மானஸ்தன்:
உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவிய நியூ ஸீலாந்து அணியின் தலைவர் ஃபிளமிங், அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸீலாந்தை வென்றது.
ஒரு நாள் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினாலும், அணியின் பேட்ஸ்மேனாக ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து களமிறங்கப் போவதாகவும், டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்து நீடிக்கப் போவதாகவும் ஃபிளமிங் தெரிவித்தார்.
ஃபிளமிங் நியூ ஸீலாந்து ஒரு நாள் அணியின் தலைவராக 217 போட்டிகளில் பொறுப்பேற்று ஆடியுள்ளார். அவற்றில் 98 போட்டிகளில் வெற்றியும், 106 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது நியூசிலாந்து அணி. 279 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஃபிளமிங், 8,037 ரன்களை எடுத்துள்ளார்.
- இன்னிங்ஸ் சராசரி 32.41.
- அரை சதங்கள் – 49,
- சதங்கள் – 8.
(யு.என்.ஐ.)
இந்திய அணித்தலைவர்:











