Category Archives: News

Tale of Two Captains

மானஸ்தன்:
உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவிய நியூ ஸீலாந்து அணியின் தலைவர் ஃபிளமிங், அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸீலாந்தை வென்றது.

ஒரு நாள் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினாலும், அணியின் பேட்ஸ்மேனாக ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து களமிறங்கப் போவதாகவும், டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்து நீடிக்கப் போவதாகவும் ஃபிளமிங் தெரிவித்தார்.

ஃபிளமிங் நியூ ஸீலாந்து ஒரு நாள் அணியின் தலைவராக 217 போட்டிகளில் பொறுப்பேற்று ஆடியுள்ளார். அவற்றில் 98 போட்டிகளில் வெற்றியும், 106 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது நியூசிலாந்து அணி.  279 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஃபிளமிங், 8,037 ரன்களை எடுத்துள்ளார்.

  • இன்னிங்ஸ் சராசரி 32.41.
  • அரை சதங்கள் – 49,
  • சதங்கள் – 8.

(யு.என்.ஐ.)

இந்திய அணித்தலைவர்:

Rahul Dravid - Indian Captain

BC – RIP

‘B.C.’ cartoonist Johnny Hart dies at 76 (it’s too bad he’ll most often be remembered by his controversial religious strips) [via]

முந்தைய பதிவு – எ.பி.சி.

Eelam Today

1. ஆயுதக் கடத்தல்: போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் & பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர்.

2. விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

3. ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார்.

முழுமையான ஈழ செய்திகளுக்கு: Puthinam.com

இந்திய தினசரிகளில் ஈழம் குறித்த செய்திகளின் தொகுப்பு: LTTE :: Tamil News

முந்தைய டுடே பதிவு: Hinduism Today

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

    “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.

Hinduism Today

கண்ணில் பட்ட இரு செய்திகள்:

1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

‘கிழக்கே போகும் ரயில்’ ஞாபகம் வந்துச்சே!

2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.

இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா?


| | |