்களுக்கும் இருக்கலாம்.

அகப்பாடு பத்து

Avoid blogs, they are endless ego (அகப்பாடு) trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.
– Sujatha

எனக்குப் பிடித்த தலை பத்து வலைப்பதிவுகள் இவை. இவற்றை பட்டியலிடுவதற்கு சில குறிவைகளை (criteria) வைத்துக் கொண்டேன்.

  • வாரத்துக்கொரு முறையாவது இற்றைப்படுத்த வேண்டும்.
  • ஒரு மாதமாகவாவது வலைப்பதிந்து வர வேண்டும்.

    10. மாலன்
    9. பெயரிலி
    8. பிச்சைப்பாத்திரம்
    7. சிக்கல்
    6. பிகேஎஸ்
    5. பெட்டை
    4. எண்ணங்கள்
    3. கண்ணோட்டம்
    2. உருப்படாதது
    1. போட்டுத் தாக்கு


    பொதிவாக (+ve) பிடித்தது மட்டும் குறித்து வைக்காமல், எதிர்மறை எண்ணங்களுக்காக படிக்கும் பத்து. இவற்றை பட்டியலிடுவதற்கும் சில குறிவைகளை வைத்துக் கொண்டேன்.

  • இவற்றில் சில மசாலாப் படங்கள் போல; பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்; விசிஆரை அணைத்த பிறகு மனதில் தங்காது.
  • சிற்றிலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரியலாம்.
  • அதிர்ச்சியூட்டும் நடை கொண்டிருக்கலாம்; விபரீதப் புரிதல்களை உணர்த்தலாம்.
  • பதிவுகள் நாலு கிலோபைட்டைத் தாண்டி continuous partial attention தோன்றலாம்.

    10. வெங்கட்
    9. அனாதை
    8. அண்டை அயல்
    7. காஞ்சி பிலிம்ஸ்
    6. அபிதாசரண்
    5. கோயிஞ்சாமி
    4. இட்லி வடை
    3. முகமூடி
    2. நேசகுமார்
    1. ரோசா வசந்த்

  • எ.பி.சி.

    நன்றி : சித்திரங்கள்

    மறுப்புக்கூற்று: நட்சத்திர வலைப்பதிவரோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்

    மறுப்புக்கூற்று: இதை எழுது, அதை பின்பற்று என்று சொல்பவர்களைக் குறிக்கவில்லை

    மறுப்புக்கூற்று: எழுதுவதெல்லாம் தனக்கே வாய்க்கும் என்று சொல்லவில்லை.

    மறுப்புக்கூற்று: பெயரற்றவர்களைத் தாக்கவில்லை

    நன்றி : சித்திரங்கள்

    சின்னராசு

    இணையில்லா பாடல் ஆசிரியர்கள் ::

    தமிழ் நாடகத் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களுக்காக எழுதிய பாடல்கள் பிற்காலம் திரைக்காக பயன்படுத்தப்பட்டு பெருமையடைந்திருக்கின்றன.

    ‘ஆவியே சஞ்சீவியே
    மன்மதன் எனும் பாவியே
    மலர்கணையை தூவியே’

    கலைஞர் கருணாநிதி உரையாடல் எழுதிய ‘பராசக்தி’ படத்தில் ‘வாழ்க வாழ்கவே வளமார திராவிட நாடு’ என்கிற பாரதிதாசன் பாடலை சேர்க்க கலைஞர் அனுமதி கேட்டபோது, ‘அந்த பாடலை படத்தில் சேர்த்தால் நானே அவர்களுக்கு பணம் தருவேனே’ என்றாராம்!

    1935 ஆம் வருடமே திரைப்படத்திற்காக பாடலும், திரைக்கதை உரையாடலும் எழுத பாரதிதாசன் அழைக்கப்பட்டுவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘கவி காளமேகம்’ படத்திற்கு அவர் உரையாடலும், பாடலும் எழுதினார். பாரதிதாசன் மேலும் திரைக்கதை, உரையாடல் மற்றும் பாடல் எழுதிய திரைப்படங்கள் ராமானுஜர், பாலாமணி அல்லது பக்கா திருடன், சதி சுலோச்சனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி போன்ற படங்களாகும். பிற்காலம் அவர் சொந்தமாக தனது ‘பாண்டியன் பரிசு’ காவியத்தை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார். அந்த முயற்சி கைகூடுவதற்கு முன்பே மறைந்துவிட்டார்.

    பாபநாசம் சிவனின் பெரும்பாலான பாடல்கள் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரால் பாடப்பட்டவையாகும்! பாகவதருக்கு ‘ஹரிதாஸ்’ படத்தில் பாடுவதற்கு பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று.

    ‘கிருஷ்ணா… முகுந்தா முராரே-ஜெய
    கிருஷ்ணா… முகுந்தா முராரே
    கருணா ஸாகர கமலா நாயக
    கனகாம்பர பியாரி – கோபாலா
    காளிய நர்த்தன கம்ஸ நிர்த்தன’

    இந்தப் பாடலில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் வடமொழி வார்த்தையாகவே காணப்படுகின்றன. பாபநாசம் சிவனின் தமிழ்ப்புலமையும் சாதாரணமானது அல்ல.

    ”கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
    கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
    நவரஸங்களிலும் சிருங்காரமே தலையே
    நளின நடையழகிற் கீடெங்கும் இலையே
    புஜமிரண்டு மூங்கில் தளர் நடையஞ்சி
    புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
    ரஸிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
    ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி”

    உடுமலை நாராயணகவி பி.யு.சின்னப்பாவிற்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். ‘மங்கையர்கரசி’ என்ற படத்தில் கலைவாணருக்காக உடுமலை நாராயணகவி எழுதிய ஒரு பாடலை இங்கே பாருங்கள்.

