- நாயகியை அறிமுக இவ்வளவு விமரிசையாய், சமீபத்தில் பார்த்ததில்லை. சிம்ரன், இஷா கோபிகருக்கு அப்புறம் லட்சணம் + கவர்ச்சி; அஃப்கோர்ஸ் நடிப்பு.
- வெளியே பனி கொட்டித் தள்ளிய மதியானம். இந்தியா உதை வாங்கி ‘அவுஸ்திரேலியா.. என் நாடு’ என்று ஜம்பம் சொல்ல முடியாத நேரம். இந்தப் படம்தான் மாட்டியது.
- பழைய படம் பார்க்கும் வரிசையில் அடுத்து ‘வரலாறு‘ வந்திருக்கிறது.
- அதுவும் மைக்ரேய்னோ ஒற்றைத் தலைவலியோ கொடுக்காமல் இருக்கணும்.
- விஜய்காந்த் செய்ய வேண்டிய ரோலை, விஷாலுக்குக் கொடுத்துட்டாங்க.
- பாட்டெல்லாம் அடிக்கடி வருது. நல்லாவும் இருந்தது; ம்யூசிக் இந்தியா ஆன்லைனில் கேட்கலாம். வீட்டில் பார்க்க உட்கார்ந்த மற்றவர்களை மாட்டினி ஷோவில் சோபாவில் மென்மையாய் தூங்க வைத்தது.
- கிராமத்தில் நாயகி மட்டும் கப்ரி. மற்ற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் தாவணி. தாவணி அழகு.
- காலேஜுக்குள் போலீஸ் வந்தால் என்ன தப்பு? ஏன் ஓவராய் டென்சன் ஆனார்கள்?
- லோக்கல் ரவுடி ரேஞ்சுக்கு சண்முகராஜன். அவருக்கும் பசுபதி மாதிரி ப்ரேக் கிடைக்கவேண்டும். அட்லீஸ்ட், டெலெகேட் செய்யுமாறு கதாபாத்திரம் அமைய வேண்டும்.










