Category Archives: Dowry

பேராசைகள் – அகமும் புறமும்

1. ஐம்பது சவரனுக்கு நகை போட்டிருக்கிறார்கள். 23 வயது பெண்ணை சந்தோஷமாக இருப்பாள் என்னும் நம்பிக்கையில் அமெரிக்கா அனுப்பி இருக்கிறார்கள். அங்கு சென்றாலும் வரதட்சணை விடாது கேட்டு படுத்தும் கணவன் & குடும்பத்தார். காரில் ஏறும்போது தடுக்கி விழுந்து விபத்தாகி கோமாவுக்கு சென்றதாக கணினி வல்லுநர் கதை விடுகிறார். படித்தவனுக்கு புத்தி, சமூக அறிவு, சிந்தனை இருக்கும் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் 😦

அது நேற்றைய செய்தி. இன்று அசோக்குமார் & சுபரஞ்சனி.

திருமணத்திற்காகும் செலவில் 50:50 காணும் காலம் வர குறைந்தது ஐம்பதாண்டுகள் பிடிக்கும்.

2. தமிழகத்தில் ஏழைகளுக்கெல்லாம் தொலைக்காட்சி வழங்கி சிவந்த கரங்கள், இப்பொழுது அடுக்குமாடி வீடுகளுக்கும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக வழங்கிவருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போர் எல்லோருக்கும் ஒரு டிவி. இதற்காக ஆகும் செலவை தேங்கியிருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தவோ அல்லது கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்கோ அல்லது பிறிதொரு நம்பிக்கை தரும் விஷயத்திற்கோ பயன்படுத்தாமல் விழலுக்கிறைத்த வெந்நீர்.

சீர்வரிசைக்கு முக்காடு போட்டு கேட்கிறார்கள். ‘எனக்கு வந்துடுச்சு; நீங்களும் வாங்கிட்டீங்களா‘ என்று டிவிக்கு வரிசையில் வெளிப்படையாக விசாரிக்கிறார்கள்.