    ‘பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்
    பாலில்லை என்று சிசு பதறுவதைப் பார்’

    அண்ணா எழுதிய ‘சொர்க்க வாசல்’ படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடல்கள் மிகப்புகழ் பெற்றன. இந்தப் பாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி மிக உணர்ச்சிகரமாக அந்தப் படத்திலே பாடியிருக்கிறார்.

    ”எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம்?
    என்றே தேடுறீர்! அது அங்கே இல்லை
    இங்கே உண்டு என ஒன்றாய் கூடுவீர்!
    ஆகும் நெறி எது?
    ஆகா நெறி எது?
    அறிந்து சொல்வீரே

    நன்றாய் புரிந்து கொள்வீரே!”

    திரையுலக வரலாற்றில் பெரும் புயலை கிளப்பிய ‘பராசக்தி’ திரைப்படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடல்களும் உண்டு. அதில் ஒரு பாடல் தான் ‘கா… கா… கா’ என்று பாடலாகும்.

    ”எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
    பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
    இளைத்தவன், வலுத்தவன்
    இனச் சண்டை பணச்சண்டை
    எத்தனையோ இந்த நாட்டிலே
    பட்சி சாதி நீங்க – எங்க
    பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க
    பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
    பழக்கத்தை மாத்தாதீங்க – எங்கே பாடுங்க”

    பிளவர்கள் ஜாக்கிரதை

    WSJ.com – Cybersecurity’s New Challenges ::

  • எரிதங்கள் அதிகரிப்பதற்கும் பிளவர்கள் பெருகியதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
  • கல்லூரி மாணவர்கள்தான் முன்பு கொந்தர்களாக ஆக்கபூர்வமாக கணினிகளை ஊடுருவினார்கள். இன்றோ கன்னக்கோல் வைக்கும் பிளவர்கள் நிறுவனங்களைக் குறி வைக்கிறார்கள்.
  • உன்னத நோக்கம் கொண்டு ராபின்ஹுட் போல் கருதப்பட்ட கொந்தர்கள் இப்போது பரிநிரலிகளை எழுதுகிறார்கள். சட்டவிரோதமாக பணத்தைக் கொள்ளையடிக்கும் பிளவர்கள் பெருகிவரும் காலம் இது.
  • ப்ளாக்மெயில் பிளவர்கள் பிறருடைய மின்மடல்களைப் படிப்பது எளிதாகி இருக்கிறது. சொந்தக் கணினி பாதுகாப்பில்லாமல் இருப்பதுதான் முதற் காரணம். யாஹூ/ஹாட்மெயில் போன்ற வழங்கிகளிடமிருந்தேப் படிப்பதும் சாத்தியம். அங்கிருந்து உங்களைச் சென்றடையும் வழியில் படிப்பது மூன்றாவது வழி.
  • என்னதான் தங்கள் கணினியைப் பாதுகாக்க முடிந்தாலும், மொத்த தொழில் நுட்ப உலகத்தையும் பாதுகாப்பது இயலாத காரியம். எளிதில் ஊகிக்கக் கூடிய கடவுச் சொற்கள், தவறுதலாக எங்கோ சுட்டி வலைக்கள்ளர்களிடம் மாட்டிக் கொள்ளுதல் போன்ற மனித இயல்புகள் இருக்கும்வரை பிளவர்கள் பிழைத்து வருவார்கள்.

    முழு செவ்வியும் கேட்க: எம் பி 3

  • கனா கண்டேன்

    பாண்டியன் கனவு

    கனா கண்டேன்

    மாட்டு சாணம் –> சமையல் எரிவாயு

    (நன்றி: ஜுனியர் விகடன்)

    உண்மை அன்பு

    இசைஞானி இளையராஜா ::

    எந்த ஒரு பொருளுக்கும்
    தீங்கு செய்யாதிருப்பது அன்பு

    நாம் ஒன்றின் மீது அன்பு கொள்ளும்பொழுது
    நாம் கவனம் செலுத்தும் அந்தப் பொருளும் நாமும்
    அதனால் துன்பத்தை அனுபவிக்கிறோம்

    இரண்டு உயிர்களுக்குத் துன்பத்தை (தீங்கை)
    விளைவிக்கக் கூடிய செயலை ‘அன்பு’ என்று
    எப்படிச் சொல்ல முடியும்?

    எந்த ஒரு விளைவையும்
    ஏற்ப்டுத்தாத செயலே அன்பு!

    லைலா மஜ்னுவை விரும்பினாள்.
    மஜ்னு லைலாவை விரும்பினான்.
    தனிப்பட்ட இருவரின் விருப்பம் (நமது)
    உண்மை ‘அன்பு’க்கு உதாரணம் அன்று!
    அது நமக்கு எந்த விதத்திலும் உதவாது.

    அன்புக்கு விளக்கமாக இதுபோன்ற
    உதாரணங்களைச் சொல்வதால்தான் –
    அது என்ன என்று அறிய முயலும்
    முயற்சியைக் கூட நாம் கைவிட்டுவிட்டோம்!

    யாருக்கு யார் எழுதுவது – இசைஞானி இளையராஜா :: கவிதா (ரூ. 250/-)

    வோ கௌன் ஹோதா ஹை ஹமேன் ரோக்னாவாலா

    Desi TV

    ரஸ்ஸல் பீடர்ஸ் போன்றவர்களும் உள்ளே ஒளிந்திருக்கிறார்கள். தோண்டத் துருவ நகைச்சுவை.