சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?


எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

3 responses to “சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

  1. உண்மைதான். ஆனால் இதை விட கடுமையான விமர்சனங்கள் அவர் மீது எழுப்பப் பட்டு வந்துள்ளன. முன்னேற்றத்தைக் கொண்டுவர வேறு வழியில்லை என்று அவர் பதிலளித்துள்ளதாக அறிகிறேன். ஒரு காலத்தில் நேரு இந்திராகாந்தி, அவ்வளவு ஏன் கருணாநிதியைக் கூட பார்த்திருக்கிறார். இன்று இந்திய தலைவர்கள் கூட்டம் கூட்டமாக சிங்கையை நோக்கிப் படையெடுப்பதைப் பார்க்கும்பொழுது.. முதலில் மக்கள் நலன். பிறகு சித்தாந்தம் என்று தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்?

  2. உங்கள் கட்டுரைக்கு நன்றி.

Pandian -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.