மிஷ்கின் – சைக்கோ


முந்தைய பதிவு: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

  1. உதயநிதிக்கு கண்ணாடி மாட்டி விட்டார் பாருங்க எங்க டைரக்டர் மிஸ்கின் – அங்கே நிற்கிறார். நடிக்கத் தெரியாத ஆள்; டப்பு உள்ள தயாரிப்பாளர். எப்படியோ சமாளிக்கிறார்… பாருங்க!
  2. ஃபாஹத் பாசில் போன்ற நடிகரை வைத்து படம் பண்ணுவது எந்த கத்துக்குட்டி இயக்குநராலும் முடியும். ஆனால், உடலில் பெருத்த நித்யா மேனன் போன்றவரையும் “சிரித்த முகமும் கண்டு” என்று எப்பொழுதும் மோனப் புன்னகை தவழும் உதயநிதி ஸ்டாலின் கொண்டும் படம் பண்ணுவதற்கு தனித்திறமை வேண்டும்.
  3. புகழ்பெற்ற “வந்தே மாதரம்” பாடலை எழுதிய வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற “கிருஷ்ணகாந்தன் உயில்” என்ற நாவல் வங்கமொழியில் திரைப்படமாக வெளிவந்தது. அதை தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமி தமிழில் மொழிபெயர்த்தார். அதில் முக்கிய காட்சி போல் அந்த அக்பர் / பவா செல்லத்துரை சிபி / சிஐடி காட்சி அமைந்துள்ளது.
  4. See No Evil, Hear No Evil என்னும் படத்தில் வரும் வண்டியோட்டும் காட்சி பிரபலமானது. குரு பூர்ணிமாவின் மூல நாயகன் எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் “ஒரு சிறுகதையை எழுதாதே; ஒரு படத்தில் இருந்து திருடாதே; ஒரு விஷயத்தை உன் எழுத்தில் சொல்லாதே!” என்பது போல் பல்வேறு ஹாலிவுட் படங்கள்; எண்ணற்ற காட்சிகள் – எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மீண்டும் மசாலா ஆக்கித் தரும் மிஷ்கின் – ஜஸ்ட் வாழ்க!
  5. ஆண்ட்ரியா பாச்செல்லி கண் தெரியாதவர். கலைஞர். அது போல் நம் நாயகன் மிஷ்கின் பார்வையற்ற உலகிற்கு பாணன். இந்தப் படத்தில் கௌதம் என்னும் நடிக்கவியலாத ஒருவரை இயக்கும் கர்த்தா. நம் குரு மிஷ்கின் எப்போதும் குளிராடி அணிந்தவர்
  6. எத்தனை எழுத்தாளர்களை செட் ப்ராபெர்டியா வச்சு அநியாயமா டம்மி ஆக்குறார் இவர்… தப்புய்யா… பவா செல்லதுரை, ஷாஜி, பாரதி மணி! – எழுத வையுங்கப்பா! சும்மா வந்து போக வைக்காதீங்கப்பா!!
  7. ராம் – இவர் நடிப்பு சற்றே அயர வைக்கும். சற்றே அல்ல!! நிறைய!!! ஆனால், இவரை ஒழுங்காக, லிமிடெட் மீல்ஸ் ஆக நடிக்க வைப்பவர் சாமர்த்தியசாலி + திறமைசாலி.
  8. எத்தனை படம் இப்படியே எடுப்பார் மிஷ்கின்! ஆனால், ஒவ்வொன்றிலும் ஓரளவு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கார் மிஸ்கின். மீண்டும் பார்க்கும்போது பல விஷயங்களை ஒளித்திருக்கிறார். இயக்குநர் இயக்குவது போல், குருடன் நடத்திச் செல்வது போல், தயாரிபாளரின் “ஆடுறா ராமா”வுக்கு சலாம் போடும் வழிநடத்துனர் போல் – என்னென்னவோ வைக்கிறார்.
  9. இளையராஜா சார்!! பின்னியிருக்கிறார்!!!
  10. குத்துப் பாட்டு இல்லீங்களே!?
  11. இதுக்கெல்லாம் பத்து போதாது. செவிலியர், கான்வென்ட், தனியார் பள்ளிக்கூடம், சிஸ்டர், கையடிப்பு, மனப்பிழற்வு, தற்கொலை, – இன்னும் நிறைய எடுங்க தல 🙂
  12. புத்தர், அங்குலிமாலன் கதை தெரிந்திருக்கும்:

999 பேரைக் கொன்று விரல்களை எடுத்திருந்த அங்குலிமாலா ஆயிரமாவது ஆளுக்காகக் காத்திருந்த வேளையில், அவன் இருக்கக் கூடிய காட்டுப் பகுதியிலே செல்ல ததாகதர் முயன்ற போது அவரின் சீடர்கள் அவரைத் தடுத்தனர். அவர்களுக்குச் செவி கொடுக்காத ததாகதர் அவ்வழியிலேயே தனித்துப் பயணமானார். அங்குலிமாலன் அவரெதிரிலே வந்தான். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பலவாறாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் புத்தர் அவனை மனமாற்றமடையச் செய்து புத்தச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.

விக்கி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.