சென்னை – 2017


சென்னையில் ஹாரன் சத்தம் கம்மியாகி இருக்கிறது. கார் ஓட்டுனர்கள் வயதுக்கு வந்திருக்கிறார்கள். மோசமான டிரைவர்களுடன் வாழ்க்கையை அனுசரிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க சாய் பாபா!

சென்னையில் பிரமிக்கவைக்கும் ஐஸ்வர்யா ராய்க்களின் வரத்து அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் திருமணங்களில் மட்டுமே, தென்பட்டவர்கள் இப்போது மால்களிலும் சினிமா அரங்குகளிலும் டூ வீலரின் பின்புறங்களிலும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். வாழ்க ராஹுல் காந்தி!

மயிலை என்பது பிராட்வே என அறியப்படுகிறது. தினமும் ரஸிக ரஞ்சனி சபாவும் பாரதீய வித்யா பவனும் அமர்க்களமாக ஏதாவதொரு நிகழ்வை இலவசமாகத் தருகிறது. சொற்பொழிவோ.. கர்னாடக சங்கீதமோ… இசை நாடகமோ…. சொர்க்கம் எனப்பட்டது என்னவென்றால் ரிடையர்மெட்ண்ட் வாழ்க்கை @ மாட வீதி. வாழ்க கொல்ஸ்டிரால்!

பக்தர்கள் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளனர். திருவொற்றியீஸ்வரனாகட்டும்; வெள்ளீஸ்வரர் ஆகட்டும்… பிரதோஷம் முதல் உச்சிக் கால பூஜை வரை! கூட்டம் எக்கச்சக்கம். வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி!!

நல்ல காபி என்பது சில வீடுகளில் மட்டுமே கிட்டுவது என்பது போய் பல இடங்களில் கிடைக்கிறது. அம்பிகாவின் ஆத்து காபி ஒரு உதாரணம். சரவண பவன் பரவாயில்லை உதாரணம். காஃபி டே மோசமான ஸ்டார்பக்ஸ் உதாரணம். வாழ்க நரசூஸ்!

பள்ளி நண்பர்களை இந்த முறை சந்தித்தது அபாரமான தருணம். இதுவரை வலையில் அறிமுகமானவர்களை மட்டுமே தைரியமாக சந்தித்தேன். திக்குவாய் பாலாஜியை சந்தித்து நரேந்திர மோடியையும் ஜி.எஸ்.டி.ஐ.யும் விமர்சித்தவர்களுக்கு ஜே!!

One response to “சென்னை – 2017

  1. ஐஸ்வர்யா ராய்க்கள் பிரமிக்கவைத்துப்போகட்டும் . வாழ்க சாய் பாபா, வாழ்க கொலஸ்ட்ரால்.. சரி.. ராஹூல் காந்தி? கெடுத்தீரே காரியத்தை ..!

Aekaanthan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.