1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாண்டியன் அறிக்கை: (தினமலர்)
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத் துக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது ஆச்சர்யமானது அல்ல. கேரளா மற்றும் மும்பை கோர்ட்டுகள் முழு அடைப்பிற்கு எதிராக ஏற்கனவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன. ஊர்வலங்கள் நடத்துவதற்கு கூட தடை விதிக்கப்பட் டுள்ளது. 200 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒரு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பறிகொடுக்க இயலாது. மக்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அரசியல் இயக்கங்கள், மக்கள் நலன் காக்க நடத்தும் போராட்டங்களை மக் களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, பார்லிமென்ட் டால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தடுப்பது முறையல்ல…
2. இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்: (தினமலர்)
காந்திய வழியில் கருணாநிதி போராடுவதாக காங்கிரஸ் தலைவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். சாராயக் கடை திறந்தது, லாட்டரிச் சீட்டுக்களால் ஏழைகள் குடி கெடுத்தது, தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டது, ராமரை அவமதித்தது எல்லாம் காந்திய வழி என அந்தத் தலைவர் கூறுகிறார் போலும்.










