தேர்தல் குறித்த தகவல்களை, அதிகம் பிரபலமாகக் கூடாத விஷயங்களை அறிய, பின்னணி காய்நகர்த்தல்களை தெரிந்து கொள்ள இரண்டு வலையகங்கள்:
சிறு சிறு தகவல். அதன் தொடர்பான விழியம் என்று வல்லுநர்கள் முதல் வாக்காளர் பட்டியலில் இல்லாத என்னைப் போன்றோர் வரை அனுதினமும் பார்வையிடும் தளம்.
அமெரிக்காவில் என்ன பிரச்சினைகள் முக்கியமானவை என்று அறிய நேரிடும்போது இரத்தக்கொதிப்பு அதிகமாகலாம்.
2. Project Vote Smart – American Government, Elections, Candidates and Voting
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருந்தாலும், பிரச்சாரம் அனல் பறக்கிறது. அன்றைய தேதியில் என்ன சொன்னார்கள், எப்படி எதிர்வினைத்தார்கள், எங்கே நானூறு டாலரில் சிகையலங்காரம் நடந்தது என்பதுதான் தெரிகிறது.
இவர்கள் வேட்பாளர்களின் ஜாதகத்தை கொடுக்கிறார்கள். சட்டசபையில் எப்படி வாக்களித்திருக்கிறார், தற்போதுள்ளதாக பறை சாற்றும் கொள்கைப்பிடிப்புக்காக எந்த அளவு கொடி பிடித்திருக்கிறார், தேர்தல் நிதியை எங்கிருந்து கையேந்துகிறார், யாருக்கு விசுவாசமாக வாலாட்டுவார என்றெல்லாம் அறிய முடியும்.
மாகாணவாரியாக உள்ளூர் பிரச்சினைகளைக் குறித்தும் விரிவான அறிமுகம் கிடைக்கிறது.










