Category Archives: Santhome

Local maps – Chennai, Mylapore: Google vs Yahoo

யாஹூ அமர்க்களமாக இருக்கிறது:

mylapore-santhome-yahoo-maps-1.jpg

இன்னும் முக்கிய இடங்களை அடையாளம் காட்டுதல் தமிழுக்கு வரவில்லை போல:

maps-santhome-mandaveli-tamil-nadu-local-landmarks.jpg

கடைசியாக கூகிளில்:

maps-google-santhome-mylai-chitrakulam-mandaveli.jpg

நன்றி/வழி: லேஸிகீக்

இந்த வார விகடன்

vikadan china corruption cartoon joke capital punishmentஹாய் மதன் :: கேள்வி & பதில்

எம்.சந்தியா, நாகர்கோவில்.

தார்மிகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இதற்குச் சரியான ஆங்கிலச் சொல் என்ன?

சாக்ரடீஸ், பிளேட்டோவில் துவங்கி, பிரெஞ்சு தத்துவமேதை- ‘ழான் பால் சார்த்ர்’ வரை தார்மிகம் பற்றி ஏகமாக விவாதித்திருக்கிறார்கள். தார்மிகத்துக்குச் சுருக்கமாக ஆங்கி-லத்தில் ethics என்று பெயர். தமிழில் ‘அறம்’ எனப்படுவதும் அதுவே! தார்மிகம் நிரந்தரமானதும் அல்ல. எல்லா நாடுகளுக்கும் பொது-வானதும் அல்ல. நம்முடைய தார்மிகமும், ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் தார்மிகமும் வேறுபடும். நமக்காக வள்ளுவர் அறத்தை வலியுறுத்தி பத்து குறள்கள் எழுதியிருக்கிறார். அதில் மொத்தமாக அறத்தை விளக்கும் குறள்…

இந்தக் குறளுக்குப் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சுலபமான உரை… ‘பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, அதற்குத் தடை ஏற்படும்போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் (மற்றும் செயல்!) இந்நான்கையும் விலக்கி, தொடர்ந்து செய்யப்படுவதே அறம். ‘தொடர்ந்து செய்யப்படுவதே’ என்கிற வார்த்தைகள் முக்கியம். சும்மாங்காட்டி குந்திக்கிட்டிருப்ப-தல்ல! Ethics must be performed!


பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா
அவன்தான் என்னை சென்னைக்கு கைப் பிடிச்சுக் கூட்டிட்டு வந்து

“இதான் பீச்! அதான் ஏவி.எம். ஸ்டுடியோ, அழகழகா பொண்ணுங்க வெளியே வர்றாங்-களே, அதான் எஸ்.ஐ.டி. காலேஜ்’னு வழி காட்டினான். ஆனால், சில சமயம் அவன் காட்-டிய வழிகளில் நான் போகாமல் தப்பித்துவிட்டேன். குறிப்பா எஸ்.ஐ.டி. காலேஜ் பக்கம்!’’

யார் சொன்னார் என்பதை சந்தா கட்டி அறிந்து கொள்ளவும் 😛


‘மக்கள் எழுச்சி இயக்கம்’ :: சமூக சேவகர் நந்தகுமார்

பொழுதுபோக்குப் பூங்கா நூறு கோடியில்! மகப்பேறு மருத்துவமனைத் திட்டம் குப்பைத் தொட்டியிலா?’ என்று எழுதியது தான் நான் செய்த குற்றம்! மக்களின் அடிப்படைத் தேவையை நிறை வேற்றச் சொல்லும் கோரிக்கைக்கான இந்த இரண்டு வரி எழுத்துரிமை யைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு என்னைக் கைது செய்து சிறையில் தள்ளியது..!’’

சாந்தோம் மண்டலத்தில் நீண்ட நாட்களாக மூடப்பட்டுக் கிடக்கும் மகப்பேறு மருத்துவமனையை சீர் செய்து மீண்டும் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். இந்த மருத்துவமனை ஏழை மக்கள் மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனை. இதை நம்பிக் கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கிறார்கள். …

கடந்த மாதம் மேயர் மா.சுப்பிரமணியத்திடம் கூட மனு கொடுத்தோம். தேர்தல்நேரத்தில் இந்த மருத்துவமனை திறக்கப்படும் என்று ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினோம். இத்தனை செய்தும், எந்த அரசு அதிகாரியும் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால், மூடப்பட்டுக் கிடக்கும் மருத்துவ மனையில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி நூறு கோடி ரூபாய் செலவில் ஹைடெக் பார்க் ஒன்றை அமைத்து, 10-ம் தேதி அதை முதல்வரின் கையால் திறந்து வைக்க இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டபோது வேதனையாக இருந்தது.


ஓ… பக்கங்கள் (109) :: ஞாநி
இந்தியச் சிறைகளில் இந்த நொடியில் இருக்கும் சிறைவாசிகளில் 74 சதவிகிதம் பேர் இன்னமும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்-படாதவர்களே! அவர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்!

தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சின்ன பெருமை. இங்கே 100-க்கு 31 பேர்தான் விசாரணைக் கைதிகளாம்! அதுவே மொத்தக் கணக்கில் ஆயிரக்கணக்கில் போகும்.

இந்தியச் சிறைகளில் மொத்தம் 3,04,893 பேர் உள்ளனர். இவர்களில் 2,25,817 பேர் விசாரணைக் கைதிகள். பெரும் பாலானவர்கள் ஏழைகள்; படிப்பறிவு அற்றவர்கள்.


கற்றதும்… பெற்றதும்.. (56) :: சுஜாதா
1. மாமின் உரைநடையின் தெளிவு என் எழுத்தை ஒரு விதத்தில் பாதித்தது. சாமர்செட் மாம் எழுதிய எதையும் படித்திரா தவர்கள், அவருடைய Rain என்னும் சிறுகதையை மட்டும் படித்தால் போதும்.

2. மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, தன் வெற்றியின் ரகசியத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார் (தி.ந.வெங்கடேஷ்). கரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த நூல் இலவசமாகக் கிடைக்கும். வெ.இறையன்பு, சைலேந்திர பாபு போன்றவர்கள் இந்நூலுக்கு முன்னோடிகள்.


கேள்விக்குறி? (16) :: எஸ்.ராமகிருஷ்ணன்வானை அளப்போம் -‘ஒரு ஆளாலே என்ன செய்ய முடியும்?’

தனிமனிதர்களால் என்ன செய்துவிட முடியும் என்பதற்கு, எனக்கு விருப்பமான பத்து பேரை உதாரணமாகச் சொல்ல முடியும்.
1. Wangari Maathai
2. Jack Sim

3. Vandana Shiva
4. Andrew Lieberman

5. Dalai Lama
6. ரிக் கர்சன் (இவரின் ஆங்கிலப் பெயர் மட்டும் தெரியவில்லை 😦 )

7. Carlo Petrini
8. Stephen Hawking
9. மேதா பட்கர்
10. Erin Gruwell